For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உங்களால் மூட்டு வலியை தாங்க முடியவில்லையா? அதைத் தடுக்க இதோ சில வழிகள்!

இங்கு ஆர்த்ரிடிஸ் வலியில் இருந்து நிவாரணம் அளிக்கும் இயற்கை வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன.

|

2010 மற்றும் 2012 ஆம் ஆண்டுகளுக்கு இடையே அமெரிக்காவில் மட்டும் சுமார் 52.5 மில்லியன் இளம் தலைமுறையினருக்கு ஒரு வகையான ஆர்த்ரிடிஸ் பிரச்சனை இருப்பது சோதனையில் தெரிய வந்துள்ளதாம். பொதுவாக ஆர்த்ரிடிஸ் போன்ற மூட்டு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள், வயதான காலத்தில் தான் ஒருவரைத் தாக்கும். ஆனால், தற்போதைய காலத்தில் இளம் வயதிலேயே இந்த பிரச்சனையை பலர் சந்திக்கிறார்கள். இதற்கு பல காரணங்கள் உள்ளன. அதில் உண்ணும் உணவுகள், பழக்கவழக்கங்கள் போன்றவை குறிப்பிடத்தக்கவை.

Cheap & Effective All-Natural Remedies for Arthritis Pain

ஆர்த்ரிடிஸ் பிரச்சனை ஒருவருக்கு இருந்தால், அதனால் கடுமையான தாங்க முடியாத வலியை மூட்டு இணைப்புக்களில் சந்திப்பதோடு, நடப்பதில் மிகுந்த சிரமத்தை சந்திக்க நேரிடும். ஆர்த்ரிடிஸ் பிரச்சனைக்கு பலர் மருத்துவர்களை அணுகி எத்தனையோ மருந்து மாத்திரைகளை வாங்கி எடுப்பார்கள். இருப்பினும் மருந்து மாத்திரைகள் அனைவருக்குமே நல்ல தீர்வை அளிக்கும் என்று கூற முடியாது. ஆனால் ஆர்த்ரிடிஸ் மூட்டு வலிளை சரிசெய்வதற்கு பல்வேறு இயற்கை வழிகள் உள்ளன.

ஒருவர் இயற்கை வழிகளின் மூலம் ஆர்த்ரிடிஸ் பிரச்சனைக்கு தீர்வு காண நினைத்தால், அதனால் மூட்டு இணைப்புக்களில் உள்ள அழற்சி குறைந்து, நல்ல நிவாரணம் கிடைப்பதோடு, நாளடைவில் ஆர்த்ரிடிஸ் பிரச்சனையில் இருந்து விடுபடலாம். சரி, இப்போது ஆர்த்ரிடிஸ் வலியில் இருந்து நிவாரணம் அளிக்கும் இயற்கை வழிகள் என்னவென்று காண்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மீன்களை சாப்பிடவும்

மீன்களை சாப்பிடவும்

மீன்களில் உள்ள ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள், மூட்டு வலியில் இருந்து நல்ல நிவாரணம் அளிக்கும். எனவே ஆர்த்ரிடிஸ் பிரச்சனை இருந்தால், அவர்கள் வாரத்திற்கு 2-3 முறை உணவில் மீன்களை சேர்த்துக் கொள்வதன் மூலம், விரைவில் மூட்டு வலி பிரச்சனையில் இருந்து முற்றிலும் விடுபடலாம். ஒருவேளை மீன் சாப்பிட பிடிக்காதவர்கள், மீன் எண்ணெய் சப்ளிமென்ட்டுகளை எடுக்கலாம்.

ஆலிவ் ஆயிலைப் பயன்படுத்தவும்

ஆலிவ் ஆயிலைப் பயன்படுத்தவும்

ஆலிவ் ஆயிலில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் ஏராளமாக நிறைந்துள்ளது. எனவே மூட்டு வலி பிரச்சனை இருப்பவர்கள், தங்களது சமையலில் எக்ஸ்ட்ரா விர்ஜின் ஆலிவ் ஆயிலைப் பயன்படுத்தி வந்தால், எலும்பு மூட்டுக்களில் உள்ள அழற்சி நீங்கி, வலியும் குறையும். முக்கியமாக ஆலிவ் ஆயிலை சமையலில் பயன்படுத்துவதோடு மட்டுமின்றி, ஆலிவ் ஆயில் கொண்டு வலியுள்ள மூட்டுப் பகுதியில் தடவி மசாஜ் கூட செய்யலாம்.

சிட்ரஸ் பழங்களை அதிகம் சாப்பிடவும்

சிட்ரஸ் பழங்களை அதிகம் சாப்பிடவும்

ஆய்வுகளில் சிட்ரஸ் பழங்களில் உள்ள வைட்டமின் சி, ஆஸ்டியோஆர்த்ரிடிஸை எதிர்த்துப் போராடி பாதுகாப்பு அளிப்பதாக கண்டறியப்பட்டது. இந்த வைட்டமின் சி என்னும் ஆன்டி-ஆக்ஸிடன்ட், மூட்டுக்களில் உள்ள குருத்தெலும்புகளை அழிக்கும் ப்ரீ-ராடிக்கல்களை எதிர்த்துப் போராடும். மேலும் சிட்ரஸ் பழங்களில் வைட்டமின் சி மட்டுமின்றி, வைட்டமின் ஏ, வைட்டமின் பி6, வைட்டமின் ஈ, கால்சியம், காப்பர், இரும்புச்சத்து, மக்னீசியம், பொட்டாசியம், பாஸ்பரஸ் மற்றும் ஜிங்க் போன்ற சத்துக்களும் உள்ளது. ஆகவே ஆர்த்ரிடிஸ் பிரச்சனை இருந்தால், சிட்ரஸ் பழங்களான எலுமிச்சை, ஆரஞ்சு, சாத்துக்குடி போன்றவற்றை சாப்பிடுங்கள்.

இஞ்சி டீ குடிக்கவும்

இஞ்சி டீ குடிக்கவும்

பல்வேறு ஆய்வுகளில் இஞ்சியில் இருக்கும் அழற்சி எதிர்ப்பு பண்புகள், ஆர்த்ரிடிஸ் பிரச்சனையில் இருந்து விடுவிப்பதாக நிரூபிக்கப்பட்டுள்ளது. ஆகவே ஆர்த்ரிடிஸ் பிரச்சனை இருந்தால், இஞ்சியைக் கொண்டு டீ தயாரத்தக் குடியுங்கள். அதுவும் தினமும் 4 முறை குடித்து வந்தால், நல்ல நிவாரணம் கிடைக்கும்.

நட்ஸ் மற்றும் பீன்ஸ் சாப்பிடவும்

நட்ஸ் மற்றும் பீன்ஸ் சாப்பிடவும்

நட்ஸ் மற்றும் பீன்ஸில் மக்னீசியம் அதிகம் உள்ளது. இது மூட்டுக்களில் ஏற்படும் இறுக்கம் மற்றும் வலியில் இருந்து நிவாரணம் அளிக்கும். மேலும் நட்ஸ் மற்றும் பீன்ஸ் எலும்புகளை வலிமையோடு பராமரிக்கும். எனவே ஆர்த்ரிடிஸ் பிரச்சனை இருந்தால், ஸ்நாக்ஸ் நேரங்களில் நட்ஸ் மற்றும் பீன்ஸ் போன்றவற்றை சாப்பிடுங்கள். மேலும் மக்னீசியம் சப்ளிமெண்ட்டுக்களையும் மருத்துவரின் அறிவுரையுடன் எடுங்கள்.

மஞ்சள் டீ குடிக்கவும்

மஞ்சள் டீ குடிக்கவும்

மஞ்சளில் குர்குமின் என்னும் கெமிக்கல் உள்ளது. இது மூட்டு இணைப்புக்களில் உள்ள அழற்சியைக் குறைத்து சரிசெய்யும். அதற்கு அன்றாட உணவில் மஞ்சள் தூளை சேர்ப்பதோடு, மஞ்சள் கொண்டு டீ தயாரித்து தினமும் குடித்து வாருங்கள்.

தூங்கும் போது கை/கால் உறைகளை அணிந்து கொள்ளவும்

தூங்கும் போது கை/கால் உறைகளை அணிந்து கொள்ளவும்

இரவு நேரத்தில் ஆரித்ரிடிஸ் பிரச்சனையால் கை அல்லது கால் மூட்டுக்களில் வீக்கம் ஏற்பட்டு, கடுமையான வலியை சந்தித்தால், முழங்கை அல்லது முழங்கால் உறைகளை அணிந்து கொள்ளுங்கள். இப்படி மூட்டு இணைப்புக்களில் இறுக்கமாக உறைகளை அணிந்து கொள்ளும் போது, அது ஒருவித நிவாரணத்தை அளிக்கும்.

அதிகாலை குளியலை எடுக்கவும்

அதிகாலை குளியலை எடுக்கவும்

ஆர்த்ரிடிஸ் பிரச்சனை இருந்தால், அதிலிருந்து விடுபட காலையில் எழுந்ததும் வெதுவெதுப்பான நீரால் குளிக்கவும். இதனால் அந்த வெப்பத்தால், மூட்டுக்களில் உள்ள வீக்கம் குறைந்து, இறுக்கத்தில் இருந்தும் விடுபடலாம். வேண்டுமானால் மூட்டுக்களில் வீக்கத்துடன் கடுமையான வலியை சந்திக்கும் போது, சுடுநீர் ஒத்தடம் கொடுக்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Cheap & Effective All-Natural Remedies for Arthritis Pain

Here are some cheap and effective all natural remedies for arthritis pain. Read on to know more...
Desktop Bottom Promotion