For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அத்திப்பழம் சாப்பிட்டா ஆண்மை அதிகரிக்குமா? இதன் பக்கவிளைவுகள் பற்றியும் தெரிஞ்சுக்குங்க!

உலகில் கிடைக்கும் பழங்களில் மிகவும் சக்தி மிகுந்ததாக கருதப்படுவது அத்திப் பழம். இந்த அந்தப் பழத்தை தொடர்ந்து அதிகளவு எடுத்துக்கொண்டால் என்னென்ன உபாதைகள் ஏற்படும் தெரியுமா?

|

அத்திப் பழம். உடல் நலனுக்கு மிகவும் நல்லது அதோடு இதில் ஏராளமான சத்துக்கள் அடங்கியிருக்கின்றன என்று சொல்லி தொடர்ந்து அத்திப் பழம் சாப்பிட்டு வருகிறார்கள்.

எந்த உணவாக இருந்தாலும் அளவுக்கு மீறி எடுக்கும் போது அது நம் உடலுக்கு தீங்கையே ஏற்படுத்திடும் என்பதை நாம் உணர வேண்டும். சத்துக்கள் நிறைந்த பழமாக இருந்தாலும் , அவை நம் உடலின் தேவைக்கு அப்பாற்ப்பட்டு எடுக்கும் போது கழிவாகவே சேருகிறது. இதனால் எண்ணற்ற உடல் உபாதைகள் ஏற்படும்.

Major side effects of consuming too much fig fruits

ஒரு நாளைக்கு ஒரு அத்திப்பழம் சாப்பிட்டாலே போதுமானது. அதுவும் காய்ந்த பழம் சாப்பிடுகையில் கவனமாக இருக்க வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வயிற்றுப் போக்கு :

வயிற்றுப் போக்கு :

இந்தப் பழத்தில் கரையக்கூடிய ஃபைபர் நிறையவே இருக்கிறது. சுமார் 100 கிராம் அளவில் 2.9 கிராம் வரை ஃபைபர் மட்டுமே இருக்கிறது. இப்படி ஃபைபர் நிறைந்த உணவினை தொடர்ந்து எடுத்து வர அவை வயிற்றுப் போக்கு ஏற்படுத்திடும். சில சமயங்களில் இது வயிறு உப்புசத்தையும் ஏற்படுத்திடும்.

பற்சொத்தை :

பற்சொத்தை :

அத்திப்பழம் காய்ந்த பழமாக எடுப்பதையே பெரும்பாலானோர் வழக்கமாக கொண்டிருக்கின்றனர். அதில் அதிகளவு கார்போஹைட்ரேட் சேர்ந்திருக்கும். 100 கிராம் அளவுள்ள பழத்தில் 16 கிராம் அளவு சர்க்கரைச் சத்து மட்டுமே இருக்கும்.

சரியாக பற்களை பராமரிக்காமல் தொடர்ந்து அதிகளவு சர்க்கரைப் பொருளை எடுத்து வந்தால் அவை பற்களை பாதித்திடும்.

கிட்னி கற்கள் :

கிட்னி கற்கள் :

சாதரணமாக ஆக்ஸலேட் இதில் அதிகளவு இருக்கும். ஆக்ஸலேட் பெரும்பாலான காய்கறிகள் மற்றும் பழங்களில் இருக்கிறது ஆனால் அத்திப்பழத்தில் அதிகமாக இருக்கிறது.

இதனை தொடர்ந்து எடுக்கும் போது நம் உடலில் ஆக்ஸலேட் அளவு அதிகரிக்கும். இதனால் கிட்னியில் கால்சியம் ஆக்ஸலேட் ஸ்டோன் உருவாதற்கு அதிக வாய்ப்புகள் உண்டு.

மூச்சு விடுவதில் சிரமம் :

மூச்சு விடுவதில் சிரமம் :

காய்ந்த அத்திப் பழத்தில் அதிகளவு சல்ஃபைட் இருக்கும். சல்ஃபைட் என்பது ஒருவகையான ரசாயனம் இவை உணவுப்பொருள் நீண்ட நாட்கள் கெடாமல் இருப்பதற்காக பயன்படுத்தப்படுகிறது.

இதனை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் மூச்சு விடுவதில் சிரமங்கள் உண்டாகும். அதிகச் சுவையுடைய உணவினை தொடர்ந்து சாப்பிட்டு வந்தாலோ அல்லதுகாய்ந்த அத்திப் பழத்தை அளவுக்கு அதிகமாக எடுத்துக் கொண்டாலோ மூச்சுப்பிரச்சனைகள் உண்டாகும்.

மைக்ரைன் தலைவலி :

மைக்ரைன் தலைவலி :

அத்திப் பழத்தை அளவுக்கு மீறி அதிகளவு எடுத்துக் கொண்டால் அது நம் ரத்தச் சர்க்கரையளவை அதிகரிக்கும். திடீரென ரத்தச் சர்க்கரையளவு அதிகரிப்பதால் மைக்ரேன் தலைவலி ஏற்படும்.

அதிலும் காய்ந்த அத்திப் பழத்தில் இருக்கும் சல்ஃபைட் உட்பட சில கெமிக்கல்கள் தலைவலி ஏற்படுவதற்கு காரணமாக அமைந்திடும்.

கவனிக்க :

கவனிக்க :

அத்திப்பழத்தை தொடர்ந்து அடிக்கடி சாப்பிடுகிறவர்கள் தங்களின் ரத்தச் சர்க்கரையளவை பரிசோதித்துக் கொள்வது நல்லது. ஏனென்றால் இதில் இருக்கும் சர்க்கரை அளவும் நம்முடைய அன்றாட உணவுகளில் இருந்து வருகின்ற சர்க்கரைச் சத்தும் சேர்த்து ரத்தச் சர்க்கரை அளவை அதிகரித்திடும்.

இதனால் சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். அதோடு, அதிக ஃபைபர் இருக்கும் அத்திப்பழத்தை எடுப்பதால் உணவு ஜீரணப்பதில் சிக்கல்கள் உண்டாகும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Major side effects of consuming too much fig fruits

Major side effects of consuming too much fig fruits
Desktop Bottom Promotion