Latest Updates
-
18 மாதங்களுக்கு பின் நடக்கப்போகும் ராகு-கேது பெயர்ச்சியால் ராஜயோகம் பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் -
சரவணபவன் நெய் மணக்கும் வெண் பொங்கல் ரெசிபி - ட்ரை பண்ணுங்க - டேஸ்ட் அசத்தலா இருக்கும் -
இந்த 4 மாதங்களில் பிறந்தவர்களிடம் நல்ல குணங்களை விட கெட்ட குணங்கள்தான் அதிகமாக இருக்குமாம் -
5 முட்டை இருந்தா பள்ளிப்பாளையம் முட்டை வறுவலை செஞ்சு பாருங்க - காரசாரமா வேற லெவலில் இருக்கும் -
மயில்கள் ஏன் மழை வரும்போது நடனமாடுகிறது தெரியுமா? காரணம் தெரிஞ்சா ஷாக் ஆகிருவீங்க -
சிக்கன் வாங்குனா இந்த மாதிரி தெலங்கானா ஸ்டைலில் மசாலா செஞ்சு பாருங்க - சாதம், டிபனுக்கு அட்டகாசமாக இருக்கும் -
குருபகவான்-செவ்வாய் அரிய சேர்க்கையால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
தென்னிந்தியாவின் சுல்தான் என்று அழைக்கப்பட்ட வலிமையான அரசர் யார் தெரியுமா? -
மட்டன் வாங்குனா.. இப்படி ஒருவாட்டி கிராமத்து ஸ்டைலில் செஞ்சு சாப்பிடுங்க.. தாறுமாறா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 21 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ரொம்ப சந்தோஷமான நாளாக இருக்குமாம்
மார்பில் ஏற்படும் மாற்றங்களைக் கொண்டு உடல் கோளாறுகளை முன்கூட்டியே கண்டுபிடிக்கலாம்!
உங்கள் மார்பகத்தைக் கொண்டே உங்களது உடல் நலனைப் பற்றித் தெரிந்து கொள்ளலாம்.
மார்பகங்கள் என்பது ஏதோ பாலியல் இச்சையை தூண்டும் ஒரு பொருளாகவே பார்க்கப்படுகிறது. ஆனால் நம் உடல் ஆரோக்கியத்திற்கு எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த பொருளாக பார்க்கப்படுகிறது தெரியுமா?
இதைப் பற்றி வெளியில் பேசவோ, சொல்லவோ தயங்கி எத்தனையோ பேர் தங்களுடைய உயிரையே பறிகொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். பெண்களுக்கு ஏற்படக்கூடிய மார்பக புற்றுநோய் ஆரம்ப நிலையிலேயே கண்டுபிடித்தாக வேண்டும். ஆனால் பெண்கள் இதைப் பற்றி வெளியில் சொல்ல வெக்கப்பட்டுக் கொண்டு புற்றுநோய் பாதிப்பின் தீவிரத்தால் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள்.
உங்களுடைய மார்பகத்தைக் கொண்டே உங்களின் உடல் ஆரோக்கியம் எப்படியிருக்கிறது என்பதை நீங்கள் அறிந்து கொள்ளலாம்.

வளர்ச்சி :
மார்பகம் மிக குறுகிய காலத்தில் திடீரென்று வளர்ச்சியடைகிறதா என்று பாருங்கள். மார்பகட்தில் கொழுப்பு செல்கள் தான் நிறைந்திருக்கிறது. அதோடு இதில் க்ளாண்டுலர் திசுக்கள் இருக்கின்றன.

ஹார்மோன் :
கர்ப்பமடைந்திருப்பது, தாய்ப்பால் கொடுப்பது போன்ற காரணங்களால் மார்பகம் சற்று தளர்ந்திருக்க வாய்ப்புண்டு ஆனால் இவை அல்லாத நேரத்தில் மார்பகம் தளர்ந்திருந்தாலோ அல்லது வலி ஏற்பட்டாலோ மருத்துவரை சந்திப்பது அவசியம்.
கர்ப்பத்தடை மாத்திரை சாப்பிட்டால், மாதவிடாய் காலங்களில் ஏற்படுகிற ஹார்மோன் மாற்றத்தின் போது சிலருக்கு மார்பகம் தளர்ந்திருக்கும்.மார்பகங்கள் ஈஸ்ட்ரோஜன் மற்றும் ப்ரோஜெஸ்டிரோனுக்கு மிகவும் சென்ஸ்டிவாக இருக்கும்.

சுருங்குதல் :
உங்கள் மார்பகம் வழக்கத்திற்கு மாறாக மிகவும் சுருங்கினால் உங்கள் உடலில் ஈஸ்ட்ரோஜன் அளவு மிகவும் குறைவாக இருக்கிறது என்பதை கண்டறியலாம்.உங்கள் உடலில் கொழுப்புச் சத்தும் மிகவும் குறைந்துவிட்டது என்பதை உணரலாம்.

தைராய்டு :
மார்பகங்களில் ஃபேட்டி திசுக்கள் தான் நிறைந்திருக்கும். நீங்கள் உடல் எடையை குறைக்க வேண்டும் என்று நினைத்து எடுக்கக்கூடிய பிரயத்தனங்கள் உங்கள் மார்பகத்தையும் குறைத்திடும். அதோடு உடல் ரீதியாக சில பிரச்சனைகள் இருந்தாலும் குறைக்கும். ஓவர் ஆக்டிவ் தைராய்டு இருப்பவர்களுக்கும் மார்பகம் குறையும்.

மாதவிடாய் :
மாதவிடாய் ஆரம்பிக்கும் போதும், முடியும் போதும் மார்பக அளவுகளில் வேறுபாடு தெரியும். அவை உடலில் ஏற்படுகிற ஹார்மோன் மாற்றத்தால் நிகழ்கிறது.
இவற்றைத் தாண்டி மார்பகங்களின் வடிவத்தில் ஏதேனும் மாற்றம் தெரிந்தால் மார்பக புற்றுநோய் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.

அலர்ஜி :
உங்களுக்கு பொருந்தாத உள்ளாடை அணிவதாலும், அதீத வியர்வையினால் அங்கே உருவாகும் பாக்டீரியாவினாலும் பெண்களுக்கு மார்பக பகுதிகளில் அரிப்பு உண்டாவது உண்டு. சிலருக்கு சோப், பாடி ஸ்ப்ரே,டிடர்ஜண்ட் அலர்ஜியினால் கூட ஆவதுண்டு.
இதற்காக ஹைட்ரோகோர்டிஸோன் க்ரீம் வழங்கப்படும். இதனை பயன்படுத்தி இரண்டு அல்லது மூன்று நாட்களில் உங்களுக்கு அலர்ஜி குறையவில்லை என்றால் மருத்துவரை சந்திக்கலாம்.

ஓவரியன் சிண்ட்ரோம் :
மார்பகத்தில் முடி வளர்ச்சியிருந்தால் உங்கள் உடலில் டெஸ்ட்டிரோன் அளவு உயர்ந்து விட்டதாக அர்த்தம்.உடலில் ஏற்படுகிற ஹார்மோன் மாற்றத்தினால் அட்ரீனல் சுரப்பி அளவுக்கு அதிகமாக ஆண்மைக்கான ஹார்மோன் சுரக்க ஆரம்பிக்கும்.
இதன் அறிகுறிகள் உங்கள் மார்பகங்களிலும், முறைய மாதவிடாயினாலும் நீங்கள் கண்டுபிடிக்கலாம். இவை தொடரரும் பட்சத்தில் உங்கள் கர்ப்பையில் ஏதேனும் பிரச்சனை இருக்கிறதா என்பது குறித்தும் மருத்துவ ஆலோசனை பெற்றிடுங்கள்.
8

நிப்பில் :
நிப்பில் கார்சினோமா என்று வழங்கப்படுகிற இந்தப் பிரச்சனை அரிதான புற்றுநோயின் ஓர் வடிவம். நிப்பிலைச் சுற்றி அரிப்பது, நிப்பிலின் வடிவத்தில் மாற்றங்கள் உண்டாவது,நிப்பிலிருந்து ஏதேனும் திரவம் வெளியாவது ஆகிய பிரச்சனைகள் ஏற்படும். இந்த அறிகுறிகள் எல்லாம் இருந்தால் உடனடியாக மருத்துவரை சந்திக்க வேண்டும்.
சிலருக்கு நிப்பிலின் வடிவம் கூட மாறியிருக்கும்.

தாய்ப்பால் :
குழந்தை பிறந்த பிறகு தான் பெண்களுக்கு மார்பகத்தில் இருந்து பால் வரும் என்பது எல்லாரும் நினைத்துக் கொண்டிருப்போம். ஆனால் சில பெண்களுக்கு கர்ப்பமாக இருக்கும் போதோ அல்லது கர்ப்போமோ அல்லது தாய்ப்பால் கொடுக்காத போதே மார்பகத்தில் இருந்து பால் போன்ற திரவம் வரும் இதற்கு காரணம் நீங்கள் எடுத்துக் கொள்ளக்கூடிய மருந்துகள் தான்.
நீங்கள் சாப்பிடும் சில மருந்துகளால் உங்கள் உடலில் இருக்கிற ப்ரோலாக்டீன் அதிகரிக்கும். இந்த ப்ரோலாடீன் என்ற ஹார்மோன் தான் தாய்ப்பல உற்பத்திக்கு முக்கிய பங்கு வகிக்கிறது.

உப்பு :
நீங்கள் அதிகமாக உப்பு சேர்க்கிறீர்கள் என்பதைக்கூட உங்களின் மார்பகங்களைக் கொண்டே கண்டறியலாம். மார்பகத்தில் காரணமில்லாமல் வலி உண்டானால் நீங்கள் உங்கள் உணவுகளில் இருந்து உப்பு மற்றும் எண்ணெயில் பொறிக்கப்பட்ட உணவை குறைக்க வேண்டும்.

காபி :
கேஃபைன் நிறைந்த பொருட்களான காபி போன்ற பானங்களையும் நீங்கள் தவிர்ப்பது நல்லது. கேஃபைன் பொருட்கள் உங்கள் மார்பகங்களில் ரத்த ஓட்டத்தை தடுப்பதால் கூட உங்களுக்கு வலி ஏற்படும். சிலருக்கு மார்பகம் மிகவும் கடினமானதாகக்கூட தோன்றிடும்.

இரும்புச் சத்து குறைபாடு :
தைராய்டு சுரப்பி சீராக வேலை செய்ய ஐயோடின் எந்த அளவிற்கு முக்கியமோ அதேயளவு இரும்புச்சத்தும் முக்கியம். உங்கள் உடலில் இரும்புச்சத்து குறைவென்றால் அது ரத்த சோகை மட்டுமல்லாத உங்கள் மார்பகங்களிலும் அந்த மாற்றங்கள் தெரியும்.



Click it and Unblock the Notifications