For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மாதவிடாய் காலத்தில் நேப்கின்களால் ஏற்படும் அரிப்பைத் தடுக்கும் சில வழிகள்!

இங்கு மாதவிடாய் காலத்தில் நேப்கின்களால் ஏற்படும் அரிப்பைத் தடுக்கும் சில வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன.

|

பெண்கள் மாதந்தோறும் சந்திக்கும் மாதவிடாய் சுழற்சி காலம் மிகவும் வலிமிக்க மற்றும் அசௌகரியமான காலமாகும். இந்த காலத்தில் பெண்கள் கடுமையான வயிற்று வலி, வயிற்று பிடிப்புகள் போன்றவற்றால் அதிகம் அவஸ்தைப்படுவார்கள். மேலும் இந்த காலத்தில் பெண்கள் நேப்கின்களைப் பயன்படுத்துவது வழக்கம். இந்த நேப்கின்களால் சில பெண்களுக்கு அந்தரங்க பகுதிகளைச் சுற்றி கடுமையான அரிப்புக்கள் மற்றும் எரிச்சல் ஏற்படும். இதற்கு நேப்கின்களில் இருந்து வெளிவரும் நறுமணம், சிந்தெடிக் மெட்டீரியல் மற்றும் கெமிக்கல்கள் தான் காரணம்.

How To Get Rid Of A Pad Rash Fast: 10 Home Remedies

அதோடு நேப்கின்களால் அரிப்புக்கள் ஏற்படுவதற்கு, ஈரப்பசையும், அது தொடையை உரசியவாறு இருப்பதும் தான். இந்த பிரச்சனையில் இருந்து விடுபட அடிக்கடி நேப்கின்களை மாற்றுவது சிறந்த வழியாக இருந்தாலும், ஏற்கனவே இருக்கும் நேப்கின் அரிப்புக்களை ஒருசில இயற்கை வழிகளின் மூலம் சரிசெய்யலாம். இக்கட்டுரையில் நேப்கின்களால் ஏற்படும் அரிப்புக்களைத் தடுக்கும் சில எளிய வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஆப்பிள் சீடர் வினிகர்

ஆப்பிள் சீடர் வினிகர்

ஆப்பிள் சீடர் வினிகர் சருமத்திற்கு மிகவும் சிறந்த பொருளாக கருதப்படுகிறது. இதனைக் கொண்டு மாதவிடாய் காலத்தில் சந்திக்கும் நேப்கின் அரிப்புக்களில் இருந்து விடுபடலாம்.

* சிறிது ஆப்பிள் சீடர் வினிகரை ஒரு பஞ்சுருண்டையில் நனைத்துக் கொள்ள வேண்டும்.

* பின் அதனை பாதிக்கப்பட்ட அரிப்புள்ள பகுதியில் தடவி நன்கு உலர வைக்க வேண்டும்.

* இப்படி தினமும் 3 முறை பயன்படுத்த, நேப்கின் அரிப்புக்களில் இருந்து விடுபடலாம்.

ஐஸ்

ஐஸ்

ஐஸ் கட்டிகள் நேப்கின் அரிப்புக்களால் ஏற்படும் வலி மற்றும் எரிச்சலைக் குறைக்கும். மேலும் இது நேப்கின் பயன்படுத்தியதால் வந்த வீக்கத்தைக் குறைத்து, இதமான உணர்வை அளிக்கும்.

* சிறிது ஐஸ் கட்டிகளை எடுத்து ஒரு துணியில் போட்டுக் கட்டிக் கொள்ள வேண்டும்.

* பின் அதனை பாதிக்கப்பட்ட தொடைப் பகுதியில் ஒத்தடம் கொடுக்க வேண்டும்.

டீ-ட்ரீ ஆயில்

டீ-ட்ரீ ஆயில்

டீ-ட்ரீ ஆயிலில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் சக்தி வாய்ந்த ஆன்டி-செப்டிக் பண்புகள் உள்ளன. இந்த எண்ணெய் காயங்களை சரிசெய்யும் திறன் கொண்டவை.

* தினமும் குளித்த பின்பு, ஒரு பஞ்சுருண்டையை டீ-ட்ரீ ஆயிலில் நனைத்துக் கொள்ள வேண்டும்.

* பின் அதை பாதிக்கப்பட்ட பகுதியில் தடவ வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், விரைவில் இப்பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.

வேப்பிலை

வேப்பிலை

வேப்பிலையில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள், நேப்கின் அரிப்புக்களில் இருந்து நிவாரணம் அளிக்கும்.

* ஒரு பாத்திரத்தில் நீரை ஊற்றி, அதில் ஒரு கையளவு வேப்பிலையைப் போட்டு நன்கு கொதிக்க வைத்து இறக்க வேண்டும்.

* பின் அதை குளிர வைத்து, அந்த வேப்பிலை நீரால் பாதிக்கப்பட்ட பகுதியைக் கழுவ வேண்டும்.

தேங்காய் எண்ணெய்

தேங்காய் எண்ணெய்

தேங்காய் எண்ணெயில் ஆன்டி-பாக்டீரியல், ஆன்டி-ஆக்ஸிடன்ட் மற்றும் ஆன்டி-மைக்ரோபியல் பண்புகள் உள்ளன. இது நேப்கின்களால் ஏற்படும் அரிப்புக்களை சரிசெய்ய உதவும்.

* முதலில் பாதிக்கப்பட்ட தொடைப் பகுதியை நீரால் சுத்தம் செய்ய வேண்டும்.

* பின் பஞ்சுருண்டையால் தேங்காய் எண்ணெயை நனைத்து, பாதிக்கப்பட்ட பகுதியில் தடவ வேண்டும்.

* பின்பு இரவு முழுவதும் ஊறு வைக்க வேண்டும்.

தயிர்

தயிர்

தயிரில் உள்ள குளிர்ச்சிப் பண்புகள், சருமத்தில் நேப்கின்களால் ஏற்படும் அரிப்புக்களை சரிசெய்யும். மேலும் இதில் உள்ள ஆன்டி-பாக்டீரியல் பண்புகள், நேப்கின்களால் ஏற்படும் அரிப்புக்களில் இருந்து விடுபட உதவும்.

* உங்களுக்கு நேப்கின் அரிப்புக்கள் இருந்தால், குளித்து முடித்தவுடன், தயிரை பாதிக்கப்பட்ட பகுதியில் தடவிக் கொள்ளுங்கள்.

* அது நன்கு காய்ந்த பின் நீரால் பாதிக்கப்பட்ட பகுதியைக் கழுவுங்கள். இந்த செயலை தினமும் 3 முறை செய்ய விரைவில் நேப்கின் அரிப்புக்கள் குணமாகும்.

ஆலிவ் ஆயில்

ஆலிவ் ஆயில்

ஆலிவ் ஆயிலில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன. இது சருமத்தில் ஏற்படும் அழற்சியை சரிசெய்ய உதவும். முக்கியமாக இது நேப்கின்களால் ஏற்பட்ட வீக்கம் மற்றும் சிவந்த பகுதியைக் குறைக்க உதவும்.

* குளித்து முடித்த பின், ஆலிவ் ஆயிலை பஞ்சுருண்டையில் நனைத்துக் கொள்ள வேண்டும்.

* பின் அதை பாதிக்கப்பட்ட பகுதியில் தடவ வேண்டும்.

* இப்படி நேப்கின் அரிப்புக்கள் போகும் வரை தொடர்ந்து செய்ய வேண்டும்.

கொத்தமல்லி

கொத்தமல்லி

சமையலில் பயன்படுத்தும் கொத்தமல்லியும், நேப்கின்களால் ஏற்பட்ட அரிப்பை குணமாக்க உதவும். முக்கியமாக கொத்தமல்லி பாதிக்கப்பட்டப் பகுதியில் உள்ள அரிப்பு உணர்வைத் தடுக்கும்.

* கொத்தமல்லியை நீரில் கழுவ வேண்டும்.

* பின் அதை அரைத்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.

* பின்பு அந்த பேஸ்ட்டை பாதிக்கப்பட்ட பகுதியில் தடவி, 20 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.

* இறுதியில் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.

கற்றாழை

கற்றாழை

கற்றாழையில் உள்ள குளிர்ச்சிப் பண்புகள், நேப்கின்களால் ஏற்படும் அரிப்பு மற்றும் எரிச்சலைப் போக்க உதவும்.

* கற்றாழை இலைகளை வெட்டி, அதில் இருக்கும் ஜெல்லை ஒரு பௌலில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

* பின் அதை பாதிக்கப்பட்ட தொடைப் பகுதியில் தடவ வேண்டும். இப்படி தினமும் 2-3 முறை தடவி வந்தால், விரைவில் குணமாகும்.

புதினா டீ

புதினா டீ

புதினாவில் உள்ள குளிர்ச்சிப் பண்புகள், நேப்கின்களால் ஏற்படும் அரிப்பு மற்றும் சிவக்கும் நிலையில் இருந்து நிவாரணம் அளிக்கும்.

* ஒரு பாத்திரத்தில் நீரை ஊற்றி, அதில் ஒரு கையளவு புதினா இலைகளைப் போட்டு நன்கு கொதிக்க வைத்து இறக்க வேண்டும்.

* பின் அதை வடிகட்டி குளிர வைக்க வேண்டும்.

* இந்த நீரைக் கொண்டு அடிக்கடி பாதிக்கப்பட்ட பகுதியைக் கழுவ வேண்டும். இப்படி செய்தால் விரைவில் அரிப்புக்களில் இருந்து விடுபடலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

How To Get Rid Of A Pad Rash Fast: 10 Home Remedies

Pad rash is caused because of dampness and grazing of the thighs. Read the article to know how to get rid of a pad rash fast.
Story first published: Wednesday, March 14, 2018, 17:00 [IST]
Desktop Bottom Promotion