For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்த களிமண்ணை நீரில் கலந்து குடித்தால் 100 ஆண்டுகள் ஆயுளுடன் வாழ்வார்களாம்...

நாம் எப்பொழுதும் சுத்தமாக உடலை வைத்திருப்பதும் ஒரு விதத்தில் ஆரோக்கியத்தின் மேம்பாடாக இருந்தால் கூட சின்னக் குழந்தைகள் மாதிரி வெளியே விளையாடுவதும், வெறுங் காலில் நடப்பதும் கூட நம் வாழ்நாளை நீட்டுக்கும

By Suganthi Rajalingam
|

நாம் ஆரோக்கியமாக நீண்ட காலம் வாழ்வதற்கு நல்ல உணவுப் பழக்கம், மன அழுத்தம் இல்லாத வாழ்க்கை, உடற்பயிற்சி, தியானம் போன்றவற்றை மேற்கொள்வோம். இந்த மாதிரியான விஷயங்களுக்கு இடையில் சில சின்னஞ் சிறிய சாதாரண விஷயங்கள் கூட நாம் நீண்ட காலம் வாழ நமக்கு உதவி செய்கிறது என்று உடல் நல நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

நாம் எப்பொழுதும் சுத்தமாக உடலை வைத்திருப்பதும் ஒரு விதத்தில் ஆரோக்கியத்தின் மேம்பாடாக இருந்தால் கூட சின்னக் குழந்தைகள் மாதிரி வெளியே விளையாடுவதும், வெறுங் காலில் நடப்பதும் கூட நம் வாழ்நாளை நீட்டுக்கும் ஒரு விஷயமாக உள்ளது என்று மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.

how to live longer healthy

அப்படி நாம் நீண்ட காலம் ஆரோக்கியமாக வாழ பயன்படும் சில பழக்க வழக்கங்களை பற்றி இப்பொழுது பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
களிமண் சாப்பிடுதல்

களிமண் சாப்பிடுதல்

நமது உடல் நலத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க ஏராளமான பானங்கள் உள்ளன. கோதுமை புல் பானம் , இஞ்சி பானம் மற்றும் ஆப்பிள் சிடார் வினிகர் போன்ற ஏராளமான சத்துக்கள் அடங்கிய பானங்கள் உள்ளன. ஆனால் இதை விட நீங்கள் விலை மலிவான ஒரு மிகவும் ஆரோக்கியமான பானம் என்றால் அது களிமண் தான். இது ஒரு புரோபயோடிக் சூப்பர் ஸ்டார் மாதிரி செயல்படும் பானம் ஆகும். ஊட்டச்சத்து நிபுணரான மற்றும் "ஒயில்டு மெடிடேரியனின்" ஆசிரியரான ஸ்ஸ்டெல்லா மெட்கோவாஸ், கூறுகிறார். நமக்கு சீக்கிரமே வயதாகுவதற்கு காரணம் குடலில் இருக்கும் கெட்ட பாக்டீரியாக்கள் தான் என்று அவர் கூறுகிறார். எனவே இந்த புரோபயோடிக் உணவுகள் குடலில் உள்ள கெட்ட பாக்டீரியாக்களை ஒழித்து சீக்கிரம் ஏற்படும் வயிறு முதிர்ச்சியை தடுக்கிறது.

களிமண் மட்டுமே புரோபயோடிக் உணவல்ல. பூண்டு, வெங்காயம் மற்றும் அஸ்பாரகஸ் போன்ற உணவுகளும் நமது உடலுக்கு நல்லது என்று டாக்டர். சிராபெர் கூறுகிறார். எனவே சமச்சீரான அளவில் உணவுகளை எடுத்துக் கொள்வது இன்னும் நல்லது.

மூளை சலவை

மூளை சலவை

மூளை விஞ்ஞானிகள் என்ன கூறுகிறார்கள் என்றால் எல்லா நரம்பு சம்பந்தமான நோய்களும் செல்களில் தேங்கியிருக்கும் கழிவுப் பொருட்களால் ஏற்படுகிறது. எனவே மூளையை சுத்தம் செய்து ஆரோக்கியமாக வைத்திருக்க வேண்டும். மூளைச் சுத்திகரிப்பு உங்கள் உடல்நலத்தை மேம்படுத்துவதற்கு உதவுகிறது," என்று ஹிலாரி டினாபில் எல்.எம்.டி, சி.எஸ்.டி, சான்றளிக்கப்பட்ட க்ராணியசாகரல் தெரபிஸ்ட் சொல்லுகிறார். இந்த மூளையில் உள்ள செல்லுலார் கழிவுகளை க்ளைபேட்டிக் சிஸ்டம் மூலம் இரவில் தூங்கும் போது அகற்ற வேண்டும் என்று ரோசெஸ்டர் பல்கலைக் கழகத்தின் ஆராய்ச்சியானது தெரிவிக்கிறது.

நல்ல ஆழ்ந்த தூக்கம் உங்கள் மூளையை புத்துணர்வாக்கி உடலையும் மனதையும் ஆரோக்கியமாக வைக்க உதவும். எனவே மூளையில் உள்ள தேவையற்ற கழிவுச் சிந்தனைகளால் தூக்கம் வராமல் தவிப்பதால் உடல் நலமும் பாதிப்படைகிறது. எனவே நல்ல தூக்கம் நீண்ட ஆயுள் கிடைக்கும்.

நேட்டி பாட்

நேட்டி பாட்

உங்கள் மூக்கை சுத்தப்படுத்த இந்த நேட்டி பாட் முறை பயன்படுகிறது. இது பார்ப்பதற்கு சிறிய பானை வடிவில் கெட்டில் போன்று இருக்கும். இதில் வெதுவெதுப்பான நீரை ஊற்றி சற்று தலையை சாய்த்து மூக்கின் ஒரு துவாரத்தின் வழியாக ஊற்றும் போது அது மறு துவாரத்தின் வழியாக வெளியேறும். இந்த முறை மூலமாக மூக்கு சுத்தமாகுதல், சைனஸ் பிரச்சினைகள், சலதோஷம் பிடிக்காமல் இருத்தல், மூச்சிக்குழாய் தொற்று ஏற்படாமல் இருத்தல் போன்ற பிரச்சினைகளை சரி செய்ய இயலும் என்று பெஸ் பெர்கர், ஆர்.டி., சி.டி.என் ஊட்டச்சத்து நிபுணர் கூறுகிறார். இதனால் நோய் தொற்றும் குறைந்து உடம்பு ஆரோக்கியமாக இருக்கும். நம்மால் நீண்ட காலம் வாழ முடியும்.

தூசியில் விளையாடுதல்

தூசியில் விளையாடுதல்

குழந்தைகள் என்றாலே துறுதுறுவென தூசிக்குள்ளும் குப்பைக்குள்ளும் விளையாடும். உண்மை என்னவென்றால் இப்படி தூசிக்குள் விளையாடும் போது அவர்களின் நோயெதிர்ப்பு மண்டலம் தூண்டப்படுகிறது என்று டாக்டர். சிராபெர் கூறுகிறார். இதற்கு காரணம் அந்த தூசிகளில் உள்ள பாக்டீரியா, வைரஸ் மற்றும் நுண்ணுயிர் கிருமிகள் குழந்தையின் உடலை தாக்கும் போது தானாகவே நம் நோயெதிர்ப்பு மண்டலம் போரிட ஆரம்பித்து விடுகிறது. இதனால் அவர்களின் நோயெதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கிறது. எனவே இனி குழந்தைகள் மட்டுமல்ல பெரியவர்களும் இயற்கையோடு கொஞ்சம் நேரம் வெளியில் செலவழிக்கும் போது நாம் நீண்ட காலம் ஆரோக்கியமாக வாழலாம்.

வெறும் காலில் நடத்தல்

வெறும் காலில் நடத்தல்

நாம் வெறும் காலில் என்றைக்காவது புல்வெளியில் அல்லது வெளியில் நடைபயிற்சி மேற்கொண்டு இருக்கிறோமா என்றால் இல்லை என்பது தான் உண்மை. ஆனால் நாம் தினமும் கொஞ்சம் நேரமாவது வெளியில் புல்வெளி தரையில் நடக்கும் போது நம் கால்கள் இயற்கை ஏற்படும் தடைக்கு பழக்கப்படு கின்றனர். நீங்கள் காலணிகள் போட்டு நடக்கும் போது அந்த மாற்றங்களை நம் பாதங்கள் உணர்வதில்லை என்று டாக்டர் சிராபெர் கூறுகிறார். நிறைய மக்கள் காலணி அணியாமல் வெறும் காலில் நடப்பதால் அவர்களின் ஆரோக்கியம் மேம்படுகிறது. காரணம் நம் பாதங்கள் நிலத்தில் உள்ள எலக்ட்ரான்களை ஈர்த்து மன அழுத்தத்தை குறைத்து உடம்பு வலியில்லாமல் நிம்மதியான உறக்கத்தை தருகிறது. இதைப் பற்றிய ஆராய்ச்சி தகவல்கள் சுற்றுச்சூழல் மற்றும் சுகாதார நாளிதழ்களில் வெளியிடப்பட்டுள்ளது. எனவே இனி நம் முன்னோர்கள் மாதிரி வெறும் காலில் கொஞ்ச நேரமாவது காலார புல்வெளியில் நடங்கள். நம் ஆயுளும் நீடிக்கும்.

பாசிகளை உண்ணுதல்

பாசிகளை உண்ணுதல்

நீங்கள் ஒரு ஆரோக்கியமான உணவு எடுத்துக் கொள்ள நினைத்தால் கண்டிப்பாக பாசிகளை (ஆல்கா) எடுத்து கொள்ளுங்கள். நம் பூமியிலேயே மிகச் சிறந்த உணவு என்றால் அது இந்த பாசிகள் தான். இதில் 40 க்கு மேற்பட்ட விட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உள்ளன. அது போக இதில் அமினோ அமிலங்கள், ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் குளோரோபைல் (உடலிருந்து நச்சுக்களை மலம் வழியே வெளியேற்றும் ஒரு பொருள்) போன்றவைகள் உள்ளன. இவைகள் உங்கள் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் சிறந்தது. எனவே நீங்கள் நீண்ட காலம் ஆரோக்கியமாக வாழ நினைத்தால் அதற்கு இந்த பாசிகள் உதவும்.

நகம் கடித்தல்

நகம் கடித்தல்

நாம் எதாவது ஒன்றை பற்றி யோசிக்க ஆரம்பித்து விட்டாலே போதும் நகம் கடிக்க ஆரம்பித்து விடுவோம். இதில் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால் நகம் கடிக்கும் பழக்கம் கூட உங்களை நீண்ட காலம் வாழச் செய்யும் என்பது தான். நீங்கள் நகம் கடிக்கும் போது நகத்தில் உள்ள கிருமிகள் நேரடியாக உடலுக்குள் செல்லும் போது உங்கள் நோயெதிர்ப்பு மண்டலம் மேம்படுகிறது என்று டாக்டர். டேவிட் க்ரானுரர் நியூயார்க் அறுவை சிகிச்சை நிபுணர் கூறுகிறார். எனவே அடிக்கடி உங்கள் கைகளை சுத்தம் செய்வதும் நல்ல பாக்டீரியாக்களை அழித்து விடும். அதே நேரத்தில் எப்பொழுதும் தூசிக்குள் விளையாடி விட்டு அடிக்கடி அதிகமாக நகம் கடிப்பதும் தவறானது.

26 நிமிடம் குட்டி தூக்கம்

26 நிமிடம் குட்டி தூக்கம்

உங்கள் ஆரோக்கியத்தை மேப்படுத்த விரும்பினால் உங்களுக்கு பொருத்தமான தலையணையை கட்டிக் கொண்டு ஒரு குட்டி தூக்கம் போடுங்கள். ஆமாங்க 18-26 நிமிட குட்டி தூக்கம் உங்கள் உடல் நலத்தை மேம்படுத்தும் என்று டாக்டர் ரூபினா தகீர் கூறுகிறார். இந்த குட்டி தூக்கம் உங்கள் மூளையை சுறுசுறுப்பாக்கி நல்ல விழிப்புணர்வு, சிந்தனை மற்றும் செயல்பாட்டை அதிகரிக்கும்.

நீங்கள் இதை உங்கள் பணியிடங்களில் மதிய இடைவேளையில் இருக்கையில் அமர்ந்து கொண்டே செய்யலாம். இதன் மூலம் உங்கள் ஆற்றலை மறுபடியும் புதுப்பித்து உற்சாகமாக செயல்படுவீர்கள் என்று தகீர் கூறுகிறார்.

லெமன் வாட்டர்

லெமன் வாட்டர்

நீங்கள் உணவு சாப்பிடுவதற்கு முன் ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீரில் லெமன் சாறு கலந்து குடித்து வந்தால் கல்லீரலில் ஏற்படும் தொற்று அழற்சி குறைந்து உடல் ஆரோக்கியமாக இருக்கும் என்று செரிஸ் மார்வின் சுகாதார நிபுணர் கூறுகிறார். இதனுடன் உங்கள் ஆரோக்கியமான உணவுப் பழக்கம், மன அழுத்தம் இல்லாத வாழ்க்கை, உடற் பயிற்சி மற்றும் போதுமான உறக்கம் இவற்றுடன் வாழ்ந்து வந்தால் நீங்கள் நூறு வயது வரை ஆரோக்கியமாக வாழலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

9 Surprising Habits That May Help You Live Longer

By incorporating a few of these tips and tricks into your routine — after checking with your doctor, of course — you could be upping your chances ofliving a longer life, simply by dint of improving your health. So, if you want to drink clay, go for it. And if you want to walk around barefoot outside or play in the dirt, have at it.
Desktop Bottom Promotion