For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

எனர்ஜி டிரிங்க் தொடர்ந்து குடிப்பவர்களுக்கு விடுக்கப்படும் எச்சரிக்கை!

இன்றைக்கு பெரும்பாலானோர் எனர்ஜி டிரிங் குடிப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். அதை தொடர்ந்து குடிப்பதால் ஏற்படும் பாதிப்புகள்

|

எப்போதும் சுறுசுறுப்பாக இருக்க வேண்டும் என்ற ஆசை நமக்கு உண்டு. ஆனால் மூளை நாம் சொல்வதையும் மீறி சில சமயங்களில் சோர்வாக இருப்போம். சோர்வை போக்க பலரும் பலவிதமான முயற்சிகளை எடுப்பார்கள். அவற்றில் ஒன்றாகத் தான் எனர்ஜி டிரிங்க் குடிப்பது.

உடலுக்கு நல்லது என்று சொல்லி குழந்தைகளுக்கு வலிந்து திணிப்பதும் உண்டு. உண்மையிலேயே அவை நம்முடைய ஆரோக்கியத்திற்காக என்ன செய்கிறது? அதனை தொடர்ந்து குடிப்பதால் உடலுக்கு என்னென்ன பாதிப்புகள் ஏற்படுகிறது என்று தெரியுமா?

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
அறிமுகம் :

அறிமுகம் :

எனர்ஜி டிரிங் ஐரோப்பாவில் 1987 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. அது மக்கள் மத்தியில் பிரபலமாகவே அங்கிருந்து பல நாடுகளுக்கும் சந்தை விரிவடைந்தது.

மக்களின் நுகர்வு கலாச்சாரம் விரிவடையும் போது கேளிக்கை மற்றும் உணவுகளுக்கு அதிக செலவுகளை செய்ய ஆரம்பித்தார்கள்.இதனால் பல நிறுவனங்கள் இந்த சந்தையை கைப்பற்ற களமிறங்கின.

எனர்ஜி டிரிங் :

எனர்ஜி டிரிங் :

பெரும்பாலான எனர்ஜி டிரிங்கில் காஃபைன் கலந்திருக்கும். அதோடு டாவ்ரின், விட்டமின்ஸ் மற்றும் கௌரானா ஆகிய சத்துக்கள் இருக்கும். இவை அளவில் மிகக்குறைவாகவே இருக்கும்.

எனர்ஜி டிரிங்கில் பெரும்பாலும் இருப்பது சர்க்கரை மட்டுமே. 500மில்லி எனர்ஜி டிரிங்கில் குறைந்தது 54 கிராம் சர்க்கரையாவது இருக்கும்.

காஃபைன் :

காஃபைன் :

எனர்ஜி டிரிங்கில் சர்க்கரைக்கு அடுத்தப்படியாக நிறைய இருப்பது காஃபைன். 70 முதல் 200 மில்லி கிராம் வரை இருக்கக் கூடும்.

இதனை அதிகமாக உட்கொள்வதால், ஹைப்பர் டென்சன், கால்சியம் பற்றாகுறை, மயக்கம் போன்ற உடல் உபாதைகளை ஏற்படுத்தும்.

உடல் எடை :

உடல் எடை :

நம் வீடுகளில் பருமனாக இருந்தால் முழு ஆரோக்கியத்துடன் இருப்பதாக நினைத்துக் கொள்வர். இதற்காவே குழந்தைகளை சிறு வயதிலிருந்து வயிறு முட்டச் சாப்பிடச் செய்வர் இது தவறானது.

எனர்ஜி டிரிங்க் தொடர்ந்து குடிப்பதால் உடல் எடை அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் உண்டு. இதனால் அவர் ஆரோக்கியமாக இருக்கிறார்கள் என்று அர்த்தமன்று.

பற்கள் பாதிப்பு :

பற்கள் பாதிப்பு :

எனர்ஜி டிரிங்க் குடிப்பது பற்களின் எனாமலை பாதிக்கும். பற்சொத்தை ஏற்படக்கூடும்,எனர்ஜி டிரிங்க்ஸில் இருக்கும் சில அமிலங்கள் பற்களில் பாக்டீரியா தொற்றை ஏற்படுத்தும். இதனால் பற்கூச்சம், பற்குழி ஆகியவை ஏற்படும்.

பிற பழக்கங்கள் :

பிற பழக்கங்கள் :

தொடர்ந்து எனர்ஜி டிரிங்க் குடிப்பதால் உடலில் சர்க்கரை அளவு அதிகரிக்கும். உடலில் பிற சத்துக்கள் சரிசமமில்லாமல் இருப்பதால் எதற்கெடுத்தாலும் டென்சன் ஆவது, மன அழுத்தம், தூக்கமின்மை, பயம் போன்ற உளவியல் ரீதியாகவும் பிரச்சனைகள் ஏற்படும்.

விளையாட்டு :

விளையாட்டு :

விளையாடிக்கொண்டிருக்கும் போது அல்லது கடினமான வேலைகளை செய்யும் போது எனர்ஜி டிரிங்க் குடிப்பதை தவிர்க்க வேண்டும். ஏனென்றால் உடலின் ரத்த அழுத்தத்தில் திடீர் மாற்றங்களை உண்டாக்கிடும்.

சில சமயங்களில் டீஹைட்ரேஷன் ஏற்படக்கூடும். இது போன்ற சமயங்களில் சாதாரண தண்ணீரை குடிப்பது தான் நல்லது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Side effects of energy drinks

Side effects of energy drinks
Story first published: Wednesday, September 13, 2017, 17:37 [IST]
Desktop Bottom Promotion