For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வெயில் காலத்தில் ஏற்படும் அதிகப்படியான தாகத்தைத் தடுக்கும் இந்திய பானங்கள்!

இங்கு வெயில் காலத்தில் ஏற்படும் அதிகப்படியான தாகத்தைத் தடுக்கும் பானங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

|

கொளுத்தும் வெயில் காலத்தில் உடலில் நீர்ச்சத்தின் அளவு குறைய ஆரம்பிப்பதால், தாகம் அதிகம் எடுக்கும். இப்படி தாகம் எடுக்கும் போது, பலர் கடைகளில் விற்கப்படும் சோடா பானங்கள் அல்லது குளிர் பானங்களை வாங்கிப் பருகுவார்கள். காற்றூட்டப்பட்ட இந்த பானங்களில் வெற்று கலோரிகளைத் தவிர வேறு எந்த ஒரு ஊட்டச்சத்துக்களும் இல்லை. இத்தகைய பானங்களை அதிகம் குடித்தால், அதனால் உடல் ஆரோக்கியம் மிகவும் மோசமாக பாதிக்கப்படுவதோடு, உடல் பருமனும் அதிகரிக்கும்.

Indian Drinks That Will Help You Quench The Thirst And Beat The Heat This Summer

ஒருவரது தாகத்தைத் தணிப்பதற்கு தண்ணீர் மட்டுமின்றி, வேறு சில பானங்களும் உதவியாக இருக்கும். இந்தியாவில் தாகத்தைத் தணிப்பதற்கு என்று பல்வேறு ஆரோக்கியமான பானங்கள் உள்ளன. இந்த பானங்கள் தாகத்தை தணிப்பதோடு, உடலை புத்துணர்ச்சியுடனும், வறட்சியடையாமலும், ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்ளும். அதோடு இந்த பானங்கள் பல்வேறு ஆரோக்கிய நன்மைகளையும் தன்னுள் கொண்டுள்ளது.

இக்கட்டுரையில் கோடை வெயிலில் எடுக்கும் அதிகப்படியான தாகத்தைத் தணிக்கும் சில அற்புத பானங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. அதைப் படித்து, அவற்றைத் தயாரித்துக் குடித்து உங்கள் தாகத்தைத் தணித்துக் கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மாங்காய் ஜூஸ்

மாங்காய் ஜூஸ்

மாங்காய் கொண்டு தயாக்கப்படும் இந்த பானம், சோடியம் குளோரைடு மற்றும் இரும்புச்சத்து இழப்பைத் தடுக்கும். மேலும் இந்த பானம் இரத்த சோகை, காலரா மற்றும் வயிற்றுப் போக்கு போன்ற பிரச்சனைகள் அண்டாமல் பாதுகாக்கும். இந்தியாவில் வெப்ப பக்கவாதத்தை சரிசெய்வதற்கு சிறந்த நிவாரண பானமும் இது தான்.

எப்படி தயாரிப்பது?

இந்த பானம் தயாரிப்பதற்கு தேவையான பொருட்களாவன மாங்காய், வெல்லம் மற்றும் ஏலக்காய் ஆகும். முதலில் மாங்காயை வேக வைத்து, அதில் உள்ள கூழ் பகுதியை ஒரு பௌலில் எடுத்து குளிர வைத்து, அத்துடன் இதர பொருட்களை சேர்த்து கலந்து, 1 சிட்டிகை உப்பு சேர்த்துக் கொள்ள வேண்டும். பின் அதில் குளிர்ச்சியான நீர் சேர்த்து கலந்தால், மாங்காய் ஜூஸ் தயார்.

ஷிகன்ஜி

ஷிகன்ஜி

ஷிகன்ஜி வட இந்தியர்கள் கோடைக்காலத்தில் குடிக்கும் பானமாகும். இதில் வைட்டமின் சி அதிகம் உள்ளது. இது உடலை குளிர்ச்சி அடையச் செய்வதோடு, இழந்த ஆற்றலை மீண்டும் ஒரே நிமிடத்தில் பெறச் செய்யும்.

எப்படி தயாரிப்பது?

இந்த பானம் தயாரிப்பது மிஎவும் ஈஸி. இந்த பானம் தயாரிப்பதற்கு தேவையான பொருட்களாவன நற்பதமான எலுமிச்சை, கருப்பு உப்பு, சீரகப் பொடி மற்றும் சர்க்கரை போன்றவைகளாகும். இந்த பொருட்கள் அனைத்தையும் ஒரு பாத்திரத்தில் போட்டு, அதில் 1 டம்ளர் குளிர்ச்சியான நீர் சேர்த்து நன்கு கலந்தால், ஷிகன்ஜி ரெடி!

கொக்கும் சர்பத்

கொக்கும் சர்பத்

கொக்கும் என்னும் பழம இந்தியாவின் கடலோரப் பகுதிகளில் பெரும்பாலும் கிடைக்கும். இந்த பழம் கோடைக்கால வெப்பத்தை எதிர்க்க மற்றும் அதிகப்படியான பித்த நீரை சுரப்பதைக் குறைக்க சிறந்ததாகும். மேலும் இந்த பழம் பசியுணர்வை அதிகரிப்பதோடு, செரிமான மண்டலத்திற்கும் உதவும். கொக்கும் பழம் கோடை வெயிலால் ஏற்படும் அரிப்பைப் போக்கும். அதற்கு அந்த பழத்தை அரிக்கும் பகுதியில் நேரடியாக தேய்த்தால் போதும்.

எப்படி தயாரிப்பது?

கொக்கும் பழத்தை பாதியாக வெட்டி, விதைகளை நீக்கிவிட்டு, அரைத்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும். கொக்கும் கூழ் கூட மார்கெட்டுகளில் விற்கப்படுகிறது. சர்க்கரை சிரப்பை தயார் செய்து, அத்துடன் கொக்கும் பேஸ்ட், சீரகப் பவுடர் மற்றும் ஏலக்காய் பவுடர் ஆகியவற்றை சேர்த்து கலந்து கொள்ளுங்கள். பின் ஒரு டம்ளரில் 2-3 டேபிள் ஸ்பூன் தயாரித்து வைத்துள்ள கொக்கும் பேஸ்ட் எடுத்து, அத்துடன் குளிர்ச்சியான நீர் சேர்த்து கலந்தால் பானம் தயார். எஞ்சிய கொக்கும் பேஸ்ட்டை ஃப்ரிட்ஜில் வைத்துக் கொள்ளுங்கள்.

மோர்

மோர்

கோடையில் இந்தியாவின் அனைத்து பகுதிகளிலும குடிக்கும் ஒரு பொதுவான பானம் தான் மோர். இது உடல் சூட்டைக் குறைக்க சிறந்த பானம். மேலும் மோர் இரவில் நல்ல தூக்கத்தைப் பெறத் தூண்டும்.

எப்படி தயாரிப்பது?

ஒரு பௌலில் சிறிது தயிரை எடுத்து, அத்துடன் சிறிது நறுக்கிய இஞ்சி, சீரகப் பொடி, கறிவேப்பிலை மற்றும் 1 சிட்டிகை உப்பு சேர்த்து, நீரை ஊற்றி, நன்கு கலந்து கொள்ளுங்கள். இந்த மோரில் மண்பானை நீரை சேர்த்து கலந்து குடிப்பது மிகவும் நல்லது.

தாண்டை

தாண்டை

தாண்டை தயாரிப்பது சற்று கடினமானது. ஆனால் இது மிகவும் சுவையானது மற்றும் ஃப்ளேவர் கொண்ட இந்திய பானம். இந்த பானம் ஒருவரது நோயெதிர்பபு மண்டலத்தை வலிமைப்படுத்தி, நோய்களை எதிர்க்க உதவும்.

எப்படி தயாரிப்பது?

ஒரு பாத்திரத்தில் 1 லிட்டர் பாலை ஊற்றி கொதிக்க வைத்து இறக்கி, அறை வெப்பநிலையில் குளிர வையுங்கள். பின் 1/2 கப் பாதாம், 2 டேபிள் ஸ்பூன் கசகசா, சோம்பு, 1/2 டீஸ்பூன் ஏலக்காய் பொடி மற்றும் 20 வெள்ளை மிளகு ஆகியவற்றை மிக்ஸியில் போட்டு அரைத்து பேஸ்ட் செய்து கொள்ளுங்கள். பின் அரைத்த பேஸ்ட்டை பாலுடன் சேர்த்து கலந்து, ஃப்ரிட்ஜில் 3-4 மணிநேரம் வையுங்கள். பின் ஒரு டம்ளரில் இந்த பானத்தை ஊற்றி, அதில் சர்க்கரை, குங்குமப்பூ சேர்த்து கலந்து குடியுங்கள்.

பாதாம் பால்

பாதாம் பால்

பாதாம் பாலில் வைட்டமின் டி அதிகளவு உள்ளது. பாதாம் பாலை ஒருவர் குடித்தால், அது ஒருவரது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு, வெயிலில் ஏற்படும் தாகத்தைத் தணிக்கும்.

எப்படி தயாரிப்பது?

பாதாமை அரைத்து பொடி செய்து கொள்ளுங்கள். பின் ஒரு டம்ளர் பாலில் பாதாம் பொடியுடன் வேண்டுமானால், பிஸ்தா பொடி, ஏலக்காய் பொடி, குங்குமப்பூ ஆகியவற்றையும் சேர்த்துக் கொள்ளலாம். விருப்பமிருந்தால், குங்குமப்பூவையும் சேர்த்துக் கொள்ளலாம்.

ஜல் ஜீரா

ஜல் ஜீரா

ஜல் ஜீரா என்னும் பானம் செரிமான மண்டலத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் பண்புகளைக் கொண்டுள்ளது. அதோடு இது சற்று புளிப்புச் சுவையுடன் இருப்பதால், இது தாக்கத்தைத் தணிப்பதோடு, நாள் முழுவதும் ஆற்றலுடன் சிறப்பாக செயல்படச் செய்யும்.

எப்படி தயாரிப்பது?

இந்த பானம் எலுமிச்சை ஜூஸ் மற்றும் ஜல் ஜீரா பவுடர் கொண்டு தயாரிக்கப்படுவதாகும். இந்த பவுடரில் சீரகம், ப்ளாக் சால்ட், இஞ்சி, மிளகு, புதினா, பச்சை மிளகாய் போன்றவை இருக்கும். இந்த பானத்தை குளிர்ச்சியுடன் குடிக்க சிறப்பான பலன் கிடைக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Indian Drinks That Will Help You Quench The Thirst And Beat The Heat This Summer

India has many drinks that are not just healthy but will appease your palate as well. Here we have listed few Indian summer drinks which will help you stay fresh, hydrated and have many health benefits as well.
Desktop Bottom Promotion