For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பேய் படங்கள் பார்ப்பவர்களுக்கு மூளை பல மடங்கு வேலை செய்யுமாம்.. இன்னும் பல அறியப்படாத 9 உண்மைகள் இதோ

என்னதான் உள்ளுக்குள்ளே பயம் இருந்தாலும் திகில் படங்களை பார்ப்பதில் ஏனோ ஒரு அலாதி பிரியம்...! இந்த திகில் படங்களை பார்ப்பதில் எண்ணற்ற ஆரோக்கியங்கள் இருப்பதாக ஆராய்ச்சிகள் சொல்கிறது.

|

நாள் முழுக்க உழைத்தவர்கள் கலைப்பை போக்கி கொள்ள பல்வேறு விதமான பொழுதுபோக்கு அம்சங்களை நாடுவார்கள். சிலர் தொலைக்காட்சி பார்ப்பார்கள், சிலர் வெளியில் சென்று உலா வருவார்கள், சிலர் நண்பர்களுடன் நேரத்தை செலவிடுவார்கள். இப்படி ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வகையான விருப்பங்கள் இருக்கத்தான் செய்கிறது. இதில் சில வித்தியாசமான மனிதர்கள் இருப்பார்கள். அவர்களின் முழு பொழுதுபோக்கே படங்கள் பார்ப்பதுதான். எல்லா வகையான படங்களையும் வெளியான ஒரே வாரத்தில் பார்த்து முடித்து விட்டு அடுத்த வாரத்திற்கான பட வரவிற்கு காத்திருப்பார்கள்.

9 Surprising Health Benefits Of Watching A Scary Movie

குறிப்பாக திகில் வகையை சார்ந்த பேய் படங்களை பார்க்க எப்போதும் அதிகப்படியான மக்கள் விரும்புவார்கள். என்னதான் உள்ளுக்குள்ளே பயம் இருந்தாலும் திகில் படங்களை பார்ப்பதில் ஏனோ ஒரு அலாதி பிரியம்...! இந்த திகில் படங்களை பார்ப்பதில் எண்ணற்ற ஆரோக்கியங்கள் இருப்பதாக ஆராய்ச்சிகள் சொல்கிறது. இந்த பதிவில் திகில் படங்களை பார்ப்பதால் ஏற்படக் கூடிய சற்றே சுவாரசியமான 9 நன்மைகளை பற்றி தெரிந்து கொள்வோம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மூளையை சுறுசுறுக்க செய்யும்..!

மூளையை சுறுசுறுக்க செய்யும்..!

திகில் படங்களை பார்ப்பதால் மூளையானது நியூரோ ட்ரான்ஸ்மிட்டர்ட்ஸை (neurotransmitters) வெளியிட்டு, மூளையின் செயல் திறனை அதிகரிக்கிறது. அத்துடன் dopamine, serotonin, glutamate போன்ற ஹார்மோன்களை தூண்டி மூளையின் ஆரோக்கியத்திற்கு உதவுகிறது. அதே போல, எந்த ஒரு பிரச்சினையையும் எதிர் கொள்ளும் அளவிற்கு மனதில் அதிக தையிரியத்தை உண்டாக்குகிறது.

113 கலோரிகளை குறைகிறதாம்..!

113 கலோரிகளை குறைகிறதாம்..!

இது உண்மையில் வியக்கத்தக்க ஒரு தகவலாகத்தான் இருக்கிறது. நீங்கள் 90 நிமிட திகில் படத்தை பார்த்தால் உங்கள் உடலில் இருந்து 113 கலோரிகள் குறைகிறதாம். அதாவது, 30 நிமிடம் நடந்தால் எவ்வளவு கலோரிகள் குறையுமோ அந்த அளவிற்கு இது சமமாகும். இவை லண்டன் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்த ஆய்வின் முடிவே.

எதிர்ப்பு சக்திக்கும் திகில் படமே..!

எதிர்ப்பு சக்திக்கும் திகில் படமே..!

திகில் படங்களை பார்பவர்களுக்கு பல நன்மைகள் கிடைக்கும். அவற்றில் முதன்மையானது எதிரப்பு சக்தி மண்டலம் அதிக பலம் பெறுவதே. மன அழுத்தம் சார்ந்த ஆய்வில் இந்த அருமையான முடிவு கிடைத்தது. அதாவது, திகில் படம் பார்பவர்களுக்கு ரத்த ஓட்டம் உடலில் சீராகி, வெள்ளை ரத்த அணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும். இதனால் நோய் எதிர்ப்பு சக்தி மண்டலம் வலுவடையும்.

மன அழுத்தத்தில் இருந்து விடுபட...

மன அழுத்தத்தில் இருந்து விடுபட...

இன்று பலரும் அவதிப்படும் ஒரு மிக பெரிய பிரச்சினை இந்த மன அழுத்தம் தான். இனி இந்த தொல்லையில் இருந்து விடுபட திகில் படங்களை பார்த்தாலே போதும். இது முற்றிலும் அற்புதமான ஒரு உண்மைதான். திகில் படங்களை பார்த்தால், உடலில் அட்ரிலைன் (adrenaline) ஹார்மோன் வெளியாகும். மன அழுத்தத்தை போக்கும் இந்த ஹார்மோன் உடலில் வெளியாகினால் மன அழுத்தம் என்ற பிரச்சினை குணமடையும்.

போபியாக்களுக்கு (phobia) முற்றுப்புள்ளி..!

போபியாக்களுக்கு (phobia) முற்றுப்புள்ளி..!

மனிதனாக பிறந்த ஒவ்வொருவருக்கும் ஒரு வித பயம் இருக்கத்தான் செய்யும். சிலருக்கு பல்லியை கண்டால் பயம், சிலருக்கு உயரமான இடத்திற்கு சென்றால் பயம், சிலருக்கு மேடையில் பேச பயம்... இப்படி எண்ணற்ற பயங்கள் இருக்க கூடும். இவற்றையெல்லாம் குறைக்க திகில் படம் உதவுகிறதாம். இந்த படங்களை பார்த்தால் பலவித போபியாக்கள் குணமடையுமாம்.

உறவில் அதிக நெருக்கத்தை தருமாம்..!

உறவில் அதிக நெருக்கத்தை தருமாம்..!

பொதுவாக பல காதல் ஜோடிகளின் ஒரு வித உத்தியாகவே இந்த திகில் படங்கள் கருதப்படுகிறது. பலர் தன் இணையுடன் திகில் படங்களை பார்க்க செல்வதற்கு முதல் காரணம் அவர்களுக்குள் இருக்கும் நெருக்கம் அதிகம் ஆக வேண்டும் என்பதற்காவே. இது சுவாரசியமான உண்மையும் கூட. திகில் படங்கள் உங்கள் அன்புக்குரியவரை உங்களுடன் அதிக நெருக்கத்தை ஏற்படுத்தும்.

தயக்கத்தை போக்கி, மகிழ்வை தரும்..!

தயக்கத்தை போக்கி, மகிழ்வை தரும்..!

உடலின் ஆரோக்கியம், உளவியல் சார்ந்த எண்ணங்களின் வெளிப்பாடாகவே கருதப்படுகிறது. நீங்கள் அதிகம் தயக்கம் கொண்டவராக இருந்தால் இனி அதனை போக்க திகில் படங்களை பாருங்கள். திகில் படங்களை பார்த்தால் தயக்கம், பயம், குழப்பம் போன்றவை நீங்கும் என்றே பல அறிவியல் அறிஞர்களும் கூறுகின்றனர். மேலும் திகில் படங்களை பார்த்து முடித்த பிறகு மனம், மகிழ்ச்சி அடையுமாம்.

உங்கள் மனதின் பயங்களை போக்க...

உங்கள் மனதின் பயங்களை போக்க...

திகில் படங்களை பார்ப்பவர்களுக்கு இந்த நன்மையும் கூடவே கிடைக்கிறது. எந்த அளவிற்கு திகில் படங்களை பார்க்கிறோமோ அதே அளவிற்கு பயங்களை நேருக்கு நேர் துணிச்சலுடன் சமாளிக்கின்றோம் என்று அர்த்தமாம். இந்த வகை படங்கள் மனதளவில் உங்களை மிக பலம் கொண்டவராக மாற்றுமாம்.

முதலும் கடைசியுமாக...!

முதலும் கடைசியுமாக...!

நீங்கள் உண்மையிலேயே மேற்சொன்ன நன்மைகளை அடைய வேண்டுமென்றால், நல்ல திகில் கொண்ட ஒரு படத்தை பாருங்கள். திகில் படங்களை நகைசுவையுடன் கொண்டு செல்லும் படங்களை பார்த்தால் இவற்றின் பலன்கள் கிடைக்காது. குறிப்பாக நண்பர்களுடன் இந்த வகையான திகில் படங்களை பார்த்து மகிழுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

9 Surprising Health Benefits Of Watching A Scary Movie

There's enough research out there to prove that horror films might actually be good for your health and well being.
Desktop Bottom Promotion