For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இவற்றையெல்லாம் செய்வதால் தான் உங்கள் கிட்னி சீக்கிரமாகவே சிதைவடைந்து விடுகிறது...!

|

நமது உடலின் ஒவ்வொரு பாகங்களும் மிக முக்கியமானதாகும். பணம், பதவி, அந்தஸ்து ஆகியவற்றை காட்டிலும் நமது உடலும், உயிருமே பொக்கிஷமாக பாதுகாக்க வேண்டியவை. ஆனால், நாம் இவற்றையெல்லாம் கண்டுகொள்ளாமல் எதை நோக்கி செல்கின்றோம் என்ற எண்ணத்தையும் குழி தோண்டி புதைத்து விட்டு ஓடி கொண்டிருக்கின்றோம். இத்தகைய மன நிலைதான் நமது உடலின் ஒவ்வொரு உறுப்பையும் சீரழிகிறது.

கிட்னியில் சீக்கிரமாகவே கற்கள் உருவாவதற்கு இந்த பத்தும் தான் காரணம்..!

இந்த வரிசையில் முதன்மையான உறுப்புக்காக கருதப்படுவது சிறுநீரகமும் தான். சிறுநீரகத்தை மிகவும் ஜாக்கிரதையாக பார்த்து கொள்ள வேண்டும். இல்லையேல் நமது உடலின் மற்ற செயல்பாடுகளும் நின்று விடும். நமது கிட்னியில் கற்கள் உருவானால் தான் இது போன்ற விளைவுகள் ஏற்படும். இந்த கற்களை உருவாக்கும் காரணிகளும், செயல்களும் எவை என்பதை நாம் தெரிந்து கொண்டு உஷாராக இருப்போம் நண்பர்களே.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
முதன்மையான உறுப்பு..!

முதன்மையான உறுப்பு..!

இதயம், கண், மூளை போன்ற முதன்மையான உறுப்புகளில் கிட்னியும் ஒன்று. கிட்னியில் முதன்மையான வேலை என்னவென்றால், ரத்தத்தை சுத்தம் செய்வது. மேலும், ரத்தத்தில் உள்ள தேவையற்ற பொருட்களை சிறுநீரின் மூலம் வெளியேற்றுதலே. அந்த வகையில் சிறுநீரகத்தில் நீர் பற்றாக்குறையோ அல்லது உப்பின் அளவு அதிகரித்து கொண்டு போனாலோ இதில் கற்கள் உருவாகும்.

கற்கள் எவ்வாறு உருவாகிறது..?

கற்கள் எவ்வாறு உருவாகிறது..?

உடலில் கால்சியம் மிக அவசியமான ஒன்று. ஆனால், இவை ஆக்சலேட் என்ற நச்சு தன்மை உள்ள வேதி பொருளோடு உடலில் சேரும் போது, கிட்னிக்கு பாதிப்பு தருகிறது. அந்த வகையில் நாம் சாப்பிடும் உணவு பொருட்கள், எடுத்து கொள்ளும் நீரின் அளவு ஆகியவையே இந்த ஆக்சலேட் உருவாக காரணமாக உள்ளது.

வலி நிவாரணிகள்...

வலி நிவாரணிகள்...

மாத்திரைகளை எடுத்து கொண்டாலே அது எண்ணற்ற பக்க விளைவுகளை தரும். அதிலும் இந்த வலி நிவாரணிகள் ஒரு படி மேலே சென்று கிட்னியில் கற்களை உருவாக்குமாம். உடலின் வலிக்காக மாத்திரைகளை தொடர்ந்து எடுத்து கொண்டால் பிறகு உயிரையே தியாகம் செய்ய வேண்டியதுதான்.

உப்புக்கு உஷார்..!

உப்புக்கு உஷார்..!

ஒரு நாளைக்கு 2300mg அளவே உப்பை உணவில் சேர்த்து கொள்ளவேண்டும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். இந்த அளவை விட அதிகமான உப்பை சேர்த்து கொண்டால், உங்கள் கிட்டினியை பாதித்து விடும். எனவே, எப்போதும் குறைத்த அளவே உப்பை சேர்த்து கொள்ளுங்கள்.

MOST READ: உங்கள் வீட்டில் ஏ.சி இருக்கிறதா..? அப்போ கட்டாயம் உங்களுக்கு வரிசையாக இந்த நோய்கள் வரும்..!

தூக்கமின்மையா..?

தூக்கமின்மையா..?

சிறந்த உறக்கம், ஒரு மனிதனின் உடலை சீராக வைத்து கொள்ள உதவும். இரவில் தாமதமாக தூங்கி காலையில் தாமதமாக எழுந்து கொள்வோருக்கு ஏராளமான நோய்கள் வரும் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர். தூக்கத்தின் கால மாற்றம் மாறினால் கிட்டினியும் பாதிக்குமாம்.

இனிப்புக்கு டாட்...!

இனிப்புக்கு டாட்...!

இனிப்பு சுவையை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே விரும்பி உண்ணுவார்கள். இனிப்பை அதிகமாக உணவில் சேர்த்து கொண்டால் சிறுநீரக பிரச்சினைகள் ஏற்பட கூடும். குறிப்பாக வெள்ளை பிரட், செயற்கை இனிப்பூட்டி பானங்கள் ஆகியவற்றை தவிர்க்க வேண்டும்.

குறைந்த கால்சியமா..?

குறைந்த கால்சியமா..?

எல்லா வகையான சத்துக்களும் சீரான அளவில் நமது உடலில் இருக்க வேண்டும். இதில் அளவு குறைந்தாலோ அதிகரித்தாலோ பக்க விளைவு நமக்கு தான் வரும். கால்சியம் குறைவாக இருந்தால் அது ஆக்சலேட் கற்களை உருவாக்கி விடும். எனவே, கால்சியம் நிறைந்த உணவுகளை சாப்பிடுங்கள்.

நீர் குறைபாடா..?

நீர் குறைபாடா..?

நமது உடலானது கிட்டத்தட்ட 60 சதவீதம் நீரை கொண்டது. பலருக்கு சிறுநீரக பிரச்சினை வருவதற்கு முதல் காரணியே இந்த நீர் தட்டுப்பாடுதான். உங்களின் கிட்னியை வலியோடு வைத்து கொள்ள வேண்டாம் என்றால் தயவு செய்து தினமும் 3 லிட்டர் நீர் குடியுங்கள். இதுவே சிறுநீரகத்திற்கு சிறந்த மருந்தாகும்.

MOST READ: சிறை வாழ்க்கை குறித்து பெண் கைதிகள் கூறும் திடுக்கிடும் உன்மை வாக்கு மூலங்கள்!

நீண்ட நேரம் உட்கார்ந்திருந்தால்..?

நீண்ட நேரம் உட்கார்ந்திருந்தால்..?

இன்றைய தொழிற்நுட்ப உலகில் நாம் செய்யும் செயல்கள் அனைத்துமே நீண்ட நேரம் உட்கார கூடிய செயல்களாக உள்ளது. நீண்ட நேரம் ஒரே இடத்தில உட்காருவதால் கிட்னி பாதிக்கப்படும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். மேலும், மலச்சிக்கல் போன்ற கோளாறுகளும் ஏற்படுமாம்.

புகை சிறுநீரகத்திற்கு பகை..!

புகை சிறுநீரகத்திற்கு பகை..!

புகை பழக்கம் நுரையீரலுக்கு எந்த அளவிற்கு பாதிப்பை தருகிறதோ, அதே போன்று கிட்னிக்கும் பாதிப்பை தருகிறது. முடிந்த அளவு புகை பழக்கத்தை குறைத்து கொள்ளுங்கள் நண்பர்களே. இல்லையெனில் உடல் உறுப்புகள் ஒவ்வொன்றாக பாதிப்பை அடைந்து விடும்.

பதப்படுத்தப்பட்ட உணவுகள்...

பதப்படுத்தப்பட்ட உணவுகள்...

நாம் உண்ணும் உணவில் அதிக கவனம் கட்டாயம் தேவை. குறிப்பாக பதப்படுத்தப்பட்ட காய்கறிகள், இறைச்சிகள், தின்பண்டங்கள் போன்றவற்றை சாப்பிடுவதால் கிட்னியின் ஆரோக்கியம் மிகவும் சீர்கேடு அடையும். எனவே, பதப்படுத்தபட்ட உணவுகளை தவிர்த்து விடுங்கள்.

மது பழக்கமா..?

மது பழக்கமா..?

மது பழக்கம் கொண்டோருக்கு விரைவிலே சிறுநீரகம் சிதைவடைய கூடும். தினமும் மது அருந்துபவர்களுக்கு இந்த சதவீதம் அதிகமாக இருக்கிறது. எனவே, முடிந்த அளவு மதுவை அதிகமாக அருந்தாமல் இருப்பது நன்று.

MOST READ: ஒரே மாதத்தில் 5 கிலோ எடை குறையணுமா..? அதற்கு கொள்ளு தானியத்தை இப்படி பயன்படுத்துங்க...

இறைச்சி பாதிப்பு..!

இறைச்சி பாதிப்பு..!

அதிக அளவில் விலங்குகளின் இறைச்சியை சாப்பிட்டால் அவை கிட்டினியை பாதிக்க செய்யும். குறிப்பாக கோழியின் கல்லீரல், மாட்டின் கல்லீரல் போன்றவை இந்த பாதிப்பை ஏற்படுத்தும். மேலும், முட்டை போன்றவற்றையும் அதிகம் சேர்த்து கொள்ள கூடாது.

இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து, அவர்களின் ஆரோக்கியத்திற்கும் உதவுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

12 Habits That Harm Your Kidneys

A kidney stone is exactly that -- a hard mass of minerals and salts that forms in the kidneys. Certain foods and habits that can lead to these painful crystals.
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more