For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உணவில் முடி இருப்பதால் ஏற்படும் ஆரோக்கிய கேடுகள்

உணவில் முடி இருப்பது பிடிக்காத ஒன்றாக கருதப்பட்டாலும் அது உணவையே விஷமாக மாற்றக்கூடும் என்னும் அதிர்ச்சி செய்தியை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த பதிவில் உணவில் முடி இருப்பது எவ்வளவு பாதிப்பை ஏற்ப

|

காலம் காலமாக நம்மிடையே கூறப்படும் ஒரு பொய் என்னவென்றால் " உணவில் முடி இருந்தால் உறவு நீடிக்கும் " என்பது. இது கேட்பதற்கு அழகாக இருந்தாலும் உண்மையில் இது நமது அறியாமையின் வெளிப்பாடுதான். சாப்பாட்டில் முடி இருப்பது உறவை வளர்க்காதாம் மாறாக உயிரைத்தான் பறிக்கும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

List of harmful effects of human hair in food

உண்மைதான். உணவில் முடி இருப்பது பிடிக்காத ஒன்றாக கருதப்பட்டாலும் அது உணவையே விஷமாக மாற்றக்கூடும் என்னும் அதிர்ச்சி செய்தியை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த பதிவில் உணவில் முடி இருப்பது எவ்வளவு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதையும், அதனை தடுக்கும் வழிமுறைகளையும் பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
உணவில் முடி இருப்பது ஆபத்தா?

உணவில் முடி இருப்பது ஆபத்தா?

ஆம். ஆபத்துதான். வெளியிடங்களில் சாப்பிடும்போது உணவில் முடி தென்பட்டால் நாம் அருவருப்பாக உணருவோம். இந்த சம்பவம் நமது வீடுகளிலும் நடக்க கூடும். ஆனால் வெளியிடங்களில் ஏற்படும்போது நாம் அதிக அருவருப்புக்குள்ளாகிறோம். நமது வீடோ, வெளியிடமோ எங்கு இருந்தாலும் சாப்பாட்டில் முடி இருப்பது தவறான ஒன்றுதான். தவறானது மட்டுமல்ல ஆரோக்கிய கேடானதும் கூட.

காரணங்கள்

காரணங்கள்

இது ஏற்பட காரணம் நமது அஜாக்கிரதையும், சுகாதாரமின்மையும்தான். சாப்பாட்டில் முடி இருப்பது அதனை விஷமாக்குவதற்கு சமம். மனித முடியானது கரோட்டின் எனப்படும் ஒருவகை புரோட்டினால் உருவாக்கப்படுகிறது. இது நேரடியாக நமக்கு ஆபத்தை ஏற்படுத்தாது, இருப்பினும் பல பக்கவிளைவுகளை ஏற்படுத்தக்கூடியது.

பாக்டீரியா தொற்று

பாக்டீரியா தொற்று

மனிதர்களின் முடி மூலம் பூஞ்சை தொற்றுகள் ஏற்படும் வாய்ப்புள்ளது என்பது உங்களுக்கு தெரியாமல் இருக்கலாம். அதற்கு காரணம் முடியில் உள்ள ஸ்டாஃப் ஆரியஸ் என்னும் பாக்டீரியாவாகும். இது மனிதர்கள் மற்றும் விலங்குகள் இருவரின் முடியிலும் காணப்படும். இது உணவு மூலமாக உங்கள் வயிற்றுக்குள் செல்லும்போது பலவித வயிற்று உபாதைகள் ஏற்படும் மேலும் இதனால் உங்கள் கல்லீரல் கூட பாதிக்கப்படலாம்.

மற்ற நோய்கள்

மற்ற நோய்கள்

முடி உங்கள் உணவின் மூலம் வயிற்றுக்குள் செல்லும்போது அது தொண்டை புண்ணை ஏற்படுத்தக்கூடும், மேலும் குமட்டல் மற்றும் வாந்தி போன்ற பிரச்சினைகளும் ஏற்படும். அதுமட்டுமின்றி காலரா, டைபாய்டு மற்றும் மஞ்சள் காமாலை போன்ற நோய்களையும் ஏற்படுத்தும்.

முடி எப்படி நச்சாகிறது?

முடி எப்படி நச்சாகிறது?

மருத்துவர்கள் மற்றும் சுகாதார வல்லுநர்கள் முடியை ஒரு நுண்ணுயிர் நச்சு என்று கூறுகிறார்கள். ஏனெனில் இவை உணவில் விஷம்போல செயல்படக்கூடும். முடியில் இருக்கும் வேர்வை, ஷாம்பூ, டை போன்ற பொருட்கள் உணவில் பாதேஜனை உருவாக்கக்கூடும். இந்திய சுகாதார அமைப்பின் அறிக்கையின்படி நமது முடி காற்றிலுள்ள மாசுக்களால் நஞ்சாக மாறக்கூடியது. அது உணவில் சேரும்போது பல மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்.

ஏன் ஏற்படுகிறது?

ஏன் ஏற்படுகிறது?

முடி உதிர்தல் என்பது தினமும் அனைவருக்கும் ஏற்பட கூடிய ஒன்றாகும். ஒருநாளைக்கு 100 முதல் 150 முடி வரை சராசரியாக உதிர்கிறது என்று ஆய்வு முடிவுகள் கூறுகிறது. எனவே உணவகங்களில் சமைக்கும் இடங்களில் முடி உதிர்வதை தடுப்பது என்பது மிகவும் கடினம். அதனால்தான் சமைக்கும் மற்றும் பரிமாறும் இடங்களில் ஹேர்கேப் அணிய வேண்டியது அவசியம் என சுகாதார வல்லுனர்கள் கூறுகிறார்கள்.

எவ்வாறு தடுப்பது?

எவ்வாறு தடுப்பது?

இந்தியாவின் உணவு பாதுகாப்பு மற்றும் நிர்ணய ஆணையம் சமீபத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி அனைத்து உணவங்களிலும் சமைக்கும் இடத்தில இருப்பவர்கள் ஹேர்கேப் மற்றும் கையுறை அணியவேண்டியது அவசியம் என கூறியிருக்கிறார்கள். மற்ற நாடுகளில் பெரும்பாலான உணவங்களில் சமைப்பவர்கள் தாடி மற்றும் மீசை வைத்திருக்க கூடாது என்னும் விட்ஜி உள்ளது. வீட்டில் சமைக்கும் போது இது ஏற்படாமல் இருக்க நாம்தான் கவனமாக இருக்க வெந்ததும். சமயலறையில் தலையை பின்னாமல் இருப்பது, சமையலறை பக்கத்தில் நின்றுகொண்டு தலையை உணர்த்துவது போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.

முன்னெச்சரிக்கைகள்

முன்னெச்சரிக்கைகள்

ஒருவேளை நீங்கள் சாப்பிடும் உணவில் முடி இருந்தால் அதனை அலட்சியமாக எண்ணி விட்டுவிட்டு தொடர்ந்து சாப்பிடாதீர்கள். முடிந்தவரை வீட்டில் உள்ள அனைவரும் முடியின் ஆரோக்கியத்தை பராமரிக்க முயற்சி செய்யுங்கள். குடிநீரிலோ அல்லது குளிர்பானங்களிலோ முடி இருக்கிறதா என்று சோதனை செய்துவிட்டு பருகுங்கள். ஏனெனில் இவை உங்கள் தொண்டையை உறுத்தாமல் நேரடியாக உங்கள் குடல் பகுதிக்கு சென்றுவிடக்கூடும். இதனால் நேரடி பாதிப்புகள் ஏற்படும் வாய்ப்புகள் அதிகரிக்கிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

List of harmful effects of human hair in food

Human Hair is one of the physical contaminants in food along with stones, metal pieces, insect parts, rodent droppings etc. All of these can cause physical harm as well as result in foodborne illnesses like cholera, typhoid, jaundice etc.
Desktop Bottom Promotion