Latest Updates
-
வார ராசிபலன் (07 ஜூன் 2026 - 13 ஜூன் 2026)- இந்த வாரம் உங்களின் ராசிக்கு எப்படி இருக்கப்போகுது தெரியுமா? -
உடலுறவு மூலம் துணையை தேர்ந்தெடுக்கும் பெண்கள் முதல் வயதான பெண்ணுடன் உறவு வரை வினோத பாலியல் சடங்கு உள்ள நாடுகள் -
அஞ்சப்பர் ஹோட்டல் வெஜ் பிரியாணி ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - வேற லெவலில் இருக்கும் -
சூரியன்-சுக்கிரன் இணைப்பால் ஜூன் 08-க்கு பின் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் இவங்கதான் -
சாணக்கிய நீதி படி இப்படிப்பட்டவர்களுக்கு தானம் செய்வது உங்களை ஏழையாக மாற்றுமாம் - ஜாக்கிரதை -
பச்சை பயறு தோசையும், இஞ்சி சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணிப் பாருங்க... -
இன்றைய ராசிபலன் 06 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கதவை தட்டப்போகுதாம் -
சூரிய பெயர்ச்சியால் ஜூன் 15 முதல் இந்த 4 ராசிக்காரர்களின் வருமானம் உயரப்போகுது! -
30 ஆண்டுக்கு பின் சுக்கிரனால் உருவாகும் நவபஞ்சம யோகம்: இந்த 3 ராசிகளுக்கு கோடீஸ்வர யோகத்தைத் தரப்போகுதாம் -
பொட்டுக்கடலை இருந்தா இந்த மாதிரி குருமா வைச்சு பாருங்க - இட்லி, தோசைக்கு சூப்பரான சைடிஷா இருக்கும்
பெண்கள் மார்பகத்தை பற்றி அறியப்படாத 10 உண்மைகள் - வினா, விடைகள்!
பெண்கள் தங்களின் உடல் மீதே மிகுந்த அறியாமை கொண்டுள்ளனர். இதுதான் அவர்களுக்கு பல்வேறு கஷ்டங்களை தந்து கொண்டிருக்கிறது. அதிலும் பெண்களை அதிகம் தாக்கும் மார்பக புற்றுநோய் போன்றவற்றை பற்றி தெரிந்து வைத்தி
பெண்களுக்கு பல கடினமான விஷியங்கள் இருக்கத்தான் செய்கிறது. உடல் சார்ந்தவை, உளவியல் சார்ந்த பிரச்சினைகள், உறவுகள் இடையூறுகள், நிம்மதியற்ற தாம்பத்தியம் இப்படி பல பிரச்சினைகளையும் அன்றாடம் இவர்கள் சந்திக்க நேரிடுகிறது. இவற்றில் குறிப்பாக சொல்ல போனால் அவர்கள் உடல் சார்ந்த பிரச்சினைகள்தான் முதல் இடத்தில் இருக்கிறது. இதற்கு முதன்மை காரணம் அறியாமையே.

பெண்கள் தங்களின் உடல் மீதே மிகுந்த அறியாமை கொண்டுள்ளனர். இதுதான் அவர்களுக்கு பல்வேறு கஷ்டங்களை தந்து கொண்டிருக்கிறது. அதிலும் பெண்களை அதிகம் தாக்கும் மார்பக புற்றுநோய் போன்றவற்றை பற்றி தெரிந்து வைத்திருக்க வேண்டும். பெண்களுக்கு தங்கள் மார்பகங்களை பற்றி கண்டிப்பாக அதிக கவனமும், விழிப்புணர்வும் மிக அவசியமானது. இந்த பதிவில் சற்றே வித்தியாசமான வினா - விடைகளுடன், உங்கள் மார்பகங்களை பற்றிய ஆரோக்கியமான விஷியங்களை தெரிந்து கொள்வோம்.

1. உங்கள் 2 மார்பகங்களும் ஒரே அளவில்தான் இருக்குமா...?
அ . சரி
ஆ. தவறு
விடை :- தவறு
விளக்கம் :-
ஒரு சர்வேயில் 44% பெண்களின் மார்பகங்கள் அளவு சிறிது மாறுபடும் என்றே பெண்கள் கூறியுள்ளனர். எனவே, 2 மார்பகங்களும் சிறிது அளவில் வேறுபாடும். உங்கள் உள்ளாடைகள் ஒரே அளவிலான கப்களை கொண்டிருந்தால் அது சரியான உள்ளாடைகள் இல்லை என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.

2. உங்கள் மார்பக காம்புகளை தொடும்போது ஆர்கசன் அடைவீர்களா..?
அ. ஆம்
ஆ. இல்லை
விடை :- ஆம்
விளக்கம் :-
இது முற்றிலும் உண்மையே. ஒரு பெண் தனது மார்பக காம்புகளை தொடும் போது, அதனால் ஆர்கசம் அடைவது இயல்புதான் என்கிறது ஆராய்ச்சிகள். ஏனெனில் மார்பக காம்புகள் முழுவதுமாக நரம்புகளால் சூழப்பட்டவை. எனவே ஒருவர் அதனை தொடும்போது ஒருவித பரவச நிலையாக பெண்கள் உணர்வது இதனால்தான்.

3. மார்பகங்களால் எவ்வளவு பாலை பொதுவாக தாங்க முடியும் ?
அ. 1/2 பவுண்ட்
ஆ. 1/4 பவுண்ட்
இ. 1 பவுண்ட்
விடை :- 1/2 பவுண்ட்
விளக்கம் :-
ஒரு சராசரி பெண்களின் மார்பகம் 5.3 முதல் 7 அவுன்ஸ் பாலை தாங்கும் சக்தி கொண்டது. இது தாய்மை அடையும் நேரங்களில் நிச்சயம் வேறுபாடும். ஒரு பெண் தாயாகும் போது அவரின் மார்பகங்கள் 17 அவுன்ஸ் தாய்ப்பாலை தாங்கும் அளவு ஆற்றல் கிடைக்கும் என்கின்றனர் மருத்துவர்கள்.

4. மார்பக காம்புகளில் இருந்து எப்போதுமே பால் வடியுமா..?
அ. ஆம்
ஆ. இல்லை
இ. தாய்மை அடையும்போது
விடை :- தாய்மை அடையும்போது
விளக்கம் :-
சாதாரணமாக பெண்களுக்கு மார்பகங்களில் எந்தவித பாலும் வெளியே வடிவதில்லை. ஆனால் தாய்மை அடையும் பருவத்தில் அவர்களின் மார்பகங்களில் இருந்து பால் வடிவது இயல்பே. இதை தவிர்த்து சாதாரண நேரங்களில் பால் வடிந்தால் தைராய்டு போன்ற பிரச்சினைகளும், பலவித ஹார்மோன் குறைபாடுகளும் இருப்பதற்கான அறிகுறியே. எனவே, இவ்வாறு அறிகுறிகள் இருந்தால் கட்டாயம் மருத்துவரை ஆலோசிக்க வேண்டும்.

5. எத்தனை பெண்கள் தங்கள் உள்ளாடைகளை சரியான அளவில் அணிகிறார்கள் ?
அ. பாதி பேர்
ஆ. குறைந்தது நான்கில் ஒருவர் மட்டுமே
இ. அதிக பட்சம் மூன்றில் இருவர்
விடை :- குறைந்தது நான்கில் ஒருவர் மட்டுமே
விளக்கம் :-
ஒரு திடுக்கிடும் உண்மை என்னவென்றால், 85% பெண்கள் தங்கள் உள்ளாடைகளை சரியான அளவுடையதாக அணிவதில்லை. இது பல்வேறு பிரச்சினைகளுக்கு ஆரம்ப புள்ளியாக கருதப்படும். சரியான அளவுடைய உள்ளாடைகளை அணியாததால் மோசமான மார்பக வலி, அழகற்ற மார்பகங்களின் தோற்றம், முதுகு வலி மற்றும் நரம்பு சம்பந்தமான பல பிரச்சினைகள் வரக்கூடும்.
மேலும் பெண்களுக்கு ஒவ்வொரு பருவத்திலும் அவர்களது மார்பகத்தின் அளவு மாறக்கூடும். எனவே அதற்கு தகுந்தாற்போல உள்ளாடைகளை அணிவது மார்பகங்களுக்கு ஆரோக்கியத்தை தரும்.

6. உடலில் மார்பகம் மட்டுமின்றி வேறு பகுதிகளிலும் மார்பக காம்புகள் இருக்குமா..?
அ. எங்கு வேண்டுமானாலும் வளரும், முகத்திலும் கூட
ஆ. ஆண்களை காட்டிலும் பெண்களுக்கே அதிகம் ஏற்படும்.
விடை :- எங்கு வேண்டுமானாலும் வளரும், முகத்திலும் கூட
விளக்கம் :-
உண்மையிலே இது ஒரு ஆச்சரியமான தகவல்தான். 1% பெண்களுக்கு மார்பக காம்புகள், மார்பகங்கள் மட்டுமின்றி முகத்தில் கூட வளருமாம். ஆனால் இது சாதாரண மார்பக காம்புகளை விட சிறியதாக இருக்கும். சிலருக்கு இது தோள்பட்டை, கால் போன்ற இடங்களிலும் மிக அரிதாக காணப்படும்.

7. மார்பகம் என்பது?
அ. ஒரு உறுப்பு
ஆ. தசை
இ. தொங்குதசை
விடை :- ஒரு உறுப்பு
விளக்கம் :-
பொதுவாக உறுப்புகள் என்றாலே அதற்கென்று தனி செயல்பாடுகள் இருக்கும். அவ்வாறு இருப்பதையே உறுப்பு என்பார்கள். மார்பகங்களும் பாலை சுறப்பதால் இதனை உறுப்பு என்கிறோம். முக்கிய குறிப்பு என்னவென்றால் ஆண்களுக்கு இது போன்ற செயல்பாடு கிடையாது.

8. மார்பக காம்புகளை சுற்றி இருக்கும் முடிகள் எப்படிப்பட்டது..?
அ. அபாயகரமானது
ஆ. இயல்பான ஒன்றே
இ. பிரச்சினைக்குரியதே
விடை :- இயல்பான ஒன்றே
விளக்கம் :-
மார்பக காம்புகளை சுற்றி முடி இருப்பது இயல்பான ஒன்றுதான். உங்களுக்கு அந்த முடிகள் இடையூராக இருந்தால் அவற்றை கத்தரிக்கோலை கொண்டு சிறிது வெட்டி விடலாம். ஆனால் அந்த முடிகளை ஷேவ் அல்லது பிடுங்கி விட கூடாது. அவ்வாறு செய்தால் பல நோய் தொற்றுகள் ஏற்பட கூடும்.

9. தாய்ப்பால் குழந்தைக்கு கொடுப்பதால் பெண்களின் மார்பகங்கள் தொங்கிவிடுமா..?
அ. ஆம்
ஆ. இல்லை
விடை :- இல்லை
விளக்கம் :-
குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பதால் பெண்களின் மார்பகம் தொங்கிவிடாது. முதுமை அடைய அடைய பெண்களின் மார்பகங்கள் வலிமை இழந்து தொங்கி விடும். மேலும் புகை பழக்கம் இருபவர்களுக்கும் மார்பகங்கள் விரைவில் தொங்க தொடங்கி விடும்.

10. பெண்கள் தங்கள் மார்பகத்தால் மகிழ்கிறார்களா..?
அ. ஆம்
ஆ. இல்லை
விடை :- இல்லை
விளக்கம் :-
இதற்கு விடை, பெண்களுக்கு மார்பகம் அவ்வளவு மகிழ்ச்சியை தருவதில்லை என்பதே. சில பெண்கள் சிறிய மார்பகம் வேண்டும் என்றும், சிலர் பெரிய மார்பகம் வேண்டும் என்றும் பல்வேறு வித்தியாசமான விருப்பங்கள் இருப்பதால் அவர்களுக்கு இது மகிழ்ச்சி தரக்கூடியதாக இல்லை.
இதுவே மார்பகத்தை பற்றிய 10 சுவாரசிய ஆரோக்கியமான வினா - விடைகள்.



Click it and Unblock the Notifications