For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ருசிக்காக சாப்பிடற ஆளா நீங்க?... அப்போ நீங்க ஏன் இத படிக்கக்கூடாது?...

இந்த உலகத்துல வாழ்வதே சாப்பிடத்தான். சாப்பிட்டால் தான் உயர் வாழ முடியும் மற்ற விஷயங்கள் எல்லாமே அதற்கு பிறகு தான்.

By Suveki
|

இந்த உலகத்துல வாழ்வதே சாப்பிடத்தான். சாப்பிட்டால் தான் உயர் வாழ முடியும் மற்ற விஷயங்கள் எல்லாமே அதற்கு பிறகு தான். பசி வந்தால் பத்தும் பறந்து போகும். எல்லாம் சரி. ஆனால் எதை எப்போது உண்ண வேண்டும்.

Changing your cravings for bad food

உடம்பு அதை ஏற்று கொள்கிறதா? பசிக்கு அடிமையானால் பரவாயில்லை ஆனால் ருசிக்கு அடிமையாகி விட்டால் அதற்கு பிறகு ஆபத்து நமக்குத்தான். உணவு தான் மருந்து உணவு தான் விஷமும். அளவை மீறும் போது அமிர்தமும் விஷம் என்பதை நமக்கு யாரும் போதிக்க வேண்டியது இல்லை.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ருசிக்கு அடிமையா?

ருசிக்கு அடிமையா?

நம் நாக்கு பல ருசிக்கு ஏங்கித்தான் தவிக்கிறது. சிலர் இனிப்பு பிரியர்கள். சில காரசாரமாக சாப்பிட்டு அதற்கு அடிமையானவர்கள். சிலருக்கோ சாப்பிட்டு முடித்து கூல்ட்ரிங்ஸ் குடிக்கவில்லை என்றால் சாப்பிட்ட திருப்தியே இருக்காது. இப்படி நாம் ஏதாவது ஒரு வகை சாப்பாடு அல்லது ருசிக்கு அடிமையாத்தான் இருக்கிறோம். அதை முற்றிடும் தடுக்க முடியாது தான். ஆனால் ஓரளவு கட்டுப்படுத்த நாம் பழகி கொள்ள வேண்டும்.

உடம்புக்கு ஏற்ற உணவு

உடம்புக்கு ஏற்ற உணவு

உதாரணமாக இனிப்பு பிரியர்களாக இருந்தால் கேடு விளைவிக்கும் கேக் யை விட சுவையான இனிக்கும் பழ வகைகளை சாப்பிட்டு பழகலாம். அதன் மூலம் தனக்கு பிடித்த ருசியை ருசிப்பதோடு ஆபத்தான ருசியில் இருந்து நம்மை காத்து கொள்ளலாம். அதேப் போல் தான் ஆயிலில் வருத்த சிப்ஸை சாப்பிடுவதை விட அந்த நேரத்தில் நட்ஸ் வகைகளை மென்று அந்த ருசி ஆசையிலிருந்து விடுபட முயற்சிக்கலாம்.

கேக்

கேக்

அதற்காக கேக் ஆபத்தானது என்று சொல்ல வரவில்லை. நம் உடம்புக்கு வயதுக்கு எந்த உணவு ஏற்றது, தவிர்க்க வேண்டியது என்பதை நாம் தான் தீர்மானித்து கொள்ள வேண்டும். அதற்கு மருத்தவரிடம் ஆலோசனை பெறவும் யோசிக்க வேண்டாம். அதாவது ருசிக்கு அடிமையாவதில் இருந்து தவிர்ப்பதற்கு இரண்டே வழிகள் தான். முதலில் அந்த ருசி நமக்கு நன்மை பயக்குமா என்பதை கருத்தில் கொள்ள வேண்டும். இரண்டாவது அப்படி அது ஒவ்வாத உணவாக இருந்தால் அதை ஒதுக்கி வைத்து விட்ட அதற்கு மாற்றாக நம் உடம்புக்கு ஏற்ற உணவை ஏற்றுக் கொள்ள பழகி கொள்தல் வேண்டும்.

உணவு கட்டுப்பாட்டு பழக்கங்கள்

உணவு கட்டுப்பாட்டு பழக்கங்கள்

எடுத்த உடனே எதையும் விடாப்பிடியாக நிறுத்த வேண்டாம். மெதுவாக முயற்சிகளை எடுங்கள். சர்க்கரை நோய் முதலில் நமக்கு இருப்பது தெரியவே பல நாட்கள் ஆகும். லேசாக அறிகுறி தெரியும் போது அலட்சியம் காட்டுவோம். அதற்கு பிறகு நோய் தீவிரமாகி டாக்டர் சொல்லும் போது தான் பயந்து இனிப்பை தவிர்க்க முயற்சிப்போம். அப்போது கூட ஆசைப்படும் இனிப்புகளை சாப்பிட மனசு அலைபாயும். ஒரு தடவை தானே என்ன ஆகிவிடப்போகிறது என்று மனது அங்கலாய்க்கும். அது இயற்கை தான். தவறில்லை.

ஆனால் அதுவே இனிப்பான சாக்லேட், கேட், ஐஸ் கிரீம்களுக்கு பதிலாக சுவையான இனிப்பான மருத்துவர்கள் பரிந்துரைத்த பழங்களை சாப்பிட்டு பழகுங்கள். நாளடைவில் அதுவே உங்களுக்கு பழக்கமாகி ஒவ்வாத உணவுகளை உங்கள் உடம்பே ஒதுக்க ஆரம்பித்து விடும்.

கவனத்தோடு கடைபிடியுங்கள்

கவனத்தோடு கடைபிடியுங்கள்

உங்களுக்கு பிடித்தமான சுவையான உணவுகள் உங்கள் உடம்புக்கு ஏற்றது அல்ல என்பது தெரிந்ததும் அதற்கு மாற்றான உங்களுக்கு ஏற்ற உணவுகளை நீங்களே பட்டியல் போட்டு அதை உங்கள் டைரியில் குறித்து வைத்துக் கொள்ளுங்கள். உங்களுக்கு பிடித்த ருசியான உணவுகளை சாப்பிட ஆசைப்படும் போதெல்லாம் அந்த குறிப்பை எடுத்து படித்து பாருங்கள் மெதுவாக உங்கள் மனகண்ணில் இருந்து ருசியான ஒவ்வாத உணவுகள் மறைந்து மாற்று உணவுகள் உங்களின் விருப்ப உணவுகளாக மாறுவதை நீங்களே கண்டு கொள்ளலாம்.

மாற்று உணவுகள்

மாற்று உணவுகள்

இனிப்பான சாக்லேட்களுக்கு பதிலாக ப்யூர் டார்க் சாக்லேட்களுக்கு மாறலாம். அது ஹெல்தியானது தான். அதே போல் உருளை சிப்ஸுக்க பதிலாக காலிஃபிளவர் அல்லது பாவைக்காய் சிப்ஸுக்கு மாறுங்கள். உங்கள் உடம்புக்கு ஒவ்வாத உருளை சிப்ஸ் மெதுவாக உங்கள் ருசி விருப்பத்தில் இருந்து விடை பெற தொடங்கிவிடும்.

படிப்படியாக பழக்கப்படுத்துங்கள்

படிப்படியாக பழக்கப்படுத்துங்கள்

சொல்வது எளிது தான் செயல்படுவது தான் அரிது. எல்லாம் ஒரே நாளில் நம் கட்டுப்பாட்டுக்குள் வந்து விடாது. எந்த ஒரு செயலையும் தொடர்ந்து அதை ஊக்கத்தோடும், ஆர்வத்தோடும் செய்யும் போது தான் நம் கட்டுப்பாட்டுக்குள் வந்து நம்மை ஒழுங்கு படுத்தும். இதில் பொறுமையும் விடாமுயற்சியும் தான் மிக முக்கியம்.

அதே போல் ஒரே நாளில் எல்லா உணவுகளுக்கும் மாற்று தேடி அலைந்து அதை செயல்படுத்த முனைந்து தோற்கவேண்டியது இல்லை. மெதுவாக ஒவ்வொரு ஒவ்வாத உணவுக்கு பதிலாக அதற்கான ஆரோக்கியமான மாற்று உணவை பழக்கப்படுத்தி கொண்டு அது உங்கள் கட்டுப்பாட்டுக்குள் வந்து பிறகு அடுத்த உணவுக்கான மாற்றை தேடி அதை பழக்கப்படுத்த முயற்சி செய்யுங்கள்.

 மனப்பயிற்சியும் தேவை

மனப்பயிற்சியும் தேவை

முதலில் உங்களை சுற்றி இருப்பவர்களை உங்களை கேலி கிண்டல் செய்யலாம். அதை உதாசீனப்படுத்துங்கள். உங்கள் உடம்புக்கு எது தேவை, தேவையில்லை என்பதை முடிவு செய்யும் எஜமானன் நீங்கள் தான் மற்றவர்கள் இல்லை. அதனால் உணவு விஷயத்தில் ஏக்கம் ஆதங்கமாக மாறாமல் இருக்க நடை பயிற்சிக்கு செல்லுங்கள், ஆழமாக முச்சை இழுத்து விட்டு அமைதியை அனுபவிங்கள், நல்ல இசையை கேளுங்கள். இதெல்லாம் உங்கள் உணவு பழக்கத்திற்கு கூட உறுதுணையாக இருக்கும்.

தண்ணீர்

தண்ணீர்

தண்ணீரை அதிகமாக பருகுங்கள். அதுவே உங்கள் தேவையற்ற நேரத்தில் தோன்றும் பசியை கட்டுப்படுத்தும். முடிந்தால் கையிலேயே வாட்டர் பாட்டிலை வைத்துக் கொண்டு தேவைப்படும் போது நீரை அருந்தி உங்களை நொறுக்கு தீனி பசியை கட்டுப்படுத்தி கொள்ளுங்கள். அதையும் தாண்டி பசி எடுத்தால் உங்களுக்கு பிடித்த நண்பரை போனில் அழைத்து பேசி உங்கள் கவனத்தை மாற்றுங்கள். புரோட்டீன் வகை உணவுகளான அசைவ உணவுகள், முட்டை, நட்ஸ் போன்றவற்றை அதிகம் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். குறைந்த கொழுப்பு கொண்ட நட்ஸ், சீஸ் ஸ்டிக் ஆகியவற்றை சாப்பிட்டு பழகுங்கள். அது உங்களின் ருசியான உடம்புக்கு ஒவ்வாத எண்ணெய் வருவல்களுக்கு சிறந்த மாற்றாக அணையும்.

வாயை கட்டு நோயை ஓட்டு

வாயை கட்டு நோயை ஓட்டு

எதையாவது சாப்பிட்டே ஆகவேண்டும் என்று தோன்றும் போது அதிகபட்சம் கிச்சன், உணவுப் பொருட்கள் விற்கும் கடைகளை, ஹோட்டல்களை விட்டு கொஞ்சம் விலகி இருக்க முயற்சி செய்வதே நல்லது. சாப்பிடும் ஆசை கிளம்பிவிட்டால் அது உங்கள் வயிற்றை நிரப்பி விட்டு தான் மறுவேலை பார்க்கும். அதற்கு பிறகு நீங்கள் என்ன ஆலோசனை சொன்னாலும் நாக்கு ருசி அடங்காது. அதனால் அப்படி ஒவ்வாத ருசி உணவுகளை சாப்பிட்ட பிறகு வருந்துவதை விட முன்பு உஷாராக இருப்பதே உங்களுக்கு நல்லது.

வீட்டு உணவுகள்

வீட்டு உணவுகள்

வெளியில் போவதாக இருந்தால் வீட்டில் சத்தான உணவுகளை சாப்பிட்டு விட்டு கிளம்புவதே சிறந்தது. வெளியே சுவையான உணவுகள் நம் பசியை அடக்குகிறதோ இல்லையோ உடம்பின் சீரை கெடுத்து விடும். அவசியம் இன்றி வெளி உணவுகளை சாப்பிடாமல் இருப்பதே நல்லது. அதிக இனிப்பு அப்போதைக்கு உங்களை ருசியில் மிதக்கவைக்கும் ஆனால் அது மெதுவாக பாதிப்பை ஏற்படுத்தும். புரோட்டீன் சத்துள்ள உணவுகளே நெடுநாள் ஆரோக்கியத்துக்கான தீர்வாக அமையும்.

உடல்நலம்

உடல்நலம்

இவையெல்லாம் சர்க்கரை, இருதய நோய் உள்ளவர்கள், உயர் இரத்த அழுத்தம், கொலஸ்டிரால், சிலவகை புற்று நோய்க்கு சிகிச்சை எடுப்பவர்களுக்கான கட்டுப்பாடுகள் என்று அலட்சியமாக இருந்து விட வேண்டாம். இப்போது இந்த வகை நோய்கள் எல்லா வயதினரையும் பாதிப்புக்கு உள்ளாக்குவதை நான் பார்த்துக் கொண்டு தான் வருகிறோம். அதனால் வாயை கட்டு, நோயை ஓட்டு என்கிற அறிவுரையும், கட்டுப்பாடுகளும் அனைவருக்கும் பொதுவானது தான்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Changing your cravings for bad food

We’ve all had a food craving at one time or another. A food craving is an extreme need for a certain food of type of food.
Story first published: Thursday, May 10, 2018, 10:59 [IST]
Desktop Bottom Promotion