For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்த தினசரி பழக்க வழக்கங்கள் தான் உங்களின் நுரையீரலை மோசமான நிலைக்கு தள்ளுகிறது...!

|

இங்குள்ள எல்லா வகையான ஜீவ ராசிகளுக்கும் உயிர் மூச்சு மிக அவசியமான ஒன்றாகும். உயிர்கள் வாழ வேண்டுமென்றால் அவற்றிற்கு சுவாசம் முக்கியமானதாகும். மனிதனுக்கும் சுவாசம் இன்றியமையாததாகும்.எனவே இந்த சுவாசத்தை முறையாக அளித்து வரும் நுரையீரலை நாம் அதிக கவனத்துடன் பார்த்து கொள்ள வேண்டும்.

இவற்றையெல்லாம் செய்தால், உங்களின் நுரையீரல் சீக்கிரமே பழுதாகி விடுமாம்...!

ஆனால், நாம் செய்கின்ற சில அன்றாட செயல்கள் நுரையீரலை முற்றிலுமாக பாதிக்கிறதாம். அத்துடன் இவை உயிர் இழப்புகளை கூட தந்து விடுமாம். நுரையீரலை முற்றிலுமாக பாதிக்க கூடிய அன்றாட செயல்கள் என்னென்ன என்பதை இந்த பதிவில் விரிவாக அறிந்து கொண்டு தவிர்ப்போம் நண்பர்களே.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
நுரையீரல்

நுரையீரல்

நமது உயிர்மூச்சை சுவாசிக்க வைப்பதே இந்த நுரையீரல் தான். இது மிக மெல்லிய படலமாக இருக்கும். உடலின் ஒவ்வொரு இயக்கத்திற்கும் நுரையீரலுக்கும் அதிக பங்குண்டு. இதில் நச்சுக்கள் சேர சேர கொஞ்சம் கொஞ்சமாக சிதைவடைந்து கொண்டே வருமாம். குறிப்பாக நாம் செய்கின்ற பல செயல்கள் இதனை அழிவின் விளிம்பில் கொண்டு சேர்த்து விடுகின்றன.

கொசுவர்த்தி

கொசுவர்த்தி

வீடுகளில் கொசுவர்த்தி பயன்படுத்தும் போது நமது அருகிலே வைத்து கொள்வோம். இந்த செயல் பலவித ஆபத்துக்களை நமக்கு தரும். இதில் இருந்து வரும் புகை கொசுக்களை அழிப்பதற்காக உருவாக்கப்பட்ட புகையாகும். இதனை நாம் சுவாசித்தால் நுரையீரல் சீக்கிரமாகவே ஆபத்தான நிலைக்கு வந்து விடும்.

இங்கு செல்லலாமா..?

இங்கு செல்லலாமா..?

நம்மில் பலருக்கு புகை பிடிக்கும் நண்பர்கள் இருப்பார்கள். புகை பிடிக்க அவர் செல்லும்போது நாமும் அந்த இடங்களுக்கு சென்றால் நமது நுரையீரலும் அபாயகரமான நிலைக்கு சென்று விடும். ஏனெனில், அங்கு பலர் விடும் புகையை நாம் சுவாசிக்கும் போது நமது நுரையீரலும் மோசமாகும்.

ப்ளீச்சிங் பவ்டர்

ப்ளீச்சிங் பவ்டர்

கழிவறைகளை சுத்தம் செய்வதற்காக நாம் பயன்படுத்தும் ஒரு முக்கிய பொருள் இந்த ப்ளீச்சிங் பவ்டர். ஆனால், இதிலும் உங்கள் நுரையீரலுக்கு ஆபத்து உள்ளதாம். இதை சுத்தம் செய்பவர்கள் இதனை சுவாசித்தால் ஆஸ்துமா, நுரையீரல் நோய்கள், மூச்சு திணறல் போன்ற பிரச்சினைகள் அடுக்கி கொண்டு வருமாம்.

MOST READ: ஆண்களே..! பிறப்புறுப்பில் வர கூடிய புற்றுநோயை தடுக்க, இவற்றை சாப்பிட்டாலே போதுமாம்...!

பெயிண்டுகள்

பெயிண்டுகள்

வீட்டிற்கு கலர் கலராக பெயிண்ட் அடித்தால் மட்டும் போதாது. நச்சு தன்மை கொண்ட வேதி பொருட்கள் இந்த பெயிண்டுகளில் அதிக அளவில் இருந்தால், நுரையீரலை பழுதாக்கி விடும். எனவே, குறைந்த வேதி பொருட்கள் உள்ள அல்லது பசுமை வழியில் தயாரித்த பெயிண்டுகளை தேர்வு செய்து உங்களின் வீட்டிற்கு பயன்படுத்துவதுன் ஆரோக்கியமானது.

மாசுக்கள் நிறைந்துள்ளதா..?

மாசுக்கள் நிறைந்துள்ளதா..?

வாகனங்களின் அதிக பயன்பாட்டால் காற்று மாசு அதிகரித்து கொண்டே வருகிறது. குறிப்பாக நகர புறங்களில் இதன் தாக்கம் அபரிமிதமாக அதிகரித்து கொண்டே வருகிறது. இந்த காற்றை நேரடியாக நாம் சுவாசிப்பதை தவிர்க்க வேண்டும். இதற்கு மூக்கை துணியால் கட்டி கொண்டு செல்வது சிறந்தது.

தொற்றுகளை தடுக்க

தொற்றுகளை தடுக்க

உங்களுக்கு சளி அல்லது ஜலதோஷம் பிடித்திருந்தால் அதிக கூட்டம் இருக்கும் இடத்திற்கு செல்லாதீர்கள். ஏனெனில், அவ்வாறு செல்லும் போது நோய் கிருமிகளின் தாக்குதல் தொற்றுகளின் மூலம், நமது உடலில் அதிகரிக்க கூடும். மேலும், தொற்றுகள் நேரடியாக நுரையீரலை பாதிக்கும்.

அதிக தூசு கொண்ட வீடா..?

அதிக தூசு கொண்ட வீடா..?

உங்களின் வீடுகளை அடிக்கடி சுத்தம் செய்தல் வேண்டும். இல்லையென்றால் நமது சுவாசத்தை பெரிதும் பாதிக்க செய்து விடும். வீடுகளில் உள்ள தூசுகள், அழுக்குகளை நாம் சுவாசிக்கும் போது அவை நமது நுரையீரலுக்கு சென்று கொஞ்சம் கொஞ்சமாக நுரையீரல் சார்ந்த கோளாறுகளை தரும்.

MOST READ: பெண் போல அலங்காரம் செய்துக் கொண்டு செக்ஸில் ஈடுபட அழைக்கும் கணவன் - My Story #322

புகை பழக்கம்

புகை பழக்கம்

இன்று அதிகரித்துள்ள மிக மோசமான பழக்கம் இதுதான். ஃபேஷன் என்கிற பெயரில் புகை பிடிக்கும் பழக்கத்தை இணைத்து கொள்கின்றனர். இது ஆரம்ப காலத்தில் ஒரு வித போதையை தந்து விட்டு, பிறகு உயிரை காவு வாங்கி விடும். என்னதான், "புகை பழக்கம் உயிரை கொல்லும்" என எல்லா இடங்களிலும் எழுதினாலும் இந்த நிலை பல்லாயிரம் காலமாக அப்படியே மாறாமல் உள்ளது. எனவே, இந்த பழக்கத்தை முதலில் நிறுத்துங்கள்.

சுவாச பயிற்சிகள்

சுவாச பயிற்சிகள்

நுரையீரலை இப்படிப்பட்ட பாதிப்பிலிருந்து பாதுக்காக்க வேண்டுமென்றால் சுவாச பயிற்சிகளை தவறாது செய்து வர வேண்டும். பிரானானயம் போன்ற மூச்சு பயிற்சிகள் நல்ல பலனை தரவல்லது. ஆதலால் இது போன்ற மூச்சு பயிற்சிகளை செய்து உங்களின் நுரையீரலை ஆரோக்கியமாக வைத்து கொள்ளுங்கள்.

இது போன்ற புதிய தகவல்களை பெற, எங்கள் இணைய பக்கத்தை லைக் செய்யுங்கள். அத்துடன் இந்த பதிவை மற்ற நண்பர்களுடனும் பகிர்ந்து, அவர்களின் ஆரோக்கியத்திற்கும் உதவுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Everyday Habits That Can Damage Your Lungs

Every activity in the body is dependent on oxygen, including the metabolic functioning of cells. The lungs perform the task of delivering oxygen to every part of the body
Desktop Bottom Promotion