For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தினமும் காலையில் இளநீரில் தேன் கலந்து குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்!

இங்கு தினமும் காலையில் இளநீரில் தேன் கலந்து குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் பட்டியலிடப்பட்டுள்ளன.

|

இயற்கை நமக்கு தந்த ஒரு வரப்பிரசாதம் தான் இளநீர். இந்த இளநீர் இந்தியாவில் தெருவோரங்களில் சாதாரணமாக விற்கப்படுவதைக் காணலாம். இளநீர் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது என்பது அனைவருக்குமே தெரியும். இளநீர் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது என்பதும் அனைவரும் அறிந்ததே. இந்த இளநீரை பலர் உடல் சூட்டைத் தணிப்பதற்கு அருந்துவார்கள். அதிலும் கோடைக்காலத்தில் இளநீரை நிறைய பேர் வாங்கிக் குடிப்பார்கள்.

கொளுத்தும் வெயிலில் இளநீரை குடித்தால், அது உடல் சூட்டைத் தணிப்பதோடு, உடலை வறட்சி அடையாமலும் தடுக்கும். மேலும் இளநீர் ஆரோக்கியமற்ற மற்றும் சர்க்கரை கலந்த ஜூஸ்களுக்கு சிறந்த மாற்று என்று கூட சொல்லலாம். நம் அனைவருக்குமே நோயில்லாத ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ ஆசை இருக்கும்.

அப்படி நோயில்லாத வாழ்வை வாழ ஆசைப்பட்டால், உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் உணவுகள், பானங்களின் உதவி அவசியம். அதிலும் இளநீருடன் தேனைக் கலந்து தினமும் காலையில் குடித்து வந்தால், அது பல்வேறு உடல் ஆரோக்கிய பிரச்சனைகளை சரிசெய்யும் என்பது தெரியுமா? இக்கட்டுரையில் இளநீருடன் தேனைக் கலந்து குடித்தால் கிடைக்கும் நன்மைகள் என்னவென்று கொடுக்கப்பட்டுள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தயாரிக்கும் முறை:

தயாரிக்கும் முறை:

* ஒரு டம்ளர் இளநீரில் 1 டேபிள் ஸ்பூன் தேன் கலந்து கொள்ள வேண்டும்.

* இந்த பானத்தை தினமும் காலையில், உணவு உண்பதற்கு முன் குடிக்க வேண்டும். கீழே இந்த ஆரோக்கிய பானத்தைக் குடித்தால் கிடைக்கும் நன்மைகள் பட்டியலிடப்பட்டுள்ளது.

முதுமையைத் தடுக்கும்

முதுமையைத் தடுக்கும்

பொதுவாக முதுமையை ஒருவரால் தடுக்க முடியாது. ஆனால் முதுமைத் தோற்றத்தை ஒருவரால் தள்ளிப் போட முடியும். முதுமைத் தோற்றத்திற்கான அறிகுறிகளாவன நரை முடி, சுருக்கங்கள், சோர்வு போன்றவை. இத்தகைய அறிகுறிகள் சிலருக்கு இளமையிலேயே தோன்ற ஆரம்பிக்கின்றன. தேன் மற்றும் இளநீரில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், செல்கள் சிதைவுறுவதை தாமதப்படுத்தி, முதுமைத் தோற்றத்தைத் தள்ளிப் போடும்.

நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்

நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்

இளநீரில் தேன் கலந்து தினமும் குடித்து வந்தால், அது நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமைப்படுத்தி, பல்வேறு நோய்களின் தாக்கத்தில் இருந்து பாதுகாப்பு அளித்து, உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். தேனில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் மற்றும் இளநீரில் உள்ள வைட்டமின் சி தான் நோயெதிர்ப்பு சக்தியை வலிமைப்படுத்தி, உடலைத் தாக்கும் கிருமிகளை எதிர்த்துப் போராடி பாதுகாப்பளிக்கிறது.

ஆற்றலை மேம்படுத்தும்

ஆற்றலை மேம்படுத்தும்

பெரும்பாலானோர் காலையில் எழுந்ததும், உடலின் ஆற்றலை அதிகரிக்க காபி அல்லது டீ குடிக்கும் பழக்கத்தை தான் கொண்டிருப்போம். ஆனால் இதற்கு பதிலாக காலையில் எழுந்தும் இளநீரில் தேன் கலந்து குடித்து வந்தால், அது நாள் முழுவதும் உடலின் ஆற்றலை சிறப்பாக வைத்திருப்பதோடு, இந்த பானத்தில் பொட்டாசியமும் அதிகமாக உள்ளது.

செரிமானம் சிறப்பாக நடைபெறும்

செரிமானம் சிறப்பாக நடைபெறும்

பல்வேறு ஆராய்ச்சிகளில், இளநீரில் தேன் கலந்து குடித்து வந்தால், அது செரிமான பிரச்சனைகளான வயிற்று வலி, இரைப்பை அழற்சி, வயிற்று உப்புசம், அசிடிட்டி போன்றவை ஏற்படாமல் தடுக்கும். மேலும் இந்த பானம் வயிற்றில் சுரக்கும் அதிகப்படியான அமில அளவை நீர்க்கச் செய்து, செரிமான மண்டலத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும்.

மலச்சிக்கல் சரியாகும்

மலச்சிக்கல் சரியாகும்

முன்பு கூறியது போல், இளநீரில் தேன் கலந்து குடித்தால், அது அஜீரண பிரச்சனைகளைத் தடுத்து, செரிமான மண்டலத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். அதே சமயம் இந்த பானம் மலச்சிக்கலில் இருந்து நிவாரணம் அளிக்கும். இதற்கு இந்த பானத்தில் உள்ள நார்ச்சத்து தான் காரணம். இது மலத்தை இளகச் செய்து, மலக்குடல் வழியே எளிதில் வெளியேறச் செய்யும்.

சிறுநீரக கற்கள் தடுக்கப்படும்

சிறுநீரக கற்கள் தடுக்கப்படும்

உடலில் உள்ள குறிப்பிட்ட ஆக்ஸைடுகள் மற்றும் உப்பு போன்றவை சிறுநீரகங்களில் தேங்கி, சிறுநீரக கற்களாக உருவாகும். இது மிகவும் ஆபத்தான நிலைக்கு கொண்டு செல்லும். சில சமயங்களில் இது உயிரையே பறித்துவிடும். நாள் முழுவதும் போதுமான அளவு நீரைக் குடிப்பதுடன், இளநீரில் தேன் கலந்து குடித்து வந்தால், அது சிறுநீரக கற்களைத் தடுப்பதோடு, அதை கரைத்து எளிதில் வெளியேற்றிவிடும்.

இதய ஆரோக்கியம் மேம்படும்

இதய ஆரோக்கியம் மேம்படும்

உடலில் இதயம் மிகவும் முக்கியமான உறுப்பாகும். இது உடலின் அனைத்து உறுப்புகளுக்கும் ஆக்ஸிஜன் நிறைந்த இரத்தத்தை அனுப்பும் முக்கிய பணியைச் செய்கிறது. ஒருவரது இதயம் ஆரோக்கியமற்றதாக இருந்தால், உடலின் அனைத்து உறுப்புக்களும் அபாயத்திற்கு உட்படும். இளநீர் மற்றும் தேன் பானத்தில் உள்ள கனிமச்சத்துக்கள், இதய தசைகளை வலிமைப்படுத்தி, இரத்த அழுத்தத்தைக் குறைத்து, இதய ஆரோக்கியத்தை சிறப்பாக வைத்துக் கொள்ள உதவுகிறது.

சர்க்கரை நோய் தடுக்கப்படும்

சர்க்கரை நோய் தடுக்கப்படும்

சர்க்கரை நோய் என்பது முற்றிலும் குணமாகாத ஒரு மெட்டபாலிச நோயாகும். உலகில் சுமார் 50 சதவீதத்திற்கும் அதிகமானோர் இப்பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ளனர். எப்போது இரத்த சர்க்கரை அளவு வழக்கத்திற்கு மாறாக அதிகமாக இருக்கிறதோ, அந்நிலை தான் சர்க்கரை நோய் ஆகும். ஆய்வுகளில் இளநீருடன் தேன் கலந்து தினமும் குடித்து வந்தால், அது இரத்த சர்க்கரை அளவைக் குறைத்து, சர்க்கரை நோயைத் தடுப்பதாக தெரிய வந்துள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Benefits Of Tender Coconut Juice With Honey Every Morning

Here are some health benefits of coconut water with honey. Your health can be improved by consuming coconut water and honey every morning.
Desktop Bottom Promotion