For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

குற்றாலத்தின் இந்த வனதேவதை பழங்கள் விந்தணு குறைபாடு முதல் புற்றுநோய் வரை குணப்படுத்துகிறதாம்..!

By Haripriya
|

மனிதனாக பிறந்த ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான பழக்க வழக்கங்கள் இருக்கும். ஒருவர் அதிகம் சாப்பிட்டு கொண்டே இருப்பார், ஒருவர் நிறைய பேசி கொண்டே இருப்பார், ஒருவர் எப்போதும் பிறரிடம் சண்டை போட்டு கொண்டே இருப்பார், இதில் சில வித்தியாசமான வகையினர் எப்போதுமே ஊர் சுற்றி கொண்டே இருப்பார்கள். இவர்களின் வாழ்க்கை பயணம் சற்றே ஆர்வமானதாக இருக்கும். இத்தகைய பயண விரும்பிகள் கட்டாயம் குற்றாலத்திற்கு செல்லாமல் இருந்திருக்க மாட்டார்கள்.

Health Benefits Of Kutralam Fruits

ஆனால், அவர்கள் கவனிக்காத பல விஷயங்கள் இன்னும் உள்ளது என்பதே நிதர்சனம்...! குறிப்பாக குற்றாலத்தின் வியக்கத்தக்க மருத்துவ குணங்கள் கொண்ட பழங்களை பற்றி அறிந்திருக்க மாட்டார்கள். இந்த பதிவில் குற்றாலத்தில் உள்ள வித விதமான பழங்களின் முழு பயன்பாட்டை பற்றி பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
குற்றாலம் குதுகலம்தான்...!

குற்றாலம் குதுகலம்தான்...!

பொதுவாக சுற்றுலா என்றாலே பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அதிகம் மகிழ்ச்சி அடைவார்கள். அதிலும் குற்றாலம் என்றாலே அது மிகவும் பிரசித்திபெற்ற ஒரு சுற்றுலா தலமாகவே இன்றளவும் கருதப்படுகிறது. குற்றாலத்தின் மலைகளில் உள்ள பலவிதமான மூலிகைகளின் குணங்களை பற்றி நாம் ஓரளவு அறிந்திருப்போம். ஆனால், அங்குள்ள பல வகையான பழங்கள் கூட இத்தகைய நன்மைகள் தருகின்றது..' என்பது மிகுந்த ஆச்சரியத்திற்குரியது. இவை வன தேவைதைகளால் பரிசளிக்கப்பட்ட பழங்களாகவே மக்கள் பலர் கூறுகின்றனர்.

ரம்புட்டான்

ரம்புட்டான்

குற்றாலத்தின் பழங்களில் அதிக நன்மைகளை கொண்டது இந்த பழம். இதை ரம்புத்தான், இறம்புட்டான் போன்ற பெயர்களில் மக்கள் அழைப்பார்கள். "ரம்புட்" என்ற வார்த்தைக்கு மலாய் மொழியில் "முடி" என்று அர்த்தம். அதிக முடிபோன்ற தோலை கொண்டது, இந்த பழம். இது புற்றுநோய் முதல் சர்க்கரை நோய் போன்றவற்றை உடலில் வராமல் தடுக்கிறது. இதில் அதிகம் புரதம், நார்சத்து, கால்சியம், அஸ்கார்ப்பிக், பாஸ்பரஸ், நீர்சத்து உள்ளது.

மங்குஸ்தான்

மங்குஸ்தான்

இது பார்ப்பதற்கு நம்ம ஊரில் உள்ள நுங்கு போன்று இருக்கும். இதில் வைட்டமின்-சி நிறைந்துள்ளது. அஜீரண கோளாறு உள்ளவர்கள், உடல் எடை கூட வேண்டும் என்று விரும்புவோர் இந்த பழங்களை சாப்பிடலாம். இந்த பழம், உடலில் நோய் தொற்று போன்றவற்றை ஏற்படாமல் தடுக்கும்.

துரியன்

துரியன்

இது மலை பிரதேசங்களில் மட்டுமே விளையக்கூடியது. இது உடல் ஆரோக்கியத்திற்கு அதிகம் உதவுகிறது. இதில் ஃபோலிக் அமிலம் மற்றும் இரும்பு சத்து அதிகம் உள்ளது. அதனால், பெண்களுக்கு பெரும்பாலும் ஏற்படும் இரத்த சோகை, கர்ப்பப்பை கோளாறுகளை குணப்படுத்தும். மேலும், விந்தணு குறைபாடு, மலட்டுத்தன்மை, இல்லற வாழ்வில் நிம்மதியின்மை போன்ற பல பிரச்சினைகளால் பாடுபடும் ஆண்களுக்கு இது மிக சிறந்த மருந்து பழமாக விளங்குகிறது.

மரத்தக்காளி

மரத்தக்காளி

இது ஒரு வகையான உருளைக்கிழங்கு குடும்பத்தை சார்ந்த பழமாகும். இதனை குறுந்தக்காளி என்றும் கூறுவார்கள். இதில் புரதம், கால்சியம், மெக்னிசீயம், பொட்டாசியம், நார்சத்து போன்றவை அதிகம் நிறைந்துள்ளது. சாதாரணமான செடி தக்காளியில் உள்ள ஊட்டசத்துக்களை விட இதில் அதிகம் சத்துக்கள் காணப்படுகிறது. இதிலும் பல மருத்துவ குணங்கள் உள்ளதாம்.

முள் சீத்தா

முள் சீத்தா

புற்றுநோய் செல்களை அழிக்க கூடிய மருத்துவ தன்மை கொண்டது இந்த முள் சீத்தா. இதில் "அசேட்டோஜெனின்" (Acetogenin) என்ற வேதி பொருள் உள்ளதால் புற்றுநோய் செல்களை எதிர்க்க கூடிய ஆற்றல் பெற்றது. அத்துடன், சிறுநீரக கோளாறுகள், நிமோனியா, டயரியா, குடல் நோய்கள், தோல் சார்ந்த நோய்கள் என அனைத்தையும் குணப்படுத்த வல்லது.

மலை ஆரஞ்ச்

மலை ஆரஞ்ச்

எந்த வித ரசாயனங்களும் இன்றி உற்பத்தி செய்யப்படும் இது, மலையில் விளையக்கூடிய பழமாகும். இந்த பழத்தை உண்பதால், முக சருமம் மிருதுவாகும். உடலில் ஏற்படும் நோய்களை எளிதில் இது சரி செய்து விடும். இதில் லெமோனாய்டுகள் என்ற வேதி பொருள் இருப்பதால் புற்றுநோய் செல்களை எதிர்த்து போராடி அவற்றை அழிக்கும்.

டிராகன் பழம்

டிராகன் பழம்

இதய நோய்கள் உள்ளவர்களுக்கு இது உகந்த பழமாகும். இது கிட்டத்தட்ட கள்ளி பழம் போன்ற தோற்றத்தை கொண்டது. இதில் கால்சியம், பாஸ்பரஸ், வைட்டமின் சி, புரதம் அதிகம் உள்ளதாம். இஃது இதய ரத்த ஓட்டத்தை சீராக்கி, ரத்த நாளங்களை நன்றாக செயல்பட செய்யும். பார்வை திறனை இது நன்கு அதிகரிக்கும், அத்துடன் புற்றுநோய் செல்களையும் தடுக்கும் ஆற்றல் வாய்ந்தது.

ஸ்டார் பழம்

ஸ்டார் பழம்

இந்த பழம் உடலில் உள்ள கெட்ட கொழுப்புக்களை குறைக்க கூடியது. அத்துடன் நல்ல கொழுப்பையும் அதிகரிக்க செய்யும். குடல் நோய்கள், மலசிக்கல் போன்றவை இவற்றை சாப்பிடுவதால் விரைவில் குணமாகும். இதனை "நட்சத்திர பழம்" என்றே மக்கள் விரும்பி அழைப்பார்கள். அதற்கேற்றாற் போல் இதில் புளிப்பு உட்பட 5 வகையான சுவைகளும் இருக்குமாம்.

முட்டை பழம்

முட்டை பழம்

மிகுந்த சுவை கொண்ட இந்த மலை பழம் அதிக பயன்களை கொண்டது. இதனை தோல் நீக்கியோ அல்லது அப்படியே சாப்பிடலாம். மற்ற பழங்களை காட்டிலும் இதில் மாவுசத்து அதிகம் உள்ளது. கேக், ரொட்டி, பனிக்கூழ் போன்றவற்றை தயாரிக்க இது பெரிதும் உதவுகிறது.

பிளம்ஸ்

பிளம்ஸ்

இந்த பழம், ரத்தத்தில் உள்ள சிவப்பணுக்களை அதிகரிக்க செய்யுமாம். இதில் இரும்பு சத்து, பொட்டாசியம், புளோரைடு போன்றவை அதிகம் உள்ளது. மூளை நரம்புகளுக்கு பலம் கொடுத்தல், சிறுநீரக பிரச்சினை, மன அழுத்தம் போன்றவற்றை சீராக்கும். மேலும் பார்வை குறைபாடு உள்ளவர்களுக்கு இது அதிகம் உதவும்.

அவகடோ

அவகடோ

இதில் உள்ள அதிக படியான ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும். இது கிட்டத்தட்ட மாவு போன்ற சுவை கொண்டதாக இருக்கும். இதனை அப்படியே சாப்பிடுவதை விட மில்க் ஷேக் தயாரித்து குடிக்கலாம். மேலும் இதில் உள்ள பாலி நியூட்ரியண்ட் புற்றுநோய் செல்கள் உடலில் உருவாகாமல் தடுக்கும்.

இது எண்ணற்ற நன்மைகளை கொண்ட இந்த பழங்களை நீங்களும் உண்டு ஆரோக்கியமான உடல் நலத்தை பெறுங்கள் நண்பர்களே..!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Health Benefits Of Kutralam Fruits

Fruits are vital for human. There are so many fruits we still do not known. Especially, Kutralam's famous fruits and its benefits.
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more