For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மலப்புழையில் எந்த காரணங்களுக்கு எல்லாம் அரிப்பு ஏற்படும் தெரியுமா?

இங்கு மலப்புழையில் ஏற்படும் அரிப்பைத் தடுக்கும் வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன.

|

நாம் சந்திக்கும் சில ஆரோக்கிய பிரச்சனைகளை வெளியே மற்றவர்களிடம் சொல்லத் தயங்குவோம். சிலர் மருத்துவரிடம் சொல்லக் கூட தயங்குவார்கள். அப்படி வெளியே சொல்லத் தயக்கம் கொள்ளும் ஓர் பிரச்சனை மலப்புழை அரிப்பு. இந்த மாதிரியான பிரச்சனையால் 30-50 வயதிற்கு மேலானவர்கள் அதிகம் சந்திப்பார்கள். குறிப்பாக இந்த பிரச்சனையால் பெண்களை விட ஆண்கள் தான் அதிகம் அவஸ்தைப்படுவார்கள்.

சரி ஒருவருக்கு எந்த காரணங்களுக்கு எல்லாம் மலப்புழையில் அரிப்பு ஏற்படும் எனத் தெரியுமா? மலப்புழையில் அரிப்பு ஏற்படுவதற்கு முக்கிய காரணம் மல மண் தான். வயதான காலத்தில், குறிப்பாக வயிற்றுப் போக்கினால் அவஸ்தைப்படும் போது, மலப்புழையில் அரிப்பு ஏற்படும். இன்னும் சில சமயங்களில் மலப்புழை சுற்றியுள்ள தோல் கடினமாக இருந்தால் அல்லது மூல பிரச்சனை இருந்தால், மலப்புழையில் அரிப்பை சந்திக்கக்கூடும்.

Causes And Remedies For Anal Itching

மேலும் மோசமான சுகாதாரமும் மலப்புழையில் அரிப்பை உண்டாக்கும். அதே சமயம் அளவுக்கு அதிகமான சுகாதாரத்தினாலும், அதாவது டாய்லட் பேப்பர் கொண்டு அடிக்கடி மலப்புழையை துடைத்தால், மலப்புழையில் அரிப்பு ஏற்படும். சில சமயங்களில் நீண்ட நாட்கள் மலச்சிக்கல் பிரச்சனையை சந்தித்தாலும், மலப்புழையில் அரிப்பு ஏற்படும்.

ஒருவரது மலப்புழையில் கட்டுப்படுத்த முடியாத அளவில் அரிப்பு ஏற்பட்டால், அது மிகுந்த அசௌகரியத்தை உண்டாக்கும். இருப்பினும் இந்த வகை அரிப்பை ஒருசில எளிய இயற்கை வழிகளின் மூலமும், வாழ்க்கை முறை மாற்றங்களினாலும் சரிசெய்யலாம். என்ன செய்தாலும் அரிப்பு போகாவிட்டால், உடனே மருத்துவரை அணுகுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மலப்புழை அரிப்பை மோசமாக்கும் காரணிகள்

மலப்புழை அரிப்பை மோசமாக்கும் காரணிகள்

மலப்புழையில் ஏற்படும் அரிப்பை ஒருசில காரணிகள் மோசமாக்கும். அதில் இறுக்கமான உடையை அணிவது, வியர்ப்பது, வெப்பமான காலநிலை, நைலான் ஜட்டி அணிவது போன்றவை குறிப்பிடத்தக்கவை. அதேப் போல் ரன்னிங், நீண்ட நேரம் பிளாஸ்டிக் நாற்காலியில் அமர்ந்திருப்பது அல்லது நீண்ட நேரம் பைக்கில் பயணம் செய்வது போன்றவைகளும், மலப்புழையில் அரிப்பை அதிகமாக்கும்.

சரி, இப்போது மலப்புழையில் ஏற்படும் அரிப்பை ஒருசில எளிய இயற்கை வழிகளின் மூலம் சரிசெய்யலாம். அந்த வழிகளைக் காண்போம்.

ஆப்பிள் சீடர் வினிகர்

ஆப்பிள் சீடர் வினிகர்

ஆப்பிள் சீடர் வினிகரில் பூஞ்சை மற்றும் பாக்டீரியாக்களை எதிர்த்துப் போராடும் பண்புகள் ஏராளமாக நிறைந்துள்ளது. இத்தகைய ஆப்பிள் சீடர் வினிகரைக் கொண்டு மலப்புழையில் ஏற்படும் அரிப்பைத் தடுக்கலாம்.

* 2 டேபிள் ஸ்பூன் ஆப்பிள் சீடர் வினிகரை 1 டம்ளர் நீரில் கலந்து, தினமும் 2 முறை குடிக்க வேண்டும்.

* மலப்புழை அரிப்பைக் குறைக்க, 1 கப் ஆப்பிள் சீடர் வினிகரை குளிக்கும் சுடுநீரில் கலந்து, 15-20 நிமிடம் குளிக்கவும். இப்படி தினமும் தவறாமல் மேற்கொள்ள மலப்புழை அரிப்பில் இருந்து விடுபடலாம்.

பூண்டு

பூண்டு

பூண்டு மலப்புழை அரிப்பை சரிசெய்ய பெரிதும் உதவியாக இருக்கும். இதில் உள்ள ஆன்டி-பாக்டீரியல், ஆன்டி-செப்டிக் மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள், குடலில் உள்ள புழுக்களை அழித்துவிடும். இதனால் எப்பேற்பட்ட தொற்றுக்களில் இருந்தும் இது விடுவிக்கும்.

* தினமும் காலையில் வெறும் வயிற்றில் 2-3 பல் பூண்டு சாப்பிடுங்கள். இப்படி ஒரு வாரம் சாப்பிட வேண்டும்.

* இல்லாவிட்டால், 1/2 கப் பாலில் 2 பல் பூண்டை தட்டிப் போட்டு கொதிக்க வைத்து, காலையில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். இதனால் மலப்புழையில் ஏற்படும் அரிப்பு நீங்கும்.

தயிர்

தயிர்

மலப்புழை அரிப்பில் இருந்து தயிர் நல்ல நிவாரணத்தை வழங்கும். தயிரில் உள்ள புரோபயோடிக் என்னும் நல்ல பாக்டீரியா, மலப்புழையில் உண்டாக்கும் அரிப்பைத் தடுத்து, கட்டுப்படுத்தும்.

* தயிரை நேரடியாக அரிப்புள்ள பகுதியில் தடவ வேண்டும். பின் 20-30 நிமிடம் அல்லது ஒரு இரவு முழுவதும் ஊற வைக்கலாம். அதன் பின் வெதுவெதுப்பான நீரால் மலப்புழையைக் கழுவி, உலர்த்துங்கள்.

* மேலும் தினமும் 2-3 கப் தயிரை உட்கொள்ளுங்கள்.

ஓட்ஸ்

ஓட்ஸ்

ஓட்ஸில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் மற்றும் எரிச்சலைத் தடுக்கும் பண்புகள் உள்ளன. இதுவும் மலப்புழை அரிப்பில் இருந்து விடுவிக்கும்.

* குளியல் தொட்டியில் 1-2 கப் ஓட்ஸ் அல்லது ஓட்ஸ் பொடியைப் போட்டு, வெதுவெதுப்பான நீரை நிரப்பிக் கொள்ளுங்கள்.

* பின் அந்நீரில் உட்கார்ந்து 15-20 நிமிடம் குளியுங்கள்.

* இப்படி தினமும் 1-2 முறை குளித்து வந்தால், மலப்புழை அரிப்பு குறையும்.

தேங்காய் எண்ணெய்

தேங்காய் எண்ணெய்

தேங்காய் எண்ணெயில் ஆன்டி-பாக்டீரியல், ஆன்டி-மைக்ரோபியல் மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் உள்ளன. இது மலப்புழையில் அரிப்பை ஏற்படுத்தும் தொற்றுக்களை அழிப்பதோடு, குடலில் உள்ள புழுக்களையும் அழிக்கும்.

* தினமும் 2-3 டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெயை உட்கொள்ளுங்கள். அதை எப்படி வேண்டுமானாலும் உட்கொள்ளலாம். முடிந்த வரை தேங்காய் எண்ணெய் கொண்டு சமையல் செய்வது நல்லது.

* தேங்காய் எண்ணெயை அரிப்புள்ள மலப்புழையில் நேரடியாக தடவுவதன் மூலமும், அரிப்பைக் குறைக்கலாம்.

எப்சம் உப்பு

எப்சம் உப்பு

* 1-2 கப் எப்சம் உப்பை குளிக்கும் வெதுவெதுப்பான நீரில் கலந்து கொள்ள வேண்டும்.

* பின் அந்நீரில் 15-20 நிமிடம் குளிக்க வேண்டும்.

* குறிப்பாக குளித்து முடித்த பின், மலப்புழை பகுதியை சுத்தமாக உலர்த்த வேண்டும்.

* இப்படி வாரத்திற்கு 2-3 முறை எப்சம் உப்பு குளியலை மேற்கொண்டால், நல்ல பலன் கிடைக்கும்.

* முக்கியமாக எப்சம் உப்பு குளியலை சர்க்கரை நோயாளிகள் அல்லது சிறுநீரக பிரச்சனை உள்ளவர்கள் மேற்கொள்ளக்கூடாது.

 கற்றாழை

கற்றாழை

கற்றாழை பல பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வளிக்கும். அதில் ஒன்று மலப்புழை அரிப்பு. இதில் உள்ள மருத்துவ பண்புகள் அழற்சி, காயங்கள் மற்றும் அரிப்பை குறைக்கும். மூல நோய் இருப்பவர்கள் சந்திக்கும் எரிச்சலைக் கற்றாழைக் குறைக்கும் என நிரூபிக்கப்பட்டுள்ளது.

* கற்றாழை இலையில் இருந்து ஜெல்லை எடுத்துக் கொள்ள வேண்டும்.

* பின் அந்த ஜெல்லை அரிப்புள்ள மலப்புழையில் நேரடியாக தடவி 5 நிமிடம் ஊற வையுங்கள்.

* இந்த முறையை ஒரு மணிநேரத்திற்கு ஒருமுறை என அரிப்பு போகும் வரை செய்யுங்கள்.

அதிமதுரம்

அதிமதுரம்

* அதிமதுரம் மற்றும் ஏலக்காயை வறுத்துக் கொள்ளுங்கள்.

* பின் இந்த இரண்டையும் அரைத்து பொடி செய்து கொள்ளுங்கள்.

* அதன் பின் ஒரு கப் நீரில் இந்த பொடியை 1/4 டீஸ்பூன் சேர்த்து, அத்துடன் 1 டீஸ்பூன் தேன் கலந்து கொள்ளுங்கள்.

* இந்த நீரை தினமும் 1 கப் என மலப்புழை அரிப்பு போகும் வரை குடியுங்கள்.

நார்ச்சத்துள்ள உணவுகளை உட்கொள்ளுங்கள்

நார்ச்சத்துள்ள உணவுகளை உட்கொள்ளுங்கள்

மலப்புழை அரிப்பிற்கு மலச்சிக்கல் முக்கிய காரணமாக கருதப்படுகிறது. எனவே மலப்புழை அரிப்பை சரிசெய்ய, மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து முதலில் விடுபட வேண்டும். அதற்கு தினமும் நார்ச்சத்துள்ள உணவுகளை அதிகம் உட்கொள்ள வேண்டும். நார்ச்சத்து, மலத்தை மென்மையாக்குவதோடு, செரிமான மண்டலத்தின் செயல்பாட்டையும் மேம்படுத்தும்.

* ப்ராக்கோலி, பச்சை இலைக் காய்கறிகள், நட்ஸ், கைக்குத்தல் அரிசி, நற்பதமான பழங்கள், பீன்ஸ் உருளைக்கிழங்கு, கேரட், பட்டாணி போன்றவற்றில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இந்த உணவுப் பொருட்களை அன்றாட உணவில் சேர்த்து வாருங்கள்.

* மருத்துவர்கள் பரிந்துரைக்கும் நார்ச்சத்துள்ள சப்ளிமெண்டுகளையும் உட்கொள்ளுங்கள்.

அலர்ஜி உண்டாக்கும் உணவுகளைத் தவிர்க்கவும்

அலர்ஜி உண்டாக்கும் உணவுகளைத் தவிர்க்கவும்

சில உணவுகள் மலப்புழை அரிப்பை சரிசெய்யும். இன்னும் சில உணவுகள் நிலைமையை மோசமாக்கும். இங்கு மலப்புழை அரிப்பு இருக்கும் போது தவிர்க்க வேண்டிய உணவுப் பொருட்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

* எலுமிச்சை, ஆரஞ்சு போன்ற சிட்ரஸ் பழங்களைத் தவிர்க்கவும்.

* மிளகாய், மிளகு நிறைந்த காரமான உணவுகளைத் தவிர்க்கவும்.

* காபி, டீ, ஆல்கஹால், சாக்லேட் போன்றவை அரிப்பை அதிகரிக்கும். எனவே இந்த உணவுப் பொருட்களைத் தவிர்த்திடுங்கள்.

லெமன் கிராஸ்

லெமன் கிராஸ்

லெமன் கிராஸ் என்னும் செடியில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், மற்றும் அரிப்பைத் தூண்டும் காரணிகளை எதிர்த்து தடுக்கும் பொருட்கள் உள்ளன. ஆகவே இந்த லெமன் கிராஸ் செடியின் இலையை குளிக்கும் நீரில் அன்றாடம் போட்டு குளித்து வந்தால், மலப்புழை அரிப்பில் இருந்து விடுபடலாம்.

பிட்டத்தை ஈரப்பதத்துடன் வைத்திருக்காதீர்கள்

பிட்டத்தை ஈரப்பதத்துடன் வைத்திருக்காதீர்கள்

மலப்புழை அரிப்பு கொண்டவர்கள் பின்பற்ற வேண்டிய மிகவும் முக்கியமான ஓர் செயல் தான் மலப்புழையை ஈரப்பதத்துடன் வைத்திருக்காமல் இருப்பது. மலப்புழை ஈரப்பதத்துடன் இருந்தால், அப்பகுதியில் கிருகளால் தொற்றுக்கள் ஏற்பட்டு, அரிப்பையும், எரிச்சலையும் அனுபவிக்கக்கூடும். எனவே அப்பகுதியை எப்போதும் வறட்சியுடன் வைத்திருங்கள்.

பெட்ரோலியம் ஜெல்லி

பெட்ரோலியம் ஜெல்லி

மலப்புழையில் கடுமையான அரிப்பை சந்திப்பவர்க்ள, பெட்ரோலியம் ஜெல்லியைக் கொண்டு அரிப்பைக் கட்டுப்படுத்தலாம். அதற்கு பெட்ரோலியம் ஜெல்லியை அரிப்புள்ள மலப்புழையைச் சுற்றி தடவி 10 நிமிடம் ஊற வைத்தால், அரிப்பில் இருந்து நிவாரணம் கிடைத்திருப்பதைக் காணலாம். இச்செயலை ஒரு வாரத்திற்கு வேண்டுமானால் மேற்கொள்ளலாம். ஆனால் அதற்கு பின்பும் அரிப்பு தொடர்ச்சியாக இருந்தால், உடனே மருத்துவரிடம் செல்லுங்கள்.

ஒரே இடத்தில் அமர்வதைத் தவிர்க்கவும்

ஒரே இடத்தில் அமர்வதைத் தவிர்க்கவும்

எப்போதும் ஒரே இடத்தில் நீண்ட நேரம் அமர்ந்திருப்பதைத் தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால் பிட்டப் பகுதியில் அதிகம் வியர்த்து, ஈரப்பதம் அதிகரித்து, மலப்புழையில் அரிப்பு ஏற்படத் தொடங்கிவிடும். அதேப் போல் எப்போதும் காட்டன் ஜட்டியைப் பயன்படுத்துங்கள். முக்கியமாக ஜட்டி மிகவும் இறுக்கமாக இல்லாதவாறு பார்த்துக் கொள்ளுங்கள். இது அதிகப்படியான ஈரப்பசையை உறிஞ்சிவிடும்.

சோள மாவு வேண்டாம்

சோள மாவு வேண்டாம்

சிலர் பிட்டம் மற்றும் மலப்புழையில் உள்ள ஈரப்பதத்தைப் போக்குவதற்கு சோள மாவைப் பயன்படுத்துவார்கள். ஆனால் சோள மாவை தொற்றுள்ள இடத்தில் பயன்படுத்தினால், நிலைமை இன்னும் மோசமாகும். வேண்டுமானால் டால்கம் பவுடரைப் பயன்படுத்துங்கள். இதனால் அப்பகுதி ஈரப்பதத்துடன் இருப்பதைத் தடுக்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Causes And Remedies For Anal Itching

Here are some causes and home rmedies for anal itching. Read on to know more...
Desktop Bottom Promotion