For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உயிரை பறிக்கும் கால்பந்து விளையாட்டு..! ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிப்பு..!

எந்த ஒரு விளையாட்டாக இருந்தாலும் அதில் செய்ய கூடாதவை என்ற ஒன்று இருக்கத்தான் செய்கிறது. அதையும் மீறி நாம் செய்தால் அது உடல் ஆரோக்கியத்தை சீர்குலைத்து பல வித நோய்களை தரும். இதை போன்ற நிலைதான் கால்பந்து

By Haripriya
|

விளையாட்டு என்றாலே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மிகவும் ரசித்து விளையாட கூடிய ஒன்றாகும். பலவித நன்மைகள் நாம் உடலை அசைத்து விளையாடும் போது ஏற்படுகிறது. குழந்தை பருவத்தில் நாம் விளையாடிய விளையாட்டுகள் இன்றும் மனதில் நீங்காத நினைவாக இருக்கத்தான் செய்கிறது. விளையாடும் போது நாம் நம் கவலைகளை மறந்து ஆழமான மன நிலைக்கு செல்கிறோம்.

Football Is A Dangerous Sport For Your Health

ஆனால் ஒரு சில விளையாட்டுகள் நம் உயிரையே பறிக்கும் அளவிற்கு ஆபத்தாகவும் இருக்கிறது. எந்த ஒரு விளையாட்டாக இருந்தாலும் அதில் செய்ய கூடாதவை என்ற ஒன்று இருக்கத்தான் செய்கிறது. அதையும் மீறி நாம் செய்தால் அது உடல் ஆரோக்கியத்தை சீர்குலைத்து பல வித நோய்களை தரும். இதை போன்ற நிலைதான் கால்பந்து விளையாட்டிலும் ஏற்பட்டுள்ளது. கால்பந்து விளையாடுவதால் உடல் ஆரோக்கியத்துக்கே ஆபத்து ஏற்படும் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். அப்படி என்னதான் ஆபத்து இருக்கிறதுனு இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கால்பந்து...

கால்பந்து...

கிரிக்கெட் எந்த அளவுக்கு பிரபலம் அடைந்துள்ளதோ அதே அளவிற்கு கால்பந்தும் பிரபலம் அடைய தொடங்கியுள்ளது. நம்ம ஊரில் கால்பந்து விளையாட இப்போதெல்லாம் பல இளைஞிகளும் இளைஞர்களும் அதிக விருப்பம் தெரிவிக்கின்றனர். தற்போது நடந்து முடிந்த உலக கோப்பை கால்பந்திற்கு பிறகே கால்பந்து விளையாட்டிற்கு எண்ணற்ற ரசிகர்கள் கூட்டம் கூட தொடங்கியுள்ளது. நீங்கள் இப்போததுதான் கால்பந்து விளையாட்டின் மீது அதிக ஆர்வம் கொண்டு விளையாட விரும்புகிறீர்கள் என்றால் கட்டாயம் இதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். கால்பந்து உண்மையில் உடலுக்கு நன்மையைத்தான் தருகிறதா...? என்ற கேள்விக்கு பதில்கள் இதோ.

அண்மைய ஆராய்ச்சி...

அண்மைய ஆராய்ச்சி...

கால்பந்து விளையாடும் பல விளையாட்டு வீரர்களுக்கு சிடிஇ (CTE) எனப்படும் க்ரோனிக் ட்ரூமேடிக் என்செபலோபதி (Chronic traumatic encephalopathy) நோய் இருப்பதாக தெரிய வந்துள்ளது. அமெரிக்கன் மெடிக்கல் அசோசியேஷன் நடத்திய ஆய்வில், கால்பந்து விளையாடும் 87% பேருக்கு CTE பாதிப்பு இருப்பதாக கண்டறிந்துள்ளனர். இதற்கு காரணம் விளையாட்டின் போது அதிக படியான தாக்குதல்கள் ஏற்படுவதாலேயே. குறிப்பாக தலையில் தாக்கப்பட்டு, மூளை நிலைகுலைந்து விடுகிறதாம். இதன் காரணமாக உடலுக்கு செயல்பாட்டு ரீதியிலான பாதிப்புகள் அதிகம் ஏற்படும்.

புவி ஈர்ப்பு சக்திக்கே சவால்..!

புவி ஈர்ப்பு சக்திக்கே சவால்..!

கால்பந்து விளையாடும் போது ஒருவரை ஒருவர் சில சமயங்களில் தலையின் மூலம் தாக்கி கொள்ள நேரிடுகிறது. பந்தை தடுத்து நிறுத்தவோ அல்லது கோல் அடிக்கவோ முற்படும்போது இவை ஏற்படும். ஒருவர் மீது ஒருவர் அதிவேகமாக மோதிக் கொள்ளும் போது, தலை குப்புற நிலத்தில் விழுமாறு நடக்கும். இது 300 மடங்கு புவி ஈர்ப்பு சக்திக்கு ஈடானதாகும். கிட்டத்தட்ட இரு கார்களும் ஒன்றுக்கு பின் ஒன்று, பின்புறமாக மோதி கொள்ளும் வேகத்தில் 20 மடங்கிற்கு சமமானது. இது போன்ற தாக்குதல்களே CTE போன்ற பாதிப்பை ஏற்படுத்துகிறது.

 மூளையின் நரம்பு மண்டலத்திற்கே ஆபத்து..!

மூளையின் நரம்பு மண்டலத்திற்கே ஆபத்து..!

இது போன்ற நிலையில் கால்பந்து விளையாடுவதே இப்போதெல்லாம் சாதாரமான விஷியமாக உள்ளது. இதனால் கால்பந்து விளையாட்டு வீரர்களுக்கு அல்சைமர், டிமண்டியா போன்ற நரம்பியல் நோய்கள் ஏற்படக்கூடும். ஒரு ஆய்வில் கால்பந்து விளையாடாத நபர்களை காட்டிலும் நியூரோ டிஜெனரேடிவ் (​Neurodegenerative disease) நோய் பாதித்த கால்பந்து வீரர்களுக்கே 3 மடங்கு உயிரிழக்க வாய்ப்புள்ளது. அத்துடன் அல்சைமர் நோய் பாதிப்பால் உயிரிழக்க 4 மடங்கு வாய்ப்புள்ளது என கண்டறிந்துள்ளனர்.

உடல் ரீதியான பாதிப்புகள்...

உடல் ரீதியான பாதிப்புகள்...

நரம்பியல் ரீதியாக எத்தகைய தாக்கத்தை கால்பந்து விளையாட்டு ஏற்படுத்துகிறதோ, அதே அளவிற்கு உடலிலும் ஏற்படுத்துகிறது. இடுப்பு பகுதி, மூட்டு இணைப்புகள், முழங்கால்கள், முழங்கைகள் ஆகிய இடங்களில் அதிக காயங்கள் ஏற்படுகின்றன. அத்துடன் வயதிற்கு ஏற்றாற்போல், மற்ற உடல்நல பாதிப்புகளும் வருகிறது.

உளவியல் ரீதியாக...

உளவியல் ரீதியாக...

பொதுவாக கோல் அடிக்க முற்படும்போதோ அல்லது பந்தை தடுக்கும் போதோ தலையில் தாக்குதல் ஏற்படக் கூடும். இதனால் கால்பந்து வீரர்கள் அதிக மன அழுத்தத்திற்கு ஆளாகின்றனர். சில கால்பந்து விளையாட்டு வீரர்கள் அவர்களின் ஓய்வு காலங்களில் மன அழுத்தத்தின் காரணத்தால் தற்கொலைகள் கூட செய்து கொள்கின்றனர். இதற்கு CTE பாதிப்புதான் காரணமாக இருக்கிறது என்றே மருத்துவர்களும் கூறுகின்றனர்.

விபரீதங்கள் வேண்டாமே..!

விபரீதங்கள் வேண்டாமே..!

நம்மில் பலர் இன்றளவும் பைக்கில், காரில் பலவித வித்தைகளை செய்கின்றோம். இதனால் எண்ணற்ற உயிர் இழப்புகள் நேர்ந்துள்ளது. இதை போன்றே விளையாட்டிலும் நாம் செய்து வருகின்றோம். இந்த வித்தைகள் உடலுக்கு ஆபத்தை தரும். அத்துடன் மனம் மற்றும் உளவியல் ரீதியாக கட்டாயம் விபரீதத்தை ஏற்படுத்தும். விளையாட்டு என்றும் விபரீதம் ஆகிவிட கூடாது என்பதை நினைவில் கொள்ளல் வேண்டும்.

தீர்வு...

தீர்வு...

எந்த விளையாட்டாக இருந்தாலும் அதனை பாதுகாப்புடனே விளையாடுதல் நன்று. நமது உடலுக்கு மிக முக்கியமான உறுப்புகளில் ஒன்று மூளைதான். அதை நாம் இழக்கும் அளவிற்கு விளையாட வேண்டியது அவசியமற்று. ஆரோக்கியமான உணவு, பயிற்சிகள் மட்டும் ஒரு விளையாட்டு வீரனுக்கு போதாது. விளையாட்டின் போதும் அத்தகைய பாதுகாப்பு இருத்தல் வேண்டும்.

இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து, அவர்களின் ஆரோக்கியத்திற்கும் உதவுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Football Is A Dangerous Sport For Your Health

Football is a dangerous sport. And though there are risks involved, people still love the game.
Desktop Bottom Promotion