For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நைட் தூங்க முடியாம அவஸ்தைப்படுறீங்களா? அப்ப இத நாக்குக்கு அடில வையுங்க..

இங்கு உப்பு மற்றும் சர்க்கரையை எப்படி எடுத்தால், தூக்கமின்மை பிரச்சனையில் இருந்து விடுபடலாம் என்று கொடுக்கப்பட்டுள்ளது.

|

நீங்க அடிக்கடி நடுராத்திரில முழிக்கிறீங்களா? நிம்மதியா தூங்கி பல நாள் ஆயிடுச்சா? தற்போதைய வேலைப்பளுமிக்க அலுவலக பணியால் பலரும் இரவு நேரத்தில் தூக்கத்தை தொலைத்து அவஸ்தைப்படுகிறார்கள். அமெரிக்காவில் சுமார் 42 சதவீத மக்கள் இந்த தூக்கமின்மை பிரச்சனையால் கஷ்டப்படுவதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இதற்கு முக்கிய காரணம் மன அழுத்தம் என்றும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். மன அழுத்தத்திற்கு காரணமான கார்டிசோல் என்னும் ஹார்மோன்கள், தூக்கத்திற்கு காரணமான ஹார்மோன்களில் இடையூறை ஏற்படுத்தி, நல்ல தூக்கத்தைக் கிடைக்கச் செய்யாமல் தடுக்கின்றன.

தூக்கமின்மை பிரச்சனையால் கஷ்டப்படுபவர்கள், அதிலிருந்து விடுபட மருத்துவர்களின் பரிந்துரையின் பேரில் தூக்க மாத்திரைகளைப் பயன்படுத்துவார்கள். ஆனால் இப்படி தூக்கமின்மை பிரச்சனைக்கு தூக்க மாத்திரைகளைப் பயன்படுத்தினால், பின் அதுவே பழக்கமாகிவிடும். எனவே இதற்கு இயற்கை வழிகளை நாடுவதே சிறந்தது. அதிலும் நம் வீட்டுச் சமையலறையில் உள்ள பொருட்களைக் கொண்டே எளிதில் தீர்வு காணலாம் என்பது தெரியுமா? அதுவும் உப்பு மற்றும் சர்க்கரை மட்டும் போதும், தூக்கமின்மை பிரச்சனையில் இருந்து விரைவில் விடுபடலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
உப்பு மற்றும் சர்க்கரை

உப்பு மற்றும் சர்க்கரை

இந்த இரண்டு பொருட்களுமே உடல் மற்றும் மெட்டபாலிசத்திற்கு மிகவும் அவசியமானது. இவை மன அழுத்த ஹார்மோன்களை சீராக்கி, செல்களுக்கு ஆற்றலை வழங்குகின்றன. இந்த பொருட்கள் உடலுக்கு தேவையான க்ளுக்கோஸ் மற்றும் சோடியத்தை சீரான அளவில் பராமரித்து, செல் சார்ஜர்களாக செயல்படுகின்றன.

இப்போது உப்பு மற்றும் சர்க்கரையை எப்படி எடுத்தால், தூக்கமின்மை பிரச்சனையில் இருந்து விடுபடலாம் என்று காண்போம்.

தேவையான பொருட்கள்:

தேவையான பொருட்கள்:

* பிங்க் நிற இமாலய கல் உப்பு - 2 டேபிள் ஸ்பூன்

* நாட்டுச் சர்க்கரை - 2 டேபிள் ஸ்பூன்

* தேன் - 5 டேபிள் ஸ்பூன்

தயாரிக்கும் முறை:

தயாரிக்கும் முறை:

ஒரு பாட்டிலில் அனைத்து பொருட்களையும் போட்டு நன்கு குலுக்க வேண்டும். இப்படி குலுக்குவதால், அந்த அனைத்து பொருட்களும் ஒன்று சேர்ந்து, ஒரு ஒருபடித்தான கலவை கிடைக்கும். இந்த கலவையைக் கொண்டு தூக்கமின்மை பிரச்சனைக்கு உடனடி தீர்வைக் காணலாம்.

பயன்படுத்தும் முறை:

பயன்படுத்தும் முறை:

இந்த கலவையை இரவில் படுக்கும் முன் அல்லது நடுராத்திரியில் எழும் போது, ஒரு டேபிள் ஸ்பூன் கலவையை எடுத்து நாக்கிற்கு அடியில் வையுங்கள். அந்த கலவையை கரைவதற்குள், நீங்கள் ஆழ்ந்த தூக்கத்தைப் பெற்றுவிடுவீர்கள். வேண்டுமானால் முயற்சித்துப் பாருங்கள். இதை முயற்சித்தால் அசந்துபோய்விடுவீர்கள்.

இப்போது இமாலய கல் உப்பினால் கிடைக்கும் இதர ஆரோக்கிய நன்மைகள் குறித்து காண்போம்.

நன்மை #1

நன்மை #1

இமாலய கல் உப்பில் உள்ள அதிகளவிலான சோடியத்தால், தாழ் இரத்த அழுத்த பிரச்சனை உள்ளவர்களுக்கு இது மிகவும் நல்லது. லோ பிபி உள்ளவர்கள், அடிக்கடி மயக்க உணர்வைப் பெறுவார்கள். ஆனால் உணவில் சாதாரண உப்பிற்கு பதிலாக, இமாலய கல் உப்பைப் பயன்படுத்தினால், தாழ் இரத்த அழுத்த பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.

நன்மை #2

நன்மை #2

இமாலய கல் உப்பில் உள்ள சத்துக்கள், செரிமான பாதையில் செல்லும் உணவுகளில் உள்ள சத்துக்களை உறிஞ்சுவதற்கு உதவும். இதன் விளைவாக உண்ணும் உணவுகள் எளிதில் செரிமானமாகும். ஒருவருக்கு செரிமானம் சிறப்பாக நடைபெற்றால், அஜீரண கோளாறுகள் தடுக்கப்பட்டு, உடல் எடை அதிகரிப்பதைத் தடுக்கலாம்.,

நன்மை #3

நன்மை #3

இமாலய கல் உப்பில் உள்ள பல்வேறு கனிமச்சத்துக்கள், எலும்புகளை வலிமைப்படுத்துவதோடு, இணைப்புத்திசுக்களையும் வலிமையாக்கும். இதனால் ஆர்த்ரிடிஸ், எலும்பு முறிவு போன்ற பிரச்சனைகளில் இருந்து எளிதில் விடுபடலாம். ஆகவே உங்கள் உணவில் இமாலய கல் உப்பை தவறாமல் சேர்த்து வாருங்கள்.

நன்மை #4

நன்மை #4

இமாலய கல் உப்பு ஒரு சக்தி வாய்ந்த சுத்தமாக்கி போன்று செயல்பட்டு, உடலில் இருக்கும் டாக்ஸின்களை வெளியேற்றி, உடலை சுத்தமாக வைத்துக் கொள்ளும். முக்கியமாக இது உடலில் உள்ள டாக்ஸின்களை நீங்குவதோடு, கொழுப்பு செல்களையும் தான் கரைத்து வெளியேற்றும். இதன் மூலம் இது உடல் எடையைக் குறைக்கச் செய்யும் சிறப்பான பொருளாகவும் கருதப்படுகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Can’t Fall Asleep? This Homemade ”Sleepy Dust” Will Cure Insomnia Forever

Can’t fall asleep? This homemade ”Sleepy Dust” will cure insomnia forever. Read on to know more...
Desktop Bottom Promotion