For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கட்டுமஸ்தான உடம்பு வேணும்னா இத சாப்பிடாதீங்க

உடற்பயிற்சியும், உணவும் மட்டும் கட்டுமஸ்தான உடம்பை கொடுத்துவிடாது. சில உணவுகளை தவிர்க்கவும் பழகி கொள்ள வேண்டும். ஜிம்மிற்கு சென்று வந்ததும் சாப்பிடகூடாத உணவுகளை இங்கே பார்க்கலாம்

|

கட்டுமஸ்தான உடம்பு வேணாம்னு யாருதான் சொல்லுவாங்க? இன்றைய காலகட்டத்தில் ஆண்களின் ஆரோக்கியம் என்பது அவர்களோட உடலமைப்பை பொருத்துதான் அளவிடப்படுது. அதுவும் சில நடிகர்கள் அவர்களோட படங்கள்ல சிக்ஸ் பேக்கோட வருவது இப்போது ட்ரெண்டா இருக்கு. தங்களோட விருப்பமான நடிகர்கள் மாதிரியே தாங்களும் கட்டுமஸ்தான உடம்ப பெறணும்னு எல்லாரும் விரும்புவாங்க. அதற்கு அவர்கள் முதலில் செல்லும் இடம் ஜிம்தான்,

9 foods should avoid after workout

" நோ பெயின் நோ கெய்ன் " அதாவது " உழைப்பின்றி ஊதியமில்லை " என்று பிரபலமான பழமொழி ஒன்று உள்ளது. அதாவது ஒரு விஷயத்தை அடைய எண்ணினால் அதற்கான சரியான முயற்சிகள் வேண்டும். எனவே வெறுமனே ஜிம்மிற்கு சென்று கடுமையாக உடற்பயிற்சி செய்தால் மட்டும் ஆரோக்கியமான உடல் கிடைத்துவிடாது. அதற்கேற்றாற் போல சத்தான உணவுகளையும் சாப்பிட வேண்டும். எப்படி சரியான சில உணவுகளை சாப்பிட வேண்டுமோ அதேபோல சில தவறான உணவுகளை தவிர்க்கவும் வேண்டும். அந்த உணவுகள் உங்களோட உடற்பயிற்சியை வீணடிப்பதோடு உங்கள் ஆரோக்கியத்தையும் பாதிக்கும். ஜிம்முக்கு போறவங்க சாப்பிட கூடாத உணவுகளை இங்கு பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
குளிர்பானங்கள்

குளிர்பானங்கள்

உடற்பயிற்சி செய்து முடித்தவுடன் புத்துணர்ச்சிக்காக செயற்கை குளிர்பானங்கள் குடிக்கும் பழக்கம் பலருக்கும் இருக்கிறது. ஆனால் இது மிகவும் தவறான ஒன்று. ஜிம்மில் நீங்கள் செய்த உடற்பயிற்சி உங்கள் உடலில் இருந்த கார்போஹட்ரேட்களையும், கொழுப்புக்களையும் கரைத்து கொண்டிருக்கும்போது நீங்கள் குடிக்கும் சர்க்கரை கலந்த குளிர்பானம் அதற்கு முட்டுக்கட்டை போட்டுவிடும். ஆனால் உங்கள் உடலுக்கு நீர்ச்சத்து அவசியம். எனவே செயற்கை குளிர்பானங்களை தவிர்த்து இயற்கை பழச்சாறில் சர்க்கரை இன்றி குடிக்கவும்.

மாமிசம்

மாமிசம்

எல்லோரும் நினைத்து கொண்டிருப்பது ஜிம்மிற்கு செல்பவர்கள் அதிக இறைச்சி உண்ண வேண்டும் என்று. ஆனால் உண்மையில் அது அவசியமற்றது, ஒருவேளை நீங்கள் உடல் எடையை அதிகரிக்க விரும்பினால் ஜிம்மிற்கு சென்ற வந்த பின் சிறிது இடைவெளி விட்டு அதிக காரம் சேர்க்காத இறைச்சியை உண்ணலாம். ஒருவேளை நீங்கள் உடலை குறைக்க விரும்பி ஜிம்மிற்கு சென்றால் இறைச்சி உண்ணாமல் இருப்பதே நல்லது. ஏனெனில் இறைச்சி செரிமானத்திற்கு எடுத்துக்கொள்ளும் நேரம் மிக அதிகமாகும். இதற்கு பதிலாக அதிக புரோட்டின் நிறைந்த வேறு உணவுகளை உண்பது இன்னும் சிறந்தது.

கொழுப்பு உணவுகள்

கொழுப்பு உணவுகள்

எண்ணெயில் வறுத்த, பொரித்த உணவுகள், நிலக்கடலை போன்றவற்றை உடற்பயிற்சிக்கு பிறகு எடுத்துக்கொள்ள வேண்டாம். ஏனெனில் இந்த கொழுப்பு நிறைந்த உணவுகள் செரிமானத்திற்கு அதிக நேரம் எடுத்துக்கொள்ளும், எனவே உங்கள் தசைக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைக்க அதிக நேரமாகும். இதனால் நீங்கள் விரைவில் சோர்வடைந்து விடுவீர்கள்.

துரித உணவுகள்

துரித உணவுகள்

இப்போது தெருவிற்கு இரண்டு துரித உணவு கடைகள் வந்துவிட்டன. அவற்றின் வாசனை உங்களை சாப்பிட தூண்டலாம். ஆனால் நிச்சயம் நீங்கள் அதிலிருந்து விலகி இருக்க வேண்டும். உப்பு நிறைந்த உணவுகளை நீங்கள் உடற்பயிற்சிக்கு பிறகு உண்ணலாம் , ஆனால் அதற்கு துரித உணவுகள் சிறந்த தேர்வு அல்ல. ஜிம்மிற்கு சென்று வந்தவுடனேயே நீங்கள் சாப்பிடும் துரித உணவு உடற்பயிற்சி மூலம் உங்களுக்கு கிடைக்கும் அனைத்து பலன்களையும் தடுத்துவிடும்.

காய்கறிகள்

காய்கறிகள்

இது உங்களுக்கு முட்டாள்தனமாய் தோன்றலாம். அனைவரும் பச்சை காய்கறிகளை சாப்பிடத்தான் சொல்வார்கள். ஆனால் ஜிம்மிற்கு சென்று வந்தவுடன் வெறும் பச்சை காய்கறிகளை சாப்பிடுவது சிறந்த முடிவாக இருக்காது. பச்சை காய்கறிகளால் பிரச்சினை என்னவென்றால் உங்களுக்கு தேவையான அனைத்து சத்துக்களையும் அதனால் தரமுடியாது அதுதான். கடுமையான உடற்பயிற்சிக்கு பிறகு உங்கள் உடலுக்கு கார்போஹைடிரேட், புரோட்டின் மற்றும் அதிகளவு கலோரிகள் தேவை. பச்சைக்காய்கறிகள் சாப்பிடும்போது குறைந்த அளவு சாப்பிட்டாலே வயிறு நிறைந்தது போன்ற உணர்வு இருக்கும். எனவே அதிகளவு சாப்பிட இயலாது. எனவே உடலுக்கு தேவையான சத்துக்கள் முழுமையாக கிடைக்காது.

இனிப்புகள்

இனிப்புகள்

நீங்கள் கண்டிப்பாக சாப்பிட கூடாத ஒன்று செயற்கை இனிப்பு சேர்க்கப்பட்ட மிட்டாய்கள். ஏனெனில் மிட்டாய்களில் உள்ள சுத்திகரிக்கப்படாத சர்க்கரைஉங்கள் உடலுக்கு எந்த விதத்திலும் நன்மை செய்யாது மாறாக தீமையை மட்டுமே செய்யக்கூடும். இதில் உடற்பயிற்சி செய்த களைப்பிலிருந்து உங்களை மீட்கவோ நாள்முழுவதும் சுறுசுப்பாக இருக்க தேவையான சத்துக்களோ எதுவும் இல்லை. எனவே புரோட்டின் நிறைந்த இனிப்பு குறைவான சாக்லேட்டுகள் சாப்பிடுவது நல்லது. அடுத்து நீங்கள் உணவு உண்ணும்வரை சுறுசுறுப்பாக இருக்க தேவையான சத்துக்கள் இதிலிருக்கும்.

வறுக்கப்பட்ட முட்டை

வறுக்கப்பட்ட முட்டை

முட்டை அதிகளவு புரோட்டின் கிடைக்க உதவும் மிகச்சிறந்த உணவாகும், ஆனால் அது நீங்கள் பச்சையாகவோ அல்லது வேகவைத்தோ சாப்பிடும்வரை மட்டும்தான். ஒருவேளை முட்டையை ஏதாவது ஒரு வகையில் வறுத்து சாப்பிடும்போது தேவையற்ற கொழுப்புகள் உங்கள் உடலில் சேர்வது உறுதி. ஆரோக்கியம் என நினைத்து தவறான வடிவில் முட்டையை சாப்பிடுவது உங்கள் உடற்பயிற்சியை விழலுக்கு இழைத்த நீர் போல வீணாக்கும்.

புரோட்டின் ஷேக்

புரோட்டின் ஷேக்

கடைகளில் இளைஞர்களை கவர்வதற்கெனவே "எனர்ஜி ட்ரிங்க்" என்று விற்கப்படும் பானங்களை ஒருபோதும் குடிக்காதீர்கள். அவை ஆற்றலை தருபவை என அட்டைப்படத்தில் போடப்பட்டிருந்தாலும் அதிலுள்ள செயற்கை வேதிப்பொருட்கள் உடலுக்கு தீங்கை மட்டுமீ விளைவிக்கும்.

நீர்

நீர்

இது மிகவும் அதிர்ச்சிகரமானதாக இருக்கலாம், ஆனால் உடற்பயிற்சி செய்யும்போது நீர் அருந்துவதை தவிர்ப்பது நல்லது. குறிப்பாக குளிர்ந்த நீரை குடிக்கவே கூடாது. உடற்பயிற்சி செய்து முடித்த பின் சிறிது இடைவெளி விட்டு நீர் குடிக்கலாம். ஆனால் அப்போதும் குளிர்ந்த நீரை குடிக்கக்கூடாது. உடற்பயிற்சிக்கு பின் உடலுக்கு நீர்சத்து அவசியம்தான், ஆனால் நீர் அதிகமாக குடித்தால் சாப்பிட இயலாது, இது உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைப்பதை தடுக்கும். எனவே சாப்பிட்ட பின் தண்ணீர் குடிப்பது நல்லது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

9 foods should avoid after workout

Only workout and healthy foods can't give us healthy body. We should aware of some foods which should not have after a workout.
Story first published: Thursday, July 26, 2018, 15:04 [IST]
Desktop Bottom Promotion