For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பலா சாப்பிடும் சர்க்கரை நோயாளிகளுக்கு சர்க்கரையின் அளவு உயராதாம்..! எப்படினு தெரிஞ்சிக்கணுமா..?

By Haripriya
|

தமிழனின் பாரம்பரியமான பல விஷயங்களை இன்று உலகமே வியப்புடன் பார்த்து கொண்டிருக்கின்றது. நாம் செய்யும் ஒவ்வொரு செயலிளும் சற்றே பழமை கலந்த பண்பு இருப்பதே நம் முன்னோர்களை நாம் பின்பற்றுவதை எடுத்து காட்டுகிறது. தமிழன் வீரத்திலும் விவேகத்திலும் எண்ணற்ற ஆற்றலுடனே பண்டைய காலத்தில் இருந்திருக்கிறான். மக்கள் ஆரோக்கியமான இயற்கை உணவை உண்டு நலமான வாழ்வை மேற்கொண்டனர். அவற்றில் பழங்களும் அடங்கும். நம் பாரம்பரிய பழங்களாக கருதப்படுவது இந்த முக்கனிகளான மா, பலா, வாழைதான்...

How Jack Fruit Helpful For Diabetes

பல வகையான ஊட்டசத்துக்களும் இதில் நிறைந்துள்ளது. மாம்பழத்தை பற்றியும் வாழைப்பழத்தை பற்றியும் நமக்கு ஓரளவு தெரிந்திருக்கும். ஆனால் இந்த பலாவை நாம் அதிகம் விரும்பி சாப்பிடுவதோடு சரி, அதனை பற்றி அற்புதமான மருத்துவ குணங்களை அறிந்திராமலே விட்டு விட்டோம். இந்த பதிவில் பலாப்பழம் எவ்வாறு சர்க்கரை நோயாளிகளுக்கு சிறந்த மருந்தாக உதவுகிறது என்பதை அறிவோம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பலா என்னும் அற்புதம்..!

பலா என்னும் அற்புதம்..!

மற்ற பழங்களை போன்றே இந்த பலவிலும் ஏராளமான சத்துக்களும் மருத்துவ குணங்களும் நிறைந்துள்ளது. நம் முன்னோர்கள், முக்கனிகளில் பலாவை சேர்த்திருக்கிறார்கள் என்றால் அது சாதாரண ஒன்றாக எண்ண முடியாது. இதன் மகத்துவம் அதிகமானது என்பதாலேயே முக்கனிகளில் இதனை சேர்த்திருக்கிறார்கள். பார்ப்பதற்கு உருவத்தில் பெரிதாக இருந்தாலும் இதிலுள்ள பழத்தின் சுவை அதி பயங்கரமானது.

பலாவின் மகத்துவம்...!

பலாவின் மகத்துவம்...!

முக்கனிகளில் பெரிதான இந்த பழத்தின் ஊட்டசத்துக்கனும் சற்றே அதிகம்தான். 165 கிராம் பழத்தில் உள்ள சத்துக்கள் பின்வருமாறு...

கலோரிகள் 155 (649 kJ)

புரதசத்து 8.1(33.9 kJ)

வைட்டமின் எ 10%

வைட்டமின் சி 18%

ரிபோபிளவின் 11%

மெக்னீசியம் 15%

காப்பர் 15%

மக்னெஸ் 16%

சர்க்கரையின் அளவு எப்படி..?

சர்க்கரையின் அளவு எப்படி..?

பொதுவாக எந்த ஒரு உணவாக இருந்தாலும் சர்க்கரை நோயாளிகளுக்கு கொடுக்கும் முன் அதில் உள்ள சர்க்கரையின் அளவு எவ்வளவு உள்ளது என்பதை நன்கு ஆராய்ந்து அதன்பின் தர வேண்டும். glycemic index (GI) என்ற கணக்கீடுதான் சர்க்கரையின் அளவை அளிக்கிறது. கனிந்த பலாவை அப்படியே உண்டால் அது கண்டிப்பாக சர்க்கரையின் அளவை கூட்டிவிடும்.

வேறு எப்படி சாப்பிடலாம்..?

வேறு எப்படி சாப்பிடலாம்..?

கனியாத காயாக உள்ள பலாவை சமைத்து சாப்பிட்டால் அதனால் எந்த வகையிலும் சர்க்கரையின் அளவு கூடாது. மாறாக சர்க்கரையின் அளவு சீராக வைத்திருக்குமாம். கனியாத பலாவில் மிகவும் குறைந்த அளவே இந்த glycemic index உள்ளது. அதனால், இதனை தாராளமாக சர்க்கரை நோயாளிகள் எடுத்து கொள்ளலாம்.

சிறந்த உணவு பலா..!

சிறந்த உணவு பலா..!

சர்க்கரை நோயாளிகளின் உணவில் குறைந்த அளவே இந்த கார்ப்ஸ் இருக்க வேண்டும். மிக அதிகமாக இது இருந்தால் சர்க்கரையின் அளவை உயர்த்தும். இந்த காயாக உள்ள பலாவில் குறைந்த அளவே கார்போஹைடிரேட் இருக்கிறதாம். மேலும் இதில் கம்மியான அளவில் அமிலத் தன்மை உள்ளதாம். எனவே இது நீரிழிவு நோயாளிகளின் சிறந்த டயட் உணவாக இருக்கும்.

எதிர்ப்பு சக்தியை கூட்டும் பலா..!

எதிர்ப்பு சக்தியை கூட்டும் பலா..!

பொதுவாக சர்க்கரை நோயாளிகளுக்கு எதிர்ப்பு சக்தி அளவு குறைவாகவே இருக்கும். ஆனால், பலா சாப்பிடும் சர்க்கரை நோயாளிகளுக்கு இது தலை கீழாக மாறும். இதில் வைட்டமின் சி நிறைந்துள்ளதால், உடலுக்கு அதிக ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் தந்து எதிர்ப்பு சக்தியை கூட்டும். இதனால் வெள்ளை ரத்த அணுக்களின் அளவை அதிகரித்து நோய் கிருமிகளை உடலில் அண்டாமல் பார்த்து கொள்ளும்.

365 நாட்கள் சாப்பிட்டாலும் தவறில்லையாம்..!

365 நாட்கள் சாப்பிட்டாலும் தவறில்லையாம்..!

இது உண்மையில் ஆச்சரியமான தகவல்தான். சர்க்கரை நோயாளிகள் இந்த பழுக்காத பலா பழத்தை சமைத்து அன்றாட உணவில் சேர்த்து கொண்டால், அவர்களின் உடல் எடை கச்சிதமாக இருக்குமாம். இது ஒரு சிறந்த உணவாக மருத்துவர்களால் கருதப்படுகிறது. அத்துடன் இதில் உள்ள குறைந்த கலோரி அளவு உடல் பருமனை கூட விடாது.

ரத்த அழுத்தத்திற்கு...

ரத்த அழுத்தத்திற்கு...

சர்க்கரை நோயாளிகளுக்கு அவர்களின் ரத்த அளவு சீராக இருக்காது. காயாக உள்ள பலாவை உணவில் சேர்த்து கொண்டால் ரத்த நாளங்களை செம்மைப்படுத்தி, ரத்தத்தின் செயல்பாட்டை நன்றாக வைக்கும். இதனால், மன அழுத்தம், மன பித்து போன்றவையும் குணமாகும்.

சமைக்க தேவையானவை...

சமைக்க தேவையானவை...

காயாக உள்ள பலா பாதி

மஞ்சள் 1/4 tsp

வெங்காயம் 1

தேங்காய் 3 tblsp

ஜீரகம் 1 tsp

தனியா தூள் 1 tblsp

சிவப்பு மிளகாய் 2

பூண்டு 2

மிளகு 1 tsp

உளுத்தம் பருப்பு 1 tsp

கடுகு 1 tsp

கருவேப்பில்லை சிறிது

எண்ணெய், உப்பு தேவையான அளவு

எவ்வாறு சமைப்பது..? #1

எவ்வாறு சமைப்பது..? #1

முதலில் துருவிய தேங்காய், தனியா தூள், மிளகு, சிவப்பு மிளகாய், பூண்டு, மிளகு ஆகியவற்றை நன்கு அரைத்து கொண்டு பேஸ்ட் போல் தயார் செய்து கொள்ளவும். அடுத்து பலாவை நன்கு நறுக்கி அவை மூழ்கும் வரை, 2 டீஸ்பூன் மஞ்ச தூள் சேர்த்து நீரில் கொதிக்க விடவும். 15 நிமிடம் கழித்து அவற்றை வடிகட்டி கொள்ளவும்.

செய்முறை #2 :-

செய்முறை #2 :-

அதன்பின், சூடான கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, கருவேப்பில்லை, உளுத்தம் பருப்பு சேர்த்து பொறிக்க விடவும். பின் வெங்காயம் சேர்த்து வதக்கவும். அடுத்து இந்த அரைத்த பேஸ்ட், வடிகட்டிய பலா ஆகியவற்றை அதில் இட்டு நன்கு கிளறவும். இப்போது தேவைக்கேற்ப உப்பு சேர்த்து கொள்ளலாம். நன்கு இவை வெந்த பிறகு இவற்றை பரிமாறலாம்.

இந்த சத்தான உணவை உண்டு நீங்களும் உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்தி கொள்ளுங்கள் நண்பர்களே...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

How Jack Fruit Helpful For Diabetes

Jack fruit contains significant amounts of dietary fiber, vitamin A, vitamin C and various B vitamins, as well as potassium, iron, manganese, magnesium, zinc and phosphorus making it extremely healthy.
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more