For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கண்ணிமை துடித்தால் பணம் வரும் என்பது உண்மையா?

கண்கள் துடிப்பது வெகு இயல்பான ஒரு விஷயமாகிவிட்டது, அடிக்கடி துடித்தாலும் அதற்கான காரணங்கள் என்ன என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

|

கண்ணடிச்சு காமி என்றால் அந்நியன் அம்பி ஸ்டைலில் கண்ணடித்து சிரிக்க வைத்து கடுப்பேற்றுவது எல்லாம் பழைய ஸ்டைல், குழந்தைகள் முதற்கொண்டு இன்றைக்கு மிகவும் அசால்ட்டாக கண்ணடிக்கிறார்கள். எங்கே யாரைப் பார்த்து, எதில் கற்றுக் கொண்டிருப்பார்கள் எல்லாம் தனி ட்ராக்.

சிலருக்கு காரணமேயில்லாமல் கண்கள் தானாக துடிக்கும். அதை அனுபவித்திருக்கிறீர்களா? சிலருக்கு அது உணர முடியும், சிலரால் அதனை உணர முடியாது, கண்களை வேகமாக சிமிட்டுவது போலவோ அல்லது கண்ணிமைகள் படபடவென்று அடித்துக் கொள்வது போலவோ தோன்றிடும். சிலர் கண்கள் இப்படி துடிப்பது அதிர்ஷ்டத்தை கொடுக்கும், பணம் வரப்போகிறது என்றெல்லாம் சொல்வார்கள்.

கண்கள் துடிக்குமா? அப்படி துடிப்பதற்கு என்ன காரணம்.... ஏதேனும் பிரச்சனைகளின் அறிகுறியா? தெரிந்து கொள்ள தொடர்ந்து படித்திடுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மயோகிமியா :

மயோகிமியா :

கண்கள் அடிக்கடி துடிப்பதை மயோகிமியா என்று அழைப்பார்கள். கண்களின் கீழ் பகுதியோ அல்லது கண்களின் இமைப்பகுதியோ துடிக்கும். எதற்காக என்று குறிப்பிட்ட காரணத்தை கண்டுபிடிகக் முடியாமல் தவித்துக் கொண்டிருப்போம்.

இது எப்போதாவது நீடிக்கும், அல்லது சிலருக்கு தோன்றி மறைந்து விடும். இது வாரக்கணக்கில் அல்லது மாதக்கணிக்கில் நீடிக்கக்கூடாது. மற்றபடி எப்போதாவது இப்படியான பிரச்ச்னை எழுந்தால் கவலை கொள்ளத்தேவையில்லை.

பெரும்பாலும் உங்களுடைய வாழ்க்கை முறை மாற்றத்தினாலேயே இந்தப் பிரச்சனை எழுந்திருக்கக்கூடும்.

ஸ்ட்ரஸ் :

ஸ்ட்ரஸ் :

கண் துடிப்பதற்கு முக்கிய காரணங்களில் ஒன்றாக இருப்பது ஸ்ட்ரஸ் தான். மன அழுத்தத்தால் பாதிக்கப்படும் போது ஏராளமான உள்ளுறுப்புகளில் மாற்றங்கள் உண்டாகிறது.

அவற்றில் ஒன்றாக, அல்லது அதன் அறிகுறியாக கண்கள் துடிக்கிறது.

டயர்ட் :

டயர்ட் :

இன்றைக்கு எல்லாமே கணினி யுகத்திற்கு மாறிவிட்டோம் என்பதற்காக பொழுதன்னைக்கும் கணினி முன்பாக உட்கார்ந்திருப்பதும் இதற்கு ஓர் காரணமாக இருக்கிறது. இன்றைக்கு அது தவிர்க்க முடியாத ஒன்றாக இருந்தாலும், தொடர்ந்து கணினியைப் பார்க்காமல் ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை இடைவேளி விடுங்கள். தொடர்ந்து அதிக வெளிச்சத்துடன் இருக்கக்கூடிய கணினியைப் பார்க்காமல் வேறு சில இடங்களைப் பார்க்கலாம்.

தூக்கம் :

தூக்கம் :

போதுமான அளவு நீங்கள் தூங்கவில்லை என்றால் கூட இப்படியான பிரச்சனைகள் எழலாம். சிலர் இரவு நீண்ட நேரம் கேட்ஜெட்ஸ் பார்த்துக் கொண்டு இருப்பார்கள். இதனால் இரவு தூக்கும் வருவது தாமதமாகும். வேலைக்காரணமாக காலையில் சீக்கிரம் எழுவது இதனால் உங்களுக்குத் தேவையான தூக்கம் கிடைக்காமல் போய்விடும். இப்படி தொடர்ந்து உங்களுக்கு போதுமான அளவு தூக்கம் கிடைக்கவில்லை என்றால், அதன் வெளிப்பாடாக கண்கள் இப்படித் துடிக்கும்.

ஸ்ட்ரைன் :

ஸ்ட்ரைன் :

கண்களுக்கு அதிக வேலைத் தருவது. கேட்க சிரிப்பாக இருந்தாலும், இதுவும் ஓர் காரணமாக இருக்கலாம். சிலர் கண்ணாடி அணிய வேண்டியிருக்கும், ஆனால் அவர்கள் அதனை அணியாமல் தவிர்ப்பார்கள், குறைந்த வெளிச்சத்தில் டிவி பார்ப்பது, அதிக நேரம் ஒரே பொசிசனில் உட்கார்ந்து படிப்பது ஆகியவை கண்களுக்கு அதிக ஸ்டரஸ் கொடுக்கும்.

20:20:20

20:20:20

கம்யூட்டரில் தொடர்ந்து பணியாற்றுபவர்கள் இந்த முறையை கடைபிடிக்க வேண்டும். கணினி என்றில்லை ஸ்மார்ட் ஃபோன்,டிவி என கண்களுக்கு தொடர்ந்து அதிக வேலை கொடுப்பவர்கள் இதனைப் பின்பற்றலாம்.

ஒவ்வொரு 20 நிமிடங்களுக்கு ஒரு முறை என உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருக்கும் சிஸ்டம் திரையிலிருந்து விலகி 20 அடி தூரத்தில் இருப்பவற்றை பார்க்க வேண்டும். இருபது நொடிகள் பார்க்க வேண்டும்.

 கேஃபைன் :

கேஃபைன் :

ஒரு நாளைக்கு இரண்டு கப்புக்கும் மேல் காபி டீ குடிப்பவர்களாக இருந்தால் அவர்களுக்கும் கண்கள் துடிக்கும். உடலில் அதிகப்பட்சமாக சேருகிற கேஃபைன் கண்களை துடிக்கச் செய்திடும். கேஃபைன் எடுத்துக் கொள்வதை குறைத்துக் கொண்டால் கண்கள் துடிப்பதும் குறைந்திடும்.

கண்களுக்கு வறட்சி :

கண்களுக்கு வறட்சி :

பலரும் கண்கள் வறண்டு எரிச்சலடைவதை சந்தித்திருப்பார்கள். குறிப்பாக இந்தப் பிரச்சனை ஐம்பது வயது மேலானவர்களுக்கு வரக்கூடும். கேட்ஜெட்ஸ் அதிகமாக பயன்படுத்துபவர்களுக்கு இந்த கண்களில் வறட்சி ஏற்படுவது சகஜம். இதன் அறிகுறிகளாக கண்கள் வறண்டு காணப்படும், அதீத எரிச்சல் உண்டாகும். கண்களை அடிக்கடி கசக்க வேண்டும் போன்ற உணர்வு மேலோங்கும்.

மருத்துவரிடம் சென்றால் அவர் இந்த வறட்சியைப் போக்க ஐ டிராப்ஸ் கொடுப்பார்.

நியூட்ரிசியன் :

நியூட்ரிசியன் :

உங்கள் உடலில் மக்னீசியம் குறைந்தால் அவற்றின் வெளிப்பாடாக கூட கண்களுக்கு இந்தப் பாதிப்பு உண்டாகலாம். அதோடு எல்லாச் சத்துக்களும் சரிவிகித அளவில் தேவை.

அலர்ஜி :

அலர்ஜி :

சிலருக்கு கண்களில் ஏதேனும் அலர்ஜி ஏற்பட்டு கண்களில் தண்ணீர் ஒழுகுவது, எரிச்சல், கண்கள் வீங்குவது ஆகியவை உண்டாகும். அதனால் கண்களை அழுத்த கசக்கும் போது கண்களுக்கு அதிக ஸ்ட்ரைன் உண்டாகி கண்ணிமைகள் துடிக்கக்கூடும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Causes For Eye and Eyelid twitches

Causes For Eye and Eyelid twitches
Story first published: Monday, January 15, 2018, 15:41 [IST]
Desktop Bottom Promotion