For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இஞ்சி முரப்பா சாப்பிட்டா இந்த பிரச்னையெல்லாம் தீர்ந்திடும்...

how can we Prevent travel vomit and nausea in a natural way / பயண வாந்தி, குமட்டலை இயற்கையான முறையில் எப்படி தவிர்க்கலாம்

By Gnaana
|

முன்பெல்லாம், பெண்கள், குழந்தைகளுடன், பஸ்ஸில் அல்லது காரில் வெளியூர்ப் பயணம் என்றாலே, வீட்டில் உள்ள பெரியவர்கள் முதலில், இஞ்சி முரப்பாவை எடுத்து வைத்துக்கொள்வார்கள். பேரப்பிள்ளைகள் ஸ்கூல் லீவுக்கு பாட்டிவீட்டுக்கு வருகிறார்கள் என்றவுடனே, தாத்தாவோ, மாமாவோ, சித்தப்பாவோ இஞ்சியை வாங்கிவந்து விடுவார்கள், இஞ்சி முரப்பா செய்ய.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
இஞ்சி முரப்பா

இஞ்சி முரப்பா

உடல் தளர்ந்து சோர்வாக இருப்பவர்களுக்கும், மூச்சு பாதிப்பு உள்ளவர்களுக்கும், உடனடி நிவாரணமாக இஞ்சி முரப்பாவைக் கொடுப்பார்கள்.

எல்லா பாதிப்புகளையும், இஞ்சி முரப்பா எப்படி குணமாக்கும்? அப்படி என்ன இருக்கிறது இஞ்சி முரப்பாவில்? வாருங்கள் காண்போம், இஞ்சி முரப்பாவின் நன்மைகளை.

நன்மைகள்

நன்மைகள்

உணவின் அமிலத்தன்மையைப் சமநிலைப்படுத்தும், காரத்தன்மைமிக்க இஞ்சி.

உணவுவகைகளில், சைவமோ அசைவமோ எதுவானாலும், அதில் இஞ்சி அவசியம் இருக்கும். நறுமணம் கமழும் சுவையான சைவ பிரியாணி முதல், சிக்கன் மட்டன் மீன் பிரியாணி மற்றும் கறிகளில், இஞ்சி கலந்திருக்கும். உணவில் இஞ்சியை சுவைக்காக மட்டும் சேர்ப்பதில்லை, அமிலத்தன்மைமிக்க உணவுகளில், காரத்தன்மையுள்ள இஞ்சியை கலப்பதன்மூலம், உணவில் அமிலத்தன்மையை நடுநிலைப்படுத்தி, உண்ணும் உணவின் அமிலத்தன்மை, வயிற்றில், அஜீரணக் கோளாறுகளை ஏற்படுத்தாமல், உடல்நலனைக் காக்கவும்தான்.

பொங்கல்

பொங்கல்

புது நெல்லில் பொங்கல் வைத்து, சூரியனுக்கும், இயற்கைக்கும் நன்றி தெரிவிக்கும் தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையில், உடல்நலம் காக்கும் கரும்பு, இஞ்சி மஞ்சள் செடிகளும் கட்டாயம் இடம்பெற்றிருக்கும்.

ஊட்டச்சத்துக்கள்

ஊட்டச்சத்துக்கள்

நாம் பாரம்பரியமாக இஞ்சியை உணவில் பயன்படுத்தி வருவது, உணவின் சுவையை அவை கூட்டுவதால் மட்டுமல்ல, நம் உடல்நலத்தை அவை காப்பதாலும்தான். இஞ்சியில் உள்ள நார்ச்சத்து, மனிதனின் உடல் ஆரோக்கியத்தை சீர்கெட வைக்கும் மலச்சிக்கலைப் போக்கும் தன்மையுள்ளது.

இஞ்சியில் உள்ள புரதம், செறிவான கொழுப்பு, B, C மற்றும் E வகை வைட்டமின்கள், இரும்பு, சுண்ணாம்பு தாதுக்கள் மற்றும் தையாமின் ரிபோப்ளோவின் உள்ளிட்ட வேதிச்சத்துக்கள், உடலில் உள்ள நச்சுக்கொழுப்புகளை நீக்கும். உணவுப்பாதையில் அமிலத்தன்மை அதிகரித்து, நச்சுக்காற்று உண்டாகி மேலேறும்போது, நெஞ்செரிச்சல் ஏற்படுவதைப் போக்கும். மூட்டுவலிகளை குணமாக்கும்.

இரத்த அழுத்தம்

இரத்த அழுத்தம்

இரத்தத்தில் கலக்கும் கிருமிகளால் இரத்த ஓட்டம் பாதித்து, அதனால் ஏற்படும் இரத்த அழுத்தம் மற்றும் இதயக்கோளாறுகளை சரியாக்கும். மூச்சிறைப்பு, நெஞ்சு சளி போன்ற சுவாசபாதிப்புகளை குணமாக்கும். இதுபோல ஏராளமான நன்மைகளைத் தரும் இஞ்சியில் இருந்து தயாரிக்கப்படும் இஞ்சி முரப்பா, எதற்காக? அது தரும் நன்மைகளைப் பார்க்கலாமா?

டாக்சினை வெளியேற்றும்

டாக்சினை வெளியேற்றும்

உடல் நச்சுகளைப் போக்கி, உடலைப் புத்துணர்வாக்கும் இஞ்சி முரப்பா.

இன்றிருக்கும் எக்ஸ்பிரஸ் சாலை வசதி, கார்களைப் போன்ற சொகுசு பஸ்கள், பல ஆண்டுகளுக்கு முன்பு இல்லை. குண்டும் குழியுமான சாலைகளில், பஸ்களில் செல்வதால், உடலைக் குலுங்கவைத்து, பலருக்கு வயிற்றைப்பிரட்டி, குமட்டல், வாந்தி போன்ற பாதிப்புகளை ஏற்படுத்திவிடும்.

பயணங்களில் வாந்தி ஏன் வருகிறது?

பயணங்களில் வாந்தி ஏன் வருகிறது?

சிலர் முதல்முறையாக பஸ் அல்லது காரில் பயணம் செய்யும்போதும், கடல், ஆகாயப் பயணங்கள் முதல்முறையாக மேற்கொள்ளும்போதும், உடலுக்கு அதுவரை பரிச்சயமில்லாத அந்தப் பயணங்களால், உடல் இயக்கம் பற்றிய மூளையின் கட்டளைத் தொடர்புகள் ஸ்தம்பித்து, பிறட்டல், குமட்டல், வாந்தி மயக்கம் போன்ற பாதிப்புகள் ஏற்படுகின்றன.

இதனால், குடும்பத்துடன் வெளியூர் செல்வோர், கைகளில் இஞ்சி முரப்பாவை ரெடியாக வைத்திருப்பார்கள். பயணம் ஆரம்பிக்கும்முன் அதிலொரு துண்டை எடுத்து வாயில் அடக்கிக்கொள்ள, உமிழ்நீருடன் அது கலந்து, உடல் இரத்த ஒட்டத்தை சீராக்கிவிடும். அதன் மூலம் வயிற்றுக்கோளாறு, வாந்தி பாதிப்புகளை நீக்கி, உடலை புத்துணர்ச்சி பெறவைக்கும்.

பசியை போக்கும்

பசியை போக்கும்

பிள்ளைகள் பள்ளி விடுமுறை நாட்களில் பாட்டி வீடுகளுக்கு செல்வதென்றால் குதூகலித்துக் கிளம்புவார்கள். எப்போதும் கண்டித்துக்கொண்டிருக்கும், அம்மா அப்பா தொல்லைகளின்றி, கொஞ்சகாலம் ஜாலியாக இருக்கலாமல்லவா, அதற்காகத்தான்.

தாத்தா பாட்டிக்கும், பிள்ளைகள் வருவதே, மகிழ்ச்சிதானே. ஆனாலும், பாட்டிவீடுகளில் பிள்ளைகள், ஒரு விசயத்துக்குதான் பயப்படுவார்கள். அதுதான் இஞ்சி முரப்பா எனும் இஞ்சி மிட்டாய்.

தாத்தா பாட்டி பாசம்

தாத்தா பாட்டி பாசம்

பாட்டி பாசத்துடன் செய்து வைத்திருக்கும் பலகாரங்கள், இனிப்புகளை அதிகம் சாப்பிடுவதால், நாக்கு தடித்து, எரிச்சல் ஏற்பட்டு, உணவை சாப்பிட பசியும், இருக்காது, ஆர்வமுமிருக்காது. இதற்காகவே வீடுகளில் வைத்திருக்கும் இஞ்சி மிட்டாய்களை, பாட்டியும் தாத்தாவும் பிள்ளைகளுக்கு விளையாட்டு காட்டிக்கொண்டே, அவர்களின் வாயில் திணித்துவிடுவார்கள்.

பிள்ளைகள் கொஞ்சநேரம் கத்தினாலும், பிறகு அதன் காரத்துடன் கூடிய இனிப்பிலும், நெய்யின் வாசத்திலும் சமாதானமாகிவிடுவார்கள். சற்றுநேரத்தில், பிள்ளைகளின் அஜீரண பாதிப்பு, நாக்கு தடிப்பு சரியாகி, நன்றாகப் பசியெடுத்து சாப்பிடுவார்கள்.

மூட்டுவலி போக்கும்

மூட்டுவலி போக்கும்

பசியைத்தூண்டும் இஞ்சி முரப்பா, புளித்த ஏப்பம், வயிற்று வலி போன்ற வயிறு பாதிப்புகளையும் குணமாக்கும். நெஞ்சுசளி, மூச்சிறைப்பு போன்ற சுவாச பாதிப்புகளையும் சரிப்படுத்திவிடும். கெட்டவாயுவை நீக்கி, மூட்டுவலிகளைப் விலக்கி, வாய்க்கசப்பை போக்கும்.

இத்தகைய ஆற்றல் பெற்ற இஞ்சி முரப்பாவை, சில ஆண்டுகளுக்கு முன்புவரை, பேருந்து, இரயில் நிலையங்களில், இனிமையான பயணத்துக்கு என்று கூவிக்கூவி விற்றுவந்தார்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Health Benefits Of Inji Muruappaa

how to stop nausea and vomiting while travelling and how can we Prevent travel vomit and nausea in a natural way
Story first published: Tuesday, March 13, 2018, 7:58 [IST]
Desktop Bottom Promotion