For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இத குடிச்சா செலவே இல்லாம பல நோயை குணப்படுத்தலாமாம்... இது என்னன்னு தெரிஞ்சிக்க ஆர்வமா இருக்கா?...

ஆயுள் காக்கும் ஆயுர்வுத மருத்துவத்தில் பசுவின் சிறுநீர் பல்வேறு நோய் தீர்க்கும் மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது.

By Vivek Sivanandam
|

பரவலாக கோமியம் என்று அழைக்கப்படும் மாட்டு சிறுநீரானது, நோய்களை குணப்படுத்தவும், உடல் நிலையை சீராக்கவும் இந்திய மருத்துவத்தில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது.

health

ஆயுர்வேத முறையில், நோய்களுக்கான சிகிச்சையில் பசு மாட்டின் கோமியம் பெரும்பாலும் பரிந்துரைக்கப்படுகிறது. ஆயுள் காக்கும் ஆயுர்வுத மருத்துவத்தில் பசுவின் சிறுநீர் பல்வேறு நோய் தீர்க்கும் மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பாரம்பரிய மருத்துவ முறை

பாரம்பரிய மருத்துவ முறை

பாரம்பரிய மருத்துவ முறையில் பல்வேறு கடுமையான நோய்களுக்கும் இது நோய் தீர்க்கும் மருந்தாக பயன்படுகிறது. கோமியத்தை பால், தயிர் அல்லது வெண்ணெயுடன் கலந்து நோய்களை குணப்படுத்த பயன்படுத்துவர். எயிட்ஸ், புற்றுநோய் போன்ற உயிர்கொல்லி நோய்களை குணப்படுத்த மற்ற மருந்துகளுடன் சேர்த்து கோமியமும் நோயாளிகளுக்கு வழங்கப்படுகிறது.

ஆய்வறிக்கைகளின் படி கோமியமானது, நோய்களில் இருந்து மீண்டு வர மிகவும் உதவிகரமாக இருக்கிறது. மேலும் இந்தியாவில் மாட்டின் கோமியமானது அனைவருக்கும் எளிதில் கிடைக்கக்கூடிய வகையில் உள்ளது. தற்போது கடைகளில் கிடைக்கும் சோப், சாம்ப், பற்பசை மற்றும் குளிர்பானம் போன்ற சில பொருட்களில் கோமியம் கலந்துள்ளது.

சத்துக்கள்

சத்துக்கள்

சிறுநீரில் டாக்சிக் பொருட்கள் இருக்கிறது என்பது பரவலான கருத்தாக இருந்தாலும், கோமியத்தில் யூரியா, தாதுசத்துக்கள், உப்புகள், ஹார்மோன்ஸ், என்சைம்ஸ் போன்றவற்றுடன் 95% தண்ணீரும் உள்ளது. என்னதான் கோமியத்தின் மூலம் பல்வேறு நோய்கள் குணபடுத்தப்பட்டாலும், அது இன்னமும் விவாதப்பொருளாகத்தான் உள்ளது.

கோமிய ஆராய்ச்சி

கோமிய ஆராய்ச்சி

பல நூறாண்டுகளாக பாரம்பரிய மருத்துவத்தில் கோமியம் முக்கிய அங்கம் வகித்தாலும், அறிவியல் பூர்வமாக இவை எதுவும் நிரூபிக்கப்படவில்லை. சமீபத்தில் நடத்தப்பட்ட ஆராய்ச்சிகளில் திருப்புமுனையாக , 400 குஜராத்தின் கிர் இன மாடுகளின் சிறுநீரை ஆராய்ந்ததில் அதில் தங்கம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

கிர் இன பசுக்களின் சிறுநீரில் உள்ள 5100 சேர்மங்களில், 388 சேர்மங்கள் மருத்துவ தன்மை வாய்ந்தது என்றும், அதன் மூலம் பல நோய்களை குணப்படுத்தலாம் என்றும் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

நன்மைகள்

நன்மைகள்

கோமியத்தில் நுண்ணுயிர் எதிர்ப்பு சக்தி அதிகமாக உள்ளது. இதன்மூலம் நோய் பரப்பும் கிருமிகளை கொல்லும் ஆற்றல் கொண்டது. ஆயிர்வேதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள வாதம், பித்தம் மற்றும் கபம் எனப்படும் உடலின் சமநிலையில்லா தன்மையை குணப்படுத்தவல்லது கோமியம்.

இது உடலில் உள்ள குறைபாடுகளை நீக்கி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. மேலும் உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றவும் பயன்படுகிறது. புற்றுநோய், நீரிழிவு, மூளை மற்றும் இதய பிரச்சனைகள், சரும பிரச்சனைகள், தொழுநோய், வலிப்பு போன்ற பல்வேறு நோய்களுக்கு கோமியம் சிறந்த பலனளிக்ககூடய மருந்தாக உள்ளது.மேலும் காய்ச்சல், அனிமியா, நுரையிரல் மற்றும் செரிமான பிரச்சனைகளுக்கும் பயன்படுகிறது.

விவாதங்கள்

விவாதங்கள்

கடந்த பல நூறு ஆண்டுகளாக இந்திய பாரம்பரிய மருத்துவத்தில் கோமியம் அறுமருந்தாக பயன்பட்டு வருகிறது. ஆனாலும் அறிவியல் பூர்வமாக எதுவும் நிரூபிக்கப்படாததால் இன்னும் இது விவாதப்பொருளாக இருக்கிறது. இனிவரும் காலங்களில் கோமியத்தின் மகத்துவத்தை உணரும் வகையில் ஆய்வு முடிவுகள் வரும் என நம்புவோமாக.

பொருளாதாரம்

பொருளாதாரம்

எதுவாயினும், இந்த சிகிச்சை சுற்றுசூழலுக்கும், நம் பொருளாதாரத்திற்கும் மிகவும் உகந்தது. தற்போது நடந்து வரும் அறிவியல் ஆய்வுகளின் மூலம் இதுபோன்ற கோமியத்தின் பல சிறப்புகள் வெளிவரலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Are Health Benefits Of Drinking Cow Urine

Cow urine has been hailed as a panacea for many ailments in the ancient Indian scriptures and Ayurveda
Story first published: Friday, March 30, 2018, 18:06 [IST]
Desktop Bottom Promotion