For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஆசனவாயிலும் பிறப்புறுப்பிலும் அடிக்கடி அரிக்குதா?... அது ஏன்னு நீங்க தெரிஞ்சிக்க வேண்டாமா?

ஜாக் நமைச்சல் என்பது ஒரு பூஞ்சை தொற்று நோயாகும். இத்தொற்று ஈரப்பற்று உள்ள உடலின் பாகங்களான குதம், யோனி, பிட்டம் மற்றும் உள் தொடைகளில் கடும் நமைச்சலை உண்டாக்கும்.

By Ashok Raj R
|

ஜாக் நமைச்சல்னா வேற ஒன்னுமில்லங்க... அந்தரங்கப் பகுதிகளில் உண்டாகிற நமைச்சல் தான். ஜாக் நமைச்சல் என்பது ஒரு பூஞ்சை தொற்று நோயாகும். இத்தொற்று ஈரப்பற்று உள்ள உடலின் பாகங்களான குதம், யோனி, பிட்டம் மற்றும் உள் தொடைகளில் கடும் நமைச்சலை உண்டாக்கும்.

நமைச்சலோடு இது இடுப்பு பாகங்களில் சிவந்த தடிப்புகளையும் உண்டாக்கும். வெடித்த செதில் செதிலான தோல்கள், தொடை மற்றும் ஆண்/பெண் குறி பாகங்களில் கடும் நமைச்சல் மற்றும் எரிச்சல் ஆகியவை இதன் அறிகுறிகளாகும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஜாக் நமைச்சல்

ஜாக் நமைச்சல்

பொதுவாக நீரிழிவு நோய், குறைந்த நோய் எதிர்ப்பு தன்மை மற்றும் அதிக உடல் பருமன் உள்ளவர்களுக்கு ஜாக் நமைச்சல் உண்டாகலாம். இத்தொற்று பொதுவாக ஈராமான உடைகளை அணிவதாலும், சொறிவதலும், பூஞ்சை தொற்றினாலும், ஒவ்வாமை, அதிக வியர்வை மற்றும் அதிகமான பாக்ட்டீரியா பெருக்கதினாலும் உண்டாகலாம். மேலும் அதிக வெப்பம், ஈரப்பதம், உடல்பயிற்ச்சி மற்றும் சுகாதரமற்ற பொது கழிப்பிடங்களை உபயோகித்தல் அகிய காரணிகளும் இந்நோயை உண்டாக்கலாம். நமக்கு இதொற்றை எளிமையான வீட்டு மருத்துவ முறைகளை கொண்டு எவ்வாறு தீர்க்கலாம் என்பதை காணலாம்.

 சுத்தம்

சுத்தம்

பாதிக்கப்பட்ட பாகங்களை தூய்மையான குளிர்ந்த தண்ணீர் கொண்டு கழுகி பின் துணி (அ) துண்டு கொண்டு ஈரத்தை மென்மையாக உலர்த்தவும் (இதற்காக நாம் பிரத்யேக துணியை உபயோகிக்கலாம், இதன் மூலம் தொற்று பரவுவதை தடுக்கலாம்)

ஆப்பிள் வினிகர் சாறு

ஆப்பிள் வினிகர் சாறு

2 தேக்கரண்டி ஆப்பிள் வினிகர் சாற்றை 2 கப் வெதுவெதுப்பான தண்ணீரில் கலந்து பதிக்கப்பட்ட பாகங்களில் தடவி உலர வைக்கவும். இதுபோல ஒரு நாளைக்கு 2 (அ) 3 முறை செய்யவும். ஆப்பிள் வினிகர் சாற்றின் அற்புதமான பூஞ்சை மற்றும் பாக்ட்டீரியா எதிர்ப்பு ஆற்றல் பல தோல் நோய்களை குணப்படுத்தும் திறன் வாய்ந்தது.

ஆல்கஹால்

ஆல்கஹால்

90% ஐசோப்ரொபைல் அல்கஹாலை, சுத்தமான பஞ்சு (அ) துணி கொண்டு பதிக்கப்பட்ட பகுதிகளில் மென்மையாக ஒரு நாளில் பல முறை தடவவும் இது பூஞ்சைகளை கொல்லும் ஆற்றல் கொண்டது.

லிஸ்டரின் (Listerine)

லிஸ்டரின் (Listerine)

ஒரு தூய்மையான துணி கொண்டோ (அ) பஞ்சு கொண்டோ, லிஸ்டரின் வாய் கழுகும் திரவத்தை பாதிக்கப்பட்ட பகுதிகளில் தடவவும். சிறிது எரிச்சலை கொடுத்தாலும் இதன் பூஞ்சை, பாக்ட்ரியா நோய் எதிர்புத்தன்மை மற்றும் கிருமி நாசினி தன்மை விரைவில் நல்ல நிவாரணத்தை கொடுக்கும்.

வெள்ளை வினிகர்

வெள்ளை வினிகர்

வெள்ளை வினிகரையும் 1 பங்குடன் 4 பங்கு தண்ணீரை கலந்து ஒரு நாளைக்கு இறு முறை பதிக்கப்பட்ட இடங்களில் தடவி உலர விடவும், கழுக அவசியம் இல்லை (அ) சம பங்கு தேங்காய் எண்ணெய் மற்றும் வெள்ளை வினிகர் கலந்து பதிக்கப்பட்ட இடங்களில் தடவவும். நான்கு மணிகளுக்கு பிறகு தண்ணீர் கொண்டு கழுகி உலர்த்தவும்.

ப்ளீசிங்

ப்ளீசிங்

கால் கப் ப்ளீசிங் பொடியை தண்ணீரில் கலந்து பாதிக்க பட்ட பகுதிகளில் தண்ணீர் கலந்து தடவி உளறவிடலம். பின் சுமார் 15 நிமிடங்கள் கழிந்து கழுகிய பின் ஒரு உலர்த்த சுத்தமான துணி கொண்டு மென்மையாக துடைத்து உலர்த்தவும். இதுபோல பலமுறை தொற்று முழுமையாக மாறும் வரை செய்யலாம்.

உப்பு குளியல்

உப்பு குளியல்

200 கிராம் உப்பை நல்ல தண்ணீரில் கலந்து உடம்பை கழுகவும், சுமார் 3௦ நிமிடங்களுக்கு பிறகு நல்ல தண்ணீரில் குளிக்கவும். ஒரு நாளைக்கு பல முறை இதை செய்வதம் மூலம் நமைச்சல் குறையும். இம்முறை மூலம் நமைச்சலோடு கொப்புலங்களையும் நாம் குணப்படுத்தலாம்.

வெங்காயம்

வெங்காயம்

வெங்கதை தண்ணீரில் வேகவைத்து கூழ் போல அரைத்து பதிக்கப்பட்ட பகுதிகளில் தடவி 3௦ நிமிடங்களுக்கு பிறகு கழுகி உலர்த்தலாம். வெங்காய கூழுக்கு பதில் வெங்காய எண்ணெய் (அ) சாரு கொண்டும் இதனை செய்யலாம்.

பூண்டு

பூண்டு

பூண்டில் அதிக பூஞ்சை எதிர்ப்புத்தன்மை உள்ளது எனவே பூண்டு விழுதை ஒரு நாளைக்கு 15 நிமிடங்கள் தடவ செய்வதால் பலன் கிடைக்கும் (அ) பூண்டை வறுத்து ஒலிவ் எண்ணையில் கலந்தும் உபயோகிக்கலாம் (குறிப்பு: மென்மையான சருமம் கொண்டவர்கள் இம்முறையை தவிர்க்கவும் ஏனனில் பூண்டு எரிச்சலை உண்டாக்கலாம்).

பேக்கிங் சோடா

பேக்கிங் சோடா

கால் கப் பேக்கிங் சோடாவை பாதிக்க பட்ட பகுதிகளில் தண்ணீர் கலந்து தடவி உலர வைக்கவும் பின் கழுகி உலர விடவும். (ஹைட்ரஜன் பெராக்சைடு உபயோகித்தும் இதை செய்யலாம்)

தேங்காய் எண்ணெய்

தேங்காய் எண்ணெய்

ஒரு நாளைக்கு 3 (அ) 4 முறை பாதிக்க பட்ட பகுதிகளை தூய நீர் கொண்டு சுத்தம் செய்து பின்னர் தேங்காய் எண்ணெய் தடவலாம். தேங்காய் எண்ணெய்யை பல முறை இதுபோல பதிக்கப்பட்ட பகுதிகளில் தடவுவதன் மூலம் நல்ல குணத்தை காணலாம்.

சோளமாவு

சோளமாவு

சோளமாவை பதிக்கப்பட்ட பகுதிகளில் தடவி அப்பகுதிகளில் உள்ள ஈரப்பதத்தை தடுக்கலாம் ஏனெனில் சோளமாவு ஈரப்பதத்தை உறிஞ்சும் தன்மையால் நோய் பரவாமல் தடுக்கும். இதை 3 மணிக்கு ஒரு முறையோ (அ) ஈரப்பதத்தை உணரும்போதோ செய்யலாம்.

ஒட்ஸ் குளியல்

ஒட்ஸ் குளியல்

ஓட்ஸ் குளியல் ஜாக் சரும நோய்க்கு நல்ல ஒரு தீர்வை தரும். 2 கப் ஓட்ஸ் மீல் பொடியை தண்ணீரில் கலந்து ஒவ்வொரு இரவும் சுமார் 2௦ நிமிடங்கள் உடம்பை கழுகலாம்.

பேபி பவுடர்

பேபி பவுடர்

பேபி பவுடர் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஈரத்தன்மையில் இருந்து மாற்ற உதவும். இதன் மூலம் சருமத்திற்கு எந்த பாதிப்பும் இல்லை மேலும் மென்மையான சருமம் கொண்டவர்கள் பேபி பௌடரை பாதிக்கப்பட்ட இடங்களில் அடிகடி தடவலாம் இதனை பாதிப்பு மாறும் வரை பலமுறை செய்வதன் மூலம் குணம் பெறலாம்.

சூரிய வெளிச்சம்

சூரிய வெளிச்சம்

சூரிய வெளிச்சத்தில் தினமும் நடப்பதன் மூலம் இயற்கையிலேயே பூஞ்சைகள் மற்றும் பாக்டரியவை கொல்லலாம். வாரத்திற்கு ஒரு முறையாவது நமது உடலை சூரிய வெளிச்சத்தில் காண்பித்தால் இது போன்ற பூஞ்சை மற்றும் இதர தோல் நோய்கள் வருவதை தடுக்க முடியும்.

தேன்

தேன்

தேன் இயற்கையிலேயே ஒரு நல்ல சரும ரோக நிவாரணி. இதன் அழற்சி எதிர்புத்தன்மை ஜாக் நமைச்சல் நோய்க்கு நல்ல தீர்வை தரும். தேனை பாதிக்கப்பட்ட இடங்களில் தடவி 3௦ நிமிடங்கள் கழித்து கழுகி உலர்த்தவும்.

பால் பொருட்கள்

பால் பொருட்கள்

பால், வெண்ணை, நெய், தயிர் போன்ற பால் பொருட்கள் நமது உடம்பில் நல்ல பாக்ட்ரியாக்கள் வளர்ச்சிக்கு உதவி பூஞ்சைகளுக்கு எதிராக நமது உடலின் நோய் எதிர்புத்தன்மையை அதிகரிக்கும்.

மூலிகை சோப்பு

மூலிகை சோப்பு

மூலிகை சோப்பு தினமும் உபயோகிக்கும் பொது அதன் பூஞ்சை மற்றும் பாக்ட்ரியா எதிர்ப்புத்திறன் நோயை தடுக்கும். இது போன்ற மூலிகை சோப்பு கொண்டு தினமும் குளிப்பதன் மூலம் தொற்று பரவுவதை தடுக்க முடியும்.

முடி உலர்த்தும் கருவி

முடி உலர்த்தும் கருவி

பதிக்கப்பட்ட பகுதிகளை உலர்த்த நம் முடி உலர்த்தும் கருவியை உபயோகபடுத்தலாம் இதன் மூலம் ஈரத்தன்மை மாறும் இது நோயை விரைவில் குணமாக்க உதவும் (குறிப்பு: கருவியை சருமத்தின் மிக அருகில் உபயோகப்படுதும் போது கவனம் தேவை)

தேயிலை மர எண்ணெய்

தேயிலை மர எண்ணெய்

இது சிறந்த பூஞ்சை எதிர்புத்தன்மை மற்றும் ஈரத்தை உலர்த்தும் தன்மை கொண்டது. இதை பாதிக்கப்பட்ட இடங்களில் பஞ்சு கொண்டு தடவலாம். பக்க விளைவுகளை தடுக்க இதை தேங்காய் எண்ணையோடு கலந்து உபயோகப்படுத்தலாம். இதை நாள் ஒன்றுக்கு, இறு முறை வியாதி மாறும் வரை செய்யலாம் (அ) தினமும் இந்த எண்ணெய் கலந்த தண்ணீர் கொண்டு 15 நிமிடங்கள் உடம்பை கழுகலாம்.

பெப்பெர்மின்ட் எண்ணெய்

பெப்பெர்மின்ட் எண்ணெய்

இது பாதிக்கப்பட்ட பகுதிகளில் அரிப்பு குறைய பயன்படுத்தலாம். தினமும் கலையில் குளித்த பிறகு இந்த எண்ணையை பாதிக்கப்பட்ட பகுதிகளில் தடவுவதன் மூலம் எரிச்சலில் இருந்து நிவாரணம் பெறலாம்.

மல்லிகை எண்ணெய்

மல்லிகை எண்ணெய்

மல்லிகை எண்ணெய் மற்றும் ஆரஞ்சு எண்ணெய் ஆகியவற்றை கலந்து அரிப்பு உள்ள பாகங்களில் தினமும் தடவலாம். இவ்வாறு தடவுவதன் மூலம் இத்தொற்று நோயில் இருந்து விரைவில் நிவாரணம் அடையலாம்.

கெமோமில் எண்ணெய்

கெமோமில் எண்ணெய்

இது பல ஆயிரம் வருடங்களாக தோல் மற்றும் அரிப்பு நோய்களுக்கான மருந்தாக பயன்படுத்தப்படுகிறது. இது பல்வேறு தோல் நோய் மற்றும் பாதிப்புகளுக்கு மருந்தாக பயன்படுகிறது. இந்த எண்ணெய்யை அடிக்கடி பாதிக்கப்பட்ட பகுதிகளில் தடவுவதன் மூலம் நாம் நோயிலிருந்து நிவாரணம் தேடலாம்.

திராட்சை

திராட்சை

திராட்சை கொட்டைகளை அரைத்து எடுத்த கூழை நம் ஜாக் தொற்று பாதிக்கப்பட்ட பகுதிகளில் தடவுவதன் மூலம் நம் இயற்கையாக இந்நோய்க்கு தீர்வு காணலாம். மாறாக திராட்சை கொட்டைகளை சாரு கலந்து தயாரித்த கிரீம், லோஷான் மற்றும் பாடி வாஷ் உபயோகிக்கலாம்.

கற்றாழை

கற்றாழை

சோற்று கட்றாலை கூழை நேரடியாக பாதிக்கப்பட்ட இடங்களில் தடவலாம் அல்லது அதை கொண்டு தயாரிக்கப்பட்ட பொருட்களை பாதிக்கப்பட்ட கிரீம் மற்றும் லோஷான் ஆகியவற்றை பாதிக்கப்பட்ட பகுதிகளில் தடவலாம். சோற்று கட்றாலை ஜாக் தொற்றிற்கு ஒரு மிக சிறந்த மூலிகை மருந்தாகும்.

செய்ய வேண்டியவை

செய்ய வேண்டியவை

• தேவையான அளவு ஒய்வு

• தினமும் குளித்தல் மற்றும் சுகதரமான பழக்க வழக்கம்

• உடலின் பல பாகங்களுக்கும் வேறு வேறு துண்டுகளை பயன்படுத்துதல்

• எப்பொழுதும் தூய்மையான உள்ளாடைகளை உபயோகித்தல்

• உடலின் இடுப்பு பாகத்தை நல்ல pH நடுநிலமையகப்பட்ட சோப்புகளை கொண்டு சுத்தப்படுதுதல்

• பழங்கள் மற்றும் பச்சை காய்கறிகளை உட்கொள்ளுதல்

• நல்ல உடல் பயிற்சி செய்து அதிக கலோரிகளை எரிப்பதன் மூலம் பூஞ்சைகள் வளர விடாமல் செய்யலாம்

தவிர்க்க வேண்டியவை

தவிர்க்க வேண்டியவை

• நல்ல சூடான தண்ணீரில் குளிக்க வேண்டாம்

• பதிக்கப்பட்ட இடங்களை சொறிதல் வேண்டாம் அது நிலைமையை மோசமடைய செய்யும்

• இறுக்கமான உடைகளை அணிய வேண்டாம்

• துணி கொண்டோ அல்லது வேறு பொருள்களை கொண்டோ பாதிக்கப்பட்ட இடங்களை ஒன்றும் செய்ய வேண்டாம்

• காபி, டீ மற்றும் மது போன்றவற்றை பாதிப்பு மாறும் வரை தவிர்க்கவும்

• சாக்லேட், இனிப்புள்ள மற்றும் பதபடுதபட்ட உணவு வகைகளை சாப்பிடகூடாது ஏனெனில் அவை பூஞ்சைகளின் வளர்ச்சிக்கு உதவிடும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

25 Effective Home Remedies to Get Rid of Jock Itch

Jock itch is a fungal infection that generally affects the moist areas of the body such as the anal and vaginal region, buttocks, and the inner thighs.
Story first published: Tuesday, April 17, 2018, 7:01 [IST]
Desktop Bottom Promotion