For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மாதவிடாயின்போது எத்தனை மில்லி ரத்தம் வெளியேறுவது நார்மல்?... தெரிஞ்சிக்கங்க...

மாதவிடாய் காலங்களில் ஏற்படும் அதிகமான இரத்தப்போக்கால் பெண்களுக்கு இரத்த சோகை, அனிமியா போன்ற பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே இந்த இரத்த போக்கை சாதாரணமாக கண்டு கொள்ளாமல் விட்டு விட்டால் அதுவே உங்

By Suganthi Rajalingam
|

மாதவிடாய் சுழற்சி என்பது மாதம் மாதம் பெண்கள் சந்திக்கும் ஒரு பெரிய பிரச்சினையாக இருக்கிறது. அது மாதம் மாதம் முறையாக வந்தாலும் அவர்களுக்கு பல்வுறு பிரச்னைகளை சந்திக்க வேண்டியிருக்கிறது.

healh

வராவிட்டாலும் பேராபத்து காத்திருக்கிறது. பாவம்.என்னதான் செய்வார்கள். இந்த மாதவிடாய் சுழற்சி எல்லா பெண்களுக்கும் தவறாமல் மாதந்தோறும் ஏற்பட்டாலும் ஒவ்வொரு வரும் வித்தியாசமான பிரச்சினைகளை சந்திக்கத் தான் செய்கின்றனர். இதனால் அவர்களின் உடல் நலமும் பாதிப்படைகின்றன.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மாதவிடாயும் பிரச்னைகளும்

மாதவிடாயும் பிரச்னைகளும்

சில பேருக்கு இந்த மாதிரியான சமயங்களில் அதிக இரத்த போக்கு ஏற்படும். யோனி பகுதியில் ஏற்படும் தொற்று, உடல் நலக் குறைவு, சுத்தமின்மை போன்றவற்றாலும் அவர்கள் அவதிப்பட நேரிடும்.

மாதவிடாய் காலங்களில் ஏற்படும் அதிகமான இரத்த போக்கால் பெண்களுக்கு இரத்த சோகை, அனிமியா போன்ற பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே இந்த இரத்த போக்கை சாதாரணமாக கண்டு கொள்ளாமல் விட்டு விட்டால் அதுவே உங்கள் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு பிரச்சினையாகி விடும்.

எனவே இதை குறைப்பதற்கான நடவடிக்கைகளில் நாம் ஈடுபட வேண்டும்.

மருத்துவரை நாடுதல்

மருத்துவரை நாடுதல்

முதலில் நீங்கள் மருத்துவரை நாடி இது குறித்து ஆலோசனை பெற்று கொள்வது நல்லது. இதில் மிகப்பெரிய ஆபத்து இல்லை என்று நினைத்தாலும் ஆரம்ப காலகட்டத்திலேயே மருத்துவரை சந்தித்து சில ஆலோசனைகளையும் அடிப்படையான சில டயட் முறைகளையும் பெற்றுக் கொள்வது நல்லது.

உணவுப் பழக்கம்

உணவுப் பழக்கம்

நல்ல ஆரோக்கியமான உணவுகளை தேர்ந்தெடுங்கள். புரோட்டீன், இரும்புச் சத்து உணவுகள் மற்றும் கால்சியம் அடங்கிய பால் பொருட்கள் போன்றவற்றை எடுத்துக் கொள்ளுங்கள். இரும்புச் சத்து சிவப்பணுக்கள் உற்பத்திக்கு பெரிதும் உதவுகிறது. எனவே உங்களுக்கு இரும்புச் சத்து பற்றாக்குறை இருந்தால் அதிகமான இரத்த போக்கு ஏற்பட வாய்ப்புள்ளது.

விட்டமின் சி

விட்டமின் சி

அதே நேரத்தில் இரும்புச் சத்தை நமது உடல் உறிஞ்சுக் கொள்ள விட்டமின் சி மிகவும் அவசியம். இதை உணவில் சேர்க்கும் போது மெனோரோகியாவை எதிர்த்து போரிடுகிறது.

வால்நட்ஸ்

பச்சை காய்கறிகள்

யோகார்ட்

சீஸ்

ஆரஞ்சு

ஸ்ட்ராபெர்ரி

செர்ரீஸ்

ஆப்ரிகாட்

மாத்திரைகள்

மாத்திரைகள்

அதே மாதிரி உணவை தவிர சில விட்டமின் மாத்திரைகளையும் எடுத்துக் கொள்ளுங்கள். இரும்புச் சத்து, மக்னீசியம், ஜிங்க், கால்சியம் மற்றும் விட்டமின் பி6 அடங்கிய மாத்திரைகளை எடுத்துக் கொள்ளுங்கள்.

இரும்புச் சத்து மாத்திரைகள் மாதவிடாய் இரத்த போக்கை குறைத்திடும். விட்டமின் பி நமது கல்லீரலில் ஈஸ்ட்ரோஜன் அளவை அதிகரித்து புரோஸ்டோ சுரப்பியை தூண்டி அசாதாரணமாக இரத்தம் கட்டுதலை தவிர்க்கிறது.

ஹெர்பல் டீ

ஹெர்பல் டீ

நூற்றாண்டுகளாக நிறைய மூலிகைகள் இந்த மாதவிடாய் இரத்த போக்குக்கு மருந்தாக பயன்படுகிறது. இது ஹார்மோன் சமநிலையின்மையை சரி செய்து மெனோபாஸை கட்டுப்பாட்டில் வைக்கிறது.

இந்த மாதிரியான மூலிகை டீ உங்களுக்கு நல்ல பலனை கொடுக்கும். இவை புரோஜெஸ்ட்டிரோனை சுரந்து கருப்பை தசைகளை ரிலாக்ஸ் செய்யும்.

லேடீஸ் மேன்டில்

ஷெப்பர்ட் பர்ஸ்

அக்ணுச் கஸ்ட்டுச்

பட்டை

சிவப்பு ராஸ்பெர்ரி இலைகள்

ஐஸ் ஒத்தடம்

ஐஸ் ஒத்தடம்

குளிர்ந்த தன்மை மாதவிடாய் வலி, அழற்சி மற்றும் இரத்த போக்கை குறைக்கும். இது இரத்த குழாயை சுருக்கி அதிகமான இரத்த போக்கு ஏற்படுவதை தடுக்கும்.

பயன்படுத்தும் முறை

ஒரு பேக்கில் ஐஸ் கட்டிகளை எடுத்துக் கொள்ளுங்கள். இதை அப்படியே உங்கள் வயிற்றில் வையுங்கள். 20 நிமிடங்கள் அப்படியே வைத்திருங்கள். பிறகு மறுபடியும் 2-4 மணி நேரத்திற்கு பிறகு திரும்பவும் இதை செய்யவும். நீங்கள் அதிகமான குளிர்ச்சியை உணர்ந்தாலோ அல்லது நபநமப்பை உணர்ந்தாலோ செய்வதை நிறுத்தி விடுங்கள்.

இயல்பானது

இயல்பானது

உங்கள் மாதவிடாய் சுழற்சியின் இரத்த போக்கின் அளவில் எது இயல்பானது என்பதை தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள். மாதவிடாய் சுழற்சியின் போது ஏற்படும் இரத்த போக்கின் அளவு, அடிக்கடி ஏற்படுதல், எவ்வளவு காலம் ஏற்படுகிறது என்பதை குறித்து வைத்துக் கொள்ளுங்கள்.

ஒரு மாதவிடாய் சுழற்சியின் நீளம்ள21-35 நாட்கள் இருக்கும். இரத்த போக்கின் அளவு 30-80 மில்லி லிட்டர் இருக்கும். இந்த இரத்த போக்கு 3-7 நாட்கள் நடைபெறும். முதல் நாள் ப்ரவுன் கலரில் பழைய இரத்தம் வெளியேறும்.

பிரச்சினைகள்

பிரச்சினைகள்

பாலிமெனோரியா (மாதவிடாய் இரத்த போக்கு 7நாட்களுக்கு மேல் நீடித்தல்), ஒலிஜினோரோரிய(மூன்று நாட்களுக்கு குறைவாக இரத்த போக்கு), ஓப்செனோனோரியா(மாதவிடாய் சுழற்சி 35 நாட்களுக்கு மேல் நீடித்தல்).

ஹைபர்மெனோரியா(இரத்த போக்கின் அளவு 80மிலி /சுழற்சி க்கு அதிகமாக இருத்தல்). எனவே இந்த மாதிரியான பிரச்சினைகளை நீங்கள் சந்தித்தால் உடனே மருத்துவரை அணுகுங்கள்.

உடல் நலம்

உடல் நலம்

இந்த மாதிரியான அதிகப்படியான இரத்த போக்கு உங்கள் தினசரி நாளை சங்கடத்துக்கு உள்ளாக்கும். உடல் நல உபாதைகள், உணர்வுப் பூர்வமான கஷ்டங்கள், மனநிலை மாற்றம் போன்றவை ஏற்படும்.

அனிமியா, இரும்புச் சத்து பற்றாக்குறை, சோர்வு, தூக்கமின்மை, தலைவலி, பிடிப்பு, மூச்சு விட சிரமம்,தெளிவில்லாத பார்வை, அர்த்மியாஸ் போன்றவை நேரிடும்.

மேலே குறிப்பிட்டுள்ள சில டிப்ஸ்களை பின்பற்றியும் உங்கள் மாதவிடாய் இரத்த போக்கு குறையவில்லை என்றால் உடனே மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுங்கள். இது ஒவ்வொரு பெண்ணின் வாழ்நாள் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Four Pieces Of Advice To Reduce Your Menstrual Flow

Variations in the intensity of bleeding during periods can limit women’s quality of life. Our body has certain levels of hormones, like estrogen for example, which determine the increase or decrease in vaginal flow during our days of ovulation. As a result, any changes in these levels directly affects our quality of life at that time of the month. Healthy diet, herbal tea, supplements these are used.
Desktop Bottom Promotion