For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தாடி வைத்திருப்பதனால் கிடைக்கும் நன்மைகள்

சில ஆண்கள் கூடுதல் அழகாக தெரிய காரணம் அவர்களின் முகத்தில் இருக்கும் மீசையும், தாடியும்தான். அதிக தாடி வளர்ப்பது சமீப காலங்களில் ஆண்களிடையே மிகுந்த வரவேற்ப்பையும், ஆர்வத்தையும் பெற்றுள்ளது. இங்கே உங்கள

By Saranraj
|

அனைத்து ஆண்களுமே ஒருவகையில் அழகுதான். ஆனால் சில ஆண்கள் கூடுதல் அழகாக தெரிய காரணம் அவர்களின் முகத்தில் இருக்கும் மீசையும், தாடியும்தான். அதிக தாடி வளர்ப்பது சமீப காலங்களில் ஆண்களிடையே மிகுந்த வரவேற்ப்பையும், ஆர்வத்தையும் பெற்றுள்ளது. இப்படி நீங்கள் ஆசையாக வளர்க்கும் தாடி உங்களை புற்றுநோயிலிருந்து பாதுகாப்பதோடு நிறைய ஆரோக்கிய நன்மைகளை வழங்கும் என்றால் இரட்டை மகிழ்ச்சிதானே?

health-benefits-beard

உண்மைதான், சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் தாடி வைத்திருப்பவர்கள் அதிக ஆரோக்கியத்துடன் வாழ்வதாக முடிவுகள் தெரிவிக்கின்றன. எந்தவித செலவும் இல்லாமல் உங்கள் அழகுக்காக நீங்கள் வளர்க்கும் தாடி உங்களின் ஆயுளை அதிகரிக்கும்போது நீங்கள் ஏன் ஆரோக்கியத்தை நினைத்து கவலைப்பட வேண்டும். இங்கே உங்களுடைய தாடி உங்களுக்கு எந்தவகையில் எல்லாம் ஆரோக்கியத்தை அள்ளித்தருகிறது என்பதை பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சரும புற்றுநோயிலிருந்து பாதுகாப்பு

சரும புற்றுநோயிலிருந்து பாதுகாப்பு

சூரிய ஒளியிலிருந்து வரும் புறஊதா கதிர்கள் பெரும்பாலும் உங்களின் அடர்த்தியான தாடியால் தடுக்கப்படுகிறது. அறிவியல்ரீதியாக முகத்தில் அதிக முடி இருக்கும்போது சூரிய ஒளிக்கதிர்களால் சருமத்தை தாக்க இயலாது என நிரூபிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க பல்கலைக்கழகம் நிகழ்த்திய ஆய்வில் அதிக தாடி வைத்திருக்கும் ஆண்களுக்கு தோல்புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பு பாதியாக குறைகிறது என கூறப்பட்டுள்ளது.

தொண்டை நோய்களை குணப்படுத்தும்

தொண்டை நோய்களை குணப்படுத்தும்

அடர்த்தியான தாடி ஒவ்வாமையை ஏற்படுத்தக்கூடிய பாக்டீரியாக்கள் உடலுக்குள் சென்று தொண்டை தொடர்பான பிரச்சினைகள் ஏற்படுவதை தடுக்கிறது. மருத்துவர் அடிசன் பி. டச்சேர் தாடி தொண்டை மற்றும் நுரையீரல் தொடர்பான நோய்களை குணப்படுத்தும் என தனது புத்தகத்தில் கூறியுள்ளார். மேலும் முகத்தில் வளரும் முடிகள் நம் நுரையீரலை பாதுகாக்க இயற்கையால் ஏற்படுத்தப்பட்டது எனக்கூறுகிறார். அதற்காக காடு போல தாடி வளர்த்தால் அதிலியே பாக்டீரியாக்கள் தங்கி பாதிப்புகளை ஏற்படுத்தும். எனவே அதனை சீராக பராமரிக்க வேண்டும்.

ஆஸ்துமா

ஆஸ்துமா

ஒருவேளை சுற்றுசூழல் காரணமாகவோ அல்லது தூசி காரணமாகவோ உங்களுக்கு ஆஸ்துமா ஏற்படும் என்ற பயம் இருந்தால் அடர்த்தியான தாடி உங்கள் பயத்தை போக்கக்கூடும். உங்கள் மூக்கை சுற்றியுள்ள மீசை மற்றும் தாடி அவற்றை தடுத்து அதனை நீங்கள் நுரையீரல் மூலம் சுவாசிப்பதை தடுக்கும். உங்கள் தாடி இந்த நச்சுப்பொருள்களுக்கும், உங்கள் உடலுக்கும் இடையே ஒரு தடுப்பு சுவராய் இருக்கும்.

தாம்பத்திய வாழ்க்கை

தாம்பத்திய வாழ்க்கை

இதனை நீங்கள் நம்பாமல் இருக்க வாய்ப்புகள் அதிகம், ஆனால் உங்கள் தாடிக்கும், நீங்கள் படுக்கையில் சிறப்பாக செயல்படுவதற்கும் இடையே ஒரு தொடர்பு உள்ளது. " தி டிபெண்டண்ட் ஜீன் " என்ற புத்தகத்தின் ஆசிரியர் இதனை பற்றி ஆராய்வதற்கே பல வருடங்களை செலவழித்தார். உங்கள் தாடி வளர்வதற்காக தூண்டும் ஹார்மோன் உங்கள் உடலுறவு நடவடிக்கைகளை அதிகரிக்கக்கூடும் என்று கண்டுபிடித்தார். அதாவது நீங்கள் எப்போதெல்லாம் அதிக ஆர்வத்துடன் உடலுறவில் ஈடுபடுகிறீர்களோ அப்போதெல்லாம் டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோன் சுரப்பு அதிகரிக்கப்பட்டு உங்களின் தாடி வேகமாக வளர்கிறது. சுருக்கமாக சொல்லவேண்டுமென்றால் அதிக உடலுறவு = அதிக தாடி அல்லது அதிக தாடி = அதிக உடலுறவு.

ஈரப்பதம்

ஈரப்பதம்

உங்கள் உடலில் இயற்கையாக உள்ள எண்ணெய் சத்துக்கள் உங்கள் சருமத்தை ஈரப்பதத்துடன் வைத்திருக்கிறது. ஷேவ் செய்து இதனை நீங்கள் அழிப்பதால் இயற்கையாக இருக்கும் ஈரப்பதம் அழிக்கப்பட்டு சரும வறட்சி ஏற்படுகிறது. சருமம் முடி இல்லாமல் இருக்கும்போது அது வானிலை மாற்றங்களால் பாதிக்கப்படக்கூடிய வாய்ப்புகள் அதிகம்.

தன்னம்பிக்கை

தன்னம்பிக்கை

அமெரிக்காவில் நடத்தப்பட்ட ஆய்வில் 55 சதவீத ஆண்கள் அவர்கள் அடர்த்தியான தாடி வைத்திருக்கும்போது அதற்காக பல பாராட்டுக்களை பெற்றதாக தெரிவித்துள்ளனர். பாராட்டுக்கள் கிடைக்கும்போது தானாக உங்களுடைய தன்னம்பிக்கை அதிகரிக்கும். தினமும் காலையில் உங்கள் முகத்தை கண்ணாடியில் பார்க்கும்போது உங்களுக்குள்ளேயே ஒருவித மகிழ்ச்சி உண்டாகும். இது அந்தநாளை வெற்றிகரமாக தொடங்க இயலும். தாடி வைத்திருப்பது உங்கள் தன்னம்பிக்கையை அதிகரிக்கும் என அறிவியல்ரீதியாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

சுருக்கங்கள்

சுருக்கங்கள்

சூரிய ஒளியிலிருந்து முகத்தை பாதுகாப்பதால் தடிப்புகள் ஏற்படுவது தடுக்கப்படுகிறது. அதேசமயம் ஈரப்பதத்தை பாதுகாப்பதால் சரும வறட்சியால் சுருக்கங்கள் ஏற்படுவது தடுக்கப்படுகிறது. முகசுருக்கத்திற்காக ஆயிரங்களில் செலவு செய்யாமல் எளிதாக தாடி வளருங்கள் போதும்.

இளமையான தோற்றம்

இளமையான தோற்றம்

ஆரோக்கியம் எந்த அளவிற்கு முக்கியமோ அதே அளவிற்கு அழகும் முக்கியம். அந்தவகையில் தாடி உங்கள் ஆசையை சிறப்பாக நிறைவேற்றும். முன்னரே கூறியது போல அதிக தாடி வைப்பதுதான் இப்போது ட்ரெண்டாக இருக்கிறது. அதிக தாடி வளர்த்து அதை சீராக பராமரிப்பது உங்களுக்கு இளமையான அதேநேரம் அழகான தோற்றத்தை வழங்குகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Health benefits of beard

Men who love their beards, there are more reasons than just style for maintaining a beard. It can protect you from the cancer and helps to increase your sexual health.
Desktop Bottom Promotion