For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

புகைப்பழக்கத்தினால் எப்படி உங்கள் கண்கள் பாதிப்படைகிறது என்ற உண்மை தெரியுமா?

புகைப்பிடிப்பது உடல் நலத்திற்கு கேடுதான். அது கண்களுக்கும் கேடு விளைவிக்கிறது என ஆய்வுகள் கூறுகின்றன. என்ன மாதிரியான கண் பாதிப்பை தருகிறது என இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.

By Peveena Murugesan
|

புகை பழக்கம் நுரையீரலுக்கு தீங்கு விளைவிக்கும் என்று எல்லோரும் அறிந்த ஒன்று ஆனால் புகை பழக்கமானது கண்களுக்கும் தீங்கு விளைவிக்கும். கண்களில் சிவப்பை ஏற்படுத்தி அதிலிருந்து பார்வை திறனை மங்கச் செய்கிறது.

புகை பழக்கம் இல்லாதவர்களை விட புகை பழக்கம் உடையவர்களுக்கே வயதான காலத்தில் பார்வை இழக்க அதிக வாய்ப்பு உள்ளது.

Smoking is injurious to your eyes too

நமது உடலில் உள்ள செல்களில் பிரீ ரேடிக்கல்ஸ் அளவை அதிகரித்து ஆக்ஸிஜன் அளவை குறைத்து உடலின் உள்ளுறுப்புகளை செயலிழக்க செய்கிறது.அளவை குறைக்க ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்ஸ் அளவை அதிகரித்தால் போதுமானது. ஆனால் புகையிலையில் உள்ள புகையானது ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்ஸ் அளவை குறைக்கிறது.

இந்த பிரீ ரேடிக்கல்ஸ் 2 வகையான கட்டமைப்பைக் கொண்டுள்ளது.ஒன்று நிலையானது.மற்றொன்று நிலையற்றது, இது அதிக அபாயமானது. பிரீ ரேடிக்கல்ஸ் டி.ன்.ஏ உடன் இணைந்து அணு சிதைவை ஏற்படுத்துகிறது.இதன் மூலம் கண்களில் உள்ள லென்ஸில் பாதிப்பு ஏற்படுகிறது.

புகையிலையில் உள்ள புகையானது கண்களை சுற்றி உள்ள ரத்த நாளங்களில் எரிச்சலை ஏற்படுத்தி வீக்கத்தை உருவாக்கி நீர் வரச் செய்து ஐ ஏற்படுத்துகிறது.

புகைப்பழக்கம் இருப்பவர்களுக்கு கண்புரை ஏற்பட 2 மடங்கு வாய்ப்பு உள்ளது. ,கண்களின் உள் பகுதியில் அலர்ஜி ,வாஸ்குலர் கோட் ஆகியவை அதிகளவு ஏற்பட வாய்ப்பு உள்ளது.புகைப்பழக்கம் இல்லாதவர்களை விட புகைப்பழக்கம் உள்ளவர்களுக்கே அதிக வாய்ப்பு உள்ளது.

புகையினால் கண்களின் உள்ளுறுப்புகளில் அதிக அழுத்தம் ஏற்பட்டு குளுக்கோமா ,பார்வை திறன் மங்குதல் ஏற்படுகிறது.புகைப்பழக்கம் இல்லாதவர்களை விட புகைப்பழக்கம் உடையவர்கள் 2 மடங்கு ரெட்டினா பாதிப்புக்கும்,3 மடங்கு ARMD பாதிப்புக்கும் ஆளாகின்றனர்.

புகையிலையில் இருக்கும் சயனைடு கண்களில் உள்ள பார்வைத் திறனுக்கு உதவும் நரம்புகளை பாதிக்கிறது.புகையிலை எந்த வகையில் எடுத்தாலும்(புகை மட்டுமின்றி வேறு வடிவில்) இதே பாதிப்பை ஏற்படுத்தும்.

கண்களின் திசுக்களின் செயல்பாட்டையும்,அமைப்பையும் சேதமடைய செய்கிறது புகையிலை.இந்த வகை குறிப்பிடத்தக்க பக்க விளைவுகளை வராமல் தடுக்க ஒரே வழி

"புகை பழக்கத்தை இன்றும் என்றும் ஒழிப்போம்"

English summary

Smoking is injurious to your eyes too

Smoking is injurious to your eyes too
Story first published: Friday, January 20, 2017, 12:25 [IST]
Desktop Bottom Promotion