For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஆண்களே, விறைப்பு தன்மையை குணப்படுத்தும் ஆயுர்வேத முறைகள் பற்றி தெரியுமா..?

|

நம் முன்னோர்கள் பின் பற்றிய மருத்துவ முறை மிகவும் சிறந்த முறையாக பல நூற்றாண்டாக கருதப்பட்டு வருகின்றது. இதன் மகத்துவத்தை மேலை நாட்டினரும் உணர்ந்ததால் அவர்களும் இதனை பின்பற்ற தொடங்கினர். ஆயுர்வேதம் என்பது முற்றிலும் இயற்கை மருந்துகளால் உருவானதாகும். பண்டைய காலங்களில் பெரும்பாலான மக்கள் இதைத்தான் பயன்படுத்தினர்.

permanent ayurvedic cure for erectile dysfunction

பல ஆயிரம் நன்மைகள் இந்த மருத்துவத்தில் இருப்பதாக ஆராய்ச்சிகளும் சொல்கிறது. எண்ணற்ற பயன்கள் இந்த மருத்துவ முறையில் ஒளிந்து கொண்டுள்ளது. இவை ஆண்களின் பெரும்பாடாக உள்ள விறைப்பு தன்மைக்கும் தீர்வு தருகிறதாம். என்னென்ன மூலிகை முறைகள் இந்த விறைப்பு தன்மையை குணப்படுத்த உதவும் என்பதை பற்றி முழுமையாக அறியலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஆண்களின் வேதனை..!

ஆண்களின் வேதனை..!

பலர் வெளியில் சொல்ல முடியாத ஒரு பிரச்சினையாக இந்த விறைப்பு தன்மையை கருதுகின்றனர். ஒரு ஆணுக்கு விறைப்பு தன்மை ஏற்பட்டால் அது அவரின் இல்லற வாழ்வை முற்றிலுமாக அழித்து விட கூடியது. பெரும்பாலான ஆண்களின் பிரச்சினையாக இன்று கருதப்படுவது இதுதான். இதனால் பலர் மன அழுத்தத்திற்கு தள்ளப்பட்டு, வாழ்வில் நிம்மதியை இழக்கின்றனர்.

இஞ்சியும் தேனும்...

இஞ்சியும் தேனும்...

இந்த உலகில் மிகவும் மகத்துவமான உணவாக கருதப்படுவது தேன் தான். இது பல்வேறு மருத்துவ தன்மையை கொண்டது. 2 டீஸ்பூன் அரைத்த இஞ்சி விழுதை எடுத்து கொண்டு, 2 ஸ்பூன் தேனுடன் கலந்து தினமும் சாப்பிட்டு வந்தால் விறைப்பு தன்மை விரைவில் குணமடையுமாம். இது நம் முன்னோர்கள் காலம் காலமாக பின்பற்றும் பாரம்பரிய முறையாம்.

மூலிகைகளின் ராஜா..!

மூலிகைகளின் ராஜா..!

பொதுவாக ஆயுர்வேதத்தின் முதன்மையான மூலிகையாக கருதப்படுவது அஸ்வகந்தா தான். இதனை "மூலிகைகளின் ராஜா" என்றே கூறுவார்கள். விறைப்பு தன்மையை குணப்படுத்தும் ஆற்றல் இந்த மூலிகைக்கு உள்ளதாம். மேலும் ஆண்களுக்கு ஏற்படும் மலட்டு தன்மை, விந்தணு குறைபாடு போன்றவற்றையும் இது சரி செய்யும். அஸ்வகந்தா பொடியை வெதுப்பான நீரில் கலந்து குடித்து வந்தால் ஆண்களின் இல்லற வாழ்வு நலம் பெரும்.

குறை தீர்க்கும் இலவங்கப்பட்டை...!

குறை தீர்க்கும் இலவங்கப்பட்டை...!

நம் வீட்டு சமையல் அறையில் இருக்கும் இந்த பொருள்தான் சிறந்த ஆயுர்வேத மருந்துகளில் ஒன்றாம். நம் நாட்டில் மட்டுமில்லாமல் சீனாவிலும் இதை அவர்களின் பழங்கால மருத்துவத்தில் பயன்படுத்தி வருகின்றனர். தினமும் 3 டீஸ்பூன் இலவங்க பொடியை 1 லிட்டர் நீரில் கொதிக்க விட்டு குடித்து வந்தால் விறைப்பு தன்மை, மலட்டு தன்மை சரியாகும்.

ஷத்தாவரி (shatavari)

ஷத்தாவரி (shatavari)

இது ஒரு அறிய வகை மூலிகையாகும். இவை பெரும்பாலும் இந்தியா, நேபால், இலங்கை போன்ற நாடுகளில் மட்டுமே வளரும். ஆண்களின் பிரச்சினை பலவற்றிற்க்கு இது பெரிதும் தீர்வு தருமாம். இது ஹார்மோன்கள் சுரப்பதை சீராக்கி நலம் பெற செய்யும். இதனை நீருடன் கலந்து சாப்பிட்டால் விறைப்பு தன்மை குணமாகும்.

கேரட்டும் தேனும்...

கேரட்டும் தேனும்...

ஆரோக்கியமான வாழ்வை மேற்கொள்ள வேண்டும் என்றால் கட்டாயம் ஆரோக்கிய உணவுகளையே அதிகம் உண்ண வேண்டும். அந்த வகையில் கேரட்டும் தேனும் சிறந்த இணையாக ஆண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துக்கிறது.

தேவையானவை :-

துருவிய கேரட் 1/2 கப்

தேன் 2 ஸ்பூன்

பாதியாக வேக வைத்த முட்டை 1

செய்முறை :-

செய்முறை :-

முதலில் முட்டையை ஹாஃப் பாயில் போட்டுகொண்டு அவற்றுடன் துருவிய தேங்காய் மாற்றும் தேன் கலந்து நன்றாக கலக்கவும். இதனை 1 மதம் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் விறைப்பு தன்மைக்கு முழுமையாக முற்றிப்புள்ளி வைக்குமாம். அத்துடன் விந்தணுவின் செயல்பாட்டையும் அதிகரிக்க செய்யும்.

நலம் தரும் முருங்கை..!

நலம் தரும் முருங்கை..!

முருங்கை மரத்தின் எல்லா உறுப்புகளும் பல்வேறு வகைகளில் மருத்துவத்திற்கு உதவுகிறது. இவற்றின் காய், பூ, இலைகள் அத்தனையும் ஆண்கள் மற்றும் பெண்களின் இல்லற வாழ்வை நலம் பெற செய்யும். தாம்பத்தியத்தில் பிரச்சினை உள்ளவர்கள் இந்த முருங்கையை தினமும் சாப்பிட்டு வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

முருங்கை பூ மூலிகை...!

முருங்கை பூ மூலிகை...!

இந்த மூலிகை மருத்துவம் ஆண்களுக்கு ஏற்படும் விறைப்பு தன்மையை குணப்படுத்தும் ஆற்றல் பெற்றது. முதலில் கை நிறைய முருங்கை பூவை எடுத்து கொண்டு, அவற்றை 1 கப் பாலில் கொதிக்க விடவும். பின் மிதமான சூட்டிற்கு வந்த பிறகு இதனை குடித்து வந்தால் விறைப்பு தன்மை குணமாகும். இந்த மருத்துவத்தை 2 முதல் 3 மூன்று மாதம் தொடர்ந்து செய்து வரவும்.

மகத்துவம் பெற்ற மாதுளை...!

மகத்துவம் பெற்ற மாதுளை...!

பெண்களுக்கு மாதுளை எந்த அளவிற்கு உதவுகிறதோ, அதே அளவிற்கு இது ஆண்களுக்கும் உதவுகிறது. விந்தணுக்களை அதிகரித்து, விறைப்பு தன்மையை குணப்படுத்த மாதுளை பெரிதும் பயன்படுகிறது. மேலும், ரத்த ஓட்டத்தை சீராக வைத்து பிறப்புறுப்புகளை ஆரோக்கியமாக வைத்து கொள்கிறது.

சீரான உணவு முறை...

சீரான உணவு முறை...

ஆண்கள், விறைப்பு தன்மை ஏற்படுத்த கூடிய உணவு முறைகளை கட்டாயம் தவிர்க்க வேண்டும். இல்லையேல் அவை இருவரின் இல்லற வாழ்விலும் பெரிய பாதிப்பை ஏற்படுத்த கூடும். பதப்படுத்தப்பட்ட உணவுகள், அதிக சர்க்கரை கொண்ட உணவுகள், ஜங்க் உணவுகள் போன்றவற்றை கட்டாயம் தவிர்க்க வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Ayurvedic Remedies That Help Treat Erectile Dysfunction

Erection is a physiological phenomenon in which the penis becomes firm, engorged, and enlarged. Also it affects men's sexual life.
Story first published: Wednesday, September 5, 2018, 10:00 [IST]
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more