For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஜூஸ் குடிச்சா உடல் எடை குறையும் என்பது உண்மையா?

வேகமாக உடல் எடையை குறைக்க பயன்படும் சில ஜூஸ் செய்முறைகள்

|

உடல் எடையை குறைக்க மிக முக்கியமாக நீங்கள் கடைபிடிக்க வேண்டிய ஒன்று உணவு முறை தான், காய்கறி மற்றும் பழங்களை அதிகமாக எடுத்துக் கொள்ளுங்கள் என்று தான் தொடர்ந்து சொல்லப்படுகிறது.

தொடர்ந்து காய்கறி மற்றும் பழங்களை அப்படியே சாப்பிட முடியாத நேரத்தில் ஜூஸ்களாக குடிக்கலாம், சத்துக்கள் குறைந்திடாமல் ஜூஸ் எப்படி தயாரிப்பது என்பது குறித்து இந்த கட்டுரையில் தெரிந்து கொள்ளுங்கள். ஜூஸ் குடிக்கும் போது நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய இன்னொரு முக்கியமான விஷயம் ப்ரோட்டீன்,ஃபேட்,கார்போஹைட்ரேட் ஆகியவை மிகவும் குறைவான அளவே இருக்கும்.

இதனால் உங்கள் உடலுக்குத் தேவையான எனர்ஜி கிடைப்பது குறைந்திடும். அதனால் வெறும் ஜூஸ்களாக குடிக்காமல் இரவு உணவாகவோ அல்லது, உணவு இடைவேளையின் போதோ எடுத்துக் கொள்ளலாம் .

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வெள்ளரிக்காய் ஜூஸ் :

வெள்ளரிக்காய் ஜூஸ் :

இந்த ஜூஸ் தயாரிக்க தேவையானவை வெள்ளரிக்காய், எலுமிச்சை சாறு இரண்டு டீஸ்ப்பூன்,உப்பு. முதலில் வெள்ளரிக்காயை தோல் நீக்கி சுத்தமாக்கிக் கொள்ளுங்கள், பின்னர் இதனை பொடியாக நறுக்கி மிக்ஸியில் அரைத்துக் கொள்ளுங்கள்.

அதனை டம்ப்ளரில் எடுத்து அதனுடன் இரண்டு ஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் சிறிதளவு உப்பு சேர்த்து குடிக்கலாம். இதில் எலுமிச்சையும், வெள்ளரியும் கலந்திருப்பதால் உங்களது உடலுக்கு குளிர்சியைத் தரும். இதிலிருக்கக்கூடிய வெள்ளரி நம் உடலில் உள்ள கொழுப்பு செல்களையும், உடலில் இருக்கக்கூடிய கெட்ட கொழுப்பினையும் அகற்றும் ஆற்றல் கொண்டது.

இதனை உணவு எடுத்துக் கொள்வதற்கு முன்னால் சாப்பிட வேண்டும்.

கேரட் ஜூஸ் :

கேரட் ஜூஸ் :

இந்த ஜூஸ் தயாரிக்க உங்களுக்கு கேரட் துண்டுகள் இரண்டு, மல்லித்தழை, ஆப்பிள் சிடர் வினிகர்,உப்பு,தேன்.

கேரட்டை சுத்தம் செய்து அரைத்துக் கொள்ளுங்கள், முக்கால் வாசி நன்றாக அரைந்ததும் அதிலேயே மல்லித்தழையையும் சேர்த்து அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள் அதனுடன் வினிகர், சிறிதளவு தேன் மற்றும் உப்பு சேர்த்து பருகலாம். உப்பு தேவைப்படுவோர் மட்டும் போட்டுக் கொள்ளுங்கள். கேரட்டில் இனிப்புச் சுவை இருக்கிறதென்றாலும் தேன் சேர்ப்பது சுவையை அதிகரிக்கும்.

கேரட்டில் அதிகப்படியான ஃபைபர் இருக்கிறது, இது உங்களது டெஸ்டோஸ்டிரோன் அளவை அதிகப்படுத்திடும். இதனால் உங்கள் உடலில் கொழுப்பு கரைந்திடும்.

முட்டைகோஸ் ஜூஸ் :

முட்டைகோஸ் ஜூஸ் :

துருவிய முட்டை கோஸ் ஒரு கப், பொடியாக நறுக்கிய வெள்ளரி அரை கப், இரண்டு டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் உப்பு சிறிதளவு ஆகியவற்றை எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

வெள்ளரி மற்றும் முட்டைகோஸை அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள் அதனுடன் எலுமிச்சை சாறு மற்றும் உப்பு சேர்த்து குடிக்கலாம். முட்டைகோஸில் குறைவான கலோரிகளே இருக்கிறது, இதில் இருக்கக்கூடிய ஆன்தோசியானின் மற்றும் விட்டமின் சி ஆகியவை சர்க்கரை நோய் வரவிடாமல் தவிர்க்க உதவிடும். அதோடு அதிகமாக தொடர்ந்து இனிப்பு உணவுகளை சாப்பிட வேண்டும் என்ற உங்களது ஆசையை தவிர்க்கவும் இது பெரிதும் உதவிடும்.

பீட்ரூட் ஜுஸ் :

பீட்ரூட் ஜுஸ் :

உடல் எடையை குறைக்க நீங்கள் குடிக்கிற ஜூஸ் வகைகளில் இது மிகச் சிறந்தது. இதனை தயாரிக்க, ஒரு பீட்ரூட், சீரகத்தூள்,எலுமிச்சை சாறு இரண்டு ஸ்பூன்,உப்பு சிறிதளவு. பீட்ரூட்டினை அரைத்து சாறு எடுத்துக் கொள்ளுங்கள் அதனுடன் பிற பொருட்களை கலந்து குடிக்கலாம்.

சீரகத்தூளை இதனுடன் சேர்க்கும் போது, முதலில் லேசாக வறுத்து அதன் பின்னர் அரைத்து சேர்த்தால் இன்னும் சுவையாக இருக்கும். இந்த சாறு தினமும் குடிப்பதினால் கொலஸ்ட்ரால் குறைந்திடும். பீட்ரூட்டில் நிறைய ஃபைபர் இருக்கிறது.

பாவக்காய் ஜூஸ் :

பாவக்காய் ஜூஸ் :

அரை கப் பாவக்காய், தேன் மற்றும் உப்பு எடுத்துக் கொள்ளுங்கள். பாவக்காயை அரைத்து வடிகட்டி சாறு எடுத்துக்கொள்ளுங்கள் அதனுடன் சிறிதளவு உப்பு மற்றும் ஒரு டீஸ்ப்பூன் தேன் கலந்து குடிக்கலாம்.

பாவக்காய் கசப்புணர்வு கொண்டதாக இருப்பதால் பலருக்கும் பிடிக்காது. கசக்கும் என்று ஒதுக்கும் போதெல்லாம் நீங்கள் நினைத்துக் கொள்ள வேண்டியது ஒரே ஒரு விஷயம் தான். இதில் எக்ககச்சக்கமான ஆண்ட்டி ஆக்ஸிடண்ட்கள் நிறைந்திருக்கின்றன .கொழுப்பு செல்களை அழிக்கும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும், மிக முக்கியமாக செரிமானத்தை அதிகரித்திடும்.

கற்றாழை ஜூஸ் :

கற்றாழை ஜூஸ் :

கற்றாழை உள்ளே இருக்ககூடிய ஜெல்லை அரைத்துக் கொள்ளுங்கள் அதனுடன் இரண்டு ஸ்பூன் அளவு எலுமிச்சை சாறினை கலந்திடுங்கள் அதனுடன் தேவையென்றால் சிறிதளவு உப்பு சேர்த்துக் கொள்ளுங்கள்.

இது சுவையானது தான், உடல் எடையை குறைப்பதைத் தாண்டி ஆரோக்கியமான சருமம் மற்றும் தலைமுடிக்கு உத்திரவாதம் அளித்திடும்.

கோதுமைப் புல் :

கோதுமைப் புல் :

டிப்பார்ட்மெண்ட் ஸ்டோர்களில், இது கிடைத்திடும். இதனை அரைத்து பிழிந்து சாறு எடுத்துக் கொள்ளுங்கள் இத்துடன் ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் உப்பு சேர்த்து குடிக்கலாம். சுவையை பொறுத்தவரையில் இது கற்றாழை ஜூஸ் போல ஓரளவுக்கு இருக்கும், மற்றபடி சுவையில் எந்த மாற்றமும் இருக்காது.

இது நம் உடலில் உள்ள அதிகப்படியான நச்சுக்களை நீக்கிடும். தொடர்ந்து இதில் பொட்டாசியம் அதிகம் இருக்கிறது, அதனால் உடலில் இருக்கும் தேவையற்ற கொழுப்பினை அகற்ற பெரிதும் உதவிடுகிறது. பசியையும் கட்டுப்படுத்தும்.

தர்பூசணிப் பழம் :

தர்பூசணிப் பழம் :

மிகவும் எளிதான ரெசிபி அதே நேரத்தில் மிகவும் சத்தானதும் கூட, ஒரு கப் தர்பூசணிப் பழத்தை அரைத்து ஜூஸ் எடுத்துக் கொள்ளுங்கள் அதனுடன் சிறிதளவு புதினா இலைகள் மற்றும் உப்பு சேர்த்து குடிக்கலாம்.

தர்பூசணிப்பழத்தை அரைக்காமல் நறுக்கி ஃபிரிட்ஜில் வைத்தால் கூட போதுமானது. புதுவித சுவையுடன் இருக்கும். இந்தப் பழத்தில் 90 சதவீதம் வரை தண்ணீரே இருக்கிறது. உங்கள் எனர்ஜியை பேலன்ஸ் செய்ய இந்த ஜூஸ் பெரிதும் உதவிடும், இதில் பல்வேறு ஊட்டச்சத்துக்கள்,விட்டமின்ஸ் மற்றும் எலெக்ட்ரோலைட்ஸ் இருக்கிறது.

 மாதுளம் பழம் ஜூஸ் :

மாதுளம் பழம் ஜூஸ் :

ஒரு கப் மாதுளப்பழத்துடன் ஒரு கைப்பிடி புதினாவைச் சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளுங்கள் அதனுடன் ஒரு ஸ்பூன் அளவு மிளகுத்தூள் மற்றும் ஒரு டீஸ்ப்பூன் எலுமிச்சை சாறு கலந்து குடிக்கலாம். இதில் அதிகப்படியான ஆண்ட்டி ஆக்ஸிடண்ட் இருக்கிறது, இதனால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்திடும். ஒரு நாளைக்கு இரண்டு முறை இந்த ஜூஸ் குடிக்கலாம்.

நெல்லிக்காய் ஜூஸ் :

நெல்லிக்காய் ஜூஸ் :

நான்கு பெரிய நெல்லிக்காயை எடுத்து பொடியாக நறுக்கிக் கொள்ளுங்கள். அதனை அரைத்து வடிகட்டி சாறு எடுத்துக் கொள்ளுங்கள், அதனுடன் இரண்டு ஸ்பூன் தேன் கலந்து அப்படியே குடிக்கலாம்.இதில் அதிகப்படியான விட்டமின் சி இருக்கிறது. செல்களின் வளர்ச்சிக்கு பெரிதும் துணை நிற்கிறது.

சுரைக்காய் மற்றும் தர்பூசணி :

சுரைக்காய் மற்றும் தர்பூசணி :

ஒரு கப் சுரைக்காய் எடுத்துக் கொள்ளுஙக்ள் அதனுடன் ஒரு கப் தர்பூசணி பழம், ஒரு கைப்பிடி மல்லித்தழை சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளுங்கள், பின்னர் அதனுடன் ஒரு ஸ்பூன் சீரகத்தூள் மற்றும் தேன் கலந்து குடிக்கலாம்.

சுரைக்காய் மற்றும் தர்பூசணி இரண்டிலுமே மிக குறைவான கலோரியே இருக்கிறது. இது ஆண்ட்டி மைக்ரோபியல் மற்றும் ஆண்ட்டி இன்ஃப்லமேட்டரி துகள்கள் நிறையவே இருக்கிறது.

கருந்திராட்சை :

கருந்திராட்சை :

கருந்திராட்சை மற்றும் பீட்ரூட் இரண்டையும் சேர்ந்து இந்த ஜூஸ் தயாரிக்கப்படுகிறது. அரை கப் கருந்திராட்சை, ஒரு டீஸ்பூன் தேன், துருவிய பீட்ரூட், சீரகத்தூள்,உப்பு. கருந்திராட்சை மற்றும் பீட்ரூட் இரண்டையும் அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள் அதனுடன் தேன்,உப்பு, சீரகம் ஆகியவற்றை எடுத்துக் கொள்ளுங்கள்.

இதில் ஆண்ட்டி ஆக்ஸிடண்ட் நிறையவே இருக்கிறது, இது உங்கள் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை மெயிண்டெயின் செய்திடும்.

ப்ரோக்கோலி :

ப்ரோக்கோலி :

அரை கப் திராட்சை அதனுடன் சம அளவு ப்ரோக்கோலி இரண்டையும் அரைத்துக் கொள்ளுங்கள், அத்துடன் உப்பு மற்றும் மிளகுத்தூள் சேர்த்துக் கொள்ளுங்கள். உடல் எடையை குறைக்க ப்ரோக்கோலி சிறந்த இடத்தை வகிக்கிறது.

திராட்சைக்கு பதிலாக பச்சை ஆப்பிளை சேர்த்துக் கொள்ளலாம். அதில் அதிகப்படியான பொட்டாசியம்,மேக்னீசியம்,கால்சியம் மற்றும் போஸ்பரஸ் ஆகியவை இருக்கிறது. இதனை காலை உணவாக நீங்கள் எடுத்துக் கொள்ளுங்கள்.

ஏன் ஜூஸ் ? :

ஏன் ஜூஸ் ? :

இந்த ஜூஸிலிருந்து எளிதாக நியூட்ரிசியன்கள் எடுத்துக் கொள்ளப்படுகிறது. அதோடு எளிதாகவும் செரிமானம் ஆக உதவிடுகின்றது. பிற உணவுகளில் இருக்கும் சத்துக்கள் நம் உடலில் சேரவும், எனர்ஜி கிடைக்கவும் உணவு செரிமானம் ஆவது என்பது மிகவும் அவசியமான ஒன்றாகும்.

இதில் கொழுப்பு மற்றும் சோடியத்தின் அளவு குறைவாக இருக்கும், இதனால் கொலஸ்ட்ராலை நாம் எளிதாக குறைக்க முடியும். சாறு வகைகளை தொடர்ந்து குடிப்பதினால் இனிப்பு அல்லது எண்ணெயில் பொறித்த உணவுகளை அடிக்கடி சாப்பிட வேண்டும் என்ற எண்ணம் தோன்றாது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Juice Recipes For Weight Loss

Juice Recipes For Weight Loss
Story first published: Thursday, March 8, 2018, 14:35 [IST]
Desktop Bottom Promotion