For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இரத்தம் மற்றும் இரத்த குழாய்களை சுத்தம் செய்ய இத சாப்பிடுங்க...

|

இன்றைய நமது மோசமான உணவுப் பழக்கவழக்கங்களாலும், மாசு நிறைந்த சுற்றுச்சூழலாலும், நமது இரத்தத்தில் நிறைய நச்சுக்கள் சேர்கின்றன. அதோடு உண்ணும் உணவுகளில் உள்ள கொழுப்புக்கள் இரத்த குழாய்களில் படிந்து, இதய நோய்களுக்கு வழிவகுக்கிறது. ஒருவரது இரத்தத்தையும், இரத்த நாளங்களையும் சுத்தம் செய்வதற்கு ஏராளமான உணவுகள் உதவி புரியும். அதில் எலுமிச்சை மற்றும் பூண்டு போன்றவை மிகவும் சிறப்பாக செயல்படும்.

பொதுவாக எலுமிச்சை, பூண்டு போன்றவற்றில் ஏராளமான மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன. இதனால் இது நாட்டு மருத்துவத்தில் பல பிரச்சனைகளுக்கு தீர்வளிக்க பயன்படுத்தப்படுகிறது. ஒருவர் தங்களது டயட்டில் எலுமிச்சை மற்றும் பூண்டை சேர்த்து வந்தால், அதனால் உடலுறுப்புக்கள் சுத்தமாவதோடு, ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியமும் மேம்படும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
எலுமிச்சை

எலுமிச்சை

எலுமிச்சையில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், கொழுப்புச் செல்களைக் கரைப்பதோடு, உடலில் கொலஸ்ட்ராலை சீரான அளவில் பராமரிக்கும். இதில் உள்ள வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் சி, ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும். மேலும் இதில் இருக்கும் பி காம்ப்ளக்ஸ் வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள், உடலுக்கு அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களை வழங்கும்.

பூண்டு

பூண்டு

பூண்டில் இருக்கும் மருத்துவ குணங்கள், இரத்தக்குழாய்களுக்கு பாதுகாப்பு அளித்து, இதய பிரச்சனைகளான பெருந்தமனி தடிப்பு அல்லது பக்கவாதம் வரும் வாய்ப்பைத் தடுக்கும். முக்கியமாக பூண்டில் இருக்கும் அல்லிசின் என்னும் உட்பொருள், இரத்தத்தில் உள்ள அதிகளவிலான கொழுப்புக்களைக் கரைத்து, உடலில் ஆரோக்கியமான இரத்தத்தை ஓடச் செய்யும்.

இங்கு எலுமிச்சை மற்றும் பூண்டை எப்படியெல்லாம் உட்கொள்ளலாம் என்று மிகச்சிறந்த 3 வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றில் உங்களுக்கு பிடித்ததைத் தேர்ந்தெடுத்து தயாரித்து உட்கொள்ளுங்கள்.

முதல் ரெசிபி

முதல் ரெசிபி

தேவையான பொருட்கள்:

* எலுமிச்சை - 6

* பூண்டு பற்கள் - 30

தயாரிக்கும் முறை:

தயாரிக்கும் முறை:

* முதலில் பூண்டு மற்றும் எலுமிச்சையின் தோலை நீக்கிவிட்டு, சிறு துண்டுகளாக்கிக் கொள்ள வேண்டும். பின் அதை பிளண்டரின் போட்டு அரைத்து, கலவையை ஒரு பாத்திரத்தில் எடுத்து கொள்ளுங்கள்.

* பின் அந்த பாத்திரத்தில் 2 லிட்டர் நீரை ஊற்றி மிதமான தீயில் கொதிக்க வையுங்கள். கலவையானது கொதிக்க ஆரம்பித்ததும், நெருப்பைக் குறைத்துவிட்டு, 10 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கி, கலவையை குளிர வையுங்கள்.

* அதன் பின், அதில் உள்ள திரவ பகுதியை வடிகட்டிக் கொள்ளுங்கள்.

உட்கொள்ளும் முறை:

இந்த பானத்தை தினமும் 50 மிலி என 3 வாரம் தொடர்ந்து எடுக்க வேண்டும். பின் 1 வாரம் இடைவெளி விட்டு, வேண்டுமானால் மீண்டும் 3 வாரங்கள் தொடர்ந்து உட்கொள்ளுங்கள். வேண்டுமானால், இந்த ரெசிபியை 6 மாத இடைவெளி விட்டு மேற்கொள்ளலாம்.

இரண்டாம் ரெசிபி

இரண்டாம் ரெசிபி

தேவையான பொருட்கள்:

* பூண்டு பற்கள் - 30

* எலுமிச்சை - 6

தயாரிக்கும் முறை:

தயாரிக்கும் முறை:

* பூண்டு மற்றும் எலுமிச்சையின் தோலை நீக்கிவிட்டு, சிறு துண்டுகளாக்கிக் கொள்ளுங்கள். பின் அதில் பாதியை பிளெண்டரில் போட்டு, நீர் ஊற்றி அரைத்துக் கொள்ளங்கள்.

* பின் ஒரு பாத்திரத்தில் அரைத்து வைத்துள்ளதைப் போட்டு, அத்துடன் அரைக்காததையும் சேர்த்து அடுப்பில் வைத்து, 5 நிமிடம் குறைவான தீயில் கொதிக்க வையுங்கள்.

* பின்பு அதனை இறக்கி வடிகட்டி கொண்டு கலவையை வடிகட்டி, திரவப் பகுதியை ஃப்ரிட்ஜில் வைத்துக் கொள்ளுங்கள்.

உட்கொள்ளும் முறை:

தயாரித்து வைத்துள்ள கலவையை தினமும் 1 டம்ளர் என 3 வாரங்கள் குடிக்க வேண்டும். பின் ஒரு வாரம் இடைவெளி விட்டு, மீண்டும் 3 வாரங்கள் குடியுங்கள்.

மூன்றாம் ரெசிபி

மூன்றாம் ரெசிபி

தேவையான பொருட்கள்:

* பூண்டு சாறு - 1 கப்

* இஞ்சி சாறு - 1 கப்

* எலுமிச்சை சாறு - 1 கப்

* ஆப்பிள் சீடர் வினிகர் - 1 கப்

* தேன் - 1 கப்

தயாரிக்கும் முறை:

தயாரிக்கும் முறை:

* ஒரு பாத்திரத்தில் தேனைத் தவிர அனைத்து பொருட்களையும் போட்டு 30 நிமிடம் மிதமான தீயில் கொதிக்க வைக்க வேண்டும்.

* கலவையானது கலவையானது 3 கப் வரும் வரை நன்கு சுண்ட கொதிக்க வைக்க வேண்டும்.

* பின் அந்த கலவையை இறக்கி அறை வெப்பநிலையில் குளிர வைத்து, தேன் சேர்த்து கலந்து, ஒரு கண்ணாடி பாட்டிலில் ஊற்றி ஃப்ரிட்ஜில் வைத்துப் பயன்படுத்துங்கள்.

உட்கொள்ளும் முறை:

தயாரித்து வைத்துள்ள கலவையை தினமும் காலை உணவு உண்பதற்கு முன் 1 டேபிள் ஸ்பூன் உட்கொள்ள வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Garlic And Lemon Recipes For Cleansing The Blood And Arteries

Try out this garlic and lemon recipes for cleansing the blood and arteries. Take a look...
Story first published: Saturday, May 5, 2018, 15:22 [IST]
Desktop Bottom Promotion