For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ரத்த அழுத்தம் குறைவாக இருப்பவர்கள் அவசியம் சாப்பிட வேண்டிய உணவுகள்!

குறைவான ரத்த அழுத்தத்தை சீராக்க உதவிடும் உணவுப் பட்டியல்

|

ரத்த அழுத்தம் குறித்த விழிப்புணர்வு இன்று நம்மிடையே பெரும்பாலானோருக்கு இருக்கிறது. உயர் ரத்த அழுத்தம் இருந்தால் பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படும் அதை விட மாரடைப்பு ஏற்படும் என்று எல்லாருக்கும் தெரிந்திருக்கும்.

இதே நேரத்தில் குறைந்த ரத்த அழுத்தம் பற்றி யாராவது கண்டு கொண்டிருக்கிறோமா? அது சத்துக்குறைபாடு என்று நினைத்து அப்படியே விட்டு விடுவோம். ஆனால் இது ஒரு சைலண்ட் கில்லர் என்பது உங்களில் எத்தனை பேருக்குத் தெரியும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ரத்த அழுத்தம் :

ரத்த அழுத்தம் :

ரத்தம் இதயத்துக்கு வரும்போது ஒரு குறிப்பிட்ட வேகத்திலும், இதயத்திலிருந்து வெளியேறும்போது வேறு ஒரு வேகத்திலும் செல்கிறது. இதனைத் தான் நாம் ரத்த அழுத்தம் என்கிறோம்.

பொதுவாக, ஒருவருக்கு ரத்த அழுத்தம் 120/80 மி.மீ. இருந்தால், அது இயல்பு அளவு.

உலக சுகாதார நிறுவனம் ஒரு நபருக்கு 100/70 மி.மீ. முதல் 140/90 மி.மீ. வரை உள்ள ரத்த அழுத்தத்தை நார்மல் என்று வரையறை செய்துள்ளது.

இது 140/90 மி.மீ.க்கு மேல் அதிகரித்தால் அதை உயர் ரத்த அழுத்தம் என்றும், 90/60 மி.மீ. பாதரச அளவுக்குக் கீழ் குறைந்தால் அதைக் குறை ரத்த அழுத்தம் என்றும் சொல்கிறது.

காரணம் :

காரணம் :

இதயத்துக்குத் தேவையான ரத்தம் செல்ல தடை உண்டாவதுதான் குறை ரத்த அழுத்தம் ஏற்பட அடிப்படைக் காரணம்.

தடகள வீரர்கள், கடுமையாக உடற்பயிற்சி செய்பவர்கள், தீவிரமாக ஜிம் பயிற்சி செய்பவர்கள், ஒல்லியான உடல்வாகு உள்ளவர்கள், கர்ப்பிணிகள், தைராய்டு பிரச்னை உள்ளவர்கள், வயதானவர்கள், படுக்கையில் நீண்ட காலம் படுத்திருப்பவர்கள் போன்றோருக்குக் குறை ரத்த அழுத்தம் ஏற்பட வாய்ப்புகள் அதிகம்.

அறிகுறிகள் :

அறிகுறிகள் :

தலைச்சுற்றல், மயக்கம், வாந்தி, வழக்கத்துக்கு மாறான அதீத நாவறட்சி, சோர்வு, பலவீனம், கண்கள் இருட்டாவது போன்ற உணர்வு, பார்வை குறைவது, மனக்குழப்பம், வேலையில் கவனம் செலுத்த முடியாத நிலைமை,

உடல் சில்லிட்டுப்போவது, மூச்சுவாங்குவது போன்ற அறிகுறிகளில் ஏதேனும் ஒன்றோ அல்லது பல அறிகுறிகளோ உங்களால் உணர முடியும்.

இதனை சரி செய்ய வேண்டுமானால் அடிப்படை காரணத்தை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். அப்போது தான் அதனை தீர்க்க முடியும்.

பெரும்பாலும் குறைவான ரத்த அழுத்தத்திற்கு காரணம் சத்துக்குறைபாடாகவே இருக்கிறது. குறைவான ரத்த அழுத்தம் இருப்பவர்கள் கண்டிப்பாக சாப்பிட வேண்டிய உணவுகள்.

பட்டாணி :

பட்டாணி :

பட்டாணி ரத்த அழுத்தத்தை அதிகரிக்க உதவிடும். இதில் ப்ரோட்டீன், விட்டமின்ஸ் மற்றும் ஃபோலிக் அமிலம் இருக்கிறது. ஒட்டுமொத்த இதய பராமரிப்பிற்கும் இது உதவிடும். பாக்கெட்டில் அடைத்து விற்கப்படும் சாயமேற்றப்பட்ட பட்டாணியை விட பச்சை பட்டாணியை வாங்கி உரித்து சமைத்தால் நல்லது.

உருளைக்கிழங்கு :

உருளைக்கிழங்கு :

நம் உடலிலிருந்து வெகுவான ஸ்டார்ச் குறைவதாலேயே குறைந்த ரத்த அழுத்தம் ஏற்படுகிறது. ஸ்டார்ச் அதிகமிருக்கும் உருளைக்கிழங்கு எடுத்துக் கொண்டால் குறைந்த ரத்த அழுத்தம் பிரச்சனையிலிருந்து தப்பிக்கலாம்.

அதற்காக தொடர்ந்து உருளைக்கிழங்கு எடுத்துக் கொள்ள ஆரம்பித்து விடாதீர்கள். பின் அது வேறு உடல் உபாதைகளை ஏற்படுத்திடும்.

பப்பாளி :

பப்பாளி :

குறைந்த ரத்த அழுத்தத்தை சரி செய்ய விட்டமின் சி உணவுகளை நிறைய எடுத்துக் கொள்ளலாம். ஆரஞ்சு பழத்தை விட பப்பாளிப் பழத்தில் நிறைய விட்டமின்கள் நிறைந்திருக்கிறது. அதைவிட பப்பாளியில் அதிகளவு விட்டமின் மற்றும் மினரல்ஸ் இருக்கின்றன.

இதிலிருக்கும் அமினோ அமிலங்கள் மற்றும் பொட்டாசியம் ரத்த அழுத்தத்தை சமன் செய்திடும்.

 கொய்யாப் பழம் :

கொய்யாப் பழம் :

மதிய உணவிற்கு முன்பு கொய்யாப்பழத்தை சாப்பிடலாம். சிலருக்கு, குறிப்பாக அறுபது வயதைக் கடந்தவர்களுக்கு உணவு சாப்பிட்டவுடன் ரத்த அழுத்தம் குறையும்.

இவர்கள் சாப்பிட அரை மணி நேரத்திற்கு முன்பாக கொய்யாப்பழம் சாப்பிட்டால் குறைவான ரத்த அழுத்தத்திலிருந்து தப்பிக்கலாம்.

இதில் அதிகளவு பொட்டாசியம் இருக்கிறது அவற்றுடன் இதிலிருக்கும் ஃபைபர் உணவு செரிமானத்திற்கும் உதவிடும்.

தயிர் :

தயிர் :

தயிரில் இருக்கும் பொட்டாசியம், கால்சியம் மற்றும் மக்னீசியம் ஆகியவை ரத்த ஓட்டத்தை சீராக வைத்திருக்க உதவிடும். லஸ்ஸி தயாரித்து குடிக்கலாம். குறைந்த ரத்த அழுத்தத்திற்கான அறிகுறிகள் தென்பட்ட நேரத்தில் மட்டும் தயிர் எடுக்காமல் தொடர்ந்து உணவில் சேர்ந்து வர வேண்டும்.

தக்காளி :

தக்காளி :

நம் அன்றாட உணவில் தக்காளி முக்கிய இடம் வகிக்கிறது. சருமத்திற்கும் உடல் நலனுக்கும் ஏராளமான நன்மைகளை செய்கிறது. தக்காளியில் இருக்கக்க்கூடிய லைகோபென் என்ற சத்து குறைந்த ரத்த அழுத்தத்திலிருந்து உங்களை காப்பாற்றும்.

அவகேடோ :

அவகேடோ :

அவகேடோ ரத்த அழுத்தத்தை சீராக வைத்திருக்க உதவிடுகிறது. இதிலிருக்கும் பொட்டாசியம், ஃபைபர், மோனோ அன் சாச்சுரேட்டட் ஃபேட் ஆகியவை இதில் அதிகம்.

உணவின் இடைவேளையின் போது இதனை எடுத்துக் கொள்ளலாம். அவகேடோ சாப்பிடுவதால் நீண்ட நேரம் பசி எடுக்காது.

கேரட் :

கேரட் :

கேரட் சாப்பிட்டால் கண்களுக்கு நல்லது என்று கேள்விப்பட்டிருப்போம். ஆனால், கேரட் சாப்பிட்டால் சீரான ரத்த அழுத்தத்திற்கு கியாரண்டி என்று தெரியுமா?

இதிலிருக்கும் இரண்டு முக்கியச் சத்துக்களான பொட்டாசியம் மற்றும் ஆண்ட்டி ஆக்ஸிடண்ட் குறைவான ரத்த அழுத்தத்திலிருந்து நம்மை மீட்டு வரும். கேரட்டில் மட்டுமே இருக்கக்கூடிய ஒரு வகை ஃபைபர் உணவை விரைவாக செரிக்க வைக்கும்.

தர்பூசணிப் பழம் :

தர்பூசணிப் பழம் :

தர்பூசணிப்பழம் சீசன் பழமாதலால் அது கிடைக்கும் காலத்தில் தவறாமல் வாங்கிச் சாப்பிடுங்கள். இதிலிருக்கும் L-citrulline ரத்த நாளங்களை சீராக இயங்க உதவுகிறது. தினமும் காலையில் வெறும் வயிற்றில் தர்பூசணிப்பழம் சாப்பிட்டு வந்தால் நல்லது.

கிஸ்மிஸ் பழம் :

கிஸ்மிஸ் பழம் :

மிகவும் சத்தான ஸ்நாக்ஸ் இது. ஓய்வு நேரங்களில் நொறுக்குத் தீனிகளை எடுப்பதை விட மிகவும் கிஸ்மிஸ் பழம் உட்பட நட்ஸ் வகைகளை எடுத்துக் கொள்ளுங்கள். இதில் பொட்டாசியம் கண்டண்ட் இருப்பதுடன் சர்க்கரைச் சத்தும் இருப்பதால் ரத்த அழுத்தம் குறைவாவதை தடுக்க முடியும்.

 டார்க் சாக்லெட் :

டார்க் சாக்லெட் :

ஸ்ட்ரஸ் குறைத்திடும் டார்க் சாக்லேட் வகையினை சாப்பிடலாம். எப்போதும் கையில் சாக்லெட் வைத்திருங்கள். லோ பிரசர் ஆகும் அறிகுறி தெரிந்தால் உடனேயே சாக்லேட் சாப்பிடுங்கள். ஆனால் தொடர்ந்து தினமும் சாப்பிட வேண்டாம்.

பீட்ரூட் :

பீட்ரூட் :

பீட்ரூட்டில் இரும்புச்சத்து, ஃபோலேட், வைட்டமின் 12 போன்ற இரத்தணுக்களின் உற்பத்திற்கு வேண்டிய சத்துக்கள் வளமாக உள்ளது.

ஆகவே உடலில் இரத்தணுக்களின் அளவு சீராக இருக்க நினைத்தால், பீட்ரூட் ஜூஸை அடிக்கடி குடித்து வாருங்கள்.

முக்கியமாக இரத்த சோகை உள்ளவர்கள், இந்த ஜூஸை தினமும் குடித்து வந்தால், உடலில் இரத்தத்தின் அளவு வேகமாக அதிகரிக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Foods Helps to Get Rid From Lower Blood Pressure

Foods Helps to Get Rid From Lower Blood Pressure
Story first published: Tuesday, January 2, 2018, 17:38 [IST]
Desktop Bottom Promotion