For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்த 5 இடத்த தொட்டாலே போதும்... தூக்கம் சும்மா பிச்சிக்கிட்டு வருமாம்...

தூக்கமின்மை இன்றைய காலத்தில் பலருக்கு வரும் முக்கிய பிரச்சனையாக உள்ளது. இது 7 முதல் 9 மணி நேரம் வரை தேவைப்படும் அவசியமான ஆழ்ந்த உறக்கத்தை தடுக்கிறது.

|

தூக்கமின்மை இன்றைய காலத்தில் பலருக்கு வரும் முக்கிய பிரச்சனையாக உள்ளது. இது 7 முதல் 9 மணி நேரம் வரை தேவைப்படும் அவசியமான ஆழ்ந்த உறக்கத்தை தடுக்கிறது.

health

சிலருக்கு சில நாட்கள் முதல் சில வாரங்கள் வரை நீடிக்கும் குறுகிய கால தூக்கமின்மை வரலாம், ஆனால் சிலருக்கோ பல மாதங்கள் கூட படுத்துகிறது தூக்கமின்மை.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தூக்கமின்மை

தூக்கமின்மை

உங்களுக்கு எந்த வகை தூக்கமின்மை இருந்தாலும் கவலை வேண்டாம். அக்குபிரஷர் மூலம் தீர்வு காணலாம். அக்குபிரஷர் என்கிற தொடு சிகிச்சை உடலில் உள்ள சில அழுத்தப்புள்ளிகளை தூண்டி உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. தொடு சிகிச்சை செய்ய நிபுணர்கள் உள்ளனர். ஆனால் தூக்கமின்மையை தடுக்கும் 5 முக்கிய அழுத்தப்புள்ளிகளை எவ்வித சிரமமுமின்றி நீங்களாகவே தூண்டலாம். எப்படினு தெரிஞ்சுக்கணுமா? மேற்கொண்டு படிங்க..

ஸ்பிரிட் கேட்

ஸ்பிரிட் கேட்

இந்த புள்ளி வெளிப்புற மணிக்கட்டு மடிப்பு பகுதியில் சுண்டு விரலுக்கு கீழே அமைந்துள்ளது.

1. இந்த இடத்தில் இருக்கும் சிறிய, வெற்று இடத்தில் மென்மையாக, வட்டமாகவோ மேலும் கீழுமாகவோ அழுத்தம் கொடுக்கவும்.

2. 2 முதல் 3 நிமிடங்கள் தொடர்ந்து அழுத்தம் தரவும்.

3. அந்த புள்ளியின் இடது புறம் சில நிமிடங்களும், வலது புறம் சில நிமிடங்களும் அழுத்தி பிடிக்கவும்.

4. இன்னொரு கையிலும் இதை செய்யவும்.

இந்த புள்ளி மனதை அமைதி படுத்துகிறது. இதனால் நன்கு தூக்கம் வரும்.

த்ரீ இன் இன்டர்செக்ஷன்

த்ரீ இன் இன்டர்செக்ஷன்

இந்த புள்ளி கணுக்காலுக்கு சற்று மேலே உட்புற காலில் அமைந்துள்ளது.

தூக்கமின்மை சிகிச்சை

1. உங்கள் கணுக்காலில் அதிகபட்ச புள்ளியை கண்டுபிடிக்கவும்.

2. கணுக்காலுக்கு மேலே நான்கு விரல் அங்குலங்கள் எண்ணுங்கள்.

3. உங்கள் அடி கால் எலும்புக்கு (கால்விரல்) பின்னால் ஆழமான அழுத்தத்தை பயன்படுத்துங்கள். நான்கு முதல் ஐந்து விநாடிகளுக்கு வட்டமான அல்லது மேல்-கீழ் இயக்கங்கள் மூலம் மசாஜ் செய்யவும்.

தூக்கமின்மையுடன் கூடுதலாக, இந்த அழுத்தம் புள்ளியை தூண்டுவது இடுப்பு பிரச்சனை மற்றும் மாதவிடாய் கோளாறுகளை சரி செய்ய உதவும்.

பப்லிங் ஸ்ப்ரிங்

பப்லிங் ஸ்ப்ரிங்

இந்த புள்ளி காலடியில் உள்ளது. இது உள்நோக்கி உங்கள் கால்விரல்களை உள்ளே தள்ளும் போது உங்கள் காலின் நடுவில் ஏற்படும் சிறிய அழுத்தம்.

1. முட்டிகளை மடக்கி முதுகு தரையில் படும்படி படுத்துக்கொள்ளவும். இவ்வாறு செய்யும்போது கால்களை கைகளால் தொட முடியும்.

2. உங்கள் கையில் ஒரு காலை எடுத்து உங்கள் கால் விரல்களை மென்மையாக சுருட்டுங்கள்.

3. உங்கள் பாதத்தின் அடியில் ஏற்படும் அழுத்தத்தை உணர்ருங்கள்.

4. சுறுசுறுப்பான அல்லது மேல்-கீழாக ஒரு சில நிமிடங்களுக்கு இந்த மசாஜ் செய்யவும்.

இந்த புள்ளி உங்கள் ஆற்றலை நிலைப்படுத்தி தூக்கத்தை தூண்டுவதாக நம்பப்படுகிறது.

இன்னர் பிரான்டியர் கேட்

இன்னர் பிரான்டியர் கேட்

இது தசை நாண்களுக்கு நடுவில் உள்-முழங்கையில் அமைந்துள்ளது.

1. உள்ளங்கையை பார்த்தபடி கைகளை திருப்பிக் கொள்ளுங்கள்.

2. ஒரு கையை எடுத்து மணிக்கட்டு மடிப்பிலிருந்து மூன்று அங்குலங்கள் எண்ணவும்.

3. இந்த இடத்தில் இரு தசைநார்களுக்கு இடையே கீழ்நோக்கி ஒரு நிலையான அழுத்தம் கொடுக்கவும்.

4. நான்கு அல்லது ஐந்து விநாடிகளுக்கு அப்பகுதியில் வட்ட அல்லது மேல்-கீழாக மசாஜ் செய்யவும்.

நன்றாக தூங்குவதற்கு உதவுவது மட்டுமின்றி வாந்தி, வயிற்று வலி, தலை வலி போன்றவற்றுக்கும் இந்த புள்ளி நிவாரணம் தரும்.

விண்ட் பூல்

விண்ட் பூல்

இது உங்கள் கழுத்துக்கு பின்னால் உள்ளது. உங்கள் காதுகளுக்கு பின்னால் உள்ள மஸ்டாய்ட் எலும்பை தொடர்ந்து கழுத்து தசைகள் மண்டையோடு இணைக்கிற இடத்திற்கு அருகில் உள்ள பள்ளத்தை ஒட்டி இந்த புள்ளி இருக்கும்.

தூக்கமின்மை சிகிச்சை

1. இரு கைகளையும் ஒன்றாக இணைத்து, விரல்களை பிணைத்து மெதுவாக உள்ளங்கைகளை மட்டும் திறக்கவும்.

2. கட்டை விரலை கொண்டு உங்கள் மண்டை ஓட்டின் மீது வட்டமாகவோ மேலும் கீழுமாகவோ 4 முதல் 5 நொடிகள் மசாஜ் செய்யவும்.

3. மசாஜ் செய்து கொண்டே ஆழமாக மூச்சு விடவும்.

இந்த அழுத்தத்தை தூண்டுவது, இருமல் போன்ற சுவாச பிரச்சனைகளை குறைக்க உதவும். இது மன அழுத்தத்தை குறைப்பதோடு, மனதை அமைதிப்படுத்தவும் செய்யும்.

ஆராய்ச்சி என்ன சொல்கிறது?

ஆராய்ச்சி என்ன சொல்கிறது?

அக்குபிரஷர் ஆயிரக்கணக்கான வருடங்களாக நடைமுறையில் உள்ளது. ஆனால் ஆராச்சியாளர்கள் சமீப காலமாக தான் மருத்துவ சிகிச்சையில் அதன் செயல்திறனை மதிப்பீடு செய்ய ஆரம்பித்துள்ளனர். தூக்கமின்மையில் அக்குபிரஷர் சிகிச்சையின் செயல்பாடு குறித்த ஆய்வுகள் கம்மி தான். ஆனால் அவற்றின் முடிவுகள் கச்சிதமானவை.

உதாரணமாக, 2010ல் நடந்த ஒரு ஆய்வில் தூக்கமின்மை பிரச்சனை கொண்ட 25 பேர் பங்கேற்றனர். அக்குபிரஷர் சிகிச்சை ஐந்து வாரங்களில் அவர்களது தூக்கத்தின் தரத்தை மேம்படுத்தியது. இதன் தாக்கம் சிகிச்சையை நிறுத்திய பிறகும் இரண்டு வாரங்கள் வரை நீடித்தது.

இதே போன்ற முடிவுகள் பல சிறு சிறு ஆய்வுகளில் கிடைத்துள்ளன. சிறிய ஆய்வுகள் என்பதால் போதுமான உயர்தர டேட்டா இல்லாததால் இதன் மூலம் எந்தவொரு உறுதியான முடிவையும் பெற முடியவில்லை.

இருப்பினும், அக்குபிரஷர் தூக்கத்தின் தரத்தை குறைக்கும் என்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை, எனவே நீங்கள் ஆர்வமாக இருந்தால் நிச்சயமாக இது மதிப்புக்குரிய சிகிச்சையே.

எப்போது டாக்டரை பார்க்க வேண்டும்?

எப்போது டாக்டரை பார்க்க வேண்டும்?

உங்கள் உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கு தூக்கம் மிக முக்கியமானது.

தொடர்ந்து போதுமான தூக்கம் இல்லாத போது பல பிரச்சனைகள் உடலில் தோன்றுகின்றன.

பலவீனமான நோய் எதிர்ப்பு சக்தி

உடல் எடை அதிகரிப்பு

குறைந்த அறிவாற்றல்

சில வாரங்களைத் தாண்டி தூக்கமின்மை தொடர்ந்தால், கண்டிப்பாக மருத்துவரை பார்க்கவும். சிகிச்சை தேவைப்படும் வேறு ஏதாவது பிரச்சனையாக இருக்கலாம்.

குறிப்பு

குறிப்பு

பல மனிதர்கள் தங்கள் வாழ்வின் ஏதாவதொரு சூழலில் தூக்கமின்மையால் பாதிக்கப்படுகின்றனர். நீங்கள் உங்கள் தூக்கத்தை மேம்படுத்த இயற்கையான முறையில் தீர்வைத் தேடுகிறீர்கள் என்றால், படுக்கைக்குச் செல்வதற்கு முன் 15 நிமிடங்கள் அக்குபிரஷர் செய்யுங்கள்.

நீண்ட கால தூக்கமின்மை இருந்தால் அதற்கான காரணத்தை கண்டிப்பாக கண்டறியவும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

5 Pressure Points for Sleep

While you can have acupressure done by a professional, you can also try stimulating pressure points on your own.
Desktop Bottom Promotion