For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பெண்கள் அந்தரங்கப் பகுதி முடியை ஷேவ் செய்யக்கூடாது... செஞ்சா இந்த பிரச்னை வரும்...

அந்தரங்க பகுதியில் முடிகளை நீக்குவதால் அதிகப்படியான முடி வளர்ச்சி மற்றும் எளிதாக பாலியல் நோய்கள் பரவுவதன் மூலம் அவதியுறுகின்றனர் என்று எச்சரிக்கை விடுக்கின்றனர். மேலும் ஏன் அந்தரங்க பகுதியில் உள்ள முட

By Suganthi Rajalingam
|

பொதுவாக பெண்கள் தங்கள் மேனி வழுவழுப்பாக இருப்பதற்காக உடம்பில் இருக்கும் முடிகளை நீக்க முற்படுவர். அதே மாதிரி பெண்கள் தங்கள் அந்தரங்க பகுதியில் இருக்கும் முடி களையும் தற்போது நீக்குகின்றனர். காரணம் அந்தரங்க பகுதியின் சுத்தத்திற்காகவும், செளகரியத்திற்காகவும், அழகுக்காகவும் அவர்கள் இதை செய்து வருகின்றனர்.

what happened if you are doing pubic hair removal

ஆனால் உண்மையில் இப்படி செய்வது சரியா என்ற சந்தேகம் எல்லோர் மனதிலும் எழத்தான் செய்கிறது. இதை ஆய்வின் படி பார்த்தால் 60% பெண்கள் இப்படி அந்தரங்க பகுதியில் முடிகளை நீக்குவதால் அதிகப்படியான முடி வளர்ச்சி மற்றும் எளிதாக பாலியல் நோய்கள் பரவுவதன் மூலம் அவதியுறுகின்றனர் என்று எச்சரிக்கை விடுக்கின்றனர். மேலும் ஏன் அந்தரங்க பகுதியில் உள்ள முடிகளை நீக்கக் கூடாது என்பதற்கு கீழே நிறைய காரணங்கள் சொல்லப்படுகிறது. வாங்க பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
உடல் வெப்பநிலை

உடல் வெப்பநிலை

உங்கள் உடம்பில் எங்கு முடி வளர்ந்து இருந்தாலும் அது உங்கள் உடல் வெப்பநிலையை கட்டுப்பாட்டில் வைக்க பயன்படுகிறது. நமது உடலில் வியர்வை மூலம் எப்படி உடல் வெப்பநிலை சமநிலையாக்கப் படுகிறதோ அதே வேலையைத் தான் இந்த முடிக் கவசமும் செய்கிறது. ஒவ்வொரு மயிர்கால்களுக்கும் அடியில் சீபம் சுரப்பி இருக்கும். இவை இயற்கையாக முடிகளுக்கு எண்ணெய் பசையை சுரக்க உதவுகிறது. இந்த எண்ணெய் அப்படியே முடியின் வழியாக தோலின் மேற்பரப்பிற்கு வந்து ஆவியாகி உடம்பை குளு குளுவென வைக்க உதவுகிறது.

பாதுகாப்பு அரண்

பாதுகாப்பு அரண்

இந்த அந்தரங்க பகுதியில் வளரும் முடிகள் மேலும் ஒரு பாதுகாப்பு அரண் போல செயல்படுகிறது. பிறப்புறுப்பு பகுதியில் நுழையும் நோய்த் தொற்றுக்கு காரணமான பாக்டீரியா மற்றும் பிற நோய்க்கிருமிகளிடமிருந்து உடலை பாதுகாக்க ஒரு பாதுகாப்பு கவசமாக செயல்படுகிறது. எனவே இதை நீங்கள் ஷேவ் செய்யும் போது நோய்க் கிருமிகள் உள் நுழைய வழிவகை செய்கிறீர்கள்.

பெரோமோன்ஸின் சேமிப்பு இல்லம்

பெரோமோன்ஸின் சேமிப்பு இல்லம்

உங்கள் அந்தரங்க பகுதியில் சுரக்கும் பெரோமோன்ஸின் சுரப்புக்கு இந்த முடிகளும் உதவி புரிகின்றன. எனவே இதை நீங்கள் ஷேவ் செய்யும் போது பெரோமோன்ஸின் சுரப்பை இழக்கிறீர்கள். இந்த பெரோமோன்ஸ் தான் பாலியல் ஈர்ப்புக்கு ஒரு காரணமாக அமைகிறது.

பிறப்புறுப்பு மருக்கள்

பிறப்புறுப்பு மருக்கள்

நீங்கள் அந்தரங்க பகுதியில் இருக்கும் முடிகளை நீக்குவதால் பிறப்புறுப்பு மருக்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. இந்த மருக்கள் பாலியல் தொடர்பால் உள் நுழையும் பாக்டீரியாவால் உண்டாகிறது. இந்த மருக்கள் புடைத்து வளர்ந்து அரிப்பை ஏற்படுத்தி உங்களுக்கு ஒரு அசெளகரியத்தை ஏற்படுத்தும். பார்ப்பதற்கு வெள்ளை நிறத்தில் இருக்கும். மேலும் மனித பாப்பிலோமாவைரஸ்(HPV) தாக்குதலும் அடிக்கடி அந்தரங்க முடிகளை நீக்குவதால் தாக்குகிறது என்று ஆராய்ச்சி தகவல்கள் தெரிவிக்கின்றன.

வைரல் தொற்று

வைரல் தொற்று

உங்கள் அந்தரங்க பகுதியை சுத்தம் செய்யும் நோக்கில் நீங்கள் செய்யும் இந்த ஷேவிங் முறை வைரல் தொற்றையும் ஏற்படுத்தும். மோல்லுஸ்குனகண்ட்டியாசியாமியம் என்ற வைரல் தொற்றையும் ஏற்படுத்துகிறது. எனவே இந்த மாதிரியான பாலியல் தொற்றை தவிர்க்க வேண்டும் என்று நினைத்தால் கண்டிப்பாக உங்கள் ஷேவிங் கருவிக்கு குட் பை சொல்லி விடுங்கள். இந்த தொற்று வலியில்லாமல் சிவந்து எரிச்சலுடன் காணப்படும்.

சரும பாதிப்பு

சரும பாதிப்பு

அந்தரங்க பகுதியில் நீங்கள் முடிகளை நீக்கிய பிறகு ரெம்ப உணர்திறன் மற்றும் எரிச்சலை சந்தித்தால் நுண்ணிய காயங்கள் ஏற்பட்டுள்ளது என்று அர்த்தம். இப்படி அடிக்கடி ஷேவிங் க்ரீம், ஷேவிங் பிளேடு கொண்டு முடிகளை நீக்கும் போது அங்கே இரத்த கட்டிகள், கொப்புளங்கள் போன்ற சரும பிரச்சினைகளை சந்திக்க நேரிடலாம். இதை அப்படியே விட்டு விட்டால் பிறகு மிகுந்த வேதனைக்குள்ளாகி விடும்.

உடல் பருமனுள்ள பெண்கள்

உடல் பருமனுள்ள பெண்கள்

இது உண்மையில் ஆச்சர்யமான தகவல் என்றாலும் உண்மையான தகவலும் கூட. மகப்பேறியியல் மற்றும் பெண்ணியல் அமெரிக்க நாளிதழில் வெளியிட்ட ஆராய்ச்சி கருத்துப்படி பார்த்தால் எடை அதிகமான பெண்கள் அந்தரங்க பகுதியில் உள்ள முடிகளை நீக்கும்போது அவற்றை சுற்றியுள்ள சருமமும் பாதிப்பிற்கு உள்ளாகிறது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

என்ன பெண்களே இனி எது அழகு எது ஆரோக்கியம் எது சுத்தம் என்பது உங்களுக்கு புரிந்து இருக்கும். எனவே இனியாவது உங்கள் அந்தரங்க பகுதி முடிகளை நீக்காமல் ஆரோக்கியமான அழகை பேணுங்கள். இனி ஆண்களை கவருவதற்காக செய்யும் இந்த ஷேவிங் முறையை கைவிட்டு விடுங்கள். இயற்கையானதே எப்போதும் அழகாக இருக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Ladies, If You Shave Your Pubic Hair, Read This!

Well, there’s proof to back it up. According to a study, 60% of the women who shave off their pubic hair suffer from one or the other associated complication such as in-grown hair (1). According to another study, shaving vagina hair can also increase your chances of STIs or sexually transmitted disease, viral infections, skin problems and so on.
Desktop Bottom Promotion