For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வண்ணங்கள் சொல்லும் உடல் ஆரோக்கிய கதையை கேக்குறீங்களா..?

|

வண்ணங்கள்...பல ஆயிரம் உண்டு. ஒவ்வொரு மனிதருக்கும் ஒவ்வொரு விதமான வண்ணங்கள் மீது அளவற்ற காதல் இருப்பது இயல்பே. கடைகளுக்கு சென்றாலும் அனைத்துவித பொருட்களையும் ஒரே கலரில் வாங்கி கொண்டு மேட்ச் மேட்ச்சாக அணிவது பலரின் மனதிற்கு பிடித்தமான ஒன்றாகும். உடையில் வண்ணம், ஹேர் டைகளில் வண்ணம், கையில் போடும் டாட்டூக்களில் கூட பலவித வண்ணங்கள்.

இப்படி வானவில் நிறம் போல எல்லாமே கலர்ஃபுல்லாக இருக்க நம் வீட்டுக்கு அடிக்கும் வர்ணம் (paint) மட்டும் வண்ணமயமாக இல்லை என்றால் நன்றாகவா இருக்கும். அதுவும் ஆரோக்கியமான கலர்களை பயன்படுத்தினால் எப்படி இருக்கும்..!? கலரில் ஆரோக்கியமா..? இது என்னடா புதுசா இருக்கேனு யோசிக்கிறீர்களா..? உண்மைதாங்க ஒவ்வொரு கலருக்குள்ளும் உடல் ஆரோக்கியம் சார்ந்த பல ரகசியங்கள் ஒளிந்து கொண்டிருக்கு. இந்த கலர்கள் சொல்லும் கதை என்னனு தெரிஞ்சிக்கனுமா../ தொடர்ந்து படியுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
#அடிப்படை வண்ணங்கள்

#அடிப்படை வண்ணங்கள்

அறிவியலின்படி பார்த்தால் வண்ணங்களுக்கென்று ஒரு பெரிய ஆராய்ச்சி வரலாறே உள்ளது. பல விஞ்ஞானிகளின் கூட்டு முயற்சியாலே விதவிதமான வண்ணங்கள் நமக்கு கிடைத்துள்ளது. வண்ணங்களில் அடிப்படையானது சிவப்பு, பச்சை, நீலம் ஆகியவைதான். இந்த மூன்று நிறங்களுமின்றி மற்ற நிறங்களை நம்மால் பெற இயலாது. ஒவ்வொரு மனிதனுக்கும் எப்படி வெவ்வேறு தன்மைகள் உள்ளதோ அதே போன்றுதான் ஒவ்வொரு வண்ணங்களுக்குள்ளும் ஒரு தன்மை உள்ளது.

#நீல நிறம்

#நீல நிறம்

வண்ணங்களில் அதிகம் பிடித்தமான வண்ணமாக சொல்லப்படுவது இந்த நீல நிறம்தான். பார்ப்பதற்கு மிகவும் மென்மையான வண்ணமாக இது காட்சி தருகிறது. இந்த வண்ணம் எப்போதும் நமக்கு அமைதியையும், ஆழமான சிந்தனையையும், மன சாந்தியையும் தர கூடியது. மேலும் இது மன அழுத்தத்தையும் குறைக்க வல்லது. இந்த வண்ணம் உங்கள் ரத்த ஓட்டத்தை சீர்படுத்தி, பயம், தயக்கம் போன்ற பல மன ரீதியான குழப்பங்களுக்கு தீர்வை ஏற்படுத்தும். எனவே உங்கள் படுக்கை அறையில் மிக மென்மையான நீல நிற வர்ணங்களை பயன்படுத்துங்கள்.

#இளஞ்சிவப்பு நிறம்

#இளஞ்சிவப்பு நிறம்

மனதிற்கு அதிக அமைதியை தர கூடியது இளஞ்சிவப்பு வண்ணம். உடலின் ஆற்றலை அதிகரிக்க இந்த வண்ணம் பயன்படுகிறது. மேலும் இந்த நிறத்தை உங்கள் வீட்டில் வர்ணம் செய்தால் வீட்டின் தட்பவெப்ப நிலையை சீராக வைத்திருக்கும். பொதுவாகவே இது பெண்களுக்கு பிடித்தமான வண்ணம் என ஒரு பொதுமொழி இருக்கிறது. அத்துடன் குழந்தைகளுக்கும் பிடித்தமான நிறமாக இந்த இளஞ்சிவப்பு நிறத்தை சொல்கிறார்கள்.

#ஊதா நிறம்

#ஊதா நிறம்

உங்கள் வீட்டு சுவருக்கு ஊதா நிறத்தை அடித்தால், அது பலத்தையும்,அறிவுத் தன்மையையும் குறிப்பதாகும். இந்த நிறம் உங்கள் உள் மனதுக்கு ஆழ்ந்த நிம்மதியை தர கூடியது. இந்த ஊதா நிறம் எலும்புகளுக்கு அதிக வலிமையை சேர்க்க கூடியது. மேலும் இது பொட்டாசியம், சோடியம் போன்ற தாதுக்களை நம் உடலில் சமநிலையில் வைக்க உதவுகிறது. தியானம் போன்ற உளவியல் சம்மந்தமான உடற்பயிற்சிகளை ஊதா நிற வர்ணம் அடித்த இடத்தில் செய்தால் மிகவும் ஆரோக்கியமானது என்று மருத்துவர்கள் சொல்கின்றனர்.

#பச்சை நிறம்

#பச்சை நிறம்

பச்சை நிறமே...பச்சை நிறமே..! என்று நம்மில் பலர் இப்போது பாடிக்கொண்டிருப்போம். நிறங்களில் இந்த நிறம் சாந்த நிறமாக கருதப்படுகிறது. வீட்டிற்கு பச்சை நிற வர்ணம் அடித்தால் பார்ப்பதற்கு அழகாகவும், பிறரை கவரும் விதத்திலும் இருக்கும். புத்துணச்சி கொடுக்கவும், எப்போதும் மகிழ்ச்சியாகவும் இருக்க வேண்டும் என்றால் இந்த பச்சை நிறமே போதும். அத்துடன் மன அழுத்தத்தை குறைக்கவும் இந்த நிறம் வழி செய்கிறது.

#வெள்ளை நிறம்

#வெள்ளை நிறம்

இந்த நிறத்தை பற்றி சொல்லவே வேண்டாம். "வெள்ளை" என்ற ஒற்றை வார்த்தையே போதும். ஆமாங்க, புதுமையான நிறம் என்றால் அது வெள்ளைதான். வெள்ளை நிறமானது ஆடையாகவோ, வர்ணமாகவோ, திரையாகவோ , இப்படி எந்த விதத்தில் இருந்தாலும் அழகோ அழுகுதான். வெள்ளை நிறம் மனதிற்கு தெளிவை தருகிறது. பொதுவாக வெள்ளை நிற வர்ணம் பூசிய அறைகளில் கர்ப்பம் அடைந்த பெண்கள் தங்கியிருந்தால் பிறக்கும் குழந்தை அதிபுத்திசாலியாகவும்,சாந்த குணம் கொண்டவராகவும் இருப்பார்கள் என ஆராய்ச்சிகள் சொல்கிறது.

#மஞ்சள் நிறம்

#மஞ்சள் நிறம்

இந்த நிறத்தை வீட்டிற்கு அடித்தால் நமது வாழ்க்கை பிரகாசமாக இருக்கும். எப்போதுமே சுறுசுறுப்பாக இருக்க வேண்டுமென்றால் உங்களுக்கு இந்த நிறம் உதவும். சமையல் அறைக்கு மஞ்சள் நிறம் அடித்தால் உடல் ஆரோக்கியத்தை அதிகம் மேம்படுத்தும். இன்பமாக வாழும் உணர்வை இந்த நிறம் தருகிறது.

#சாம்பல் நிறம்

#சாம்பல் நிறம்

கொஞ்சம் மந்தமான சூழலை தருகிறது இந்த சாம்பல் நிறம். சோம்பலையும் அதிகம் இந்த சாம்பல் நிறம் ஏற்படுத்துகிறது. இருப்பினும் குளிர்ந்த தட்பவெப்பத்தை இது உருவாக்குகிறது. நீல நிறத்தை இதனுடன் சேர்த்து அடித்தால் பார்க்க அட்டகாசமாக இருக்கும். டைனிங் ரூம் போன்றவற்றிற்கு சாம்பல் நிறம் ஏற்றதாக இருக்கும்.

எனவே,இதில் உங்களுக்கு எது சிறந்த நிறமாக தோன்றுகிறதோ அதையே வர்ணம் பூசி மகிழ்ச்சியாக வாழுங்கள் நண்பர்களே...!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

health story behind color paints

Interesting health story behind color paints..!