For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உயிரைப் பறிக்கும் காசநோயால் அவஸ்தைப்பட்ட பிரபலங்கள்!

|

Recommended Video

உயிரைப் பறிக்கும் காசநோயால் அவஸ்தைப்பட்ட பிரபலங்கள்! | Boldsky

காசநோய் என்பது நுரையீரலைப் பாதிக்கும் ஒரு தீவிரமான ஒரு பாக்டீரிய தொற்று நோய் ஆகும். இது ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு எளிதில் பரவக்கூடியது. அதுவும் காசநோயால் பாதிக்கப்பட்டவர்களின் இருமல் அல்லது தும்மலின் மூலம் மற்றவர்களுக்குப் பரவும். இது மிகவும் கொடிய உயிரைப் பறிக்கும் நோய். பெரும்பாலான காசநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, தங்களுக்கு இருப்பது காசநோய் என்றே தெரியாது. ஏனெனில் இது ஆரம்பத்தில் சாதாரண இருமலாகத் தான் இருக்கும்.

உலகிலேயே மிக அதிக ஒரு தொற்றுக் கொல்லி நோயாக இருப்பது காச நோய் ஆகும். உலக சுகாதார நிறுவனத்தின் படி, கடந்த வருடம் 10.4 மில்லியன் மக்கள் காசநோயால் பாதிக்கப்பட்டனர். 2016-இல் 1.8 மில்லியன் மக்கள் காசநோயால் உயிரை இழந்தனர். ஒருவருக்கு காசநோய் வருவதற்கு ஊட்டச்சத்துக் குறைபாடு, புகையிலை, ஆல்கஹால், சர்க்கரை நோய், வறுமையான குடியிருப்பு மற்றும் மோசமான சுகாதாரம் போன்றவைகள் தான் காரணம்.

இந்த காசநோயால் சாதாரண மக்கள் மட்டும் அவஸ்தைப்படுவதில்லை. சில பிரபலங்களும், தலைவர்களும் தான் காசநோயால் அவஸ்தைப்பட்டனர். இக்கட்டுரையில் காச நோயால் பாதிக்கப்பட்ட பிரபலங்கள் மற்றும் காசநோய் குறித்த சில உண்மைகள் கொடுக்கப்பட்டுள்ளன.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
அமிதாப் பச்சன்

அமிதாப் பச்சன்

மிகவும் பிரபலமான பாலிவுட் நடிகரான அமிதாப் பச்சன் அவர்களுக்கு 2000 வருடம் முதுகெலும்பு காசநோய் இருப்பது பரிசோதனையில் தெரிய வந்தது. ஆனால் வெற்றிகரமான சிகிச்சைக்குப் பின், இவர் இந்த கொடிய நோயில் இருந்து விடுபட்டார்.

முகமது அலி ஜின்னா

முகமது அலி ஜின்னா

பாகிஸ்தான் நிறுவனரான முகமது அலி ஜின்னா, காசநோயால் பாதிக்கப்பட்டிருந்தார். ஆனால் இவர் இந்த நோய்க்காக எந்த ஒரு சிகிச்சையையும் மேற்கொள்ளவில்லை. ஏனெனில் எங்கு அவரது அரசியல் வாழ்க்கை பாதிக்கப்படுமோ என்று எண்ணினார். இறுதியில் இவர் காசநோயால் உயிரை இழந்தார்.

Image Courtesy

கமலா நேரு

கமலா நேரு

இந்திய சுதந்திரத்திற்காக போராடியவர்களுள் ஒருவர் தான் கமலா நேரு. இவர் இந்திரா காந்தியின் தாய் மற்றும் ஜவஹர்லால் நேருவின் மனைவியும் ஆவார். இவருக்கு இளம் வயதில் இருந்தே காசநோயால் அவஸ்தைப்பட்டு வந்தார். இறுதியில் தனது 37 ஆவது வயதில் மரணத்தை சந்தித்தார்.

Image Courtesy

கஹில் ஜிப்ரான்

கஹில் ஜிப்ரான்

உலகின் பிரபலமான லெபனான்-அமெரிக்கன் கவிஞரும் மற்றும் கலைஞரும் தான் கஹில் ஜிப்ரான். இவர் இளம் வயதிலேயே காசநோயால் போராடி வந்தார். தனது 48 ஆவது வயதில் காசநோய் அவரது உயிரைப் பறித்துவிட்டது.

டெஸ்மண்ட் டுட்டு

டெஸ்மண்ட் டுட்டு

டெஸ்மண்ட் டுட்டு ஒரு புகழ்பெற்ற மனித மற்றும் சமூக உரிமை ஆர்வலர் ஆவார். இவர் காசநோயால் பாதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சைக்குப் பின் பிழைத்துக் கொண்டார். இவர் பல சர்வதேச தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடன் சேர்ந்து காசநோய் மற்றும் எச்.ஐ.வி நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்துவதற்கான பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகிறார்.

Image Courtesy

காசநோய் குறித்த சில முக்கியமான தகவல்கள்!

காசநோய் குறித்த சில முக்கியமான தகவல்கள்!

#1

காசநோய் இருந்தால் நோய்வாய்ப்பட்டவர் போன்று இருக்க வேண்டும் என்பதில்லை. காசநோய் காற்றின் வழியே பரவும் மற்றும் ஏற்கனவே பாதிக்கப்பட்டவர்களின் இருமல் மற்றும் தும்மல் மூலம், அருகில் உள்ளோருக்கு எளிதில் தொற்றிக் கொள்ளக் கூடியது.

#2

#2

வறுமை நாடுகளில் உள்ள மக்கள் தான் காசநோயால் அதிகம் பாதிக்கப்படுவார்கள் என்பதில்லை. உலக சுகாதார நிறுவனத்தின் படி, வளர்ந்த நாடுகளில் ஒவ்வொரு வருடமும் 9 மில்லியன் மக்கள் காசநோய் பாதிக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது. அதில் வளர்ந்த நாடுகளில் சுமார் 95 சதவீத மக்கள் காசநோயால் தான் உயிரை இழந்துள்ளனராம்.

#3

#3

ஒருவருக்கு காசநோய் இருந்தால், அதன் ஆரம்ப அறிகுறி சாதாரண இருமல் போன்று தான் இருக்கும். இது தீவிரமான நிலையில் தொடர்ச்சியான காய்ச்சல், குளிர், இருமல், சோர்வு, நெஞ்சு வலி மற்றும் எடை இழப்பு போன்ற அறிகுறிகள் தென்படும். இம்மாதிரியான நேரத்தில் சற்றும் தாமதிக்காமல் உடனே மருத்துவரை அணுக வேண்டியது அவசியம்.

#4

#4

காசநோய்க்கு சரியான சிகிச்சை அளித்து, முற்றிலும் குணமாக்க முடியும். காசநோய் உள்ளவர்கள் ஆறு மாத காலம் 4 ஆன்டிமைக்ரோபியல் மருந்துகளின் மூலம் சிகிச்சை அளிக்கலாம். ஆனால் நோயாளி சரியான சிகிச்சையை தவறாமல் மேற்கொண்டு வருவதோடு, முறையான பாதுகாப்புடன் இருந்தால், காசநோய் பரவுவதைத் தடுக்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Famous Celebrities Who Suffered From TB

The Bollywood legend Amitabh Bachchan was diagnosed with tuberculosis in the year 2000. Read this article to know which famous celebrities suffered with tuberculosis.
Story first published: Monday, March 26, 2018, 16:13 [IST]
Desktop Bottom Promotion