For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

காலையில் வெறும் வயிற்றில் 1 ஸ்பூன் தேங்காய் எண்ணெய் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்!

இங்கு காலையில் வெறும் வயிற்றில் 1 ஸ்பூன் தேங்காய் எண்ணெய் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் பட்டியலிடப்பட்டுள்ளன.

|

தேங்காயில் இருந்து பெறப்படுவது தான் தேங்காய் எண்ணெய். இது நல்ல நறுமணத்தைக் கொண்டது, நீர்ச்சத்து நிறைந்தது மற்றும் குறைவான ஃபேட்டி அமிலங்களைக் கொண்டது. பெரும்பாலும் தேங்காய் எண்ணெயை தலைக்கு தான் பயன்படுத்துவோம். ஆனால் இந்த தேங்காய் எண்ணெயை சமையலில் பயன்படுத்துவதன் மூலம், அந்த சமையல் நல்ல ருசியுடனும், மணத்துடனும் இருக்கும்.

கேரள பகுதிகளில் பெரும்பாலும் தேங்காய் எண்ணெயைத் தான் சமையலில் பயன்படுத்துவார்கள். இதனால் தான் கேரள மக்கள் ஆரோக்கியமானவர்களாவும், இளமையுடனும் காட்சியளிக்கிறார்கள். தேங்காய் எண்ணெயில் ஏராளமான கெமிக்கல்கள் உள்ளன. இத்தகைய தேங்காய் எண்ணெயை ஒருவர் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் சிறிது குடித்து வந்தால் ஏராளமான நன்மைகள் கிடைக்கும். இக்கட்டுரையில் அந்த நன்மைகள் பட்டியலிடப்பட்டுள்ளன. அதைப் படித்து தெரிந்து, நீங்களும் குடித்து நன்மைப் பெறுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
இடுப்பளவு குறையும்

இடுப்பளவு குறையும்

ஒருவர் தினமும் காலையில் 1-2 ஸ்பூன் தேங்காய் எண்ணெயை குடித்து வந்தால், அது ஒருவரது தொப்பையின் அளவைக் குறைக்கும் என்று ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். ஏனெனில் தேங்காய் எண்ணெய் வயிற்றைச் சுற்றி தேங்கியுள்ள கலோரிகளை எரித்து கரைத்து வெளியேற்றும்.

எடை குறையும்

எடை குறையும்

நீங்கள் உடல் எடையைக் குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளீர்களா? அப்படியானால் நீங்கள் தினமும் காலையில் வெறும் வயிற்றில் தேங்காய் எண்ணெயை சாப்பிடுங்கள். பெரும்பாலான டயட்டுகளில் தேங்காய் எண்ணெயின் உபயோகமே இருக்காது. இதற்கு தேங்காய் எண்ணெய் குறித்த தவறான கருத்து தான். உண்மையை சொல்ல வேண்டுமானால், தேங்காய் எண்ணெயும் உடல் எடையைக் குறைக்க உதவியாக இருக்கும்.

உணவின் அளவைக் குறைக்கும்

உணவின் அளவைக் குறைக்கும்

தேங்காய் எண்ணெயை ஒருவர் தினமும் காலையில் குடித்து வந்தால், அது வயிறு நிரம்பிய உணர்வைக் கொடுத்து, உண்ணும் உணவின் அளவைக் குறைக்கும். இதன் விளைவாக உட்கொள்ளும் கலோரிகளின் அளவு குறைந்து, உடல் எடை அதிகரிப்பது தடுக்கப்படும்.

செரிமான மண்டலத்தின் செயல்பாட்டிற்கு உதவும்

செரிமான மண்டலத்தின் செயல்பாட்டிற்கு உதவும்

ஒருவர் தினமும் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் தேங்காய் எண்ணெயை குடித்தால், அது செரிமானத்திற்கு நல்லது. தேங்காய் எண்ணெயில் உள்ள உட்பொருட்கள், செரிமான மண்டலத்தின் சீரான செயல்பாட்டிற்கு உதவி, செரிமான பிரச்சனைகள் ஏதும் வராமல் தடுக்கும்.

ஊட்டச்சத்துக்களை உறிஞ்ச உதவும்

ஊட்டச்சத்துக்களை உறிஞ்ச உதவும்

ஒருவரது உடலில் போதுமான ஊட்டச்சத்துக்கள் இல்லாவிட்டால் அதுவே ஊட்டச்சத்துக் குறைபாட்டினை ஏற்படுத்துவதோடு, பல்வேறு உடல் உபாதைகளுக்கும் வழிவகுக்கும். அதிலும் உடல் எடையைக் குறைக்க டயட்டில் இருப்போரது உடலில் ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படுவதற்கு வாய்ப்பு அதிகம் உள்ளது. ஆகவே டயட்டில் இருப்போர் தினமும் காலையில் 1 டீஸ்பூன் தேங்காய் எண்ணெயைக் குடித்தால், உண்ணும் உணவில் உள்ள சத்துக்கள் முழுமையாக உறிஞ்சப்படும்.

அழற்சியை எதிர்த்துப் போராடும்

அழற்சியை எதிர்த்துப் போராடும்

தேங்காய் எண்ணெயில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் ஏராளமாக உள்ளது. இது அழற்சியை உண்டாக்கும் ப்ரீ ராடிக்கல்களை எதிர்த்துப் போராடும். இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், தேங்காய் எண்ணெயில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட், அழற்சி எதிர்ப் பண்பு போன்று செயல்பட்டு, அழற்சியை எதிர்த்து, பித்தக்கற்கள், குடல் பிரச்சனைகள் மற்றும் இதர நோய்கள் வராமல் தடுப்பதாக தெரிய வந்தது.

மெட்டபாலிசம் மேம்படும்

மெட்டபாலிசம் மேம்படும்

ஒருவரது உடலின் மெட்டபாலிசத்தை அதிகரிக்கும் சிறப்பான வழிகளுள் ஒன்று தேங்காய் எண்ணெயைக் குடிப்பது. ஏனெனில், இது உடலுக்கு ஒரு சிறந்த எரிபொருளாக இருக்கும். ஒருவரது மெட்டபாலிசம் சிறப்பாக இருந்தால், கலோரிகள் எரிக்கப்பட்டு, உடல் எடையைக் குறைக்கலாம்.

ஆற்றல் அதிகரிக்கும்

ஆற்றல் அதிகரிக்கும்

உடலின் ஆற்றலை அதிகரிக்க தேங்காய் எண்ணெய் உதவியாக இருக்கும். இந்த எண்ணெயில் உள்ள கலோரிகள், உடலின் ஆற்றலை உடனடியாக அதிகரிக்கும். எனவே உங்கள் உடலில் ஆற்றல் குறைவாக இருப்பது போல் உணர்ந்தால், தினமும் தேங்காய் எண்ணெயை குடியுங்கள். இதனால் நாள் முழுவதும் சுறுசுறுப்புடன் செயல்படலாம்.

சிறுநீரக கற்கள் தடுக்கப்படும்

சிறுநீரக கற்கள் தடுக்கப்படும்

தேங்காய் எண்ணெயில் உள்ள கெமிக்கல் பொருள், உடலுக்கு ஆபத்தை உண்டாக்கும் சிறுநீரக கற்களின் உருவாக்கத்தைத் தடுக்கும். உங்களுக்கு ஆயுள் முழுவதும் சிறுநீரக கற்கள் வரக்கூடாது என்று நினைத்தால் தேங்காய் எண்ணெயை குடியுங்கள்.

தேங்காய் எண்ணெயை எப்படி பயன்படுத்துவது?

தேங்காய் எண்ணெயை எப்படி பயன்படுத்துவது?

ஒருவரது உடல் எடைக்கு ஏற்ப தேங்காய் எண்ணெயை உட்கொள்ள வேண்டும். அதில்,

* 40-59 கிலோ கொண்டவர்கள், ஒரு நாளைக்கு 3 டேபிள் ஸ்பூன் உட்கொள்ளலாம்.

* 60-80 கிலோ கொண்டவர்கள், ஒரு நாளைக்கு 4.5 டேபிள் ஸ்பூன் உட்கொள்ளலாம்.

* 80 கிலோவிற்கு மேல் உள்ளவர்கள், ஒரு நாளைக்கு 6 டேபிள் ஸ்பூன் வரை உட்கொள்ளலாம்.

எச்சரிக்கை

எச்சரிக்கை

இன்று ஏராளமான போலி மற்றும் கலப்படம் நிறைந்த பொருட்கள் மார்கெட்டுகளில் விற்கப்படுகின்றன. எனவே தேங்காய் எண்ணெய் வாங்கும் போது, அதன் டேபிளைக் கவனியுங்கள். அதில் விர்ஜின் என்று குறிப்பிடப்பட்டிருந்தால், அந்த எண்ணெய் எவ்வித கலப்படமும் இல்லாத சுத்தமான தேங்காய் எண்ணெய் என்று அர்த்தம். மேலும் விர்ஜின் தேங்காய் எண்ணெய் தான் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லதும் கூட.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Health Benefits Of Taking Coconut Oil On Empty Stomach

Here are some health benefits of taking coconut oil on empty stomach. Read on to know more...
Story first published: Friday, April 6, 2018, 12:02 [IST]
Desktop Bottom Promotion