For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சாப்பிடாமலேயே பசியைக் குறைக்க 13 வழிகள் இருக்கு... நீங்களும் ட்ரை பண்ணி பார்க்கலாமே!

எடையை குறைக்க பல்வேறு தந்திரங்கள் உள்ளன, அதில் முக்கியமானது அனைத்தும் பல்வேறு வகையான உணவு வகைகள் சார்ந்ததாகவே இருக்கும். அதிக நார் சத்து உள்ள உணவை சாப்பிட்டால் பசியை கட்டுப்படுத்தலாம் என்று அறிந்து இர

|

இந்த தலைப்பே சற்று வினோதமாக இருக்கும், ஆனால் உண்மையில் பசியை குறைக்க சாப்பிடுவது மட்டுமே தீர்வு அல்ல, நீங்கள் பசியை குறைக்க அதிக உணவு சாப்பிட விரும்பவில்லை என்றால் பல நல்ல முறைகள் உள்ளன, அவற்றை அறிந்து கொள்ள இந்த கட்டுரையை மேலே படியுங்கள்.

13 Genius ways to reduce hunger without food

நம் சாப்பிடுவதை குறைக்க முக்கிய காரணம் எடை இழப்பதற்காக ஆனால் இதில் மிக முக்கிய மற்றும் மிகப்பெரிய தடையாக இருப்பது பசி. உங்கள் பசியை கட்டுப்படுத்த முடியாவிட்டால், எடை இழப்பு என்பது சத்தியம் அல்ல.

எடையை குறைக்க பல்வேறு தந்திரங்கள் உள்ளன, அதில் முக்கியமானது அனைத்தும் பல்வேறு வகையான உணவு வகைகள் சார்ந்ததாகவே இருக்கும். அதிக நார் சத்து உள்ள உணவை சாப்பிட்டால் பசியை கட்டுப்படுத்தலாம் என்று அறிந்து இருப்பீர்கள் ஆனால் சாப்பிடாமலேயே பசியை அடக்கலாம் என்று உங்களுக்கு தெரியுமா? எனவே, உணவு உட்கொள்வதற்குப் பதிலாக பசியை ஒடுக்க உதவும் சில குறிப்புகளை இங்கே காணலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
1. பசி எடுக்கிறதா? உடற்பயிற்சி செய்யுங்கள்

1. பசி எடுக்கிறதா? உடற்பயிற்சி செய்யுங்கள்

உடற்பயிற்சி செய்வது எடை குறைப்பதற்கான அவசியமான செயலாகும், ஆனால் பசியாக இருக்கும்போது உடற்பயிற்சி செய்வது உங்கள் பசியை அடக்கலாம். உடல் பயிற்சி செயும்போது சாப்பாடடின் மேல் உங்களுக்கு உள்ள ஆசை குறைகிறது, பசியை தூண்டும் பகுதியிலுள்ள செல்களை கட்டுப்படுத்தி சாப்பிடும் ஆர்வத்தை குறைக்கும். உடற்பயிற்சி உங்கள் உடலில் கோர்லின் என்ற ஹார்மோனின் அளவைக் குறைக்கிறது (இது உங்கள் பசியை தூண்டும் ஹார்மோன் ஆகும்) மற்றும் இது பெப்டைட் என்ற ஹார்மோன் அளவை அதிகரிக்கிறது இதுவும் பசியை நன்கு கட்டுப்படுத்தும். இது ஒரு பைத்தியக்கார யோசனைபோல் தோன்றலாம், ஆனால் இதய மற்றும் உடல் பயிற்சி உணவு இல்லாமல் பசியை அடக்க உதவும்.

2. நன்றாக 7-8 மணிநேரம் தூங்குங்கள்

2. நன்றாக 7-8 மணிநேரம் தூங்குங்கள்

நல்ல ஆழ்ந்த தூக்கம் இல்லாதிருந்தால் நீங்கள் விரைவில் பசியை உணர்வீர்கள், அதிக உணவை உட்கொள்வீர்கள், தூக்கமின்மை காரணமாக உங்கள் பசி அதிகரிக்க முடியும். மாறாக, 7-8 மணிநேரங்களுக்கு நல்ல ஆழ்ந்த தூக்கம் உங்கள் பசியின் அளவை நன்கு குறைக்கும். எனவே, ஒரு நல்ல இரவு ஓய்வு பெறுவது மேலும் அதிக எடை இழப்பை கொடுக்க உதவும்.

3. ஆசைப்படும் உணவுகள்

3. ஆசைப்படும் உணவுகள்

இது மிகவும் கடினமான ஒரு வழிமுறையாகும், ஆனால் நீங்கள் ஆசைப்படும் உயர் கொழுப்பு மற்றும் உயர் சர்க்கரை உணவுகளை நிராகரிப்பது உடல் எடை குறைய நல்ல வழியாகும் இதற்க்கு ஒரு வலுவான மனநிலை கட்டாயம் வேண்டும். நீங்கள் உங்கள் முன் உள்ள ஆரோக்கியமற்ற உணவை தவிர்த்து ஆரோக்கியமான உணவு சாப்பிடுவது ஒரு நல்ல தீர்வு.

4. தண்ணீர்

4. தண்ணீர்

இது உங்களுக்கு பல முறை சிறுநீர் கழிக்க தூண்டினாலும், அது கூடுதல் எடை இழக்க ஒரு பயனுள்ள முறையாகும். உங்கள் உணவிற்கு முன் ஒரு குறிப்பிட்ட அளவு தண்ணீர் குடிப்பது உங்கள் பசியை ஒரு குறிப்பிட்ட அளவிற்கு கட்டுப்படுத்தி, குறைவாக சாப்பிட உதவும் அல்லது சாப்பிடும் முன் பழ சாறு குடிக்கலாம்.

5. பற்கள் மற்றும் நாக்கு

5. பற்கள் மற்றும் நாக்கு

பல் துலக்குவது என்பது நாம் தினமும் கடைபிடிக்கும் ஒரு பழக்கமாக இருந்தாலும் இது பசியை கட்டுப்படுத்தும் ஒரு நல்ல முறையாகும். பல் பசையில் உள்ள மணம் பசியை கட்டுப்படுத்தும். உங்கள் பற்கள் மற்றும் நாக்கை அடிக்கடி பற்பசை கொண்டு தூய்மை செய்வதன் மூலம் இதில் உள்ள புதினா மணம் சாப்பிம் எண்ணத்தை கட்டுப்படுத்தலாம். கண்டிப்பாக ஒருவரும் பல்துலக்கிய பின்பு சாக்லேட் சாப்பிட விரும்ப மாட்டார்கள் ஏனெனில் அதன் சுவை மாறும்.

6. வீட்டை வெதுவெதுப்பாக வைத்திருங்கள்

6. வீட்டை வெதுவெதுப்பாக வைத்திருங்கள்

வெப்பம் உங்களுக்கு சித்திரவதையை கொடுக்கலாம், ஆனால் உண்மையில் மக்கள், சூடான நிலையில் குறைவாக சாப்பிடுகிறார்கள். எனவே, உங்கள் வீட்டை சூடாக வைத்துக்கொள்வது உங்கள் பசியை குறைக்கும். கூடுதலாக, வெப்பம் தாகத்தை அதிகரிக்கிறது, இது நீரை அதிகம் குடிக்க வழிவகுக்கிறது, நீர் தவிர மற்ற பழ சாறுகளை சாப்பிடுவதன் மூலம் வெப்பத்தினால் ஏற்படும் நீர் இழப்பை தவிர்க்கலாம்.

7. வேலை செய்யுங்கள்

7. வேலை செய்யுங்கள்

வேலை இல்லாமல் சும்மா உட்கார்ந்து இருந்தால் உங்கள் பசி அதிகரிக்கும், எனவே ஏதாவது வேலை செயுங்கள். மறுபுறம், நீங்கள் வேலை செய்யும்போது உடலில் உண்டாகும் கார்டிசோல் என்னும் ஹார்மோன் பசியை குறைக்கும் எனவே வேளையில் கவனம் செலுத்துங்கள். எனவே, நீங்கள் பசியாக இருக்கும்போது ஏதாவது வீட்டு வேலை செய்யுங்கள் அல்லது இது மனதை திசைதிருப்பி பசியை உணராமல் இருக்கலாம்.

8. வாசனை அல்லது மூலிகை எண்ணெய் சிகிச்சை

8. வாசனை அல்லது மூலிகை எண்ணெய் சிகிச்சை

இது பசி மற்றும் ஆரோக்கியமற்ற உணவை உட்கொள்வதை தவிர்க்க நல்ல வழியாகும். நல்ல நறுமணமுள்ள எண்ணெய் போன்றவை பசியை குறைக்கும் ஆற்றல் வாய்ந்தது உதாரணமாக நாரத்தம்பழ எண்ணெய் போன்ற நறுமணமுள்ள நறுமணப் பொருட்கள் உங்கள் பசியைக் குறைக்கலாம், இது ஒரு வாரத்தில் ஒரு குறிப்பிட்ட நாட்களுக்கு மட்டுமே இதனை உபயோகம் செய்ய வேண்டும். இது தவிர மிளகு மற்றும் சந்தன என்னை எண்ணெய் போன்றவற்றையும் உபயோகிக்கலாம்.

9. நீல நிற கோப்பை

9. நீல நிற கோப்பை

image courtesy

இது உண்ணும் உணவின் அளவு குறைக்க உதவுவதோடு, உங்கள் பசியையும் குறைக்கலாம். மேலும் சிறிய பாத்திரத்தில் உணவு உண்ணும்போதும் நாம் உட்கொள்ளும் உணவு அளவை குறைக்க முடியும், அதேபோல கண்கவர் வண்ணங்களில் உணவு உண்ணும் பாத்திரங்களை பயன்படுத்தும் போது உங்கள் பசியை குறைக்க முடியும். மஞ்சள், ஆரஞ்சு, சிவப்பு போன்றவை உங்கள் பசியை அதிகரிக்கிறது, ஆனால் நீல நிறம் உங்கள் மனதில் ஒரு ஒரு பாதிப்பை ஏற்படுத்தி உங்கள் பசியை குறைக்கும்.

10. 15 நிமிடங்கள் நடக்கவும்

10. 15 நிமிடங்கள் நடக்கவும்

நன்கு வேலை செய்வதோடு கூடுதலாக நடைபயிற்சி மேற்கொண்டால் பசி குறைய உதவும். 15 நிமிடம் நடைப்பயிற்சி அல்லது ஒவ்வொரு நாளும் 8000 படிகள் நடைபயிற்சி, போன்றவை உங்களை உடலில் சர்க்கரை தேக்கத்தை குறைத்தது பசியை கட்டுப்படுத்த உதவுகிறது.

11. மது

11. மது

ஆல்கஹால் அதிக கலோரி உள்ளது மற்றும் உங்கள் பசியை அதிகரிக்கிறது. மதுவை உட்கொள்வதன் மூலம், பசியின்மை, மெதுவாக வளர்சிதை மாற்றம் மற்றும் மூளையின் ஹைபோதலாமஸில் குறைவான ஆற்றல் மற்றும் நரம்பணுக்களை செயல்பாடுகளை அதிகரிப்பதால் மது குடிப்பது உங்கள் பசித்தன்மையை பாதிக்கும் மற்றும் உடலின் உணவு தேவையை அதிகரிக்கும்.

12. சூயிங்கம்

12. சூயிங்கம்

எடை குறைக்க நீங்கள் செய்யக்கூடிய மிகச் சிறிய விஷயங்கள் ஒன்றாக சூயிங் கம் இருக்கலாம். மற்றவர்களை விட சூயிங் கம் மெல்லுபவர்கள் 68% குறைவான கலோரிகளை உட்கொள்வதால், சூயிங் கம் உங்கள் உணவு சுவையை குறைத்து, சுவை மொட்டுக்களை கட்டுப்படுத்தி பசியை குறைக்கும்.

13. ஆப்பிள் சீடர் வினிகர்

13. ஆப்பிள் சீடர் வினிகர்

ஆப்பிள் சீடர் வினிகரைப் பயன்படுத்துவது பரவலாக காணப்படுகிறது, இது மக்கள் பசியை குறைக்க உதவும் பொருளாகும். இதேபோல், பச்சை தேயிலை அதன் மருத்துவ மற்றும் மருத்துவ திறன்களைப் பற்றி நாம் நன்கு அறிந்ததே இதுவும் பசியை குறைக்கும் ஆற்றல் வாய்ந்தது. இது உடலின் கெர்லின் அளவைக் குறைக்கிறது, இதன் மூலம் பசியை உணரவைக்காது, மேலும் எடை இழப்புக்கு உதவுகிறது. எனவே எப்படியாவது, ஆப்பிள் சீடர் வினிகர் அல்லது பச்சை தேயிலை நீர் அதிகப்படியான அளவு குடிப்பதால் நீங்கள் பசியை நன்கு கட்டுப்படுத்தலாம்.

இந்த முறைகள் எல்லவருக்கும் ஒரே அளவு பொருந்தாது, எனவே பலருக்கும் பல முறைகள் பொருந்தலாம் மேலும் இந்த முறைகள் அனைத்தும் உலகம் முழுவதும் பயன்பாட்டில் உள்ள முறைகள் அல்ல, உரிய சோதனை மூலம் உங்களுக்கு பொருத்தமான முறையை கண்டறிய முடியும். உங்கள் பசியை கட்டுப்படுத்துவது உங்கள் எடை இழப்புக்கு உதவ முடியும், ஆனால் தேவையான முன்னெச்சரிக்கைகள் தேவை ஏனெனில் தவறான உபயோகம் உங்கள் உடல் செயல்பாடுகளை பாதிக்கலாம். உங்கள் உணவின் மூலம் உங்களுக்கு தேவையான அளவு சக்தி மற்றும் ஊட்டச்சத்து கிடைக்கிறது என்பதை உறுதிப்படுத்தி கொள்வது நல்லது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

13 Genius ways to reduce hunger without food

Techniques that would help reduce your appetite and suppress your hunger without consuming food, which would help reduce weight. Find out, which one of the thirteen methods helps.
Desktop Bottom Promotion