For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

முதலை சாணத்தை வைத்து கலவியா..? இப்படிப்பட்ட பல வினோத மருத்துவ முறைகள் உள்ளே..!

|

ஒருவரின் உயிரை காக்கும் முக்கிய பணியாக மருத்துவத்தை என்றுமே நாம் கருதி வருகின்றோம். ஒவ்வொரு நோயின் தன்மைக்கேற்ப அதற்கென்று தனித்துவமான முறைகள் ஒவ்வொரு காலகட்டத்திலும் மாறுதல் பெற்று வருகிறது.

முதலை சாணத்தை வைத்து கலவியா..? இது போன்ற பல அருவருக்கதக்க மருத்துவ முறைகள் உள்ளே..!

மருத்துவம் என்றாலே வியாபாரம் ஆகி விட்டது என்பது இன்றைய நிலை. ஆனால், அன்று எப்படிப்பட்ட மருத்துவ முறைகளை மருத்துவர்கள் கையாண்டார்கள் என்பது சற்றே அருவருக்கத்தக்க ஒன்றாக தான் உள்ளது. அவை என்னென்ன என்பதை இனி அறிந்து கொள்வோம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பழமை வாய்ந்த முறைகள்...

பழமை வாய்ந்த முறைகள்...

இப்போது தான் மருத்துவ துறையில் பல வகையான தொழிற்நுட்ப மாறுதல்கள் வந்துள்ளது. ஆனால், சில நூற்றாண்டுக்களுக்கு முன்பு மிக மோசமான நிலையே இருந்தது. உடல் முழுக்க அறுத்து அறுவை சிகிச்சை என்கிற பெயரில் தவறான மருத்துவங்களை பார்த்த மருத்துவர்கள் ஏராளம்.

கர்பிணிகளின் நிலை என்ன..?

கர்பிணிகளின் நிலை என்ன..?

அன்றைய காலகட்டத்தில் குழந்தைகளை பெற்றெடுப்பது மிக எளிமையான ஒன்றாக தான் கருதப்பட்டது. ஆனால், இவர்களின்மருத்துவ முறை மிகவும் வித்தியாசமாக இருந்ததாம். குழந்தையை விலங்குகள் பெற்றெடுப்பது போன்று, நின்ற கொண்டு பெற்று எடுத்தார்களாம். சிலர் உட்கார்ந்த நிலையிலும் பெற்றெடுப்பார்களாம்.

ஆட்டின் விரைகள்

ஆட்டின் விரைகள்

பல புகழ் பெற்ற அன்றைய கால மருத்துவர்கள் கூட மிக மோசமான மருத்துவ முறைகளை கடைபிடித்து வந்தனர். ஆண்களின் தாம்பத்திய பிரச்சினைகள் அனைத்தையும் ஒரே மருத்துவத்தின் மூலம் குணப்படுத்தி விடலாம் என நம்பினார்கள். அதுவும் ஆட்டின் விரையை கொண்டு ஆண்மை குறைவு, மலட்டு தன்மை, விந்தணு குறைபாடு போன்ற எல்லாவற்றிற்கும் தீர்வு கிடைத்து விடும் என்றனர். ஆனால், இது அபாயகரமான மருத்துவ முறையாம். இதனால் பலர் உயிர் இழந்துள்ளனர்.

ரத்த காட்டேரிகளோ..?

ரத்த காட்டேரிகளோ..?

அன்றைய மருத்துவ முறையில் இந்த மருத்துவம் மிக முக்கியமானதாக பார்க்கப்பட்டது. எந்த இடத்தில் பாதிப்பு உள்ளதோ அந்த இடத்தை அறுத்து ரத்தத்தை வெளியேற்றி விட்டால் குணமாகி விடும், என்கிற அருவருக்கத்தக்க மருத்துவ முறையை கடைபிடித்து வந்தனர். ஆனால், இந்த முறையால் குணம் அடைந்தவர்களை விட உயிரை பறிகொடுத்தவர்களே அதிகம்.

MOST READ: cadbury டைரி மில்க்கில் எச்.ஐ.வி வைரஸ் கலந்துள்ளதா..? இது எந்த நாட்டின் தாக்குதலாக இருக்கும்..?

திக்கு வாயா..?

திக்கு வாயா..?

அன்றைய காலகட்டத்தில் மருத்துவத்தில் மிக கொடூரமான முறைகளை கடைபிடித்து வந்தனர். குறிப்பாக திக்குவாய் பிரச்சினைக்கு பாதி நாக்கையே அறுத்து விடுவார்களாம். இந்த மருத்துவ முறையால் இறந்தவர்கள் ஏராளம் என வரலாற்று குறிப்புகள் கூறுகிறது. ஆனால், இது போன்ற முறைகள் இன்று நாக்கு புற்றுநோயிற்கு பயன்படுத்துவதாக கூறப்படுகிறது.

தலையில் வலியா..?

தலையில் வலியா..?

மண்டையில் எந்த வித பிரச்சினையாக இருந்தாலும் அதை இந்த முறையை கொண்டே அன்றைய மருத்துவர்கள் அணுகுவார்களாம். அதாவது, மண்டை ஓட்டில் ஒரு துளையை போட்டு விடுவார்களாம். இது மண்டை சார்ந்த அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வை தரும் என அவர்கள் நம்பினார்கள்.

பாம்பு எண்ணெய்

பாம்பு எண்ணெய்

பாம்பின் மூலம் தயாரித்த எண்ணெய்யை சீனர்கள் மருத்துவ பயன்பாட்டிற்கு உபயோகித்தனர். குறிப்பாக மூட்டு வலி, எலும்புகளில் பிரச்சினை ஆகியவற்றிற்கு இதனை பயன்படுத்தி வந்தனர். இந்த எண்ணெய்யை நீரில் கலந்து, பண்டைய கால மருத்துவத்தில் பயன்படுத்தினர்.

பேய் பிடித்தால்..?

பேய் பிடித்தால்..?

பொதுவாக அன்றைய கால கட்டத்தில் பல வகையான புரளிகளும், வதந்திகளும் இன்றை விட அதிக அளவில் இருந்தது. பேய் பிடித்தால் கடவுள்களிடம் பூஜை செய்த புனிதமான நீரை கொண்டு அவர்கள் மீது தெளிப்பார்களாம். உண்மையில் இது எந்த வித பலனையும் தராது. இதனால் அன்று இறந்தவர்கள் தான் அதிகம்.

MOST READ: பாதி பன்றி, பாதி மனிதன், ஆட்டுக்கு பிறந்த வினோதக் குட்டி - என்ன நடந்திருக்கும்?

முதலையும் கலவியும்..!

முதலையும் கலவியும்..!

முதலையின் சாணத்தை வைத்து கலவி கொள்வார்களாம். அதாவது, இப்போது நாம் பயன்படுத்தும் பெண்களுக்கான காண்டமாக இந்த சாணத்தை அந்த காலத்தில் பயன்படுத்தி வந்தார்களாம். இவை விந்தணுக்களை உள்ளே செல்ல விடாதவாறு தடுத்து விடுமாம். இதே போன்று பல விலங்குகளின் சாணத்தை இவ்வாறு பயன்படுத்தினார்களாம்.

எலி வைத்தியம்

எலி வைத்தியம்

எகிப்தியர்கள் பல் வலிகளுக்கு இந்த மருத்துவத்தை பயன்படுத்தி வந்தனர். அதாவது, எலிகள் இறந்தனுடன், அதனை நசுக்கி பல் வலிகளுக்கு மருத்துவமாக பயன்படுத்தினர். சற்றே அருவருக்கத்தக்க மருத்துவ முறையாக தான் இது இருக்கிறது. என்றாலும், எகிப்திர்கள் இதை பரவலாக பயன்படுத்தினார்களாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Bizarre Ancient Medical Treatments

Here are some bizarre ancient Medical treatments that stay in the past forever.
Desktop Bottom Promotion