Latest Updates
-
ஆயுத பூஜைக்கு வாங்குன பொரி இருக்கா? அப்ப ஈவ்னிங் டைம்-ல இப்படி செஞ்சு சாப்பிடுங்க.. -
'இனிப்புகளின் ராஜா' என்று அழைக்கப்படும் ஸ்வீட் எது தெரியுமா? எதுனா சொன்ன நம்பவே மாட்டிங்க -
ஆண்கள் இறுக்கமான உள்ளாடை அணிந்தால் உண்மையில் விந்தணு பாதிக்கப்படுமா? டாக்டர் என்ன சொல்றாரு பாருங்க.. -
பச்சை மிளகாயை வைச்சு இந்த மாதிரி செட்டிநாடு ஸ்டைலில் குழம்பு செஞ்சு பாருங்க - காரசாரமா நச்சுனு இருக்கும் -
Vijayadashami 2026: விஜய தசமியில் இந்த பொருட்களை வாங்குங்க.. ஆண்டு முழுவதும் வீடு செல்வ செழிப்போடு இருக்கும்! -
ஒரு விஷப்பாம்பு இன்னொரு விஷப்பாம்பை கடித்தால் என்ன நடக்கும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
சுக்கிரன் அஸ்தமனமாவதால் இன்று முதல் அடுத்த 10 நாட்கள் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. -
கருப்பு கவுனி தேங்காய் பால் கஞ்சியும், கறிவேப்பிலை துவையலும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
அக்டோபர் 20, 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ரொம்ப கவலையான நாளாக இருக்கப்போகுதாம் -
இந்த 4 ராசிக்காரங்க ஓவர் தன்னம்பிக்கையால் எப்பவும் சொதப்பிட்டே இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா?
குண்டாகவும், ஆரோக்கியம் குறையவும் மனைவி கூட நீங்க போடற சண்டை தான் காரணம் தெரியுமா?
உறவில் உள்ள பிரச்சனை உடல் எடையை அதிகரித்து, உடல் ஆரோக்கியத்தை பாதிக்கும் என்பது பற்றி கொடுக்கப்பட்டுள்ளது
நமது ஆரோக்கியத்தில் பெரும்பகுதி நமது மனம் சார்ந்து தான் இருக்கிறது. வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டு போகும் என்பார்கள். அது போல மகிழ்ச்சியாக இருக்கும் நபர்களுக்கு பெரும்பாலும் ஆரோக்கிய பிரச்சனைகள் வருவதில்லை.

நீங்கள் ஒரு ஆரோக்கியமற்ற உறவில், அதாவது மகிழ்ச்சியை தராத உறவில் மன வருத்தத்தை அனுபவித்து கொண்டிருக்கிறீர்கள் என்றால், உங்களது உடல் நலனில் கட்டாயம் பாதிப்புகள் ஏற்படும். அதுமட்டுமின்றி உங்களது உடல் எடையும் அதிகரிக்கும்.

உடல் எடை அதிகரிப்பு:
ஒரு ஆய்வில் திருமணத்திற்கு பிறகு ஈடுபாடில்லாத ஒரு உறவு, மன கசப்புகள் மற்றும் உறவில் திருப்தி இல்லாமல் இருப்பது போன்றவற்றால் தூக்கமின்மையும் உண்டாகிறது. இதனால் உடல் எடை அதிகரிக்கிறது.

மன அழுத்தம்
பல தரப்பட்ட ஆய்வுகளில் தினசரி உடலுறவு வைத்துக்கொள்ளும் தம்பதிகள் மனதளவில் மிகவும் உற்சாகமாகவும், மன அழுத்தம் இல்லாமலும் இருக்கிறார்கள். ஆனால் ஒருவருக்கு உடலுறவில் நாட்டம் அதிகமாக இருந்து, மற்றொருவருக்கு ஈடுபாடு குறைவாக இருந்தால், போதுமான அளவு உடலுறவு இல்லாமையால் மன அழுத்தத்திற்கு ஆளாகின்றனர்.

கவலை
உறவுகளிடையே உள்ள பிரச்சனை யாரையும் கவலையின் உச்சத்தில் தள்ளி விடுகிறது. இதனால் எந்த ஒரு வேலையிலும் ஈடுப்பாடு இல்லாமல் போகிறது. இது மன நோய்களுக்கு வழிவகுக்கிறது.

மன சோர்வு
வாழ்க்கையில் சரியான உறவு கிடைக்கவில்லை என்றால் அதிக கவலை மற்றும் மனசோர்வு ஏற்படுகிறது. இந்த மன சோர்வு ஆண்களை காட்டிலும் பெண்களை ஆறு மடங்கு அதிகமாக பாதிக்கிறது.

ஆல்கஹால்
ஆண்கள் மற்றும் சில பெண்களும் கூட குடும்ப பிரச்சனைகளுக்கு மதுவை கையில் எடுக்க ஆரம்பித்துவிடுகின்றனர். மது பிரச்சனைகளுக்கு தீர்வல்ல என்பதை உணர வேண்டியது அவசியம். மதுவினால் அதிக அளவு மன சோர்வு தான் ஏற்படுகிறது. பல ஆரோக்கிய சீர் கேடுகளும் உண்டாகின்றன.

இரத்த அழுத்தம்
திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இல்லாத தம்பதிகளுக்கு, பிரச்சனைகளின் காரணமாக இரத்த அழுத்தம் அதிகரிக்கிறது.



Click it and Unblock the Notifications
