For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தினமும் இரவில் தொப்புளில் தேங்காய் எண்ணெய் வைப்பதால் கிடைக்கும் நன்மைகள்!

இங்கு தினமும் இரவில் தொப்புளில் தேங்காய் எண்ணெய் வைப்பதால் கிடைக்கும் நன்மைகள் பட்டியலிடப்பட்டுள்ளன.

|

தேங்காயில் இருந்து பெறப்படுவது தான் தேங்காய் எண்ணெய். உலகின் பல்வேறு பகுதிகளான ஆப்பிரிக்கா, ஆசியா மற்றும் தென் அமெரிக்கா போன்ற பகுதிகளில பழங்காலம் முதலாக தேங்காய் எண்ணெய் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த எண்ணெயில் அதிகளவு சாச்சுரேட்டட் கொழுப்புக்கள் மற்றும் ஊட்டச்சத்து அளவு மற்றுடம ஆயுளை மேம்படுத்தும் பொருட்களும் அடங்கியுள்ளன.

இந்த தேங்காய் எண்ணெயின் முழு சத்துக்களையும், அந்த எண்ணெயை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் பெறலாம். தேங்காய் எண்ணெயில் சாச்சுரேட்டட் கொழுப்புக்கள் அதிகம் நிரம்பியுள்ளது. எனவே இதனை உணவில் அதிகம் சேப்பதன் மூலும், கொலஸ்ட்ரால் அளவு அதிகரிக்கலாம். பழங்காலத்தில் தேங்காய் எண்ணெய் ஒரு நிவாரணப் பொருளாகப் பயன்படுத்தப்பட்டு வந்தது.

Benefits of Using Coconut Oil in Belly Button Every Night

சொன்னால் நம்பமாட்டீர்கள், தேங்காய் எண்ணெயை அன்றாடம் இரவில் தூங்கும் போது, தொப்புளில் வைப்பதன் மூலம் நிறைய நன்மைகள் கிடைக்கும். ஆயுர்வேதத்தில் ஆயிரம் வருடங்களுக்கு முன்பில் இருந்து இந்த பழக்கம் வழக்கமாக இருந்து வருகிறது. இந்த செயலால் உள்ளுறுப்புக்களின் அபாயம் தடுக்கப்படுவதோடு, உடலில் உள்ள அதிகப்படியான வாய்வுத்தொல்லையும் சரியாகும்.

சரி, இப்போது தினமும் இரவில் தொப்புளில் தேங்காய் எண்ணெய் வைப்பதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து காண்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கருவளம் மேம்படும்

கருவளம் மேம்படும்

தினமும் இரவில் படுக்கும் முன் தேங்காய் எண்ணெயை தொப்புளில் வைப்பதால், சீக்கிரம் கருத்தரிக்க முடியும் என்ற நம்பிக்கை ஒன்று உள்ளது. இதில் உள்ள மீடியம் செயின் ட்ரைகிளிசரைடுகள், வயிற்றுப் பகுதியில் உள்ள கொழுப்பைக் கரைக்க உதவும். எப்படியெனில், இரவில் தினமும் தொப்புளில் எண்ணெயை வைப்பதால், அது தொப்புளின் வழியே கொழுப்பு செல்களைக் கரைக்கும்.

சளிக்கு நல்ல சிகிச்சை

சளிக்கு நல்ல சிகிச்சை

உங்களுக்கு சளி பிடித்துள்ளதா? அப்படியெனில் தேங்காய் எண்ணெயை அதிகம் பயன்படுத்துங்கள். பொதுவாக தேங்காய் எண்ணெய் உடலின் வலிமை மற்றும் ஆற்றலை மேம்படுத்தப் பயன்படுத்தப்படுவதால், சளி பிடித்தவர்கள், தினமும் இரவில் தொப்புளில் தேங்காய் எண்ணெய் வைத்தால் விரைவில் சரியாகும்.

வயிற்றுப் பிடிப்பு மற்றும் மாதவிடாய் கால வலி

வயிற்றுப் பிடிப்பு மற்றும் மாதவிடாய் கால வலி

தேங்காய் எண்ணெய் மூளையின் செயல்பாட்டை மேம்படுத்துவதோடு, இது அடிவயிற்று வலியில் இருந்து விரைவில் விடுபட உதவும். ஏனெனில் இதில் அந்த அளவில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் நிரம்பியுள்ளது. முக்கியமாக மாதவிடாய காலத்தில் வயிற்று வலி அல்லது வாய்வால் ஏற்படும் தாங்க முடியாத வயிற்றுப் பிடிப்பில் இருந்து நிவாரணம் அளிக்கும்.

சிறப்பான கண் பார்வை

சிறப்பான கண் பார்வை

தினமும் இரவில் படுக்கும் முன் தேங்காய் எண்ணெய் அன்றாடம் தொப்புளில் வைப்பதால் கிடைக்கும் நன்மைகளுள் ஒன்று, இது கண்களில் ஏற்படும் வறட்சியை சரிசெய்யும் மற்றும் மோசமான கண் பார்வையைத் தடுக்கும்.

தூக்கமின்மை

தூக்கமின்மை

ஒருவர் தினமும் இரவில் படுக்கும் முன் தொப்புளில் தேங்காய் எண்ணெயை வைப்பதால், இரவு நேரத்தில் தூக்கம் வராமல் கஷ்டப்பட்டவர்கள், நல்ல நிம்மதியான தூக்கத்தைப் பெற முடியும். வேண்டுமானால், இன்று இரவு தூங்கும் முன் தேங்காய் எண்ணெயை தொப்புளில் வைத்துப் பாருங்கள்.

தேங்காய் எண்ணெயால் கிடைக்கும் இதர நன்மைகள்!

தேங்காய் எண்ணெயால் கிடைக்கும் இதர நன்மைகள்!

* நல்ல மனநிலையைத் தூண்டும்

* நல்ல ஹேர் டானிக்

* நெஞ்செரிச்சலைப் போக்கும்

* காயங்களைக் குணப்படுத்தும்

* முகப்பருவைப் போக்கும்

* மூலத்தில் இருந்து விடுவிக்கும்

தொப்புளில் தேங்காய் எண்ணெயைப் பயன்படுத்துவது எப்படி?

தொப்புளில் தேங்காய் எண்ணெயைப் பயன்படுத்துவது எப்படி?

* ஒரு பஞ்சுருண்டையை எடுத்து, தேங்காய் எண்ணெயில் நனைக்க வேண்டும்.

* பின் அதனை தொப்புளில் சில நிமிடங்கள் வைக்க வேண்டும்.

* பின்பு 15 நிமிடங்கள் தொப்புளை மசாஜ் செய்ய வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Benefits of Using Coconut Oil in Belly Button Every Night

Here are some of the benefits of using coconut oil in belly button every night. Read on to know more...
Story first published: Tuesday, April 10, 2018, 17:00 [IST]
Desktop Bottom Promotion