For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உங்களுக்கு ப்ரீ டயாபடீஸ் இருக்கா? சர்க்கரை நோய் வராமல் இருக்க இதை மட்டும் செய்யுங்க!

உங்களுக்கு ப்ரீ டயாபடீஸ் இருக்கா? சர்க்கரை நோய் வராமல் இருக்க இதை மட்டும் செய்யுங்க!

By Lakshmi
|

உங்களது மருத்துவர் நீங்கள் சர்க்கரை நோய்க்கு முந்தைய நிலையில் இருக்கிறீர்கள் என்று சொல்லிவிட்டாரா? நீங்கள் இன்னும் உங்களது உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தாமல் இருக்கிறீர்களா? நீங்கள் வரட்டும் பார்த்துக் கொள்ளாலாம் என்று சாதாரணமாக இருக்காமல் இந்த சர்க்கரை நோயிலிருந்து தப்பிக்க சிறந்த தீர்வை காண வேண்டியது அவசியமாகும்.

நீங்கள் சர்க்கரை நோய்க்கு முந்தைய நிலையில் இருந்தீர்கள் என்றால், நிச்சயம் நீங்கள் அடுத்த கட்டத்திற்கு செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்படும். எனவே நீங்கள் சர்க்கரை நோய் வருவதற்கு முன்பாகவே சர்க்கரை நோயை தடுத்து நிறுத்த சில விஷயங்களை செய்தால், இந்த சர்க்கரை நோய் பாதிப்பிலிருந்து உங்களை பாதுகாத்துக் கொள்ளலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
டயாபடீஸ்

டயாபடீஸ்

நமது வயிற்றுப் பகுதியில் இருக்கும் கணையத்திலிருந்து உற்பத்தியாகும் இன்சுலின்மூலம் உடல் திசுக்கள் தங்களுக்குத் தேவையான குளுக்கோஸை ரத்தத்தில் இருந்து பெறுகின்றன. இதில் இன்சுலினின் அளவு குறையும்போது ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிக்கும். அதையே, டயாபடீஸ் (சர்க்கரை நோய்) என்கிறோம்.

ப்ரீ டயாபடீஸ்

ப்ரீ டயாபடீஸ்

சர்க்கரை நோய்க்கு முந்தைய நிலையை ப்ரீ டயாபடீஸ் என்பார்கள். அதாவது ரத்த சர்க்கரையின் அளவு சாதாரண அளவைவிட சற்று அதிகமாக இருக்கும் நிலையை ப்ரீ டயாபடீஸ் என்பர். சரியான நேரத்தில் இதனைக் கண்டறிந்து தகுந்த சிகிச்சை முறைகளும் பயிற்சியும் மேற்கொண்டால் ப்ரீடயாபடீஸிலிருந்து டைப்-2 சர்க்கரை (தேவைக்கும் குறைவாக இன்சுலின் சுரத்தல்) எனும் நிலைக்குச் செல்வதைத் தடுக்கலாம்.

யாருக்கு வரலாம்?

யாருக்கு வரலாம்?

அதிக உடல் எடை இருப்பவர்கள், குறிப்பாக பி.எம்.ஐ மதிப்பில் 25க்கு மேல் இருப்பவர்கள், கர்ப்ப காலத்தில் சர்க்கரை நோய் (Gestational Diabetes) வந்தவர்கள், உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள், இதய நோய் உள்ளவர்கள், உடல் உழைப்பின்றி, அதிக கலோரி உணவு உண்ணுபவர்கள் (Sedentary type) ஆகியோருக்கு ப்ரீ டயாபடீஸ் வரலாம். இவர்கள் தாங்களாகவே முன்வந்து மூன்று மாதங்களுக்கு ஒரு முறை சர்க்கரைப் பரிசோதனை செய்துகொள்வது நல்லது.'

அறிகுறிகள்

அறிகுறிகள்

40 வயதைக் கடந்தவர்கள் கண்டிப்பாகத் தங்களுக்குச் சர்க்கரை வியாதி இருக்கிறதா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

மற்ற வயதினர் குறைந்தது வருடத்துக்கு ஒருமுறையேனும் ரத்த சர்க்கரை அளவு சரியான கட்டுப்பாட்டில் உள்ளதா என்பதை பரிசோதனையின்மூலம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

அதிக உடல் எடை கொண்டவர்கள், பரம்பரையாக சர்க்கரை நோய் உள்ளவர்கள், அதிக தாகம், அதிக சோர்வு, அதிக பசி, அடிக்கடி சிறுநீர் கழிக்கும் பிரச்னை உள்ளவர்கள் இவர்களெல்லாம் தங்களுக்கு சர்க்கரை நோய் இருக்கிறதா என உறுதிபடுத்திக் கொள்வது நல்லது.

பாதிப்புகள்

பாதிப்புகள்

முடி உதிர்தல், உடல் எடை குறைதல், கால் கை மரத்துப்போனதுபோன்ற உணர்வு, நரம்பு பாதிப்பு, ரத்த நாளங்கள் பாதிப்படைதல், கண்கள் (குறிப்பாக ரெட்டினா பகுதி) பாதிப்படைதல், உடம்பில் எங்கேனும் அடிபட்டால் விரைவில் ஆறாத புண் போன்ற பிரச்னைகளைச் சந்திக்க நேரிடும்.

உடல் எடை

உடல் எடை

உயரத்திற்கு ஏற்ப உடல் எடையை பராமரித்து வர வேண்டியது அவசியமாகும். இதனால் உங்களது இரத்த சர்க்கரை அளவை பராமரிக்க முடியும். உடல் எடையை குறைப்பதால் நீங்கள் சர்க்கரை நோய் வராமலோ அல்லது குறைந்தபட்சம் சர்க்கரை நோய் வருவதை தள்ளிப் போடவோ முடியும்.

உடல் எடையை குறைக்க நீங்கள் கலோரி அளவில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். கொழுப்பு நிறைந்த உணவுகளை சாப்பிட கூடாது. புரோட்டின் உணவுகளையும் தவிர்க்கவும். பழங்கள் மற்றும் காய்கறிகளை தினசரி உணவில் கட்டாயம் சேர்த்துக் கொள்ள வேண்டியது அவசியமாகும்.

உடற்பயிற்சி

உடற்பயிற்சி

தினசரி உடற்பயிற்சி செய்ய வேண்டியது அவசியமாகும். நடைப்பயிற்சி செய்தல், நீச்சல் பயிற்சி செய்ய வேண்டியது அவசியமாகும். இரண்டு வாரத்திற்கு ஒருமுறையாவது, எடை தூக்குதல் போன்ற பயிற்சிகளை செய்யலாம். இந்த உடற்பயிற்சி செய்வது உங்களது உடல் எடையை குறைக்கவும், தசைகளை வலுப்படுத்தவும் உதவுவதோடு, உங்களது இரத்த சர்க்கரை அளவை குறைக்கவும் உதவுகிறது.

புகைப்பிடித்தல்

புகைப்பிடித்தல்

உங்களுக்கு புகைப்பிடிக்கும் பழக்கம் இருந்தால், நீங்கள் அந்த பழக்கத்தை கைவிட வேண்டியது அவசியமாகும். புகைப்பிடிக்கும் 30% முதல் 40% பேருக்கு, டைப் 2 சர்க்கரை நோய் பாதிப்பு உண்டாகிறது. சர்க்கரை நோய் இருந்தாலும் கூட புகைப்பிடிக்கும் பழக்கத்தை தொடர்பவர்களுக்கு இருதய கோளாறுகள் மற்றும் பார்வை இழப்பு போன்ற பிரச்சனைகள் உண்டாகிறது. எனவே நீங்கள் முன்கூட்டியே இந்த புகைப்பிடிக்கும் பழக்கத்தை கைவிட வேண்டியது அவசியம்.

மருத்துவரை சந்தித்தல்

மருத்துவரை சந்தித்தல்

நீங்கள் மூன்று முதல் ஆறு மாத இடைவெளிகளில் மருத்துவரை சந்தித்து ஆலோசனை செய்ய வேண்டியது அவசியமாகும். மருத்துவரிடம் உங்களது உடல்நிலையில் முன்னேற்றம் உள்ளதா இல்லையா என்பது பற்றி ஆலோசனை செய்ய வேண்டியதும், மருத்துவரின் அறிவுரைப்படி நடந்து கொள்ள வேண்டியதும் அவசியமாகும்.

உறக்கம்

உறக்கம்

நீங்கள் உங்களது உறக்க நேரத்தை வரையறை செய்து வைத்துக் கொள்ள வேண்டியது அவசியமாகும். தினமும் ஒரு குறிப்பிட்ட அளவு நேரம் ஓய்வெடுக்க வேண்டியது அவசியமாகும். உறங்க செல்வதற்கு 2 மணிநேரம் முன்னர் வரையில் நீங்கள் கணினி, செல்போன், தொலைக்காட்சி போன்ற விஷயங்களை பார்க்க கூடாது. உங்களுக்கு தூக்கம் வருவதில் பிரச்சனை இருந்தால், தூங்க செல்லும் முன்னர் கண்டிப்பாக காபி குடிக்க கூடாது.

நட்பு

நட்பு

உங்களை போலவே சர்க்கரை நோயின் முந்தைய நிலையில் உள்ள உங்களது அருகாமையில் உள்ளவர்களிடம் நட்பு வைத்துக் கொள்ளுங்கள். உங்களது உடல் எடை குறைப்பு, சத்தான உணவுகளை சாப்பிடுதல், டயட் போன்ற விஷயங்களில் இருந்து நீங்கள் பின் தங்காமல் இருக்க அவருடைய நட்பு உங்களுக்கு உதவும்.. இருவரும் சேர்ந்து நடைப்பயிற்சிகளை தவிர்க்காமல் செய்யலாம்.

அரிசி உணவை தவிர்க்கவும்

அரிசி உணவை தவிர்க்கவும்

கார்போஹைட்ரேட் நிறைந்த அரிசி உணவுகளை அதிகம் உட்கொள்வதை தவிர்க்க வேண்டும். குறிப்பாக கேரட், ஆரஞ்சு, மாதுளை முதலியவற்றை பழச்சாறாக அருந்தாமல் அப்படியே எடுத்துக் கொள்வதால் முழுமையான சத்துகளைப் பெற முடியும். ஃபாஸ்ட் ஃபுட், அதிக கெட்ட கொழுப்புள்ள உணவு வகைகள், எண்ணெயில் பொரித்த உணவு வகைகள் முதலியவற்றைத் தவிர்க்க வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

How to Prevent Prediabetes From Progressing to Diabetes

How to Prevent Prediabetes From Progressing to Diabetes
Story first published: Thursday, January 4, 2018, 16:02 [IST]
Desktop Bottom Promotion