For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உப்பு போட்டா சொரண வரும்... புளி போட்டா என்னவெல்லாம் வரும் தெரியுமா?

நம் அன்றாட சமையலில் இடம்பிடிக்கும் புளியை சேர்க்காத சமையலே இல்லை எனலாம், தொடர்ந்து புளியை உணவில் பயன்படுத்துவதால் என்னென்ன பாதிப்பு வரும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்

|

புளி. நம் வீடுகளில் தினமும் பயன்படுத்துகிறோம். சாம்பார், குழம்பு,ரசம் என்று எல்லாவற்றிலுமே புளி சேர்க்கப்படுகிறது, காய்கறிகள் போட்டு குழம்பு வைக்கிறோமோ இல்லையோ வாரத்தில் இரண்டு நாட்களாவது புளிக்குழம்பு இல்லாமல் இருக்காது. நம் மக்களின் உணவுகளில் புளி அத்தியாவசிய இடத்தை பிடித்திருக்கிறது.

Side effects of tamarind

நம் நாவுக்கு புளிப்புச் சுவை பழகி விட்டது. அதனை நாம் தொடர்ந்து எடுத்துக் கொண்டேயிருப்பதால் உடலில் என்னென்ன பக்க விளைவுகள் ஏற்படுகிறது தெரியுமா? இது பொதுவான பக்க விளைவுகள் தான். உங்களுக்கு ஏதேனும் உடல் உபாதைகள் இருந்து தொடர்ந்து அதிகமான புளிப்புச் சுவையை எடுத்து வந்தால் அது உடல் ஆரோக்கியத்தை இன்னும் மோசமாக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ரத்தக் கசிவு :

ரத்தக் கசிவு :

புளியை அதிகமாக எடுத்துக் கொண்டால் அது ரத்தம் உறைதலை தாமதப்படுத்தும். ஆஸ்ப்ரின், ஆண்ட்டி ப்ளேட்லெட்,நான் ஸ்டிராய்டல்,ஆண்ட்டி இன்ஃப்லமேட்டரி போன்ற மருந்துகளை எடுத்துக் கொள்கிறவர்கள் புளியை அதிகமாக தொடர்ந்து சேர்த்துக் கொண்டால் கட்டுப்பாடில்லாத ப்ளீடிங் ஏற்படும்.

ஹைப்போக்ளைசீமியா :

ஹைப்போக்ளைசீமியா :

தொடர்ந்து புளியை சேர்த்து வருதவாதல் அது நம் உடலில் உள்ள குளுக்கோஸ் அளவை குறைத்திடும். இதனால் நமக்கு ஹைப்போக்ளைசீமியா ஏற்படக்கூடும். ஒரு நாளைக்கு பத்து மில்லி கிராம் புளி சேர்த்தாலே போதுமானது. ஆனால் நாம் தினமும் இதனை விட அளவுக்கு அதிகமாகவே எடுத்துக் கொள்கிறோம்.

இப்படி தொடர்ந்து அளவுக்கு அதிகமான புளியை எடுத்துவருவதால் நம் உடலில் குளுக்கோஸ் பற்றாகுறை ஏற்ப்பட்டு விடும். குறிப்பாக சர்க்கரை நோயாளிகள் புளியை தவிர்ப்பது நல்லது. அல்லது முடிந்தளவு குறைக்க வேண்டியது அவசியம். இல்லையெனில் இது பல ஆபத்தான உடல் உபாதைகளை ஏற்படுத்திவிடும்.

 அலர்ஜி :

அலர்ஜி :

தொடர்ந்து புளி எடுத்துக் கொள்கிறவர்களுக்கு சருமம் ஹைப்பர் சென்ஸிட்டிவிட்டியாக மாற வாய்ப்பிருக்கிறது. இது நமக்கு பல்வேறு பிரச்சனையை ஏற்படுத்திடும், குறிப்பாக சருமம் சிவந்திருப்பது, தடித்திருப்பது, தலைவலி, வாந்தி, அரிப்பு போன்றவை ஏற்படும்.

இதனை தவிர்க்க என்ன தான் மருத்து மாத்திரைகளை எடுத்துக் கொண்டாலும் அப்போதைக்கு குறையுமே தவிர முற்றிலுமாக குறையாது. இதற்கு காரணம் நீங்கள் புளிப்புச்சுவையை அதிகம் விரும்பும் நபராக இருக்கலாம்.

 பற்கள் :

பற்கள் :

புளியில் அதிகப்படியான அமிலத்தன்மை இருக்கிறது. இதனை நிறைய எடுத்துக் கொள்வதால் அது நம் பற்களுக்கு ஆபத்தாகும். பற்களின் எனாமல் பாதிக்கப்படுவதற்கு வாய்ப்புகளுண்டு. அதைவிட புளியில் இருக்கக்கூடிய அதிகப்படியான அமிலத்தன்மையினால் மவுத் அல்சர் வருவதற்கு கூட வாய்ப்புண்டு, சிலருக்கு நாக்கு தடிப்பதும் உண்டு.

பேச்சுக்குறைபாடு உள்ளவர்கள் அதிகமாக புளி சேர்ப்பதை தவிர்க்க வேண்டும்.

பித்தப்பை :

பித்தப்பை :

புளியை அதிகம் பயன்படுத்தி வந்தால் பித்தப்பையில் கற்கள் உருவாவதற்கு வாய்ப்புகள் அதிகம். காய்ச்சல், தலைவலி, வயிற்றுவலி, மஞ்சள் காமாலை, செரிமானக்கோளாறு ஆகியவை தான் பித்தப்பையில் கற்கள் உருவாவதற்கான காரணியாக இருக்கிறது. ஆனால் முக்கிய காரணியாக இருப்பது அதிக புளிப்புச் சுவை எடுத்துக் கொள்வது தான்.

அசிடிட்டி :

அசிடிட்டி :

புளியை அதிகமாக எடுத்துக் கொண்டால் அது நம் வயிற்றில் அமில உற்பத்தியை அதிகரிக்கும். இதனால் உணவு சரியாக செரிக்கப்படாமல் அஜீரணமாக வாய்ப்புண்டு, உணவிலிருந்து கிடைக்கூடிய சத்துக்கள் நமக்கு முழுதாக கிடைக்காமலும், அமில உற்பத்தி அதிகமாக இருப்பதால் வயிற்று வலி இருந்து கொண்டேயிருக்கும்.

மலச்சிக்கல் :

மலச்சிக்கல் :

இது அதிகப்படியாக நம் உடலில் சேர்ந்தால் உடலில் இருக்கும் நச்சுக்களை வெளியேற்ற விடாது. இதனால் வயிறு உப்புசம், மலச்சிக்கல் ஆகியவை ஏற்படும்.

உங்களுக்கு இயற்கையாகவே கழிவு வெளியேறுவதில் சிக்கல் இருந்தால் புளி அதிகமாக எடுத்துக் கொள்வதை தவிர்த்திட வேண்டும்.

ஆண்ட்டி பயாட்டிக்ஸ் :

ஆண்ட்டி பயாட்டிக்ஸ் :

ஆண்ட்டி பயோட்டிக்ஸ் எடுக்கும் நபராக இருந்தால் உங்கள் உணவுகள் அதிகப்படியான புளி சேர்ப்பதை தவிர்க்க வேண்டும். ஏனென்றால் புளியில் இருக்கக்கூடிய அமிலங்கள் ஆண்ட்டி பயாட்டிக் மருந்துகளுடன் வினை புரிந்து நமக்கு பிரச்சனையை ஏற்படுத்திடும்.

இது ஆண்ட்டி பயாட்டிக் மருந்தின் வேலையை செய்ய விடாமல் தடுப்பதால் அதனால் கிடைக்க கூடிய பலன்கள் நமக்கு கிடைக்காது.

இருமல் :

இருமல் :

காய்ச்சல், இருமல் தொடர்பான பிரச்சனை இருப்பவர்கள் அதிக புளியை தவிர்ப்பது மிகவும் நல்லது. புளி நுரையிரலுக்கு தீங்கு விளைவிக்க கூடியது, இதனால் மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படும்.

நுரையிரல் பிரச்சனை இருப்பவர்களும் தங்கள் உணவிலிருந்து புளியை தவிர்ப்பது நல்லது.

நரம்புகள் :

நரம்புகள் :

புளியை தொடர்ந்து அதிகப்படியாக எடுத்துக் கொண்டேயிருந்தால் அது நரம்புகளை சுருங்கச் செய்திடும் Vasoconstriction என்ற பாதிப்பை ஏற்படுத்திடும். இதனால் ரத்த ஓட்டம் சீராக இயங்காமல் ஒரே இடத்தில் சேருவதால் நம் உயிருக்கே ஆபத்தாய் கூட முடியலாம்.

இது போன்ற ஆபத்துக்கள் உங்களுக்கு ஏற்கனவே உடலளவில் ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டு அதற்கான சிகிச்சைகள், மருத்து மாத்திரைகளை தொடர்ந்து கொண்டிருந்தால் புளியை குறைப்பது மிகவும் அவசியமாகும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Side effects of tamarind

Side effects of tamarind
Story first published: Thursday, November 9, 2017, 13:51 [IST]
Desktop Bottom Promotion