For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சாப்பிடும் போது மட்டும் மூச்சு வாங்குகிறதா? அப்போ இது காரணமா இருக்கலாம்!

மூச்சு வாங்கும் பிரச்சனை என்பது தற்போது சர்வசதரணமாக எடுத்துக் கொண்டாலும் குறிப்பாக உணவுச் சாப்பிட்டதும் ஏற்படுகிற மூச்சுப் பிரச்சனைக்கான காரணமும் அதற்கான தீர்வுகளும்.

|

மூச்சு வாங்குதல் என்பது தற்போது சர்வ சாதரண பிரச்சனையாகி விட்டது பலரும் அதனை ஓர் பிரச்சனையாகவே எடுத்துக் கொள்வது கிடையாது.

ஆரம்பத்தில் நம் வாழ்க்கை முறையோடு ஒன்றிக் காணப்படும் அது போன்ற பிரச்சனைகள் நாளடைவில் அதற்கு ஏற்றார் போல நாம் மாறிவிடுவதுண்டு.

மூச்சுவாங்குவதால் தான் இப்படிச் செய்கிறோம் என்று நாம் உணராமல்...மேற்கொண்டு அப்படியே இருந்தால் அது பிரச்சனையின் தீவிரத்தையே அதிகப்படுத்திடும். பெரும்பாலும் இதற்கு அதிகம் பதட்டமடையவேண்டாம். மாறாக அவை நீண்ட நாட்களுக்கு தொடரும் பட்சத்தில் கண்டிப்பாக கவனிக்க வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சாப்பிடும் போது :

சாப்பிடும் போது :

சிலருக்கு சாப்பிட்டவுடன் மூச்சு வாங்கும் பிரச்சனை இருக்கும். அத்துடன் இதயம் வேகமாக துடிப்பது,லேசாக மார்பு வலி,குமட்டல் போன்றவை ஏற்படும். சிலருக்கு இந்த அறிகுறிகளுடனும் சிலருக்கு அறிகுறிகள் ஏதுமின்றி வெறும் மூச்சு வாங்கும் பிரச்சனை மட்டும் இருக்கும்.

பிற நேரங்களை விட குறிப்பாக சாப்பிடும் போது ஏன் இப்படியான மூச்சு வாங்கும் பிரச்சனை ஏற்படுகிறது என்ற காரணமும் அதற்கான தீர்வுகளும் என்னென்ன என்று பார்க்கலாம்.

வேகம் :

வேகம் :

அதிக பட்ச உணவினை வேக வேகமாக வாயில் திணித்து முழுங்குவது. அப்படி நிறைய உணவுகளைச் ஒரே நேரத்தில் திணிக்கும் போது காற்றும் உள்ளே சென்றுவிடுகிறது. இதனால் வயிற்றில் அதிகப்படியான காற்று சேர்ந்திடும். அதோடு வயிற்றில் உணவும் இருப்பதால் மூச்சுக்குழாய் ரொம்ப விரிய முடியாது. இதனால் மூச்சு வாங்குவதில் சிரமங்கள் உண்டாகும்.

செரிமானம் :

செரிமானம் :

ஒரே நேரத்தில் வயிறு முட்ட அதிகப்படியான உணவுச் சாப்பிட்டாலும் இப்படியான மூச்சு வாங்கும் பிரச்சனை ஏற்படும்.சிலருக்கு மூச்சு வாங்கும் பிரச்சனையுடன் சேர்த்து குமட்டல்,நெஞ்செரிச்சல் போன்ற சிக்கல்களும் ஏற்படும்.

ஓவர் ஈட்டிங் :

ஓவர் ஈட்டிங் :

வயிறு முட்டும் அளவிற்கு உணவுகளை திணித்துக் கொள்வது,ஆசிட் நிறைந்த உணவுகளை நிறைய சாப்பிடுவது,கொழுப்பு உணவுகளை தொடர்ந்து உண்பது ஆகியவை முக்கிய காரணியாக இருக்கின்றன.

இப்படியான பிரச்சனையினால் மூச்சு வாங்கும் பிரச்சனை ஏற்பட்டால் மூச்சு வாங்கும் பிரச்சனையுடன் சேர்ந்தே வயிற்று வலி,கேஸ் பிரச்சனை ஆகியவை ஏற்படும்.

ஒபீசிட்டி :

ஒபீசிட்டி :

அதீத உடல் எடையுடன் இருப்பவர்களுக்கு இது அன்றாட பிரச்சனையாக இருக்கும்.ஓபீசிட்டி பிரச்சனை இருப்பவர்களுக்கு அடிபோஸ் டிஸ்ஸூ அதிகப்படியாக இருக்கும். இதனால் போதுமான அளவு நுரையில் விரிவதில் சிக்கல்கள் உண்டாகும்.

அதனால் அவர்களுக்கு சாப்பிட்டதும் மூச்சு வாங்குவது போலத் தோன்றிடும்.

கேஸ்ட்ரோபேகல் ரெஃப்லக்ஸ் :

கேஸ்ட்ரோபேகல் ரெஃப்லக்ஸ் :

சாப்பிடும் போது மூச்சு வாங்குவதற்கு இதுவும் ஒரு வகை காரணம். அமிலம் நிறைந்த உணவுகளை தொடர்ந்து எடுக்கும் போது இந்தப் பிரச்சனை ஏற்படும்.

மூச்சு வாங்குதல் தவிர்த்து, நடு வயிற்றில் வலி, வரண்ட இருமல்,சாப்பாடு முழுங்குவதில் சிரமம் ஆகியவை ஏற்படும்,

இரண்டு வாரங்களுக்கும் மேல் இந்தப் பிரச்சனை தொடர்ந்தால் மருத்துவரை காண்பது மிக மிக நல்லது.

நுரையிரல் பிரச்சனைகள் :

நுரையிரல் பிரச்சனைகள் :

நுரையிரல் மற்றும் மூச்சுக் குழாய்களில் ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டால் அதனால் கூட இப்படியான மூச்சுப் பிரச்சனை வரலாம்.

குறிப்பாக உணவுக்குழாய் விரியும் போது அதை ஒட்டியிருக்கிற மூச்சுக்குழாயின் அளவு கொஞ்சம் சுருங்கிடும். ஏற்கனவே அதில் ஏதேனும் பிரச்சனையிருந்தால் பிரச்சனை இன்னும் சிக்கலாகிடும்.

அர்ஹீதிமியா :

அர்ஹீதிமியா :

வழக்கத்திற்கு மாறான இதயத்துடிப்பு இருந்தால் அதற்கு இந்தப் பெயர்.இது பெரும்பாலும் சர்வ சாதரணமாக எல்லாருக்கும் நிகழ்வது தான். இதனை அவ்வளவாக அலட்டிக் கொள்ளத் தேவையில்லை.

ஆனால் காரணமேயில்லாமல் இதயத்துடிப்பில் மாற்றம் ஏற்படுவது, குறிப்பாக உணவுச் சாப்பிட்டவுடன் இந்தப் பிரச்சனை ஏற்பட்டால் கவனம். இவர்களுக்கு மாரடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

உணவு ஒவ்வாமை :

உணவு ஒவ்வாமை :

சிலருக்கு குறிப்பிட்ட உணவுகளை சாப்பிட்டால் மட்டும் இந்தப் பிரச்சனை ஏற்படுகிறது என்றால் அந்த உணவு உங்களுக்கு செரிக்கவில்லை, அது உங்களுக்கு அலர்ஜியாகிறது என்பதை புரிந்து கொள்ளுங்கள். மேலும் தொடர்ந்து அதனைச் சாப்பிட வேண்டாம்.

மூச்சுப்பிரச்சனை மற்றும் செரிமானப்பிரச்சனைக்கான அறிகுறிகளைத் தாண்டி சருமப் பிரச்சனை,வாந்தி,குமட்டல்,வ்யிற்றுப்போக்கு ஆகியவை ஏற்படும்.

மனரீதியான பிரச்சனைகள் :

மனரீதியான பிரச்சனைகள் :

பதட்டம்,பயம்,மன அழுத்தம் ஆகியவை இருந்தால் நீங்கள் சாப்பிடும் உணவிலும், அதனை சாப்பிடும் முறையிலும் திடீர் மாற்றங்கள் உண்டாகும் அதனை நீங்கள் கவனிக்க மறந்தாலும் இந்த அறிகுறிகள் உங்களுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டிடும்.

தீர்வுகள் :

தீர்வுகள் :

உங்களுக்கு ஏற்பட்டிருக்கிற நோயின் தீவிரத்தை பொறுத்து அதற்கான தீர்வுகள் இருக்கும். வெறும் கவுசிலிங் மூலமாகவோ,சில வகை தெரப்பிக்கள், யோகா,வாழ்க்கை முறை மாற்றம் ஆகியவற்றினால் நாம் எளிதாக தீர்க்க முடியும்.

உடல் எடை குறைக்க :

உடல் எடை குறைக்க :

முதலில் இந்தப் பிரச்சனை உங்களுக்கு இருப்பதாக உணர்ந்தால் உங்களுடைய அன்றாட வாழ்க்கையில் சில மாற்றங்களை மேற்கொள்ளுங்கள். அதீத உடல் எடை கொண்டவராக இருந்தால் அதனைக் குறைத்திடுங்கள்.

மாத்திரைகள் :

மாத்திரைகள் :

சில வகை மாத்திரைகளை நீங்கள் தொடர்ந்து எடுத்துக் கொண்டிருப்பதும் இந்தப் பிரச்சனைக்கு காரணமாக அமைந்திடும்.

சின்ன சின்னப் பிரச்சனைகள், குறிப்பாக தலைவலிக்கு எல்லாம் மாத்திரை சாப்பிடுபவராக இருந்தால் அதனை உடனடியாக நிறுத்துங்கள். தலைவலிக்கான தற்காலிக தீர்வாக இருந்தாலும் அந்த மாத்திரைகள் பெரும் பின்விளைவுகளை ஏற்படுத்தக்கூடியவை என்பதை மறக்க வேண்டாம்.

தண்ணீர் :

தண்ணீர் :

சராசரியாக ஒரு நாளைக்கு இரண்டு முதல் மூன்று லிட்டர் தண்ணீர் வரை ஒரு மனிதனுக்குத் தேவைப்படும். அந்த அளவு கொஞ்சம் குறைந்தால் பிரச்சனையில்லை ஆனால் சரி பாதியளவு அல்லது அதற்கும் கீழே என்று குறைந்தால் பிரச்சனை தான்.

இது உணவு செரிமானத்திற்கு உதவுவதுடன் உடலிலிருக்கும் செல்களின் துரித செயல்பாட்டிற்கு பெரிதும் துணை புரிகின்றது.

குறையுமா? :

குறையுமா? :

சிலர் ஒரு நாள் அல்லது இரண்டு நாட்கள் முயன்றுவிட்டு இல்லை எந்த மாற்றமும் நிகழவில்லை என்று பழையபடியே திரும்பிடுகின்றனர். இது மிகவும் தவறான ஒன்று. குறைந்தது ஒரு வாரமாவது நீங்கள் ஒரு விஷயத்தை பின்பற்ற வேண்டும்.

அப்போது தான், அந்த செயல்களின் ஆற்றல் எழுந்து உங்கள் பிரச்சனைக்கான தீர்வாக அது அமையும்.

வாழ்க்கை முறை மாற்றம் :

வாழ்க்கை முறை மாற்றம் :

வாழ்க்கை முறை மாற்றம் என்றால் என்ன? உங்களுடைய அன்றாட பழக்க வழக்கங்களில் மாற்றங்களை சந்திப்பது அதனால் ஏதேனும் சிக்கல்கள் உண்டானால் மாற்றுவது ஆகியவை தான் வாழ்க்கை முறை மாற்றம்.

என்ன செய்யலாம் ? :

என்ன செய்யலாம் ? :

எப்போது சாப்பிட்டாலும் அவசர அவசரமாக கை நிறைய உணவுகளை அள்ளிச் சாப்பிடாதீர்கள்.மெதுவாக மென்று,கடித்து முழுங்க வேண்டும். அவசரம் என்று அப்படியே முழுங்கினால். அது தன் வேலையை காட்டத்துவங்கிடும்.

கொழுப்பு நிறைந்த, எண்ணெயில் பொறித்த உணவுகளை தவிர்த்திடுங்கள், சோடா பானங்களை குறைத்துக் கொள்ளுங்கள்.

உணவு :

உணவு :

தூங்கச் செல்லும் சில நிமிடங்களுக்கு முன்னர் வயிறு முட்டச் சாப்பிடுவது மிகவும் தவறானது. குறைந்தது ஒரு மணி நேரம் முன்னதாக நீங்கள் இரவு உணவு எடுத்துக் கொண்டிருக்க வேண்டும்.

சாப்பிடும் போது ஒவ்வொரு கவளத்திற்கு இடைவேளியிலும் நிறைய உணவுகள் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

மிகவும் முக்கியம் :

மிகவும் முக்கியம் :

இந்தப் பிரச்சனைகளில் மிகவும் முக்கியமான ஒன்று இது தான். இதெல்லாம் பெரிய விஷயமா என்று சாதரணமாக நினைக்காமல் ஒரு வாரத்திற்கும் மேலாக இந்தப் பிரச்சனை தொடரும் பட்சத்தில் கண்டிப்பாக மருத்துவாஅலோசனை பெற வேண்டியது அவசியம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Reasons For Shortness of Breath After Eating

Reasons For Shortness of Breath After Eating
Story first published: Wednesday, December 20, 2017, 9:27 [IST]
Desktop Bottom Promotion