For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்த சின்ன விதைகளுக்குள் ஒளிந்திருக்கும் பல ரகசியங்கள்..! என்னனு தெரிஞ்சிக்கணுமா? தொடர்ந்து படிங்க!

வெந்தயத்தில்தான் எண்ணற்ற மருத்துவ ரகசியங்கள் இருக்குது. அதிலும் குறிப்பாக சொல்லப்போனால் ஒரே வாரத்தில் அதிக கொழுப்பை குறைக்க இந்த வெந்தயம் அற்புதமாக உதவி செய்கிறது. உடலில் கொழுப்பு அதிகமாக இருந்தால்

|

என்ன அந்த சின்ன விதைனு கேக்குறீங்களா..? அது வேற எதுவும் இல்ல. நாம் அன்றாடம் பயன்படுத்தும் வெந்தயம்தான். என்னது வெந்தயமானு கேக்குறீங்களா...! ஆமாங்க, வெந்தயத்தில்தான் எண்ணற்ற மருத்துவ ரகசியங்கள் இருக்குது. அதிலும் குறிப்பாக சொல்லப்போனால் ஒரே வாரத்தில் அதிக கொழுப்பை குறைக்க இந்த வெந்தயம் அற்புதமாக உதவி செய்கிறது.

health

உடலில் கொழுப்பு அதிகமாக இருந்தால் அது பலவித உடல் சார்ந்த பிரச்சனைகளை உருவாக்க கூடும். இந்த பாதிப்புகளில் இருந்து தப்பிக்க வெந்தயம் வழி செய்கிறது. வெந்தயம் இயற்கையாகவே பித்த அமிலத்தை அதிகரிக்கவும் , குடலில் உள்ள கொழுப்புகளை குறைக்கவும் பயன்படுகிறது. உடலில் அதிகமாக இருக்கும் கொழுப்புகளை குறைக்க வெந்தயத்தை பயன்படுத்திய சில வீட்டு வைத்திய முறைகளை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
1.வெந்தய தூள்

1.வெந்தய தூள்

வெந்தயத்தில் உள்ள ஹைபோ-லிபிடமிக் மூல பொருட்கள் உடலின் கொலஸ்டரோலை சீரான அளவில் வைக்க பயன்படுகிறது. மேலும் இந்த வெந்தயத்தை பவுடராக செய்து சாப்பிட்டால் அதிக பலனை பெற முடியும். 1 க்ளாஸ் மிதமான சூடுள்ள பாலில் 1 டீஸ்பூன் வெந்த பவுடரை நன்கு கலக்கவும். பின்பு எலுமிச்சை சாற்றை 1 டீஸ்பூன் சேர்த்து கொண்டு,சிறிது சுவைக்காக தேனையும் அதனுடன் சேர்க்கவும். இந்த வெந்தய தூள் கலந்த பாலை தினமும் காலையில் குடித்து வந்தால் கொலஸ்ட்ராலை சீக்கிரமாகவே குறைத்து விடலாம்.

2. வெந்தய தண்ணீர்

2. வெந்தய தண்ணீர்

நமக்கு உடலில் அதிகம் தேவைப்படுகிற ஒன்று நீர் சத்தே. இந்த நீர் சத்து சரியான அளவில் இருந்தாலே பலவிதமான பிரச்சனைகளை நமது உடலில் நெருங்கவிடலாம் செய்யலாம். அதே போன்று வெந்தயத்தில் கொழுப்புகளை கரைக்க கூடிய மூல பொருட்கள் உள்ளது. இந்த இரண்டும் ஒன்று சேர்ந்தால் உடலுக்கு எந்த வித பாதிப்பும் இன்றி பார்த்து கொள்ளலாம்.

இதனை தயார் செய்ய 1 கப் வெந்தய பவ்டரை கடாயில் வறுத்து கொள்ளவும். பின்பு சிறிது நேரம் ஆற வைத்து,நன்கு மிக்ஸியில் அரைக்கவும். பிறகு ஒரு க்ளாஸ் மிதமான சுடு தண்ணீரில் 1 டீஸ்பூன் வெந்தய பவுடர் சேர்த்து நன்றாக கலந்து தினமும் காலையில் குடியுங்கள். இந்த வெந்தய தண்ணீர் உங்கள் உடலில் சேர்ந்துள்ள தேவையற்ற கொழுப்புகளை கறைக்க கூடிய தன்மை வாய்ந்தது.

3. வெந்தய டீ

3. வெந்தய டீ

தினமும் வெந்தய டீயை குடித்தால் உங்கள் கொலெஸ்ட்ரோல் சீரான அளவே உடலில் இருக்கும். இந்த வெந்தய டீயை தயார் செய்ய முதலில் தேவையான அளவு வெந்தயத்தை எடுத்து நசுக்கி கொண்டு அதனை 1 கிளாஸ் தண்ணீரில் மிதமான சூட்டில் கொதிக்க விடவும். பின்பு இந்த தண்ணீரை வடிகட்டி எடுத்து கொண்டு அதனுடன் 1 டீஸ்பூன் தேன் சேர்க்கவும்.இந்த வெந்த டீயை தினமும் காலை வேலையில் குடித்து வந்தால் கொலெஸ்ட்ரோல் அளவு குறைந்து ஆன்டி ஆக்ஸிடன்ட் அளவு அதிகரிக்கும்.

4.ஊற வைத்த வெந்தயம்

4.ஊற வைத்த வெந்தயம்

முதல் நாள் இரவிலே சூடான தண்ணீரில் ஒரு கைப்பிடி வெந்தயத்தை ஊற வைக்க வேண்டும். பின்பு அடுத்த நாள் காலையில் இந்த தண்ணீரை வடிக்கட்டி அதனை வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.இப்படி தினமும் குடித்தால் அதிக கொலெஸ்ட்ரோல் உடலில் சேர்வதை எளிதில் தடுக்க முடியும். மேலும் ஊற வைத்து வடிகட்டிய வெந்தயத்தை அப்படியே மென்று தின்னவும். அல்லது அதனை மிக்ஸியில் அரைத்து சிறிதளவு தேனுடன் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும். இது வயிற்றை சுத்தம் செய்வதோடு அதிக பலத்தை உடலுக்கு ஏற்படுத்த கூடிய ஆற்றல் வாய்ந்தது .

5. முளைக்கட்டிய வெந்தயம்

5. முளைக்கட்டிய வெந்தயம்

முளைக்கட்டிய வெந்தயத்தில் அதிக பட்ச கலக்டோமானன் நார்சத்துகள் உள்ளது. இது உடலில் தேவைக்கு அதிகமாக உள்ள கொலெஸ்ட்ரால்களை உறிஞ்சி அத்துடன் பைல் அமிலத்தை குடல் பகுதியில் அதிகம் சுரக்க வழி செய்கிறது.

ஒரு கைப்பிடி வெந்தயத்தை எடுத்து கொண்டு அதனை முதல் நாள் தண்ணீரில் ஊற வைக்க வேண்டும். வெந்தயம் முளைக்கட்டி வரும்வரை காத்திருந்து,பின்பு முளைகட்டிய அந்த வெந்தயத்தை காலையில் சாப்பிடவும். அல்லது இதனை பொரியல் போல சமைத்தும் சாப்பிடலாம்.

6. வெந்தய கீரை

6. வெந்தய கீரை

சிறு வயதிலேயே அதிக கொலெஸ்ட்ரோல் உள்ளதென்றால் அவர்களுக்கு வெந்தய கீரை ஒரு அருமையான தீர்வை கொடுக்கும். குழந்தைகள் பொதுவாகவே கீரைகளை சாப்பிடாமல் ஒதுக்கி வைப்பார்கள். அவர்களை இந்த வெந்தய கீரையை சாப்பிட வைக்க சில வழிகள் இருக்கிறது. வெந்தய கீரையை தேவையான அளவு எடுத்து கொண்டு அவற்றை நறுக்கி கொண்டு சப்பாத்தி செய்வதற்காக கலந்து வைத்துள்ள மாவில் சேர்த்து கொண்டு சப்பாத்தி செய்து தரலாம். அல்லது தோசை மாவில் வெந்தய கீரை, வெங்காயம் ஆகியவற்றை சேர்த்து தோசை சுட்டு சாப்பிட்டால் நல்ல ஆரோக்கியமான கொலெஸ்ட்ரோல் குறைந்த உடலை நிச்சயம் பெறலாம். மேலும் இதனை இட்லி மாவிலும் கலந்து இட்லி செய்தும் சாப்பிட செய்யலாம்.

7.வெந்தய கேப்சியூல்

7.வெந்தய கேப்சியூல்

இப்போதெல்லாம் வெந்தயத்தை வைத்தே பல வகையான கேப்சியுள்கள் வர தொடக்கி உள்ளன. இந்த கேப்சியூல்ஸ்களின் உள்ளே வெந்தயத்தை வறுத்து காய வைத்து சிறிது தேன் சேர்த்த பௌடரே இருக்கும். தினமும் மூன்று வேலை 10-30 gm இதனை சாப்பிட்டால் கொலெஸ்ட்ராலின் அளவு குறைய கூடும். அத்துடன் சுறுசுறுப்பான உடலையும் பெறலாம் .

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Fenugreek used to reduce high cholesterol

High Cholesterol...? Fenugreek us there to cure you. The easy ways to use Fenugreek for reducing high cholesterol
Desktop Bottom Promotion