For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மாதுளை ஜூஸை தினமும் ஒரு டம்ளர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்!

இங்கு மாதுளை ஜூஸை தினமும் ஒரு டம்ளர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் பட்டியலிடப்பட்டுள்ளன.

|

ஒரு ஆரோக்கியமான டயட்டில் பழச்சாறுகளும் முக்கிய பங்கை வகிக்கிறது. காய்கறி ஜூஸ்கள் மிகவும் பிரபலமானதாக மற்றும் ஆரோக்கியமானதாக இருந்தாலும், அனைவராலும் காய்கறி ஜூஸ்களைக் குடிக்க முடியாது. ஆனால் பழங்களால் தயாரிக்கப்பட்ட ஜூஸ் என்றால் கட்டாயம் அனைவருமே விரும்பி குடிப்போம். அந்த வகையில் பழச்சாறுகள் ருசியாக இருக்கும்.

அப்படி மிகவும் சுவையான மற்றும் ஆரோக்கியமான ஒரு பழச்சாறு தான் மாதுளை ஜூஸ். மாதுளை அனைத்து காலங்களிலும் கிடைக்கும் ஒரு அற்புதமான பழம். இந்த மாதுளை ஜூஸ் பல்வேறு நோய்களை குணப்படுத்தவும், தடுக்கவும் செய்யும். சமீபத்தில் மாதுளை ஜூஸ் குறித்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், இந்த ஜூஸில் உள்ள ஏராளமான ஊட்டச்சத்துக்கள், க்ரீன் டீயை விட ஆரோக்கியமானதாக்குவதாக தெரிய வந்துள்ளது.

Did You Know About These Amazing Benefits Of Pomegranate Juice?

மாதுளை ஜூஸில் அதிகளவிலான ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் நிறைந்துள்ளதால், இது பல மோசமான மற்றும் அபாயகரமான நோய்களையும் தடுக்கும். அதுவும் மாதுளை ஜூஸை தயாரித்த உடனேயே குடித்தால் தான், இதன் முழு நன்மைகளையும் பெற முடியும். சரி, இப்போது மாதுளை ஜூஸைக் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் என்னவென்று காண்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
புற்றுநோய் எதிர்ப்பு பண்புகள்

புற்றுநோய் எதிர்ப்பு பண்புகள்

மாதுளை ஜூஸில் பல்வேறு வகையான புற்றுநோய் மற்றும் கட்டிகளான, புரோஸ்டேட் புற்றுநோய், மார்பக புற்றுநோய் போன்றவற்றை தடுக்கும் பண்புகள் நிறைந்துள்ளது. முக்கியமாக இந்த ஜூஸ் புற்றுநோய் செல்களின் உற்பத்தியை முடக்கிவிடும். பல்வேறு ஆய்வுகளில் மாதுளை ஜூஸை தொடர்ந்து ஒருவர் குடித்து வந்தால், புற்றுநோயின் அபாயம் குறைவதாக தெரிய வந்துள்ளது.

ஆரோக்கியமான இதயம்

ஆரோக்கியமான இதயம்

மாதுளை ஜூஸ் இதய ஆரோக்கியத்தைப் பராமரிக்கும். இது இதய நோயின் அபாயத்தைக் குறைக்கும். மாதுளை ஜூஸைக் குடித்து வந்தால், அது இரத்த அழுத்தத்தைக் குறைப்பதோடு, இரத்தக் குழாய்களில் ஏற்படும் அடைப்பைத் தடுப்பதோடு சரிசெய்யும்.

சர்க்கரை நோயை எதிர்க்கும்

சர்க்கரை நோயை எதிர்க்கும்

மாதுளை ஜூஸ் சர்க்கரை நோயை எதிர்க்கும். பொதுவாக சர்க்கரை நோயாளிகள் பழங்களை அதிகம் சாப்பிட பரிந்துரைக்கப்படுவதில்லை. ஆனால் இந்த பழத்தால் தயாரிக்கப்படும் ஜூஸைக் குடித்தால், அது இரத்த சர்க்கரை அளவு மற்றும் கொலஸ்ட்ரால் அளவைக் குறைப்பதோடு, டைப்-2 சர்க்கரை நோயின் அறிகுறிகளையும் தடுக்கும்.

இரத்த சோகையை சரிசெய்யும்

இரத்த சோகையை சரிசெய்யும்

மாதுளை ஜூஸில் ஃபோலேட் அதிகம் உள்ளது. இது இரத்த சோகையை சரிசெய்ய உதவும். இந்த ஜூஸி இரும்புச்சத்தும் வளமான அளவில் நிறைந்துள்தால், இரத்த சோகை நோயாளிகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். மாதுளை ஜூஸில் உள்ள வைட்டமின் கே, இரத்தம் உறைவதைத் தடுக்கும் மற்றும் ஃபோலேட் இரத்த சிவப்பணுக்களின் உருவாக்கத்திற்கு உதவும்.

ஆரோக்கியமான சருமம்

ஆரோக்கியமான சருமம்

மாதுளை ஜூஸில் வைட்டமின் சி அதிகம் உள்ளது. இது சருமத்தை ஆரோக்கியமாகவும், இளமையுடனும் வைத்துக் கொள்ள உதவும். இந்த ஜூஸில் உள்ள ஆன்டி-ஏஜிங் பண்புகள், முதுமை செயல்முறையைத் தாமதப்படுத்தும். இந்த ஜூஸை ஒருவர் தினமும் குடித்து வந்தால், சரும சுருக்கம் தடுக்கப்படுவதோடு, புதிய செல்களைப் புதுப்பித்து, பல்வேறு சரும தொற்றுகள் மற்றும் நோய்களும் தடுக்கப்படும். மேலும் இது பிம்பிள், பருக்கள் மற்றும் சரும வறட்சியைத் தடுக்கும்.

ஆரோக்கியமான தலைமுடி

ஆரோக்கியமான தலைமுடி

மாதுளை ஜூஸைக் குடித்தால், அது அடர்த்தியான மற்றும் ஆரோக்கியமான தலைமுடிக்கு உதவும். இந்த ஜூஸை தலைமுடி அதிகம் உதிரும் பிரச்சனை உள்ளவர்கள் குடித்து வந்தால், இது மயிர்கால்களை வலிமையாக்கி, தலைமுடி உதிர்வதைத் தடுக்கும். மேலும் இந்த ஜூஸ் தலைமுடியின் வளர்ச்சியை அதிகரிப்பதோடு, ஸ்கால்ப்பில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும்.

வலிமையான பற்கள்

வலிமையான பற்கள்

மாதுளை ஜூஸில் உள்ள தனித்துவமான பண்புகள், பற்களில் ப்ளேக் உருவாக்கத்தைத் தடுத்து, பற்களை ஆரோக்கியமாகவும், வலிமையுடனும் வைத்துக் கொள்ளும். எனவே உங்கள் பற்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்த நினைத்தால், மாதுளை ஜூஸை தினமும் குடியுங்கள்.

நோயெதிர்ப்பு மண்டலம் வலுபெறும்

நோயெதிர்ப்பு மண்டலம் வலுபெறும்

மாதுளை ஜூஸ் நோயெதிர்ப்பு சக்தியை அளவை அதிகரிக்கும். இதில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள், உடலைத் தாக்கும் நோய்களை எதிர்த்துப் போராடும். முக்கியமாக இதில் உள்ள வைட்டமின் சி, நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமைப்படுத்தும்.

செரிமானம் சிறப்பாக நடைபெறும்

செரிமானம் சிறப்பாக நடைபெறும்

மாதுளை ஜூஸில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இது ஆரோக்கியமான செரிமான செயல்பாட்டிற்கு உதவும். மாதுளை ஜூஸில் ஒரு நாளைக்கு உடலுக்குத் தேவையான நார்ச்சத்து நிறைந்துள்ளதால், உடலில் நார்ச்சத்து குறைபாட்டினால் ஏற்படும் பிரச்சனைகள் அனைத்தும் தடுக்கப்படும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Did You Know About These Amazing Benefits Of Pomegranate Juice?

Pomegranate juice health benefits range from fighting cancer to improving hair, skin and teeth, combating cancer and boosting immunity.
Story first published: Saturday, May 12, 2018, 17:21 [IST]
Desktop Bottom Promotion