For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கருணாநிதிக்கு இந்த பிரச்னையால தான் தொற்று வந்ததா? நமக்கு வந்தா எப்படி சமாளிக்கலாம்?

சிறுநீர் கோர்வை என்பது ஒரு நோய் கிடையாது. அது சிறுநீரகத்தில் உண்டாகிற ஒருவித வீக்கத்துக்கான நிலை தான்.அதாவது சிறுநீரகத்தில் இருந்து சிறுநீர்ப் பைக்கு சிறுநீர் செல்வதில் தடை உண்டாகிற போது தான் இந்த பிர

|

சிறுநீரக நீர்க் கோர்வை என்பது ஒரு நோய் அல்ல. சிறுநீரகத்தில் உண்டாகும் வீக்கத்திற்கான ஒரு இரண்டாம் நிலையாக இது பார்க்கப்படுகிறது. சிறுநீரகத்தில் இருந்து சிறுநீர் பைக்கு செல்லும் சிறுநீர் அடைப்பால் சிறுநீரகத்தில் வீக்கம் உண்டாகிறது. இப்படி சிறுநீர் கழிக்காமல் சேர்த்து வைக்கப்படுவதால் உண்டாகும் வீக்கம் அல்லது அழற்சி சிறுநீரக நீர்க் கோர்வை என்று அறியப்படுகிறது. எந்த வயதினருக்கும் இந்த நிலை ஏற்படலாம்.

Hydronephrosis in tamil

இந்த நிலை உண்டாவதற்கான காரணம் என்ன, இதனைக் கண்டறிவது எப்படி, இந்த நிலைக்கான அறிகுறிகள் மற்றும் இதனை குணப்படுத்துவதற்கான சிகிச்சை முறைகள் போன்றவற்றைப் பற்றி இந்த பதிவில் நாம் தொடர்ந்து காணலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
எதனால் ஏற்படுகிறது?

எதனால் ஏற்படுகிறது?

சிறுநீரக நீர்க் கோர்வை என்பது ஒரு முதன்மை நோய் அல்ல. இந்த நிலை உண்டாவதற்கான அடிப்படை காரணம் உள்ளது. சிறுநீரகத்தின் உட்புற மற்றும் வெளிப்புறப் பகுதிகளில் ஏற்படும் பாதிப்பும் இதற்குக் காரணமாக இருக்கலாம். பொதுவாக சிறுநீரகத்திலிருந்து சிருநீர்ப்பைக்கு செல்லும் சிறுநீர் உடலில் இருந்து வெளியேறுகிறது. இந்த செய்லப்பாடு சில நேரம் அடைக்கப்பட்டு, சிறுநீர் வெளியாவது தடைபட்டு, சிறுநீரகத்தில் சேமித்து வைக்கப்படும் நிலையை சிறுநீரக நீர்க் கோர்வை என்று கூறுவர்.

சிறுநீர் கோர்வை - காரணங்கள்

சிறுநீர் கோர்வை - காரணங்கள்

வெசிகோரெட்டெர்ல் ரிஃப்ளக்ஸ் மற்றும் சிறுநீரக பாதையில் ஏற்படும் அடைப்பு போன்றவை சிறுநீரக நீர்க் கோர்வைக்கான சில காரணங்கள் ஆகும். சிறுநீர் வெளியேறுவதில் தவறு ஏற்பட்டு, சிறுநீரகத்தில் இருந்து முழுவதுமாக சிறுநீர் வெளிப்படாமல் இருப்பதால் ஏற்படும் வீக்கம் வெசிகோரெட்டெர்ல் ரிஃப்ளக்ஸ் என்பதாகும். சிறுநீரக கட்டி மற்றும் சிருநீரக கற்களும் சிறுநீரக நீர்க் கோர்வைக்கான மற்ற சில காரணங்களாகும்.

பொதுவாக ஒரு சிறுநீரகம் மட்டுமே இந்த நிலையால் பாதிக்கபப்டும். சில நேரங்களில் இரண்டு சிறுநீரகமும் பாதிக்கப்படலாம். குழந்தைகளின் விஷயத்தில், சிறுநீரக அமைப்பின் ஒரு பகுதி பிறப்புக்கு முன்னர் தவறாக உருவாக்கப்படும்போது பொதுவாக இதுபோன்ற தடைகள் ஏற்படுகின்றன.

சிறுநீர் கோர்வை - அறிகுறிகள்

சிறுநீர் கோர்வை - அறிகுறிகள்

சில நேரங்களில் இந்த நிலைக்கான அறிகுறிகள் எதுவும் தென்படுவதில்லை. இதன் அறிகுறிகள் பொதுவாக இந்த நிலையின் தீவிரத் தன்மை மற்றும் அடிப்படைக் காரணத்தை பொறுத்தே அமைகின்றன. இருப்பினும், இதன் பொதுவான அறிகுறிகள், அடிவயிறு வலி, அல்லது வயிற்றின் இரண்டு பக்கங்களிலும் வலி அல்லது முதுகு வலி , சிறுநீர் கழிக்கும் போது ஏற்படும் வலி, சிறுநீரில் இரத்தம் வெளியேறுதல், குமட்டல், வாந்தி மற்றும் காய்ச்சல் போன்றவை ஆகும். அடிக்கடி சிறுநீர் கழிக்கும் உணர்வு, சிறுநீர் முழுமையாக கழிக்க முடியாமை போன்றவையும் இதன் அறிகுறிகளாகும்.

மேலே கூறியவை அனைத்தும் பெரியவர்களுக்கான இந்த பாதிப்பின் அறிகுறியாகும். குழந்தைகளுக்கு எந்த ஒரு அறிகுறியும் அறியப்படுவதில்லை. சிலநேரங்களில் காய்ச்சல், பால் குடிப்பதில் பிரச்சனைகள், எரிச்சல், சிறுநீரில் இரத்தம் வெளியேறுதல், அடிவயிறு அல்லது பக்கவாட்டில் வலி, ஆற்றல் குறைபாடு போன்றவை சில அறிகுறிகளாக இருக்கலாம்.

இந்த நிலையால் அதிகம் பாதிக்கப்படுபவர்கள் யார்? கீழே குறிப்பிட்டுள்ள பாதிப்புகள் உள்ளவர்கள் எளிதில் இந்த பாதிப்பிற்குள்ளாகின்றனர்.

சிறுநீர் கோர்வை - காரணிகள்

சிறுநீர் கோர்வை - காரணிகள்

சிறுநீரக கற்கள் பாதிப்பு உள்ளவர்கள் சிறுநீரக நீர்க் கோர்வையால் பாதிக்கப்படுகின்றனர். சிறுநீரக கற்கள் பாதிப்பு தான் இந்த நிலையில் பொதுவான முக்கிய காரணமாகும். பெரிய ப்ரோஸ்டெட் கொண்டவர்கள் இந்த நிலையால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர், புற்று நோய் அல்லது கட்டி , சிறுநீரக பாதை தொற்று, கர்ப்பம், இரத்தம் உறைதல் போன்றவையும் சில காரணிகளாக இருக்கலாம்.

சிறுநீர் கோர்வை - அபாயங்கள்

சிறுநீர் கோர்வை - அபாயங்கள்

நீண்ட நாட்கள் இந்த நிலைக்கான சிகிச்சை எடுக்காமல் விடப்படும்போது சிறுநீரக செயலிழப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உண்டு என்பது ஒரு அபாயகரமான செய்தியாகும்.

சிறுநீர் கோர்வை - நோய் கண்டறிதல்

சிறுநீர் கோர்வை - நோய் கண்டறிதல்

சிறுநீரகத்தில் அடைப்பு ஏற்படுவதற்கான நிலைமை பெரும்பாலும் கடுமையான அல்லது நீடித்த, பகுதி அல்லது முழுமையான, ஒருதலைப்பட்ச அல்லது இருதரப்பு என வகைப்படுத்தப்படுகிறது.சிறுநீரக நீர்க் கோர்வை இருப்பதற்கான சாத்தியக் கூறுகளை அறிந்துக் கொள்ள இரத்த பரிசோதனை, சிறுநீர் பரிசோதனை, சிடி ஸ்கேன், ரீனல் அல்ட்ரா சவுண்டு போன்ற பரிசோதனைகள் தேவைப்படுகின்றன. நிலைமையின் தீவிரத்தைப் பொறுத்து மற்ற சோதனைகள் பரிந்துரைக்கப்படுகின்றன. நிரந்தர அல்லது தீவிர சேதங்களைத் தவிர்க்க விரைந்து பாதிப்புகளைக் கண்டறிவது முக்கியமாகிறது.

சிறுநீர் கோர்வை - சிகிச்சை

சிறுநீர் கோர்வை - சிகிச்சை

நிலைமையின் தீவிரம் மற்றும் அடிப்படைக் காரணத்தைப் பொறுத்து இதன் சிகிச்சை அமைகிறது. இந்த பாதிப்பிற்கான அடிப்படைக் காரணத்தைக் களைவது, சிறுநீரகத்தில் ஏற்பட்டுள்ள அழுத்தத்தைப் போக்குவது போன்றவற்றின் மூலமாக சிறுநீரகம் சேதமடைவதை தடுக்க முடியும். சிறுநீரக பாதையில் ஏற்படும் தொற்றைக் குறைக்கவும், அதன் வலியைக் குறைப்பதும் இந்த சிகிச்சையின் குறிக்கோளாகும். சிறுநீர் வடிகுழாய் மூலம் சிறுநீரகத்தில் சேர்த்து வைக்கப்பட்டிருக்கும் சிறுநீரை வெளியேற்றுவது இந்த சிகிச்சை முறையாகும்.

மிதமான நிலையாக இருந்தால் மருத்துகள் மூலம் இந்த நிலையிலிருந்து விடுபெற முடியும். தீவிர நிலையாக இருந்தால் அறுவை சிகிச்சை மூலம் தான் விடுபெற முடியும். எந்த ஒரு தீர்வும், இந்த நிலையின் அடிப்படை நிலை அல்லது தீவிரத்தைப் பொறுத்தே அமைகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Hydronephrosis: Causes, Symptoms, Diagnosis & Treatment

here you can know it the reasons of hydronephrosis and treatments of that.
Desktop Bottom Promotion