For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

புற்றுநோய் வராமல் இருக்க கடைபிடிக்க வேண்டிய உணவுமுறை

புற்றுநோய் வருவதற்கு நமது உணவுமுறை முக்கியமான ஒரு காரணமாகும். எனவே சீரான உணவுமுறையை கடைபிடிப்பதே உங்களை பாதி புற்றுநோயிலிருந்து பாதுகாத்துவிடும். இந்த பதிவில் புற்றுநோய் வராமல் இருக்க கடைபிடிக்க வேண்ட

|

மனிதர்களுக்கு ஏற்படும் முக்கியமான உயிர்கொல்லி நோய்களில் ஒன்று புற்றுநோய். புற்றுநோய்க்கு பயப்படாத மனிதர்களே இருக்க முடியாது. கிட்டத்தட்ட ஐம்பதிற்கும் மேற்பட்ட புற்றுநோய்கள் இதுவரை கண்டறியப்பட்டுள்ளது. இன்னும் கண்டுபிடிக்காதவை எவ்வளவோ உள்ளது. எந்தவித புற்றுநோயாக இருந்தாலும் அதனை ஆரம்ப நிலையில் கண்டறிந்தால் மட்டுமே குணப்படுத்த இயலும்.

food habits you must avoid to prevent cancer

ஒவ்வொரு புற்றுநோய்க்கும் தனித்தனி அறிகுறிகள் உள்ளது. புற்றுநோயை குணப்படுத்துவது வேண்டுமானால் மருத்துவர்கள் கையில் இருக்கலாம், ஆனால் புற்றுநோயை வராமல் தடுப்பது நமது கைகளில்தான் உள்ளது. புற்றுநோய் வருவதற்கு நமது உணவுமுறை முக்கியமான ஒரு காரணமாகும். எனவே சீரான உணவுமுறையை கடைபிடிப்பதே உங்களை பாதி புற்றுநோயிலிருந்து பாதுகாத்துவிடும். இந்த பதிவில் புற்றுநோய் வராமல் இருக்க கடைபிடிக்க வேண்டிய உணவுமுறையை பற்றி பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கெட்டுப்போன உணவுகளை சாப்பிடாதீர்கள்

கெட்டுப்போன உணவுகளை சாப்பிடாதீர்கள்

நம்மில் பலருக்கும் உணவு கெட்டுப்போனதா? இல்லையா? என்பதை கண்டுபிடிப்பதே மிகவும் சிரமமான ஒன்றாகும். ஆனால் அதனை தெரிந்து வைத்திருக்க வேண்டியது அவசியமாகும். பார்ப்பதற்கு பழையது போலவோ அல்லது மோசமான வாசனையுடன் இருந்தாலோ அந்த உணவை உண்ணாதீர்கள். ஏனெனில் இதுபோன்ற உணவுகளால் அஃப்ளாடாக்ஸின் என்னும் நச்சுப்பொருள் உள்ளது. இது புற்றுநோயை உண்டாக்க கூடிய ஒன்றாகும்.

பதப்படுத்தப்பட்ட இறைச்சி

பதப்படுத்தப்பட்ட இறைச்சி

பதப்படுத்தப்பட்ட இறைச்சியில் அதிக அளவு இரசாயனங்களும், கிருமிகளும் இருக்கும். குறிப்பாக சோடியம் நைட்ரேட் அதிகமாக இருக்கும். இது இறைச்சியை புதுசுபோல காட்ட சேர்க்கப்படுவது ஆனால் இது புற்றுநோய்க்கு வழிவகுக்க கூடியது.

பிளாஸ்டிக் பாக்சில் உணவு சூடு பண்ணுவது

பிளாஸ்டிக் பாக்சில் உணவு சூடு பண்ணுவது

பிளாஸ்டிக் பாக்சில் உணவை சூடுபடுத்தி சாப்பிடுவது புற்றுநோயை உண்டாக்க கூடிய இரசாயனங்களை உணவில் கலக்கும் என்று ஆராய்ச்சியில் நிரூபிக்கப்பட்டுள்ளது. மேலும் இது மலட்டுத்தன்மை, அதிக இரத்த அழுத்தம், எடை அதிகரிப்பு மற்றும் சர்க்கரை வியாதியை ஏற்படுத்துகிறது. எனவே பாதுகாப்பான கொள்கலனில் மட்டும் உணவை சூடுபடுத்தி சாப்பிடுங்கள்.

உப்பின் அளவை குறையுங்கள்

உப்பின் அளவை குறையுங்கள்

உணவில் அதிக அளவு உப்பு சேர்த்து கொள்வது சில புற்றுநோய் ஏற்படக்கூடிய வாய்ப்புகளை அதிகரிக்கிறது. குறிப்பாக வயிரு புற்றுநோயை ஏற்படுத்துவதாக ஆரய்ச்சிகள் தெரிவிக்கின்றன. தினமும் 12கி உப்பு சேர்த்துக்கொள்வது வயிறு புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பை இருமடங்காக்குகிறது.

MOST READ: இரண்டாம் குழந்தையை கருத்தரிக்க, எப்பொழுது தாம்பத்தியம் மேற்கோள்ள வேண்டும்?

மைக்ரோவேவ் உணவு

மைக்ரோவேவ் உணவு

இப்பொழுது அலுவலகம் செல்லும் பலரும் உணவை மைக்ரோவேவ் ஓவனில் சூடுபண்ணி சாப்பிடுவது வழக்கமான ஒன்றாகிவிட்டது. இது மிகவும் ஆபத்தான ஒன்றாகும். ஏனெனில் இம்முறையில் உணவை சூடுபண்ணும்போது உணவில் பல அபாயகரமான கதிர்வீச்சுகள் தாக்க வாய்ப்புள்ளது.

ஹைட்ரஜனேற்றப்பட்ட எண்ணெய்

ஹைட்ரஜனேற்றப்பட்ட எண்ணெய்

ஹைட்ரஜனேற்றப்பட்ட எண்ணெயில் ஆரோக்கியமற்ற ஒமேகா -6 கொழுப்புகள் நிரம்பியுள்ளன, இது செல்களின் கட்டமைப்பு மற்றும் நெகிழ்வுத்தன்மையை மாற்றியமைக்கிறது. இது புற்றுநோயை ஏற்படுத்துவதுடன் தொடர்புடையது.

க்ரில் உணவுகளை தவிர்க்கவும்

க்ரில் உணவுகளை தவிர்க்கவும்

க்ரில் உணவுகள் புற்றுநோயை ஏற்படுத்தக்கூடும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். மரக்கட்டை, கரிக்கட்டை அல்லது கேஸ் மூலம் உணவு க்ரில் செய்யப்படும்போது அதில் பொலிசைக்ளிக் அரோமாடிக் ஹைட்ரோகார்பன்கள் என்னும் இரசாயனம் கலக்கிறது. இது தோல், கல்லீரல் மற்றும் வயிறு புற்றுநோயை உண்டாக்குகிறது.

துரித உணவுகளை தவிர்க்கவும்

துரித உணவுகளை தவிர்க்கவும்

துரித உணவுகளான பீட்சா, பர்கர், நூடுல்ஸ் போன்றவற்றில் கொழுப்பும் சர்க்கரை மற்றும் அளவுக்கதிகமான மசாலா பொருட்கள் சேர்க்கப்படுகிறது, மேலும் நைட்ரேட் போன்ற இரசாயனங்களும் சேர்க்கப்படுகிறது. இவற்றை தினமும் சாப்பிடுவது செல்களில் மாற்றங்களை உண்டாக்கி புற்றுநோய்க்கு வழிவகுக்கும்.

MOST READ: பெட்ரோல் விலை உயர்வால் வரும் நாட்களில் இதெல்லாம் கூட நடக்கலாம்...

செயற்கை குளிர்பானங்கள்

செயற்கை குளிர்பானங்கள்

சமீபத்திய ஆராய்ச்சியின்படி செயற்கை குளிர்பானங்கள் எண்டோமெட்ரியல் புற்றுநோய் ஏற்படும் ஆபத்தை அதிகரிக்க கூடும் என்று மருத்துவர்கள் கண்டறிந்துள்ளனர். இவற்றில் சர்க்கரை மட்டும் கலக்கப்படாமல், பல இரசாயனங்களும் கலக்கப்படுகிறது, இதனால் புற்றுநோய் மட்டுமின்றி சர்க்கரை நோய் ஏற்படும் வாய்ப்புகளும் அதிகரிக்கிறது.

மது மற்றும் சிகரெட்

மது மற்றும் சிகரெட்

மது அருந்துதல் மற்றும் சிகரெட் பிடித்தல் புற்றுநோய்க்கான இரண்டாவது முக்கிய காரணம் ஆகும். தினமும் ஒரு சிகரெட் குடித்தாலும் சரி, குறைவான மது அருந்தினாலும் சரி வாய், உணவுக்குழாய், கல்லீரல், பெருங்குடல், மலக்குடல் மற்றும் மார்பக புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

food habits you must avoid to prevent cancer

Cancer is one of the deadly disease which most people afraid about that. Check out the food habits must avoid to prevent cancer.
Story first published: Tuesday, September 18, 2018, 18:27 [IST]
Desktop Bottom Promotion