For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கருப்பு சீறுநீர் உங்கள் உயிரையே பறித்துவிடுமாம்..!!

பொதுவாக நமது உடலின் ஆரோக்கியம் சீரான முறையில் இருக்கிறது என்பதை எவ்வாறு கணக்கிடுவோம்...? நாம் உண்ணும் உணவு நன்றாக ஜீரணம் ஆகியபின் அவை சீறுநீராகவோ அல்லது மலமாகவோ வெளியேறும் போதுதான். அவ்வாறு நமது உடலின

|

கருப்பு சீறுநீரா...! இது என்ன புதுசா இருக்கேனு நினைக்குறீங்களா..? புதுசா இல்லைங்க. நம்மில் பலர் இந்த வித பாதிப்பை அடைந்திருப்போம். ஆனால் அதை சாதாரணமானதாக எடுத்து கொண்டிருப்போம். பொதுவாக நமது உடலின் ஆரோக்கியம் சீரான முறையில் இருக்கிறது என்பதை எவ்வாறு கணக்கிடுவோம்...? நாம் உண்ணும் உணவு நன்றாக ஜீரணம் ஆகியபின் அவை சீறுநீராகவோ அல்லது மலமாகவோ வெளியேறும் போதுதான்.

health

அவ்வாறு நமது உடலின் கழிவுகள் வெளியேறவில்லை என்றால் உடலின் செயல்பாடு சமமாக இல்லை என்பதே பொருள். இந்த நிலை பல நாட்களுக்கு நீண்டு கொண்டே போனால் உங்கள் உயிருக்கே ஆபத்தாகிவிடும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். உயிருக்கே ஆபத்தா..!! அப்படி என்னதான் இதற்கு காரணமாக இருக்கும்னு தெரிஞ்சிக்கணுமா..? தொடர்ந்து படியுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
#கருப்பு சிறுநீர்..!

#கருப்பு சிறுநீர்..!

பொதுவாக சிறுநீர் என்பது சாதாரண வெளிர்ந்த மஞ்சள் நிறமாக இருக்கும். இது ஒரு சிலருக்கு கொஞ்சம் மாறுதலான மஞ்சள் நிறத்திலும் வரக்கூடும். ஆனால் இதுவே மிகவும் அடர்ந்த கருப்பு கலந்த மஞ்சள் நிறமாக இருந்தால் அவ்வளவுதான். ஆமாங்க, இந்த நிற சிறுநீர் பல ஆபத்துகளை கொண்டுள்ளது. சிறுநீரானது கிட்னியில் இருந்து உற்பத்தி செய்யப்படுகிறது. நாம் உட்கொள்ளும் திரவ பொருட்கள் செரிமானம் அடைந்து கிட்னிக்கு சென்று பின்பு சீறுநீராக வெளியேறும். ஆனால், கிட்னிக்கு அதிக தண்ணீர் தேவைப்படும் போது கிடைக்கவில்லை என்றால் கிட்னி பாதிப்படைந்து கருப்பு நிற சிறுநீரை வெளியேற்றும். இதே நிலை தொடர்ந்தால் சிறுநீரில் ரத்தமும் கலந்து சிவப்பாக வரக்கூடும் என ஆராய்ச்சிகள் சொல்கிறது. இந்த நிலையில் நீங்கள் இருந்தால் கட்டாயம் மருத்துவரை அணுக வேண்டும்.

காரணங்கள் :-

காரணங்கள் :-

# கருப்பு சிறுநீர் நோய்

உங்கள் சிறுநீர் கருப்பாக உள்ளதென்றால் அதற்கு முதல் காரணம் இதுவாக தான் இருக்கும். உடலில் tyrosine மற்றும் phenylalanine போன்ற ப்ரோடீன் பொருட்கள் நன்றாக உடைந்து சிறுநீராக வெளியேறவில்லையென்றால் அது கருப்பு நிற சிறுநீரை உருவாக்கும். அத்தோடு சேர்த்து உங்கள் வியர்வையும் கருப்பாக வரக்கூடும். இதனால் உங்கள் முகம் கருமை அடைந்து தோன்றும். இந்த கருமை நிற சிறுநீருக்கு மூல காரணம் homogentisic acid-தான். மேலும் இந்த அமிலம் கொஞ்சம் கொஞ்சமாக கிட்னியில் உருவாகி, உயிருக்கே பாதிப்பை உண்டாக்கிவிடும்.

# சிறுநீரக புற்றுநோய்

# சிறுநீரக புற்றுநோய்

புற்றுநோய்கள் பலவிதமாக உள்ளது. குறிப்பாக மூளை,ரத்தம், கிட்னி இவைகளில் புற்றுநோய் ஏற்பட்டால் அதனை சரி செய்வது மிக கடினமான ஒன்று. உங்கள் சிறுநீர் நிறம் மாறும்போதே நீங்கள் உணர்ந்து கொள்ளலாம், கிட்னியில் ஏதோ பாதிப்பு உள்ளது என்று. அதிலும் குறிப்பாக கருமை நிற சிறுநீர் வந்தால் நிச்சயம் உங்கள் கிட்னிக்கு பாதிப்பு உள்ளதென்று உணரலாம். கருப்பு சிறுநீர் சிறிது நாட்கள் செல்ல செல்ல ரத்தம் கலந்த சிறுநீரக வெளியேறும். இதனை சிறுநீரக புற்றுநோய் என்றே மருத்துவர்கள் கூறுகின்றனர். இந்த அறிகுறி இருந்தால் நிச்சயம் மருத்துவரை ஆலோசியுங்கள்.

# இரத்த சோகை

# இரத்த சோகை

சிறுநீர் கருப்பாக வருவதற்கு ரத்த சோகைகூட ஒரு காரணமாக இருக்கலாம். ஹீமோலைடிக் ரத்த சோகை, ரத்த சிவப்பு அணுக்களை உடைய செய்து சிறுநீரை, சிவப்பு அல்லது கருமை நிறமாக வெளியேற்றுகிறது. இந்த வகை ரத்த சோகை உடலுக்கு அதிக சோர்வை ஏற்படுத்தி மூளையை மழுங்க செய்துவிடும். மேலும் இது கிட்னியின் செயல்பாட்டை சீரான முறையில் நடப்பதை தடுத்தும் விடுகிறது.

# சிறுநீரக பாதையில் நோய் தொற்று

# சிறுநீரக பாதையில் நோய் தொற்று

கருமை நிற சிறுநீர் வர கிட்னியில் ஏற்பட்டுள்ள நோய் தொற்றுகள் கூட ஒரு முக்கிய காரணமாக இருக்கலாம். இதில் உள்ள கிருமிகள் நோய் தொற்றை உருவாக்கி மங்கலான மஞ்சள் நிற சிறுநீரை அடர்ந்த கருப்பு நிறமாக மாற்றவல்லது. மேலும் சிறுநீரக பாதையில் தங்கியுள்ள பாக்டீரியா மற்றும் ஈஸ்டுகள் அதிக பாதிப்பை கிட்னிக்கு ஏற்படுத்தும்.இது ஆண்களை விட பெண்களுக்கே அதிகம் வரக்கூடிய நோய் தொற்று.

# கல்லீரல் பிரச்சனைகள்

# கல்லீரல் பிரச்சனைகள்

உங்களுக்கு மஞ்சள் காமாலை போன்ற நோய்கள் உள்ளது என இந்த நிற சிறுநீர் உணர்த்துகிறது. சிறுநீர் கருமையாக வந்து, தோல்கள் மஞ்சளாக உள்ளது என்றால் அது கல்லீரல் சார்ந்த பிரச்சனையாக இருக்கும். மேலும் கல்லீரலில் வீக்கம் ஏற்பட்டு, கருப்பு சிறுநீர் வெளியேறினால் அதற்கு ஹெப்பாடிட்டீஸ் என்ற நோயே காரணம். மது பழக்கம் அதிகம் உள்ளவர்கள் இந்தவித நோய் பாதிப்பிற்கு ஆளாகக் கூடும். எனவே இதனை அசாதாரணமாக விட்டுவிடாதீர்கள்.

# நீர்போக்கு (Dehydration)

# நீர்போக்கு (Dehydration)

உடலில் தேவைக்கு கம்மியாக நீர் இருந்தால் நீர்போக்கு ஏற்படும். இதனால்கூட சீறுநீர் சில சமயங்களில் அடர்ந்த கருமையாக வரக்கூடும். தலை சுற்றல், குழப்ப நிலை, மயக்கம் வருதல் போன்ற நிலை இதற்கு அறிகுறியாக இருக்கும். இந்த அறிகுறிகள் இருந்தால் கட்டாயம் மருத்துவரை அணுக வேண்டும். இல்லையென்றால் மேலும் பல பாதிப்பை ஏற்படுத்தும். இந்த வித நீர்போக்கு பெரியவர் முதல் சிறியவர் வரை எல்லோருக்கும் வரக்கூடும்.

# பித்தநீர்க்கட்டி

# பித்தநீர்க்கட்டி

உடலில் அதிகமாக கொழுப்புகள் சேர்ந்து அது பித்தநீர்க்கட்டிகளாக உருவெடுக்கும். இது வயிற்று வலி, காய்ச்சல், தோல் எரிச்சல், மஞ்சள் காமாலை, ஆகியவற்றை ஏற்படுத்தும். இந்த பித்தநீர்க்கட்டிகள் கருப்பு சிறுநீர் ஏற்படவும் காரணம் என ஆராச்சியாளர்கள் கூறுகின்றனர். இது கிட்னியின் செயல்பாட்டை பாதிக்க செய்து சிறுநீர் வெளியேற்றத்தை தடுக்க வல்லது. இதனால் உடலின் ஆரோக்கியம் சீர்கேடடையும்.

தீர்வு :-

தீர்வு :-

# உங்களுக்கு கருப்பு நிற சிறுநீர் வந்தால் நீங்கள் அண்மையில் உட்கொண்ட உணவுகளை பற்றி சிறிது யோசித்து பாருங்கள். ஏனென்றால் எடுத்து கொள்ளும் உணவின் வழியே இவை உருவாகிறது.

# தினமும் 3- 5 லிட்டர் தண்ணீரை குடியுங்கள். நீர் பற்றாக்குறையே உடலில் பலவித நோய்களை ஏற்படுத்தும்.

# கருமை நிறத்தில் சிறுநீர் வந்தால் கட்டாயம் மருத்துவரை அணுகி சிகிச்சை பெற வேண்டும். அப்படியே விட்டால் இது உங்கள் உயிருக்கே அழிவை தரும்.

# உணவு பொருட்களின் விகிதத்தை சரியாக எடுத்து கொள்ளுங்கள். இல்லையென்றால் கிட்னியில் கல் ஏற்படுவது, கல்லீரல் சார்ந்த வியாதிகள், உடல் பருமன் போன்றவற்றால் அவதிப்பட நேரிடும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

dark urine dangerous for your health

Dark urine..! Very dangerous for your health..!
Story first published: Tuesday, July 24, 2018, 12:22 [IST]
Desktop Bottom Promotion