For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உடல் எடை குறைக்க விட்டமின் டி அவசியமா?

விட்டமின் டிக்கும் உடல் எடை குறைவுக்கும் ஏதேனும் சம்பந்தம் இருக்கிறதா என்பதைப் பற்றிய விரிவான கட்டுரை.

|

விட்டமின் டி நோய் எதிர்ப்பு சக்திக்கும் எலும்பு வலுவடையும். ஆனால் விட்டமின் டி பற்றாகுறை ஏற்பட்டால் ஒபீசிட்டி ஏற்படுவதற்கும் அதிக வாய்ப்புகள் இருப்பதாக சமீபத்திய ஆய்வொன்றில் கண்டுபிடித்திருக்கிறார்கள். உடல் எடை குறைக்க வேண்டும் என்றால் டயட் மற்றும் உடற்பயிற்சி செய்வதுடன் நமக்கு தேவையான சத்துக்களையும் சேர்த்டுஹ்க் கொள்ள வேண்டியது அவசியமாகும்.

உடலில் விட்டமின் டி அளவு எப்படியிருக்கிறது என்பதை தொடர்ந்து கண்காணித்து அதற்கான உணவுகள் மற்றும் சப்ளிமெண்ட் எடுத்துக் கொள்வதினால் உடல் எடை ஆரோக்கியமாக குறையும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
விட்டமின் டி :

விட்டமின் டி :

சூரியனிடமிருந்து வருகிற கதிர்கள் மூலமாக நம் உடலுக்கு கிடைக்கிற ஒரு ஆற்றல் தான் விட்டமின் டி. நேரடியாக கிடைக்காது, நம் உடலுடன் விணைபுரிந்து விட்டமின் டியாக நமக்கு கிடைக்கிறது. இது கொழுப்பை கரைக்கக்கூடிய விட்டமினாகவும் இருக்கிறது.

இந்த விட்டமின் டி பெரும்பாலும் நம்முடைய கொழுப்பு செல்களில் தான் சேர்ந்திருக்கும்.

இரண்டு வகை :

இரண்டு வகை :

இவற்றில் இரண்டு வகைகள் இருக்கின்றன விட்டமின் டி2 மற்றும் விட்டமின் டி3. இவற்றில் விட்டமின் டி3 தான் சூரியனிடமிருந்து கிடைக்கக்கூடியது. விட்டமின் டி2 உணவுகள் மற்றும் சப்ளிமெண்ட் மூலமாக நீங்கள் எடுத்துக் கொள்ளலாம்.

விட்டமின் டி இருப்பதினால் உடலில் கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் கிரகித்துக் கொள்ள உதவிடுகிறது.

நோய் எதிர்ப்பு சக்தி :

நோய் எதிர்ப்பு சக்தி :

இவை சரியான விகிதத்தில் நமக்கு கிடைப்பதினால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். அதோடு பெரும்பாலும் விட்டமின் டி போதியளவு கிடைக்காமல் தான் இருக்கிறார்கள். இதற்கு காரணம் இன்றைய வாழ்க்கை முறை தான்.

நீண்ட நேரம் வெளியிடத்திற்கு செல்லமால் ஒரேயிடத்தில் வீட்டிற்குள்ளேயே இருப்பது, விட்டமின் டி இருக்கிற உணவுகளை சாப்பிடாமல் தவிர்ப்பது போன்றவற்றால் பெரும்பாலானோருக்கு விட்டமின் டி போதியளவு கிடைப்பதில்லை.

ஒபீசிட்டி :

ஒபீசிட்டி :

இது குறித்து தொடர்ந்து ஆய்வுகள் நடந்து வருகிறது. இதுவரை நடத்தப்பட்ட ஆய்வில் விட்டமின் டி பற்றாகுறை இருப்பவர்களில் 35 சதவீதத்திற்கும் மேற்பட்டோர் ஒபீசிட்டி பிரச்சனையினால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

தொடர்ந்து ஒபீசிட்டியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கணிசமாக விட்டமின் டி சப்ளிமெண்ட் கொடுக்க அவர்களின் பாடி ஃபேட் மாஸ் கணிசமாக குறைந்திருக்கிறது. அதே போல விட்டமின் டி அளவு அதிகரித்தால் உடல் எடை குறைகிறதா என்பது குறித்தும் ஆய்வாளர்கள் ஆய்வு நடத்தியிருக்கிறார்கள்.

சுமார் பன்னிரெண்டு வாரங்கள் நடத்தப்பட்ட இந்த ஆய்வில் ஒபீசிட்டியால் பாதிக்கப்பட்டவர்களை இரண்டு குழுவாக பிரித்து ஒரு குழுவுக்கு விட்டமின் டி அதிகம் கிடைக்குமாறும் இன்னொரு பிரிவினருக்கு கொடுக்காமலும் ஆய்வு செய்தார்கள். இதில் விட்டமின் டி கிடைத்த குழுவினரிடன் உடல் எடையில் மாற்றம் தெரிந்திருக்கிறது.

சூரிய ஒளி :

சூரிய ஒளி :

விட்டமின் டி கிடைக்க நீங்கள் என்னவெல்லாம் செய்யலாம் என்பதற்கான அடிப்படை டிப்ஸ் இது. விட்டமின் டிக்கான முக்கியமான சோர்ஸ் சூரிய ஒளி தான். சூரிய ஒளி மூலமாக நமது சருமம் தனக்கு தேவையான விட்டமின் டி யை தயாரித்துக் கொள்ளும்.

விடியற்காலை வெயில் தான் இதற்கு மிகவும் சிறந்தது. அதனால் தான் காலையில் எழுந்து வாக்கிங் செல்வது மிகவும் நல்லது என்று சொல்வார்கள். காலை எட்டு மணிக்கு முன்னதாக இருக்கிற இளம்வெயில் நல்லது. அதற்கு மேல் என்றால் அந்த வெயில் நம் சருமத்தை பாதித்து விடும். சன் ஸ்கிரீன் அவசியம் போட்டுக் கொள்ள வேண்டும்.

சப்ளிமெண்ட் :

சப்ளிமெண்ட் :

சூரிய ஒளியை மட்டும் நம்பியிருக்க முடியாது என்பதால் விட்டமின் டி சப்ளிமெண்ட் எடுத்துக் கொள்ளலாம். இதற்கு கண்டிப்பாக மருத்துவ ஆலோசனை தேவை. நீங்களாக எடுத்துக் கொள்வதை விட மருத்துவரின் பரிந்துரையில் சாப்பிடுவது நல்லது. இதைத் தவிர விட்டமின் டி நிறைந்த உணவுப் பொருட்களை அதிகமாக சேர்த்துக் கொள்ளுங்கள்.

எந்தெந்த உணவுப்பொருட்களில் எல்லாம் அதிகளவு விட்டமின் டி இருக்கிறது என்பதை பார்க்கலாம்.

பால் :

பால் :

பாக்கெட் பால் அல்லாமல் பசும்பாலில் அதிகளவு விட்டமின் டி மற்றும் கால்சியம் இருக்கிறது. இவை இரண்டுமே எலும்புகளின் வளர்ச்சிக்கும், அவற்றின் ஆரோக்கியத்திற்கும் மிகவும் நல்லது. காலை அல்லது இரவு தூங்கச் செல்வதற்கு முன்னால் ஒரு கிளாஸ் அளவு பால் குடிக்கலாம்.

அதற்கு மேல் சேர்க்கவேண்டாம். இது அளவுக்கு அதிகமாக குடித்தால் சிலருக்கு வயிற்றுப்போக்கு உட்பட உடல் உபாதைகளை ஏற்படுத்தி விடும்.

பாதாம் :

பாதாம் :

பாதாமில் அதிகளவு ஒமேகா 3, ப்ரோட்டீன்ம் கால்சியம் மற்றும் விட்டமின் டி ஆகியவை இருக்கிறது. உங்களுடைய ஸ்நாக்ஸ் மற்றும் சாலட்களில் பாதாம் அதிகளவு சேர்த்துக்கொள்ளுங்கள். பிற நட்ஸ் வகைகளை சாப்பிடுவதை விட பாதாம் மிகவும் சிறந்ததாகும்.

முட்டை :

முட்டை :

இதில் கொழுப்பு கரையக்கூடிய விட்டமின்ஸ் நிறையவே இருக்கிறது. அவற்றில் ஒன்று தான் விட்டமின் டி. முட்டை எடுத்துக் கொள்வதினால் உடல் எடையை குறைக்க உதவுவதுடன் உடல் இயக்கங்களுக்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்கிறது.

கொல்ஸ்ட்ரால் அதிகமாக இருந்தால் முட்டையின் மஞ்சள் கரு சாப்பிடுவதை தவிர்த்திடுங்கள்.

காளாண் :

காளாண் :

காளானில் அதிகளவு ப்ரோட்டீன் மற்றும் விட்டமின் டி இருக்கிறது. சாலட், சூப் ஆகியவற்றோடு சேர்த்துக் கொள்ளலாம். இவை தவிர மீன், நண்டு போன்ற கடல் உணவுகளிலும் உங்களுக்கு அதிகளவு விட்டமின் டி கிடைத்திடும்.

விட்டமின் டி குறைபாடு இருக்கிறது என்று சொன்னால் திடீரென்று உடல் எடை அதிகரிக்கும், எப்போதும் உடல் வலி, மன அழுத்தம், கவலை என சோர்ந்து விழுவீர்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Is Vitamin D Linking For Weight Loss

Is Vitamin D Linking For Weight Loss
Desktop Bottom Promotion