இத படிச்சா.. நீங்க இனி பால் வாங்கவே யோசிப்பீங்க...

Posted By:
Subscribe to Boldsky

பால் ஊட்டச்சத்து நிறைந்த உணவுப் பொருட்களுள் முதன்மையானது. அதனால் தான் அதனை அன்றாட உணவில் நாம் சேர்த்து வருகிறோம். ஆனால் நாம் தற்போது குடிக்கும் பால், உண்மையிலேயே பால் இல்லை என்பது தெரியுமா?

தற்போது வரும் பாலில் கலப்படம் அதிகம் உள்ளது. குறிப்பாக பாக்கெட் பாலில் தான் இந்த கலப்படம் அளவுக்கு அதிகமாக உள்ளது. எனவே வீட்டிற்கு அருகில் ஆர்கானிக் அல்லது மாட்டுப் பால் கிடைக்காத பட்சத்தில், கண்ட இடங்களில் பாலை வாங்காமல் இருப்பதே சிறந்தது.

இக்கட்டுரையில் நாம் அன்றாடம் குடித்து வரும் பாலைப் பற்றி உங்களுக்குத் தெரியாத சில உண்மைகள் குறித்து கொடுக்கப்பட்டுள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
உண்மை #1

உண்மை #1

சில பகுதிகளில் விற்கப்படும் பாலில் கலப்படம் இருப்பதாக சில ரிப்போர்ட்டுகள் சொல்கிறது. அதிலும் நகர பகுதிகளில் விற்கப்படும் 60% பால், உண்மையான பால் இல்லையாம்.

உண்மை #2

உண்மை #2

இந்தியாவில் விற்கப்படும் பாலில் 65% கலப்படம் நிறைந்தது என்று சொன்னால் நம்ப முடிகிறதா? ஆனால் அதுவே உண்மையாம்.

உண்மை #3

உண்மை #3

பாலில் அப்படி என்ன கலப்படம் செய்கிறார்கள்? வெள்ளை பெயிண்ட்டுகள் அல்லது டிடர்ஜெண்ட்டுகளைக் கொண்டு தான் போலி பால் தயாரிக்கப்படுகிறது. சில நேரங்களில் நீரில் வெள்ளை நிறத்தைக் கொடுக்கும் கெமிக்கல்கள் கலக்கப்பட்டு, பால் போன்று விற்கப்படுகிறது.

உண்மை #4

உண்மை #4

வெறும் தண்ணீர் மட்டுமே பாலை நீர்த்துப்போக சேர்க்கப்படுமாயின், அதனால் எவ்வித கேடும் இல்லை என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் அப்படி சேர்க்கப்படும் நீர் அசுத்தமானதாக இருந்தால், அது எவ்வளவு கொடியது?

உண்மை #5

உண்மை #5

சில நெறிமுறையற்ற பால் விற்பனையாளர்கள் பாலின் அடர்த்தியையும், சுவையையும் அதிகரிப்பதற்கு டிடர்ஜெண்ட்டுகள், காஸ்டிக் சோடா, டையாக்ஸின், ஹைட்ரஜன் பெராக்ஸைடு, செயற்கை சுவையூட்டிகள் போன்றவற்றை சேர்க்கின்றனராம்.

உண்மை #6

உண்மை #6

சில சமயங்களில், பால் விற்பனையாளர்களின் தவறு கூட இருக்காதாம். மாடுகள் தொடர்ச்சியாக கழிவுப் பொருட்கள், கெமிக்கல் அல்லது நச்சுக்கள் கலந்த பொருட்களை உட்கொள்ளும் போது, அவைகள் பாலில் கலக்கப்பட்டு தீங்கு விளைவிக்கக் கூடியதாகின்றதாம்.

உண்மை #7

உண்மை #7

கலப்படமிக்க பாலை தொடர்ச்சியாக குடித்தால், பல மோசமான உடல்நல கோளாறால் அவஸ்தைப்படக்கூடும். குறிப்பாக தற்போது பலரும் புற்றுநோயால் அவஸ்தைப்படுவதற்கு, நாம் குடிக்கும் கலப்படமிக்க பால் கூட காரணமாக இருக்கலாம்.

ஆகவே பால் குடிப்பதாக இருந்தால், கவனமாக இருங்கள். முடிந்தால், பாலை சோதிக்கும் கருவியை வாங்கி, பாலின் தரத்தை சோதித்துக் கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Milk Contamination: After Reading This, You Won't Buy Milk From Unreliable Places!!

Choose your milk and milk supplier carefully. Today adultered milk is said to contain paint, toxins, and various other chemicals. Read on to know...
Story first published: Friday, March 17, 2017, 13:33 [IST]
Subscribe Newsletter